“குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்…”

  “ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு…” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.

  “ம்ம், எல்லாம் உங்க பிள்ளைக கொடுத்த வீர தழும்பு தான்…” 

  “இன்னைக்கு தான் தெளிவா பாக்குறேன்…”

 “இதுக்கு முன்ன நீங்க பார்க்கவே இல்லையா…” நக்கலாக சரண்யா கேட்க.

   “பார்த்தேன் தான். ஆனா, அப்ப நோக்கம் வேற…” கூச்சமின்றி வெற்றி சொல்ல.

  “சீ, என்கிட்ட மட்டும் இதை தான் பேசுவீங்களா… கொஞ்சம் கூட வெட்கமில்லை…” முகத்தை சுறுக்கினாள் சரண்யா.

   “என் பொண்டாட்டி கிட்ட எனக்கு என்ன வெட்கம். உன்கிட்ட மட்டும் தான் இப்படி எல்லாம் ஆலோசனை பண்ண முடியும்…”

 “ஆலோசனை பண்ற மூஞ்சிய பாரு…”

   “ தினமும் ராத்திரி நாம ஆலோசனை தான பண்றோம்…” சரண்யா முகத்தை திருப்பி கொண்டாள். எத்தனையோ இரவை கடந்து விட்டாச்சு. காதலில், கணவனின் மோகத்தில் வெளிப்படும் மனைவியின் கூடல் வேறு, அதை வெட்ட வெளிச்சமாக பேசினால் எப்படி… கட்டியவன் முகத்தை கூட காண முடியவில்லை.

  சரண்யா வீடு வந்த பின் சுகந்தி, சிவகுமார் இருவரும் ஒரு நாள் வந்தார்கள். 

   “உன்னை பெத்தவங்க நல்லா இருந்தா பார்க்கா

  

    அடுத்த ஒரு வாரத்தில் தனமும் வந்து விட்டார். என் மகன் வீடு எனக்கு உரிமையானது. வெற்றி கோபத்தில் ஒதுங்கி போக, இழுத்து வைத்து பேசினார். அவர் ஆற்றாமை தீர்ந்த பின் அவராகவே வந்து ஒட்டி கொண்டார்.

     அன்று வெற்றி வெளியே சென்று இருக்க, பிள்ளைகள் பள்ளிக்கு… மாமியார் வர நேரமிருந்த போதும் கதவை சாத்தி மட்டும் தான் வைத்து குளிக்க சென்றாள். கிராமம் என்பதால் எந்நேரமும் கதவு அடைத்தே இருக்க கூடாது. வெளி கேட் திறந்து, வீடு வந்து, கூடம் தாண்டி பெட்ரூம் வர மாட்டார்கள் என்பதால் கதவை மட்டும் சாத்தி விட்டு குளிக்க சென்றாள்.

    ஏதோ வேலையாக வெற்றி வீடு வந்தவன், அறைக்கு வர, கட்டிலில் அவளின் மாற்று உடைகள் இருந்தது. குளிக்க சென்று இருக்கிறாள் என்று புரிந்தவன், வந்த வேலையை தொடர, 

  பாத்ரூம் கதவை திறந்தாள் சரண்யா. என் வீடு, என் அறை என்று சரண்யா சுதந்திரமாக வெளியே வர, அரைகுறையாக பார்த்த வெற்றிக்கு மூச்சடைத்து போனது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அவள் உடல் நலன் கருதி தள்ளி நிக்க, இன்று முழுதாக கட்டவிழ்ந்து விட்டான். 

            சரண்யா படக்கென்று கதவை மூடி கொண்டாள். கட்டிய கணவன் தான் என்ற போதும் பகலில் இப்படி வர அவளுக்கு முடியவில்லை. கதவோடு ஒன்றி நிக்க, வெற்றிக்கு கொண்டாட்டம் தான். கரடியாக பிள்ளைகள் கூட உடன் இல்லையே.

   “சரண்யா எவ்வளவு நேரம் உள்ள நிப்ப, அடிக்கிற வெயிலுக்கு வேர்த்து போவ, வெளிய வா…”

  “நீங்க போங்க நான் வாரேன்…”

  “உன்னை நான் என்ன செய்ய போறேன். சவாரி போகணும் வெளிய வா…”

    “நிஜமா ஒன்னும் செய்ய கூடாது…”

  “ஏய் எனக்கு வேலை இருக்குடி, பாத்ரூம் போகணும்…”

   “சத்தியமா…”

  “சத்தியம் செய்யணுமா!… சரி சத்தியம் வெளிய வா… எனக்கு டீ வேணும். நான் போறேன்…”

   அதன் பின் சரண்யா நிற்க வில்லை. கதவை திறந்து வெளியே வர, பின் பக்கம் இருந்து அணைத்து கொண்டான்.

   “திருட்டு பூனை…”

   “ஆமா…”

   “சத்தியம் பண்ணீங்க…”

   “அப்பவே காத்துல ஊதி விட்டேன்…”

  “பிளீஸ் எனக்கு ஒரு மாதிரி பகல்ல, தள்ளி போங்க…”

   “இன்னும் எத்தனை ராத்திரி கடந்தா, உனக்கு ஒரு மாதிரி எல்லாம் போகும்…” என்றவன் தன் தேவையை நிறைவு செய்த பின் தான் அவளை விட்டான்.

   “லேட் ஆச்சு சரண். ஒரு முக்கிய வேலை, மறந்துட்டேன்…” அவசரமாக குளித்து, உடை மாற்றி ஓடினான். ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள் சரண்யா. “முரடன்” செல்லமாக சொல்லியும் கொண்டாள்.

   வெற்றி வெளி வாயில் வர, தனம் வந்தார். அப்பாடா என்றவன் நடக்க, ”என்ன மகனே தலை முடி எல்லாம் ஈரம்…” என்று தன் சேலை கொண்டு துவட்ட, “அவசரம்மா…” ஓடி வந்து விட்டான் வெற்றி.

    தனம் உள்ளே வர, சரண்யா தலை துவட்டி கொண்டு வந்தாள். அவளை மேல் இருந்து பார்த்தவர், “ஒத்த ஆம்பிளை பிள்ளை பெக்க வக்கு இல்லாதவ, ஒன்பது நாளும் தலைக்கு குளிக்கிறா…” முனங்கி விட்டு சென்றார். சரண்யா அவரை கண்டு கொள்ளவே இல்லை.

   வெற்றி கையில் பெட்டியும், தோலில் அஜியையும் தூக்கி நிக்க, பக்கத்தில் விஜியை பிடித்த வண்ணம் சரண்யா. வைகை எக்ஸ்பிரஸில் தங்களுக்கான இடம் பார்த்து அமர்ந்தார்கள். சரண்யா வேண்டுதல் பெயரில் திருச்செந்தூர் முருகன் பார்க்க செல்கிறார்கள். இரவு ரயில் காலை ஐந்து மணிக்கு சென்று சேரும். 

  பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம் தான். தூக்கமே இல்லை இருவருக்கும்… இதுவரை எங்கு சென்றாலும் கார் தான். இது தான் பிள்ளைகள் முதல் முறை ரயில் பயணம் செய்வது. 

  சரண்யா ஜன்னல் ஓரம் அமைதியாக அமர்ந்து விட, வெற்றி பிள்ளைகளை சுற்றி கொண்டு இருந்தான். கணவனை பெருமையாக பார்த்தாள் சரண்யா. இவர்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லாத குடும்பம் இவர்கள் தான்… 

          எல்லோரும் ஏதோ ஒரு வகையில் குறையாக சொல்லிய போதும், ஒரு நாளும் வெற்றி வருந்தியது இல்லை. என் மகள்கள் என் ராணிகள் என்றதில் இருந்து துளி கூட மாற வில்லை. 

   ரயிலில் எல்லோரும் உறங்கும் வரை பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் தான். நடுராத்திரி மேல் அஜி உறங்க, விஜி இன்னும் சுற்றி கொண்டு தான் இருந்தாள். சரண்யா வெளியே தெரியும் இருளை வெறித்தாள்.

   பிள்ளைகளுக்கு எட்டு மாதம் இருக்கும் போது அவர்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் வந்தாள். அன்று வெற்றியோடு அவள் உறவு முடிந்து விட்டது. அழும் பிள்ளைகளை கை மாத்த கூட ஆள் இல்லாமல் மடியில் ஒன்றும், தோலில் ஒன்றுமாக போட்டு கொண்டு இந்த இருட்டை தான் பார்த்து கொண்டு இருப்பாள். அப்போது எல்லாம் வெளி உலகம் பயமாக இருக்கும். முனுக்கென்று கண்ணீர் வரும், சில்லென்ற காற்றை அனுபவிக்க கூட தெரியாது. பாவமான, நிரதரவான தோற்றம் தான். சுற்றி நடக்கும் எதையும் கவனிக்க தோன்றாமல், பிள்ளை குறும்பில் கூட வாய் விட்டு சிரிக்காமல் இருப்பாள். 

   தன் உடையை குனிந்து பார்த்தாள். சந்தன நிறத்தில் இலகுவான உடை… பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்க நூறு ரூபாய் இல்லாமல் நின்றது நினைவு வந்தது. என்னவோ கடவுள் கிருபை மீண்டு கொண்டாள். தன்னை போல எத்தனையோ பெண்கள் இந்த வலியோடு வாழ்கிறார்கள். 

         கல்யாணம், கணவன், குழந்தை, குடும்ப அமைப்பு தான் வாழ்க்கை என்று வளர்க்க படும் பெண்களுக்கு, அவ்வாறு இல்லாமல் காலம் தோல்வியை கொடுத்தால். பலர் துவண்டு தான் போகிறார்கள். பிள்ளைகளை கொண்டு ஒரு வாழ்வை அமைத்து இறுகி போய் வலியோடு தான் காலத்தை கடக்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம் எதார்த்த குடும்ப வாழ்க்கை கூட கனவாக தான் நிற்கும். சரண்யாக்கு கண்ணீர் வந்தது. பெரிதாக இல்லை புருசன், பிள்ளை என்ற பலரின் சாதாரண வாழ்க்கை தான், இவள் எதிர்பார்ப்பும். அதற்கு எத்தனை வலிகளை கடந்தோம். 

    தனியாக நிற்கவா இந்த வாழ்க்கை. நிச்சயம் துணை வேண்டும். எந்த வயதிலும், எல்லா நிலையிலும், சின்ன சின்ன அனுசரணையோடு கை கோர்க்க வாழ்க்கை துணை வேண்டும் தான். 

  சரண்யா பார்வை கணவனை தேடியது. விஜியை தோலில் போட்டு தட்டி கொடுத்த படி நடந்து கொண்டு இருந்தான். புது இடம் உறக்கம் வரவில்லை போல… அஜி குட்டி அம்மா மடியில். பிள்ளை உறங்கிய பின் மெல்ல வந்து படுக்கையில் சாய்த்தவன், மனைவியை பார்க்க முகம் ஒரு மாதிரி சோர்ந்து கிடந்தது.

   “என்ன சரண் சோர்ந்து போய் இருக்க… ஒரே மாதிரி காலை மடக்கி வச்சு கால் வலிக்குதா…” என்றவன் அவள் மடியில் இருந்த பிள்ளையை தூக்கி கொண்டு, “பாத்ரூம் போய் முகம் கழுவி வா…” என்று அனுப்பி விட்டான்.

   அவளுக்கும் பிள்ளையை மடியில் வைத்து ஒரே மாதிரி அமர்ந்திருந்தது வலியை கொடுக்க, எழுந்து சென்றாள். பக்கத்து பெட்டில் இருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி,

  “உம் புருசனாமா…”   “ஆமாங்க…”

  “நல்ல பையன்மா… எம்புட்டு நேரம் பிள்ளையை தூக்கி தோல்ல சுமந்து நடந்தான் தெரியுமா…” சரண்யா சின்னதாக புன்னகைத்தாள்.

   பாத்ரூம் போய் முகம் கழுவி வெளி வர, ஈர காற்று முகத்தில் மோதியது. மனதின் அழுத்தம் குறைந்து இதமாக இருக்க, அங்கேயே நின்று கொண்டாள். வெற்றி மூன்று முறை எட்டி பார்த்து விட்டான். 

   சரண்யாக்கு புன்னகை விரிந்தது, கணவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டவள்… வெற்றி டீ வாங்கி வந்து கொடுத்தான். கொஞ்சம் தெம்பாக இருந்தது. பணமும், நகையும் தாண்டி. அன்றாட வாழ்வின் கணவன், மனைவிக்குள் சின்ன சின்ன அக்கறை, சில ஆறுதல் வார்த்தை மட்டுமே தாம்பத்தியத்தை இழுத்து பிடிக்கும்

   “நீங்க நல்லவர் தான் போல… எங்களை நல்லா பார்த்துகிறிங்க…” குறும்பு கலந்து சரண்யா சொல்ல.

  அவள் தோளில் கை போட்டு தன் பக்கம் இழுத்து கொண்டவன், “ஒரு புருசனா எம் பொண்டாட்டி, பிள்ளைகளை பார்த்துகிறது என் கடமை, என் பொறுப்பு சரண்யா. நான் சாதாரண மனுசன் தான். ஹீரோ மெட்டீரியல் எல்லாம் இல்லை…”

   “ஆனா,அந்த சாதாரண மனுசனுக்கு உரிய பொறுப்பையும், கடமையையும் கூட பலர் செய்றது இல்லை. குடும்பத்தை தள்ளி வச்சோ,  இல்ல ஒரே குடும்பமா இருந்தும் ஒதுங்கி நின்னு தன் பொறுப்பை, கடமையை தட்டி கழிக்குறங்க. அதனால் தான் என்னை மாதிரி பல பெண்கள் உருவாகி, உங்களை மாதிரி ஆளுக எல்லாம் ஹீரோவாகிடுறாங்க…” என்ற சரண்யா கணவன் முகத்தை பார்க்க, இஞ்சி திண்ட குரங்காக இருக்கவும், சிரிப்பு வந்தது.

  “சும்மாங்க கேலி…” என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். வாழ்க்கை பிரகாசமாக இருக்க, வெளியில் தெரிந்த இருட்டு ரசனையாக மாறியது.

                            THE END