தேன் சாரல் நீ 15

    கீதாவிற்காக சுசிலா விஜயனை பெங்களூருலேயே சீரைக் கொண்டு வந்து தரச் சொல்லி வாங்கிக் கொள்ள வற்புறுத்த பொறுமை இழந்த விஜயன்,

     “நான் என்னத்துக்கு பெங்களூரு போய் சீர வாங்கிக்கனும்? ஏன் இங்க கொண்டு வந்து உங்க தம்பி தர மாட்டாரா?” என்க

     “அவன் மருமகன் வேலை பாக்குற ஊரை பாக்க ஆசைப்படறான்டா விஜயா. கீதாவுக்கும் அங்க குடியிருக்கும் வீடு, அந்த ஊரை பெருமையா எல்லாருக்கும் காட்டனுமுன்னு ஆசை. அவங்கள புரிஞ்சிக்க முயற்சி பண்ணுப்பா.” என சுசிலா கெஞ்ச

     “உங்க தம்பி ஆசைபடறாருன்னு நான் அங்க போய் சீர் வாங்க முடியாது. இங்கயே கொண்டு வரச் சொல்லுங்க. முடியாதுன்னா அவங்களையே வச்சிக்கச் சொல்லுங்க.”

      “ வேலை வெட்டி இல்லாம ஒரு ஊரையே பெங்களூருக்கு கூட்டிட்டு போய் நான் சுத்தி காட்டனும்., அப்பனும், மகளும் அத பெருமையா பேசனும். இதுக்கு வேற ஆள பாக்கச் சொல்லுங்கம்மா.” என்றான் விஜயன்.

    “தம்பி நான் சொல்றத கொஞ்சம் கேளுப்பா. பொண்ணு குடுக்கமாட்டேன்னு சொன்ன உங்க மாமன கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வச்சி, கீதாவ தாஜா பண்ணி இந்த கல்யாணத்தை பண்ணியிருக்கேன். உன் பிடிவாதத்தால குழப்பத்தை ஏற்படுத்தாத,  புரியுதா?”  என மகனின் வாழ்வில் நெருப்பள்ளி கொட்டுகிறோமுன்னு தெரியாமலே சுசிலா சொல்ல,

      “அவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னும் உங்க தம்பி மவ எங்கூட குடும்பம் நடத்த வேண்டாம். மகள வந்து கூட்டிட்டு போக சொல்லுங்க உங்க தம்பிகிட்ட. நானென்ன மொண்டியா? முடவனா?முட்டாளா? இல்ல வேல வெட்டி இல்லாதவனா? இல்ல பாக்க சகிக்காம இருக்கனா?”

     “நீங்க கெஞ்சி, தாஜா பண்ணி கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு வயசுதான் கூடவா? என்ன அவசியம் வந்தது கெஞ்ச, தாஜா பண்ண? இந்த அழகு தேவதைய???? கட்ட எங்கிட்ட தான் நீங்க கெஞ்சி கூத்தாடி இருக்கனும்”

    “உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா? நாங்க ரெண்டு பேரும் வெளியில போனா ஜோடி பொருத்தம் பாத்து சிரிக்க மாட்டாங்களா பாக்கறவங்க? கலர், உருவம், எதையும் பாரர்க்ககூடாது, மனசு அழகா இருந்தா போதுமுன்னு நீங்க சொன்னதும் சரீன்னு சொல்லி தாலிகட்டினா…..?”

     “நீங்க கெஞ்சி கூத்தாடிதான் ஒரு வாழ்க்கை அமையனுமுன்னா,  எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையே இல்ல.” என்ற விஜயன் உள்ளே திரும்பி

     “ஏய் கீதா இங்க வா! கிளம்பு, உன்னை உங்க வீட்டுக்கு உங்கத்தை கூட்டிட்டு போறாங்களாம். போயிட்டு இந்த காட்டான்கூட குடும்பம் நடத்தலாமுன்னு எப்ப நெனப்பு  வருதோ அப்போ வா. இல்லை வேணாமுன்னு முடிவு செஞ்சா நோட்டீஸ் அனுப்பு. நான் கையெழுத்து போடறேன். விவாகரத்து வாங்கிக்கலாம. உனக்கு மன்மதன போல ஒருத்தன் கிடைப்பான். நீ வந்து வாழ்க்கை குடுக்கிற அளவுக்கு என்னோட நிலைமை மோசமாகல.” என்று கீதாவிடம் கத்திவிட்டு

      “நான் பெங்களூர்ல பாத்த வேலைய விடப்போறேன்.. உன்ன அங்க கூட்டிட்டு போய் என்னால அவமானபட முடியாது. அதனால நீ நிரந்தரமா அங்கேயே இருந்துக்க.”

    “ நான்தான் யோசிச்சிருக்கனும் இந்த பத்தாங்கிளாஸ கட்டிக்க. இதுல இவங்கள தாஜா பண்ணி என்னை தலையில கட்டிட்டாங்களாம். என்ன கொடுமை இது?”

     “இந்த அவலட்சணத்தை கட்டிக்க நானென்ன தவங்கிடந்தனா? அப்பவே வேலை பாக்கிற எடத்துல சொன்னாங்க படிச்ச பொண்ணா வேலைக்கு போற பொண்ணா பாத்து கட்டிக்கிங்க சார்ன்னு. இந்த அரைகுறைங்க பண்ற அலம்பல் தாங்காது. அதனால அம்மா சொல்றாங்கன்னு பாழுங்கிணத்துல விழாதிங்கன்னு எங்க மேனேஜர் கூட சொன்னாரே. அவரு வார்த்தைய மதிக்காம அம்மா சொன்னா சரின்னு சொல்லி இப்போ என் வாழ்க்கையை இழந்த பின்னாடிதான் புத்தியே வருது.”

     “ பெங்களூருல போய்தான் சீர் வாங்குவாங்களாம் மகாராணி. ஏன் இங்கேயே வாங்கினா என்ன குறைச்சல்? உருவத்துல தவிர எதுல நிறை சொல்லுங்க கீதா மாமியாரே”

    “இவளும, இவ அப்பனும் ஊர சுத்த செலவு பண்ண நாந்தான் கிடைச்சனா?  ஒரு வேலை தெரியாது, இதுல வெட்டி பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.”

     “எங்க உங்க தம்பி? கூப்பிடுங்க அந்த ஆள. இன்னைக்கு நான் கேக்குற கேள்வியில இந்த பக்கமே தலைவச்சி படுக்கக்கூடாது. கேள்வி எல்லாம் அப்புறம் கேக்கலாம். அவர் மகள ஒரு டீ வச்சி தரச்சொல்லி முழுசா குடிக்கட்டும், பார்க்கலாம்” என சுசிலாவிடம் சண்டை இட

     “அவ படிக்க போனதனாலதான் வீட்டு வேல பழகலையாம். அதனால தான் நிர்மலாவ வீட்டுல நிறுத்தி வேலைய பழக்கி இருக்காங்க. இங்க சின்னவனுக்கு அந்த புள்ளைய கொடுத்தா அனுசரிச்சு குடும்பம் ஒத்துமையா போகுமில்ல அதான். வேற வெளியில கட்டிக்கிட்டு வந்தா கீதா வேலை செய்யலன்னு கொறை சொல்லுவாங்க.” என மெதுவாக சொல்ல

     “இந்தம்மா படிச்ச பத்தாங்கிளாஸ முடிச்சி ஆறு வருசம் ஆகுது. இந்தன நாளா குமுதம், கற்கண்டு படிச்சிட்டு இருந்தாளோ? மூளை வளர்ச்சி இல்லாதவங்ககூட ஏதாவது ஒரு வேலைய திறம்பட செய்வாங்க. இவ தின்னுட்டு, தூங்கிட்டு இருந்துட்டு கலெக்டருக்கு படிச்சது போல பேசறா, இதுல மேக்கப் வேற.”

    “ உங்க தம்பி பொண்ண தயவு செய்து மேக்கப் போட வேண்டாம்ன்னு சொல்லுங்க. பார்க்க சகிக்கல. நாங்க சேர்ந்து வாழனுன்னு நினைச்சிங்கன்னா பார்லர் கூட்டிட்டு போய் அவளுக்கு சூட்டாகற மாதிரி கேட்டு போட சொல்லுங்க.”

    “ இவளுக்கு, இவ அத்தைய போல ஒரு வேலை செய்யவும் துப்பில்ல. குடும்பத்துல குழப்பத்த உண்டுபண்ண மட்டுந்தான் கத்துவச்சிருக்கா. இப்படிபட்ட ஒரு ஏழரையை யேன் தலையில கட்டிட்டாங்க.”

     “இதுல யேன் தம்பியும் அதே குட்டையிலயா? நோ! நெவர்! இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க. இந்த வீட்டுல இவ வீட்டுல இருந்து ஒருத்திதான் வாழ முடியும். அது இவளா? இல்ல இவ தங்கச்சியான்னு முடிவு பண்ணி சொல்லுங்க. அதுக்கு பிறகு நானும் யேந்தம்பியும் என்ன செய்யனுமுன்னு பாத்துக்கிறோம்.”

     “பொண்ணு பாத்து கட்டி வைக்கச் சொன்னா ஒரு சூன்யகாரிய கட்டி வச்சிருக்கிங்க?”

     “நீங்க கட்டிவச்ச இந்த அலங்கார பொம்மையை கூட்டிட்டு போனா வீட்டுக்குள்ள வேணுமுன்னா திருஷ்டி பொம்மையா வைக்கலாம். அங்க வெளிய போக கன்னடம், இல்லன்னா இங்கிலீஷ் தேவை. அத கிளாஸ் போய் படிக்க ரெடின்னா இன்னைக்கே போய் சேர்த்து விட்டுட்டு வரேன். படிச்சி பாஸ் பண்ணட்டும். அப்புறமா பெங்களூரு போறதை பத்தியும், சீர் வாங்கறதை பத்தியும் பேசலாம். ரெண்டு மொழி படிக்க கோச்சிங் கிளாஸ் போறாளா? லேடி நளன் உங்ககிட்ட குக்கிங் கத்துக்கிறாளா? கேட்டு சொல்லுங்க.”

    “கல்யாணம் பண்ணி நாலு நாளுல இத்தனை அக்கபோரு. இந்த ஏழரைய தலையில கட்டதான் இவ்வளவு சீக்கிரமா எனக்கு கல்யாணம் பேசுனீங்களா? எங்க உங்க வீட்டுக்காரர், அதான் என்னைய பெத்தவரு?” என்றவன், உள்ளிருந்து வந்த பரமசிவத்தை பார்த்து

    “நீங்க தெரிஞ்சே பெரியவங்க தடுக்க தடுக்க கேக்காம சாக்கடையில விழுந்திங்க. அது உங்க விருப்பம். ஆனா இப்போ என்னை ஏன் தள்ள சம்மதிச்சிங்க? இதுல சின்னவனையும் வேற உள்ள இழுக்க பாக்கறிங்க, இது சரியா?

   “ பூனைகூட ஒரு முறை சுட்டுக்கிட்ட அதை மறுமுறை திரும்பி பாக்காது. ஆனா நீங்க என்ன செஞ்சி வச்சிருக்கிங்கன்னு புரியுதா?”

    “ச்சே என்ன குடும்பம்டா இது? சின்னவன் கல்யாணத்தை நான் பாத்துக்கிறேன். அதை பத்தி யாராவது பேசுனீங்க, மொத பலி நீங்கதான்.” என்றவன் திரும்பி பார்க்காமல் வெளியே சென்று திண்ணையில் உட்கார்ந்தான்..

    “அத்தை நிர்மலா சின்னவருக்குதான் கவலைபடாதிங்க. நான் எம்மாமன முந்தானையில முடிஞ்சி சரி பண்ணிடறேன். இப்ப சீர இங்கேயே  கொண்டுவர சொல்லிடலாம். என்னால கன்னடம், இங்கிலிஷ் எல்லாம் படிக்க முடியாது. நானெதுக்கு உங்க மகனில்லாம வெளிய போக போறேன்? தேவையில்லாம அதெதுக்கு படிச்சி மூளைய குழப்பிக்கனும்?” என்றாள் கீதா கூலாக.

   இதை கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்த விஜயன் தலையிலடித்துக் கொண்டான்.

   “இதுங்க ரெண்டுமே வெட்கங்கெட்டதுங்க. இதுங்ககிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கனும். எப்படியாவது ஜெயனை இதுங்ககிட்ட இருந்து காப்பாத்தனும்.” என தனக்குள் முடிவெடுத்தான்.

     ஜெயன் வர, “ டேய் நம்ப அம்மாவோ, உங்கண்ணியோ எத கேட்டாலும் மழுப்பி விடு. நீங்க சொன்னா சரின்னு என்னையபோல சொன்ன நீ தீந்த! என்னைய காப்பாத்த ஆளில்ல. நான் பாழுங்கிணத்துல விழுந்துட்டேன். முள்ளு மேல விழுந்த பட்டுதுணி ஆயிட்டேன் நானு. மெதுவா கிழியாம, தடம் பதிக்காம என்னைய காப்பாத்திக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைபடுது.”

     “நான் முயற்சி செஞ்சி வெளிய வர்றதுக்குள்ள வெட்ட உன் தலைய குடுத்துடாத புரியுதா?” என்க

    “அண்ணா என்ன பண்ண போறிங்க? அத்துவிட போறிங்களா? வேண்டாம் அண்ணா. அண்ணி பாவம்.” என ஜெயன் பதற

    “இங்க உன்னை பாவப்பட்ட பிறவியா மாத்த துடிக்கிற உங்கண்ணிக்கு நீ பாவம் பாக்குற? உன் நிலைமை யாருக்கும் வர கூடாதுடா.”

    “பேயோடு ஆயினும் பிரிதல் அரிது அப்படின்னு கேள்விபட்டதில்லையா நீயி? கடைசி மூச்சி வரை அவதான் என்னோட எல்லாமும் என சாமிகிட்ட வேண்டிக்கிட்டு தாலிய கட்டினவன்டா நானு. அவதான்டா என் வாழ்க்கை. அத நான் இப்போ சொன்னா உன்னையும் சேர்த்து பழி குடுக்கனும்.”

    “இந்த கூட்டணிய பிரிச்சி ரெண்டு பேரையும் கொஞ்சம் திருத்த பாக்குறேன்னு நானு சொன்னா நீ இருக்கியே, எனக்கு விடுதலை வாங்கி குடுத்துட்டுதான் மறுவேலை பாப்ப போல. போயி நாளைக்கு காலேஜ் கிளம்ப தேவையானதை எடுத்து வை. எக்ஸாமுக்கு நல்ல பிரிப்பேர் பண்ணு. நல்ல பர்சென்ட் வரலைன்னா மாடு மேய்க்க போட்டுடுவாங்க நம்ம பெத்த மவராசி. பால் கணக்கை அவங்க பாத்து உன்னைய சாணி அள்ள வச்சிடுவாங்க. அஞ்சிக்கும் பத்துக்கும் பத்து தடவை அவங்ககிட்ட கையேந்தனும். புத்தி இருந்தா பொழச்சிக்க ராசா” என்றான் விஜயன்.

    ஜெயனின் மனதில் எழுந்த முகத்தை தடுக்க வழியில்லாமல், இவர்களுக்கு எடுபிடி வேலை தானும், அந்த முகத்துக்குரியவரும் செய்வதுபோல கற்பனை வர பதறி அண்ணா கைகளை பிடித்தான்.

    “கற்பனையில பாத்தே பயந்தா எப்படி ஜெய்? நல்லா ஸ்கோர் பண்ணு. பீஜி நல்ல காலேஜ்ல சேர்த்து விடறேன். பிஎட் முடி. போஸ்டிங் வாங்கிடலாம். உன்னால முடியும்.”

     “நீ ஆசைபட்ட வாழ்க்கை உனக்கு பிடிச்சவங்களோட அமைச்சி தர்றது என்னோட பொறுப்பு. இப்போ அமைதியா படிக்கிற வேலைய மட்டும் பாரு.”

    “ரிசல்ட் வர்ற வரைக்கும் உன்ன  வெளியூருல ஒரு கம்பெனிக்கு ப்ராஜெக்ட்னு சொல்லி அனுப்பறேன். சீக்கிரம் பீஜியா, பி.எட்டான்னு முடிவு பண்ணு. இதுக்கு மேல பேசுனா சந்தேகம் வந்துரும். போய் பேக் ரெடி பண்ணு.” என்று அவனுக்கு ஐடியா குடுத்தான்.

     காலையில் கிளம்பியவனை நிறுத்தி சுசிலாவும், கீதாவும் “நாங்க உனக்கு நிர்மலாவ பேசிட்டோம். வேற யாரையும் திரும்பி கூட பாத்துடாத.” என பேச அவனை பஸ் ஏத்திவிட கிளம்பி வந்த விஜயன் அங்கிருந்த ஒரு புது சேரை தூக்கியடிக்க அது தூள் தூளாக சிதறியது.

    “இன்னொரு வாட்டி நிர்மலாவ கட்டனும் அப்படின்னு பேசறதை கேட்டேன், இப்ப கீழே அடிச்சதை உங்க தலையில அடிப்பேன். யேந்தம்பிக்கு எப்படி பொண்ணு பாக்கனுமுன்னு எனக்கு தெரியும்.” என்றவனும் பேக்குடன் கிளம்பி இருக்க, இருவரும் ஒருசேர அதிர, சுசிலா பட்டென “டேய் சின்னவன் காலேஜ் போறான். நீ எங்க போற?”  என கேக்க

    “ஆபீஸ் போகனுமில்ல? மேனேஜர் என்ன யேன் மாமனாரா? வேலை செய்யாம சம்பளம் போட? இனி நிர்மலா கல்யாணத்துக்கு தான் வருவேன்.”

    “ஜெயன கோழி அமுக்கறது போல அமுக்கலாமுன்னு நினைச்சிங்க இவ அவ்வளவு தான். இந்த கிளியோபட்ராவுக்கு வேற மாப்பிளை தேடனும் புரியுதா?”

    “என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டா என்னால என்ன செய்ய முடியுமுன்னு உன் மருமக கேணத்தனமா யோசிக்கிறது எனக்கும் புரியுது. பெங்களூருல நான் தங்கியிருக்க அட்ரஸ், கம்பெனி பத்தி ஏதாச்சும் தெரியுமா? நான் வெளிநாடு போயிட்டா? கண்டுபிடிக்க முடியுமா?”

    “எம்மா அறிவு வாளி கீதா, உன் வாழ்க்கையா? உன் தங்கையை பழி வாங்கறதா? எது முக்கியம்?”

   “ உன் தங்கச்சி கல்யாணம் முடியாம நாம வாழ ஆரம்பிக்க போறதில்ல. அவள வேற வரனுக்கு கல்யாணம் பண்ணினா உன்னை என்னோட கூட்டிட்டு போறேன். நீ என்னோட வெளி நாடு வந்தா அவள பத்தி நீயேன் நினைக்க போற? சொர்க்கத்தில் இருந்துகிட்டு யாராவது பழசை நினைப்பாங்களா? நீயே சொல்லு”

    “ உலகத்தையே என்கூட சுத்தி வரலாம், தங்கச்சிய வெளிய கட்டி குடுத்தா.  நீ விரும்பினது போல பார்டீஸ், டூர் எல்லாமும் வேணுமா? இல்ல இங்கியே வாழவெட்டியா தங்கச்சி புள்ளைங்கள வளர்த்துட்டு இருக்க போறியா? இழுத்து போத்துன ஸாரீஸா? இல்ல மாடர்ன் டிரஸ்ஸா? முடிவு செய்மா கீதா.” என்றவன்

     “சரி வர்றேன். கிளம்புடா போலாம் நான் மதியம் ஆபீஸ் போகனும்.” என்று அதிகாலை கிளம்பியவனை ஒன்றும் செய்ய இயலாமல் தலையாட்டினர் இருவரும்.

    விஜயன் தனது புது போன் நம்பரை தம்பியிடம் கொடுத்து எது நடந்தாலும் சொல்லச் சொல்ல, ஜெயன் “ அண்ணா பேப்பர் போட்டுட்டேன்னு சொன்ன? இப்போ கிளம்புறேன்னு என்கூட வர்ற? என்ன நடக்குது?” என்க

    “ஜெய் எனக்கு அங்க வேலை செய்யறதைவிட விவசாயம் பண்றது பிடிச்சிருக்கு. பக்கத்தூருல ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கேன். அதுல விவசாயம் பண்ண போறேன். பேப்பர் ஒரு மாசம் முன்னாடியே போட்டுட்டேன். இன்னும் ஒரு அறுபத்தஞ்சி நாளுல ஊருக்கு வந்திடுவேன்.”

     “அதுக்குள்ள நிர்மலா கல்யாணம் முடியனும். பாவம் அந்த பொண்ணு. கீதாவாலதான் அந்த பொண்ணு படிக்க முடியாம போயிடுச்சி. இவளுக்கு அடிமையா இங்கேயே கொண்டு வர பாக்கிறா. அவள புரிஞ்சிகிட்டு அவள நல்லா பாத்துக்கிறது போல ஒரு பையன பாத்து ஏற்கனவே பேசி இருக்கேன். பார்க்கலாம். நீ கவனமா இரு” என விஜயன் விடை பெற்றான்.

 நிர்மலா கல்யாணம் யாருடன்? கீதாவின் ஆசை நடக்குமா? ஜெய் மனதில் தோன்றிய முகம் யாருடையது? அடுத்த பதிவில்  தெரிந்து கொள்வோம்.