அத்தியாயம்20

காலை பரபரப்பில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டின் தலைவியான அழகி சமையல் அறையில் மின்னல் வேகத்தில் சமைத்துக் கொண்டே திரும்பி ஹாலை பார்த்தபடி அப்படியே நேரத்தையும் பார்த்துக்கொண்டார்.

அதே நேரம் காலை வாக்கிங்கை முடித்து விட்டு வந்த பெருமாள் கையில் பேப்பருடன் உள்ளே நுழைந்து

“அழகிம்மா…….சுட சுட பூஸ்ட் ஒன்னு போட்டு எடுத்தா ம்மா “ என்றபடி காலை நீட்டி ஹோபாவில் அமர்ந்தவரை,

உள்ளே சமைத்து கொண்டிருந்த அழகி கரண்டியுடன் பெருமாளை அடிப்பது போல நெருங்கி வந்து

 “வாக்கிங்னு பத்து நிமிஷம் இப்படி போயிட்டு அப்படி வந்துட்டு உங்களுக்கு பூஸ்ட் கேக்குதோ… நானே கடுப்புல இருக்கேன் நைட்டு போட்டோவ எடுத்துட்டு போனவன் இன்னும் வெளிய வர காணோம். உங்க மகன் அப்படி உள்ள என்ன தான் பண்றானோ”

“இந்த மாதிரி நேரத்துல மட்டும் என் மகன தெரிஞ்சிடுவான் “ என்று பெருமாள் வாய்க்குள் முனங்கியவர்

“ இப்போதைக்கு பச்ச தண்ணி கூட தர மாட்டா இவ “ என்றபடி மூடியிருந்த கதவை பார்க்க தொடங்கி விட்டார்.

“ இவன் எப்போ தொறந்து எப்போ பூஸ்ட் குடிக்கிறது நாளைல இருந்து பேசாம கடையிலயே குடிச்சிடனும்” என்று யோசித்தபடி பெருமாள் இருக்க, அழகி

“ கல காலத்துல கல்யாணம் ஒன்ன பண்ணிட்டா கடமை ஒன்னும் முடியுமேன்னு பாத்தா விடுறானா?, எதோ டாக்டர்னு சொல்றான், எச் டி ன்னு சொல்றான் ஒன்னும் விளங்கல. எனக்கு தெரிஞ்சு டாக்டர்னா ஹாஸ்பிட்டல்ல இருக்கவுங்க தான்ப்பா “ என்று புலம்பியபடி வானலியில் தக்காளி போட்டு கிண்டியவர்.

“ எனக்கு எதுவும் புரியல நாலும் எல்லாம் படிக்க தான வச்சேன் படிச்சி முடிச்சவன் இப்போ வாது அந்த கல்யாணத்தை கட்ட வேணாம்?

பொண்ணுங்க போட்டோவ பாருடான்னா எதோ போருக்கு போக சொல்ற மாதிரி நின்னு யோசிச்சிட்டு. காலைல சொல்றேன்னு போட்டோவ எடுத்துட்டு போய்டான் இவன எந்த நேரத்துல பெத்தேனோ இப்படி இவன் இருக்கானே… “

என்று இவர் புலம்பும் சத்தம் எதுவும் கேட்காத படி கதவு தடுத்து பிடித்திருக்க அந்த கதவின் உள்ளே ஜெகன் கையில் போட்டோவை வைத்து பார்த்தபடி

“இது சரியா வருமா வாலு? எனக்கு உன்ன பிடிச்சிருக்கு ஆதே மாதிரி உனக்கு என்ன பிடிக்குமா ?“ என்று போட்டோவில் சிரித்தபடி இருந்த சுபாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“என்ன பார்த்தாலே எதோ பேய பாக்குற மாதிரி பாத்து வைப்பியே டி கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி தான் பாப்பியா “

என்றவனின் மனமோ “ அதுக்கு முதல்ல அவ உனக்கு ஓகே சொல்லனும்டா செல்லம் “ என்று இடிக்கவும்

“அதெல்லாம் ஓகே சொல்லிடுவா என் வாலு “ என்று சிரித்தவன் மறு கையில் வைத்திருந்த கொலுசை இருக்கி பிடித்தபடி

“சொல்லிடுவ தான டி “ என்று ஒரு வித பயம் நிறைந்த குரலில் பேசியவன் தலையை உலுக்கி “ ரொம்ப யோசிக்காத டா “ என்றபடி காலேஜுக்கு கிளம்ப தயாரானான்.

நேற்று காலை வரை இப்படி சுபாவை நினைத்து புலம்புவான் என்று இவனே நினைக்காத ஒன்று. அன்று அவளிடம் கொலுசை வாங்கியவன் அதை பத்திரமாக அவனின் பீரோவில் வைத்து மூடிவிட்டான்.

ஏதோ ஒன்று அடித்து சொன்னது அவள் இதை கேட்டு வர மாட்டாள் என்று அந்த நம்பிக்கையில் அதை எடுக்காமல் தான் காலேஜ் சென்றான். இவன் நினைத்தபடியே அவள் வரவில்லை.

அதில் சிறுதாக ஏமாற்றம் கலந்த கோபம் அவள் மீது எட்டி பார்த்தாலும் பின் நாட்கள் செல்ல அவளை மறந்து தான் போனான்.

இவனும் இவனின் பிஎச்டி யை முடிக்கும் ஆர்வத்தில் எதுவும் நினைவு இல்லாமல் போக போன வருடம் தான் அதை வெற்றிகரமாக முடித்தான்.

அதன் பின் வேறு ஒரு பெரிய காலேஜில் நிரந்தர வேலையும் கிடைத்து விட நிம்மதியாக வேலைக்கு போய் வந்துக்கொண்டிருந்தான்.

அப்போது தான் அவன் அம்மா அழகி கல்யாணம் பற்றி பேச்சை தொடங்க இவனும் பெரிதாக மறுக்காமல் சரி பாருங்க என்று சொல்லி விட்டான்.

ஆனால் ஏதோ ஒன்று எந்த பெண் படத்தை பார்த்தாலும் ஏதோ தடுத்தது. அதில் ஏதாவது காரணம் சொல்லி அனைவரையும் மறுத்து கொண்டிருந்தவனை

“ டேய் உனக்கு அவ்வளவு தான் டா “ என்று அது வரை அமைதியாக இருந்த அழகியே பொங்கி விட்டார்.

“என்னடா உனக்கு பார்க்குற பொண்ணை எல்லாம் உப்பு பெறாத காரணத்தை சொல்லி ஒதுக்குற “

“அம்மா… அது பார்த்த எனக்கு கல்யாணம் ஃபீலே வர மாட்டிகிது ம்மா “

“அப்போவே நிறைய படிக்க வைக்காதிங்க மூளை கலங்கிடும்னு சொன்ன கேட்டிங்களா இப்போ பாருங்க பீலு பாலு ன்னு சொல்லிட்டு இருக்கான் “ என்று புலம்பி அழுதவரை சமாதானம் செய்து

“அடுத்த வாட்டி அந்த தரகர் எடுத்து வர போட்டோவில கண்டிப்பா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண ஒத்துக்குறேன் ம்மா “

“ம்க்கும்… எங்க தமிழ் நாட்டுலயே இதுக்கு அப்புறம் பொண்ணு இல்லையாமா வேற கிரகத்துல இருந்து தான் கூட்டிட்டு வரனும்னு புலம்பிட்டு போனாரு அவரு “ என்று சொல்லிய அம்மாவை முறைத்த படி சென்றுவிட.

அவன் அம்மா அடுத்த நாளே அடுத்த பெண்ணின் போட்டோவை வாங்கி வைத்திருந்தார்.

அந்த போட்டோ கவரை ஒரு கேலியான சிரிப்புடன் பார்த்தவன் “ என்ன ம்மா பொண்ணு சொந்த ஊரு மார்ஸா “  அது புரியாத அழகி

“இல்லப்பா நம்ம ஊரு பக்கத்துல தான் சொன்னாரு. ஆனா இப்போ சென்னையில தான் இருக்காங்களாம் “ என்று பேசிய தாய் கன்னத்தை பற்றி கிள்ளியவன் அந்த கவரை எடுத்து கொண்டு

“நான் போட்டோ பாத்துட்டு மார்னிங் சொல்றேன்” என்று சென்றுவிடவும் அழகி

“டேய் இப்போவே பாத்து சொல்லிட்டு போடா…” என்று அவர் கத்தியது அவன் காதில் எங்கே கேட்டது.

“ஏன்ம்மா அழகி அவசர படுற. ஒரே பையன் தான அவனுக்கு புடிச்ச மாதிரி பொண்ணை பாத்தே கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான ம்மா “

“அதையே தாங்க நானும் சொல்றேன் ஒரே பையன் போய்டான் அவனுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ண தான பேரன் பேத்தின்னு வீடு நிறையும் “

“என்னமோ ம்மா இந்த பொண்ணையாவது தம்பிக்கு பிடிக்கனும் “ என்று இருவரும் மாறி மாறி கடவுளிடம் மனுவை போட்டு கோண்டிருக்க

உள்ளே வந்த ஜெகன் பொறுமையாக கட்டிலில் அமர்ந்து அந்த கவரை திறந்தான். கவரை திறந்த நொடி அவனின் கண்கள் விரிந்து கொள்ள

“ஏ… சில் வண்டு நீயா “ என்று அதிர்ந்தவன்.

போட்டோவை திரும்பி பார்க்க பெண்ணின் பெயர் விலாசம் எழுதியிருந்தது. அதையும் பார்த்து உறுதி செய்தவன்

“ டேய் சுபா நீ தானா இது… “ என்று வாயை பிளந்தவன் நினைவு வந்தவனாக பீரோவை திறந்து அதில் உள் லாக்கரை திருந்து உள்ளே இருப்பதை வெளியே எடுக்க சுபாவின் கொலுசு மெல்லிய சத்தத்தை எழுப்பிய படி வெளியே வந்தது.

அந்த கொலுசை கையில் வைத்து சுற்றி சுற்றி பார்த்து விட்டு உதட்டோரம் பூக்க இருந்த புன்னகையை உதட்டை கடித்து தடுத்தவன்

“சேரவேண்டிய இடத்துல தான் சேர்ந்திருக்க வாலு. “ என்று கொலுசை அசைத்தவன் அவள் போட்டோவை கையில் எடுத்து

“கொலுசு மட்டும் இல்ல நீயும் எனக்கு தான் போல சுபா “ என்று புருவத்தை நீவியவன்

“என்னடா இப்படி இழிக்கிற அப்போ இந்த வாலுதான் எனக்கு பொண்டாட்டி போல. உன்ன செலக்ட் பண்ண தான் இத்தன ரிஜக்ஸன் போல சுபா “ என்று இரவு வெகு நேரம் அந்த போட்டோவை வைத்து பேசிய படி இருந்தவன்.

நேரம் கழித்தே தூங்க சென்றிருந்தான். அதனாலயே காலை தாமதமாக எழுந்தவன் மீண்டும் அவள் முகத்தையும் அந்த கொலுசையும் பார்த்தவனுக்கு என்னமோ இப்போவே அவளை பார்க்க தான் தோன்றியது.

அவன் என்னத்தை நினைத்து அவன் தலையில் அவனே தட்டிக்கொண்டு

  டேய் நீயா டா இது எப்படி விறைப்பா காலேஜ்ல சுத்திட்டு இருந்த” என்று அவனுக்கு அவனே பேசியவன் அந்த கொலுசை பத்திரமாக ஒரு சின்ன பாக்ஸில் போட்டு பீரோவில் வைத்து விட்டு வெளியே வந்தான்.

“ இவன பெத்ததுக்கு நாலு தென்னைய வாங்கி நட்டுருக்கலாம் தேங்காய் ஆவது கிடைச்சிருக்கும் “ என்று அழகி புலம்பலை கேட்ட படி வந்த ஜெகன்

 “யார் வேணாம்னு சொன்னா இப்போ கூட நட்டு வைக்க வேண்டியது தான “என்றவனின் குரலில் வேகமாக அவன் அருகே வந்த அழகி

“உனக்கு ஊர் ஊரா பொண்ணு பாக்குறதுக்கு நான் அதை பண்ணியிருந்தா கூட தேங்காய் மண்டி வச்சி இந்நேரம் பெரிய ஆளா வந்திருப்பன் டா “

“முதல்ல அந்த தோசைய தீயாம எடுக்க பழகு ம்மா அப்பறம் பெரிய ஆளா வரத பாக்கலாம் “ என்றபடி அவன் தந்தை அருகில் அமர்ந்தவன்.

“ என்னப்பா இன்னும் பூஸ்ட் குடிக்கலயா “

“எங்க உங்க அம்மா நீ வெளிய வந்து ம்ம்ம்…இல்ல ம்ஹூம் னு தலையசைச்சா தான் தருவேன்னு இருக்கா “

என்று சொன்னவரை முறைத்து படி டேபிளில் பூஸ்டை வைத்தவர் “ பால் சூடு பண்ற நேர வரை பொறுக்க முடியாத உங்களுக்கு. எதோ எதுவுமே நான் தரமா உங்கள பட்டினி போட்ட மாதிரி உங்க பையன் கிட்ட சொல்றிங்க “ என்று அழகி முகத்தை திருப்ப

“ இப்போவே நல்லா அப்பா கூட சண்டை போட்டுக்கோ ம்மா நாளைக்கு உங்க மருமக வந்துட்டா அவ கூட போடவே நேரம் சரியா இருக்கும் “ என்று பேசியவன் எழுந்து கிட்சன் சென்றுவிட இங்கே அழகி

“என்னங்க அவன் சொல்லிட்டு போறான் உங்க கூட சண்டையா போட சொல்றானா ? “

“ அது என்ன என் கூட சண்டை போடுறது மட்டும் தான் உன் காதுல விழுமா டி “

“என்னங்க என்ன சொல்லிட்டு போறான்னு தெளிவா சொல்லிட்டு புலம்புங்க “

“ம்க்கும்… இப்போ நான் புலம்புறது தான் பெரிசா தெரியுது “ என்று தலையை அசைத்தவர் “ஜெகனுக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு போல அத தான் சுத்தி வளைச்சி சொல்றான் “ இதை கேட்ட அழகிக்கு கை கால் நிலத்தில் நிற்க வில்லை

“என்ன ங்க சொல்றிங்க உண்மையாவா நம்ம பையன் ஒத்துக்கிட்டான “ என்று குதிக்காத குறையாக குதித்தவர் கிட்சன் க்கு சென்று ஜெகனிடம் ஒன்னுக்கு பத்து முறை கேட்டு உறுதி படுத்தி விட்டே பெண் வீட்டுக்கு அழைத்தார்.

அதில் சிரித்த ஜெகன் “ ஏன்ம்மா இத்தன முறை கன்பார்ம் பண்ணிட்டு கால் பண்றிங்க என் மேல அத்தன நம்பிக்கையா “

“உன்ன நம்ப முடியாது திடீர்னு நான் எங்க பிடிச்சிருக்குன்னு சொன்னன்னு மாத்துனா லும் மாத்துவ “ என்றவர் போன் பேசி முடித்துவிட்டு முகம் மலர்ந்து.

“இரண்டு நாள் கழிச்சி நல்ல நாளாம் பொண்ண பாக்க வர சொல்லிருக்காங்க ” என்றவர் அப்போதே என்ன என்ன செய்ய வேண்டும், யாரை கூப்பிட வேண்டுமென அனைத்தையும் ப்ளான் போட தொடங்கினார்.

அவர் ப்ளான் போட்டது போலவே காரில் ஜெகன், அவன் அப்பா பெருமாள், அவன் அம்மா அழகி, அவனின் அத்தை மாமா என்று ஐந்து பேர் சென்று இறங்கியிருந்தனர்.

இவர்களை உள்ளே அழைத்து அமர வைத்த சீனி சந்தானம் உபசரிக்க, அங்கு அறையிலோ சுபா பதட்டத்தில் நகத்தை கடித்தபடி இருந்தாள்.

அவளை பார்த்த மகா “ என்னடி ஒரு மாதிரி இருக்க சுபா, எல்லாம் ஓகே தான “

“அது வந்து க்கா, எல்லாம் கரெக்டா இருக்கும் தான க்கா, கொஞ்சம் பயமா இருக்கு “ அதை கேட்டு அவள் கன்னம் தட்டிய மகா.

“நான் இருக்கேன்ல பாத்துக்கலாம் “ என்று சிரித்தவளின் கையை பிடித்தபடி குனிந்த தலை நிமிராமல் வந்த சுபாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஜெகன்.

“ சில் வண்டு எவ்ளோ பவ்வியமா வர பாரு “ என்று சிரித்த முகமாக அவள் எப்போது நிமிர்ந்து தன்னை பார்ப்பாள் என்ற ஆர்வத்தில் ஜெகன் இருக்க, சுபாவோ எனக்கு கழுத்துல சுளுக்கு ப்பா நான் நிமிரவே மாட்டேன் என்று தான் வந்து நின்றாள்.

அப்போது அமிர்ந்தம் “ நிமிர்ந்து பாத்து வணக்கம் வை டி “ என்று இடிக்கவும் , காற்றை வாயில் இழுத்து ஊதியவள் மெல்ல தலை நிமிர்ந்து வணக்கம் வைத்தவள் எதிரே அமர்ந்திருந்தவனை பார்க்க அவ்வளவு தான் அப்படியே மயங்கி விட, சரிய போனவளை மகா தாங்கிபிடித்தவள்.

“அச்சோ சுபா…. “ என்று கத்தியிருந்தாள்.

அதற்குள் இருக்கையை விட்டு எழுந்த ஜெகன் அவளை கீழே விழாமல் தூக்கியிருந்தான்.

இது அனைவரும் சுதாரிக்கும் முன் நடந்து முடிந்திருக்க யாருக்கு என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை.

“ ஏ…. சுபா… எழுந்திரு ம்மா சுபா…சுபா…” என்று ஜெகன் அவளின் கன்னம் தட்டி எழுப்பும் சத்தத்திலே தான் அனைவருக்கும் அங்கே நடப்பதே புரிந்தது.

அதற்குள் இன்பா கிட்சன் சென்று தண்ணீர் எடுத்து வந்து தந்திருக்க அதை அவள் முகத்தில் அடித்து தெளித்து அவளை எழுப்பியிருந்தனர்.

முகத்தில் தண்ணீர் ஊற்றியதில் நினைவு வந்து சுபா கண்களை திறக்க அவள் முன் அவனின் முகம் தான் தெரிந்தது.

அதில் அவள் மேலும் பயந்து விழித்தவள் பின் சுற்றி நிற்பவர்களை பார்த்து விட்டு, இயல்பாகி திரு திருவென முழித்தவளை நறுக்கென்று தலையில் கொட்ட தான் தோன்றியது ஜெகனுக்கு.

“என்ன இவ என்ன பாத்து மயங்கி விழுறா… சுத்தம், இவ பயப்படுறத பாத்தா கல்யாணம் எங்க அடுத்த முறை அவ முகத்த கூட பாக்க விட மாட்டாங்க போலயே “ என்று யோசித்தவன்,

“என்ன ஆச்சு சுபா ஏன் மயங்கி விழுந்த மயங்கி விழற அளவு காலைல என்ன சாப்பிட்ட “ என்று உறிமையாக கேட்ட ஜெகனை அங்கிருந்த அனைவருமே

“என்னடா நடக்குது இங்க” என்ற விதத்தில் தான் பார்த்து வைத்தனர்.

ஜெகன் அதட்டிக் கேட்டதில் உடல் ஜெர்க் ஆக சுபா, “அது சார், மார்னிங் எதுவும் சாப்பிடல.” என்று தினறிய படி பதில் சொல்ல

“ஏன் சாப்பிடல சுபா?”

“அது கிளம்பவே சரியா இருந்துச்சு சார் அதான்.”

“சரி, அப்போ நைட் என்ன சாப்பிட்ட?”

“அது… சார்” என்று தயங்கியவளை ஜெகன் முறைக்கவும், தலையை குனிந்த சுபா, “நைட் மெஹந்தி வச்சதுல சாப்பிடாம தூங்கிட்டேன் சார்.”

என்று சொன்னவளை தான் அனைவருமே முறைத்தனர். சுபா பதில் சொன்னதில் ஜெகன் அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு,

 “அப்போ சாப்பிடாம இருந்ததுல தான் மயங்கி இருக்க” என்றதும் அவளும் ஆமாம் என்று தலையசைக்கவும்

ஜெகன், “அப்பா…. எப்படியோ சமாளிச்சாச்சு” என்று மூச்சை இழுத்து விட்டவன், ஏதாற்த்தமாக திரும்ப இன்பா இவனை தான் குறு குறுவென பார்த்திருந்தான்.

அதில் என்னவென்று முழித்தவன், “சும்மா சிரிச்சு வைப்போம்” என்று பல்லை காட்டி சிரித்துவிட்டு எழுந்து நிற்க,

“தம்பி, உங்களுக்கு எங்க பொண்ணை முன்னவே தெரியுமா?” என்று சீனி கேள்வியாக அவனை பார்க்க,

“ஆ… தெரியும்ங்க. நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்த காலேஜ்ல தான் அவளும் படிச்சா” என்றதும் தான் சீனி சந்தானத்துக்கு மூச்சே வர,

 “ஓ… அப்படியா தம்பி, சரி சரி” என்று அனைவரையும் அமர வைத்து,

சுபாவிற்கு உண்ண வடை, பாயசம், பணியாரம், லட்டு, இட்லி என்று ஒரு தட்டு முழுக்க உணவை வைக்க, அதை விழிபிதுங்க தான் பார்த்து வைத்தவள்.

“இவ்வளவும் நான் சாப்பிடணுமா?” என்று கேட்டு விழித்தவளை முறைத்த அமிர்தம், “ஒழுங்கா சாப்பிடுடி, இல்ல அடி விழும் பாத்துக்க” என்று மிரட்டி தான் உண்ண வைத்தார்.

பின் அனைவரும் உண்டு முடிக்க சிறிது நேரம் பேசியபடி இருந்தனர் ஆண்கள். இவர்கள் பேச்சைக் கேட்டு நெளிந்த ஜெகனை பார்த்த இன்பா அவன் பக்கம் தலை சாய்த்து,

“என்ன ஆச்சு ஜெகன், வாஷ்ரூம் போகணுமா?”

“அஹான்… இல்ல இன்பா” என்று தலையை சொறிந்தவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“என்ன பொண்ணு கூட பேசணுமா ஜெகன்?” என்று கிண்டலாக பார்த்தவனை பார்த்து சிரித்த ஜெகன்,

“ஹெல்ப் பண்ண முடியுமா இன்பா?” என்றதும் ஒற்றை கண்ணை அடித்து தலையசைத்தவன், “நான் பாத்துக்குறேன் ஜெகன்” என்று அவர்கள் பக்கம் திரும்பி,

“இப்படியே பேசிட்டு இருந்தா எப்படிங்க, பொண்ணு பையனுக்கு பிடிச்சிருக்கான்னு கேப்போம்?”

“அதுவும் சரிதான், நேரம் வேற ஆகுது” என்ற சந்தானம் சுபா பக்கம் திரும்ப போக,

“மாமா பிடிச்சிருக்கான்னு பொண்ணுகிட்ட கேக்குறதுக்கு முன்ன மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசிட்டு வரட்டுமே” என்று சொன்ன இன்பாவை மறுப்பாக தலையசைத்து பார்த்த சுபா,

“அய்யோ அத்தான் ஏன் இப்படி பண்றிங்க, அவர் கூட நான் எப்படி தனியா பேச?” என்று மனதில் புலம்பியவள், “அப்பா சரி சொல்லாதிங்கப்பா” என்று அவரை பார்க்க,

சந்தானமோ ஏதோ யோசித்தவராக சரி என்பது போல தலையசைத்து விட்டார். பின் இருவரையும் அந்த சிறிய தோட்டம் அருகே அனுப்பி வைத்தனர்.

அங்கே சென்றும் சுபா தலை நிமிராமலே இருக்க, திடீரென்று அவள் காதருகே கொலுசு சத்தம் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவள்.

ஜெகன் கையில் அவன் வைத்திருந்த கொலுசை பார்த்துவிட்டு,

“அய்யோ போச்சு, இந்த சார் இந்த கொலுசை இன்னும் விக்கலையா?” என்று பயந்து பார்த்தவளின் பார்வையில்,

“நான் என்ன உன்ன கடிச்சா சாப்பிட்டேன் இப்படி என்ன பார்த்து பயப்படுற?”

என்றவனை பயந்து போய் சுபா பார்க்கவும் கண்களை மூடி திறந்தவன்

“எனக்கு புரியுது டி உனக்கு எத்தனை ஷாக் ன்னு அன நல்லா யோசிச்சி ஒரு முடிவு எடுடி “

“என்னது டியா?” என்று சுபா வாயைப் பிளக்கவும், “அச்சோ இவளா..” என்று தலை குனிந்து நெற்றியை தேய்த்தவன்.

“விட்டா நம்ம பேசுறதுக்குலாம் இப்படி வாயை புலந்து மூட மாத்தி விட்டுருவா போல, சோ நேர பேசிட வேண்டியது தான்” என்று முடிவு எடுத்தவனாக,

“சுபா…” என்று அழைத்தவனின் குரல் வேறு பாட்டில் ஜெகனை அண்ணாந்து பார்க்க,

“இது உன்னோடது தான் சுபா, என்கிட்ட நீ கொடுத்துட்டு போனது தான். இப்போ இதை நானே உரிமையா வச்சுக்கலாமா இல்ல நீயே எடுத்துக்கிறியான்னு நீ தான் முடிவு பண்ணணும் சுபா”

என்று பார்த்தவனின் பார்வையில் உறைந்து போய் நின்று விட்டாள் சுபா.