“என்னது முப்பத தாண்ட மாட்டாங்களா? ஏம்மா, நான் உன்ன சைக்கிள்ல கூட்டிட்டு போல, பைக்ல வச்சி கூட்டிட்டு போறேன். அதை நினைவு வச்சிக்கோ” என்று அவள் தலையில் லேசாக தட்டினான்.
“ஹாலோ, நானும் பைக்ல எல்லாம் போயிருக்கேன்” என்று மகா முகத்தை திருப்பவும்,
“சரிடா தங்கம், இப்போ போலாமா? ரோடே நம்மள தான் வெறிக்க வெறிக்க பாக்குது”
என்றதும் சுற்றி பார்த்தவள் வேகமாக தலையை அசைத்து விட்டு அவனின் தோள்களை இறுகப் பிடித்துக் கொள்ளவும், சிரித்த இன்பா.
“எவ்வளவு பயம் தங்கத்துக்கு” என்றபடி வண்டியை எடுத்தவன் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.
வீட்டில் வந்து விட்டவன் அமிர்தத்திடம் சொல்லிக்கொண்டு வாசலோடு கிளம்பிவிட அமிர்தம்,
“வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு வந்திட்டியா மகா?”
“ம்ம்ம் சொல்லிட்டேன் ம்மா. இன்னும் இரண்டு மாசம் வேலை பார்த்துட்டு நின்னுடலாம்.”
“என்னது ரெண்டு மாசமா? என்னடி சொல்ற? வேலைய விட்டு நிக்க தான சொல்லிட்டு வர சொன்ன? நீ என்னென்ன ரெண்டு மாசம் வேலைக்கு வறேன்னு சொல்லிட்டு வந்திருக்க?”
“அய்யோ அம்மா, இங்க வேலைய விட்டு நிக்கிறான்னு சொன்னதும் நிக்க முடியாது ம்மா. இரண்டு மாசம் வேலை பாத்து கொடுத்துட்டு தான் நிக்க முடியும்.”
“என்னமோ சொல்ற, எனக்கு தான் ஒன்னும் புரியல. பேசாம உங்க அப்பா கேக்குற கேள்விக்கு நீயே பதில் சொல்லிடு” என்றுவிட்டு அவர் சென்று விட உள்ளே நுழைந்தவள் சோர்வாக டீவி முன் அமர்ந்து தலையை சாய்க்கவும் அருகில் வந்து ஜெயா அமர்ந்து கொண்டாள்
“என்னடி….சுபா, குணா எங்க? நீ மட்டும் தான் இருக்க?”
“அதுவா மகா, சுபா பைனல் இயர் ப்ராஜெக்ட்னு எக்ஸ்ட்ரா ஹவர்ஸ் காலேஜ்ல இருந்து வொர்க் பண்றாளாம், இந்த குணா ஏதோ டைப்பிங் கிளாஸ்க்கு போறேன்னு போயிருக்கா.”
“என்னது குணா டைப்பிங் போறாளா? என் கிட்ட யாரும் சொல்லவே இல்ல.”
“இன்னைக்கு தான் மகா போய் கேட்டுட்டு ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னா.”
“அப்பா, சித்தப்பா எப்படி ஒத்துக்கிட்டாங்க?”
“அதான் எனக்கும் தெரியல எப்படி ஒத்துக்கிட்டாங்கன்னு. இவளே ஒரு பெரிய சோம்பேறி. இவளுக்கு எப்படி இதுல இன்ட்ரஸ்ட் வந்திச்சின்னு வேற தெரியல.”
“பரவாயில்ல ஏதோ தோணி இருக்கே அவளுக்கு. சரி அவ போறது இருக்கட்டும் நீ எதுக்கும் ஜாயின் பண்ணலையா?”
“இல்ல மகா, எதுலயும் நோ இன்ட்ரெஸ்ட்” என்று ஜெயா சலிப்பாக அவள் மீது சாய்ந்து கொள்ளவும்,
“என்ன ஜெயா உனக்கு ஏய்ம்மே இல்லையா என்ன?”
“ஏயிம் வச்சி நான் என்ன மகா பண்ணப்போறேன், எப்படியா இருந்தாலும் கல்யாணம் பண்ணி தான் அனுப்ப போறாங்க.”
“என்னடி இப்படி பேசுற, அதுக்காக படிக்காம இருக்க போறியா?”
“அய்யோ மகா, அதெல்லாம் படிச்சிடுவேன். ஆனா அதுக்கு அப்புறம் எதுவும் யோசிக்கல மகா. இப்போ நீ கூட தான் நல்லா படிச்ச, ஆனா இப்போ கல்யாணம் பண்ணிட்டு வீட்டோட தான இருக்க போற.”
“பக்கி பக்கி, என்ன யோசிக்கிற நீ? நான் கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுல சும்மா இருப்பேன்னு உனக்கு யார் சொன்னா ஜெயா?
நான் யூபிஎஸ்சி பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன். கல்யாணம் ஆனாலும் என் கேரியரை நான் விட போறது இல்ல ஜெயா.”
“ஆனா…..அவங்க உன்ன வேலைக்கு போக கூடாதுன்னு சொன்னாங்களே?”
“ஆமா வேலைக்கு போக மாட்டேன், எஸ்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ணுவேன்.”
“அவங்க அதுக்கு ஒத்துக்கிட்டாங்களா மகா?”
“இதோ பாரு ஜெயா, இது என்னோட எய்ம். அவங்க ஒத்துக்கலன்னாலும் நான் எப்படியாவது எஸ்ஸாம் எழுதி பாஸ் ஆகுவேன். என் கேரியருக்காக நான் போராடுவேன். “
“ஆனா மகா…” என்று ஜெயா குழம்பி போய் அவளை பார்க்கவும், மகா அவள் கன்னம் பற்றி,
“பொண்ணுன்னா என்ன கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க, வீட்ட பார்த்துட்டு இருக்க வேண்டியது தான்னு நினைக்க கூடாது.
உன்னோட கனவை யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது ஜெயா.
நமக்குன்னு ஒரு அடையாளம் வேணும் ஜெயா. கனவன் பின்னாடியே அவன் பெயரோட கடைசி வரை உனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாம இருக்க போறியா ஜெயா?”
“அது மகா, இப்போ வரை நான் எதுவும் யோசிக்கலையே.”
“இது வரை இல்லன்னா இனிமே யோசி டி.”
“ம்ம்ம் மகா….”
“உன்ன மாதிரி தான் அவங்க ரெண்டு பேரும் யோசிக்கிறாங்களா?”
“ம்ஹூம் இல்ல மகா, உனக்கு தெரியும் தான. நம்ம சுபாக்கு டீச்சிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கு. குணாவுக்கு பேங்கிங் போகணும்னு ஆசைன்னு. நான் தான் கல்யாணம் பண்ணி வீட்டுல இருக்க போறவங்களுக்கு எதுக்கு எய்ம்னு யோசிக்கல.”
“நம்ம அப்பா கூட தான் என்ன ஐ.ஏ.எஸ் எஸ்ஸாம் எழுத வேணாம்னு சொன்னாங்க. அதை கேட்டுட்டு நான் என்ன அமைதியாவா இருந்தேன். வேலைக்கு போறேன் அதோட எஸ்ஸாம்க்கு படிச்சிட்டு இருக்கேன். ஏன் உங்களுக்கு தெரியும் தான எல்லாம்?”
“தெரியும் தான் மகா… “என்று தலையை சொரிந்தவளின் தலையில் கொட்டினாள் மகா.
“போய் எதிர்காலத்தை பாருடி எருமை” என்று அவளை துரத்தி விடவும் ஏதோ யோசித்த படி ரூமுக்குள் சென்றாள் ஜெயா.
இங்கு டைப்ரைட்டிங் கிளாஸ் முடித்து வெளியே வந்த குணா தோழிகளுக்கு கை ஆட்டி வழியனுப்பி விட்டு நேராக நடந்து அந்த மெயின் ரோட்டில் போடப்பட்டிருந்த காளான் கடை அருகே மெல்ல நடந்து வந்தவள் கடையை பார்ப்பதும் சுற்றி பார்ப்பதும் என்று அங்கேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள்.
“ஏ… குணா… “என்ற சத்தத்தில் நெஞ்சில் கை வைத்து பயந்து போய் திரும்பி பார்த்தவள் அங்கு நின்று கொண்டிருந்த மகேஷை புரியாமல்,
“யாரு….”என்று கேள்வியாக பார்த்து நிற்கவும் மகேஷ்,
“அடி பாவி உன்ன நெனச்சி இங்க நான் உருகிட்டு இருந்தா, நீ என்னன்னா என்ன யாருன்னு கேட்டு நிக்கிறியே “ என்று மைண்ட் வாய்ஸ் ஓட்டியவன் நேரில் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு,
“என்ன குணா என்னை மறந்திட்டிங்களா நான் தான் இன்பா ஃபிராண்டு உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்திருந்தேனே. “
“ஆ…. ஆமா ஆமா அஅத்தான்ஃபிரண்டு தான நீங்க”
“ம்ம்ம்…. ஆமா, நீங்க இங்க என்ன பண்றீங்க” என்று அவள் தனியாக நிற்பதை சுற்றி பார்த்தபடி கேட்க
“நான் டைப்ரைட்டிங் கிளாஸ் ஜாயின் பண்ணிருக்கேன் இப்போ தான் கிளாஸ் முடிஞ்சது”
“என்னது எங்க அப்பா கடைன்னு நினைச்சிங்களா ? ஏங்க எங்க அப்பா… துணிக்கடை வச்சிருக்காங்க ங்க. இது காலான் கடை அதுவும் தள்ளு வண்டி கடை”
என்று முகத்தை சுளித்தவளின் உதட்டிற்கு மகேஷின் பார்வை நகரவும் அவனுள் இருந்த நல்லவன் எழுந்து வந்து
“டேய் மகேஷூ…….. அவ சின்ன பொண்ணு டா… காலேஜ் முடிக்கட்டும் கண்ட மேனிக்கு பாத்து அவ படிப்ப கெடுத்து வைக்காத. நீ இப்படி பார்க்கிறது இன்பாக்கு தெரிஞ்சா எல்லாத்தையும் முடிச்சி விட்டுருவான் பாத்து” என்று சத்தம் போடவும் வேகமாக தலையை உலுக்கி கொண்டு பார்வையை திருப்பியவன் சமாளிப்பாக
“அப்புறம் ஏன் குணா இந்த கடையையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தீங்க”
“அது அது…வந்து…”என்று திருட்டு முழி முழித்து நின்றவளை உதட்டோரம் வர இருந்த புன்னகையை அடக்கி கொண்டு நக்கலாக பார்த்தவன் பார்வையில் குணா கோபமாக
“காளான்கா இப்படி பயந்து பயந்து திருட்டு முழி முழிச்சி நின்னிங்க. வாங்க தெரியாம சாப்பிடலாம்” என்று சொல்லியவன் கடைகாரன் தம்பியை பார்த்து
“பையா… இரண்டு ப்ளேட் காளான்” என்று சொல்லிவிட்டு குணாவின் கையை பிடித்து கொண்டு அங்கிருந்த சேரில் சென்று அமரவைத்து இவனும் அமர்ந்து கொண்டான்.
மகேஷின் செயலில் பயந்த குணா தலையை குனிந்த படி முகத்தை சால் ஆல் மறைத்து கொண்டு
“ஏன்ங்க இப்படி பண்ணிங்க நான் இப்படி சாப்பிடுறத எங்க அப்பா க்கு தெரிஞ்சா என்ன பிச்சிடுவார் ங்க”
“அச்சோ ரொம்ப பயப்படாதீங்க குணா நான் பாத்துக்குறன் “என்று சொன்னவன் அவளை மறைத்த படி அவளுக்கு எதிரே சேரை போட்டு அமர்ந்து கொள்ளவும், நிம்மதியான குணா
“தாங்க்ஸ் ங்க” என்று அவனை பார்த்து சிரித்தாள்.
அதில் இவனும் சிரித்த படி அமரவும் காளான் ரெடி என்று கடை பையன் சொல்லவும் தட்டில் காளான் வாங்கி வந்து குணாவிடம் ஒன்றை நீட்டி இவனும் சாப்பிட தொடங்கவும் குணா
“ம்ம்ம்….. காலான் சூப்பர்…. வீட்டுக்கு பார்சல் தருவாங்களா ங்க” என்று ஆவலாக மகேஷின் முகம் காணவும் அவன்
“ம்ம்ம் தருவாங்களே”
“அப்போ நாலு பார்சல் சொல்லுங்க கொஞ்சம்”
“வீட்டுக்கு எடுத்துட்டு போனா உங்க அப்பா க்கு தெரிஞ்சிடாத குணா “
“இல்ல பேங்க்ல வச்சி எடுத்துட்டு போய்டுவான் அப்பா சித்தப்பா வர நைட் லேட் ஆகும் அவுங்க வரதுக்குள்ள காலி பண்ணிடுவோம் ” என்று கன்னம் குழி விழ சிரித்தவளை ரசித்து பார்த்தவன் பின் மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு
“ஆறு காலன் பார்சல்” என்று கத்தி சொல்ல
“நான் நாலு தான் கேட்டேன் நீங்க ஆறு சொல்லிட்டீங்க “
“ரெண்டு எனக்கு குணா “
“ஓ… சரி சரி “ என்று குணா சாப்பிட தொடங்கி விட மகேஷ் அவள் சாப்பிடுவதை பார்த்த படியே
“எந்த காலேஜ்ல குணா படிக்கிற “ என்று லேசாக அவளை பற்றி பேச்சு கொடுக்க தோடங்கினான்.
அதற்கு அவள் ஒரு கல்லூரி பெயரை சொல்லவும் அதில் ஷாக் ஆன மகேஷ் “அந்த காலேஜ்ல தான் என் தங்கச்சியும் படிக்கிறா குணா “
“ஓ.. சூப்பர் எந்த இயர் என்ன டிபார்ட்மெண்ட் “
“இப்போ தேர்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருக்கா“
“எங்க அக்கா கூட அதே டிபார்ட்மெண்ட் தான் அவுங்க பேர் என்ன “
“வித்யா…”
“என் அக்கா பிரண்டு பேரு கூட வித்யா தான். அவுங்க உங்க தங்கச்சி தான் நினைக்குறேன் நான் நாளைக்கு போய் அவுங்க கிட்ட பேசுறேன் “
என்று சிரித்து படி சாப்பிட என்று மகேஷுக்கு நகரும் நொடி எல்லாம் ரம்மியமாக தோன்றியது.
இருவரும் உண்டு முடிக்கவும் குணா அவளிடம் இருந்த பணத்தை அவனிடம் நீட்ட, அதில் முறைத்த மகேஷ்
“இல்ல வேணாம் குணா “ என்று மறுப்பாக தலை அசைக்க
“இல்ல ங்க கடன் அன்பை முறிக்கும் வாங்கிக்கோங்க “
“காசு எல்லாம் வேணாம் குணா. வேணும்னா நெக்ஸ்ட் டைம் இதே மாதிரி வேற ஏதாவது நீ வாங்கி குடேன் “
“நெக்ஸ்ட் டைம் எப்படி “ என்று குணா யோசித்து நிற்கவும் மகேஷ்
“உன் போன் நம்பர் கொடு கால் பண்றேன் “
“ தனியா போன் லாம் இல்ல ங்க. எங்க மூணு பேருக்கும் ஒரே போன் தான் ஒரு நாள் ஒருத்தவுங்கன்னு மாத்தி மாத்தி யூஸ் பண்ணிப்போம் “
“ அப்போ என்ன பண்ண..ம்ம்ம்…” என்று ஏதோ யோசித்த மகேஷ்
“அப்போ சரி என் நம்பர் நோட் பண்ணிக்கோ உன் கிட்ட போன் இருக்கும் போது கால் பண்ணு நான் வரேன். எனக்கு சாப்பிட கம்பெனி கிடைச்ச மாதிரி இருக்கும் “ அதை கேட்டு வெகு நேரம் குணா யோசித்த படியே நிற்கவும் மகேஷ்
“ரொம்ப படுத்துறோமோ…” என்று யோசித்தவன்
“சரி வேணாம் குணா “ என்று சொல்லி முடிக்கும் முன் “ சரி தாங்க “ என்று அவள் நோட்டை ஒன்றை எடுத்து கொடுத்திருந்தாள்.
மகேஷும் மகிழ்ச்சியாக அந்த நோட்டில் அவன் நம்பரை எழுதி கொடுத்து விட்டு அவள் நம்பரை வாங்கி கொண்டு சென்றிருந்தான்.
வீட்டுக்கு சென்ற மகேஷ் விசில் அடித்த படியே உள்ளே வந்து அங்கு சோபாவில் அமர்ந்திருந்த அவன் தங்கை கையில் காளானை கொடுத்து விட்டு
“அம்மா கூட சேர்ந்து சாப்பிடு “ என்று அவன் அறைக்குள் சென்று விட்டான்.
உள்ளே சென்றவனை அதிர்ந்து போய் பார்த்த வித்தியா
“அம்மா…” கத்தியதில், பதறிக்கொண்டு வந்த சாந்தா “என்னடி என்ன ஆச்சு எதுக்கு இப்படி கத்துற “
“அம்மா இந்த மகேஷ் இருக்கானே அவனுக்கு என்னமோ ஆகிட்டு ம்மா”
“மாடு அண்ணாவ பேர் சொல்லி கூப்பிடாத “
“இப்போ இது தான் முக்கியம் பாரு நான் சொல்றத கேளு ம்மா “
“என்னன்னு சொல்லி தொலைடி அடுப்புல குழம்பு இருக்கு “
“அம்மா இந்த மகேஷ் நமக்கு காளான் வாங்கிட்டு வந்திருக்கான் ம்மா”
“ப்ச் இதுக்கு தான் கத்தினியா டி. அவன் போதையில கண்ணுல படுறதெல்லாம் வாங்கிட்டு வர்றது தானடி “
“அம்மா அவன் குடிக்கல ம்மா இன்னைக்கு ஸ்டெடியா விசில் அடிச்சிட்டே வந்தான் “
“என்னடி சொல்ற இன்னைக்கும் அவன் குடிக்கலையா “
“இன்னைக்கும்னா நேத்தும் அவன் குடிக்கலையா “
“இல்லடி ஒரு, ஒரு வாரமா குடிக்காம தான் வீட்டுக்கு வர்றான் டி”
“என்னம்மா சொல்ற உன் பையனுக்கு பேய் கீய் புடிச்சிருச்சா ? ” என்று சொன்ன வித்தியாவின் வாயில் பட் என்று போட்ட சாந்தா.
“வாய்ய கழுவு டி எருமை. இந்த வருஷம் என் பையன் ராசிக்கு நல்லா வருவான்னு ஜோசியர் சொன்னாரு அதே மாதிரி அந்த குடிய விட்டுட்டான் பாரு இனிமே நல்லா வந்துருவான்டி என் பையன் “
“எந்த ஜோசியர் காலைல டிவில ஒருத்தர் வந்து மேஷம் ராசில இருந்து மீனம் வரை. இருக்கு… அன இல்லைன்னு குழப்பிட்டு போவாரே அவர் சொன்னாரா “
“உனக்கு என்ன தெரியும் கழுத அவர் சொல்றது எல்லாம் பலிக்கும் நீ வேணா பாரு என் பையன் நல்லா வருவான் “
“ம்ம்…ம்ம்… பாக்கலாம்.. பாக்கலாம் ” என்றவள் ஏதோ யோசித்த படியே காளானை சாப்பிட்டு முடித்தவள் மகேஷை தேடி சென்றாள்.
அங்கே அறையில் மகேஷ் கட்டிலில் தலை குப்புற படுத்திருக்க. அவன் கையெல்லாம் நடுங்கி கோண்டிருக்க அதை உடம்போடு அழுத்திய படி ” குணா குணா….” என்று முனு முனுத்து கொண்டிருந்தான்.
எப்போதும் இந்நேரம் பாரில் இருந்து பழகியவனுக்கு அதே நினைவு வர அதை தடுக்கும் வழி தெரியாமல் குணாவின் பெயரை மந்திரம் போல் முனு முனுத்து கொண்டிருந்தான்.
அப்போது உள்ளே வந்த வித்தியா மகேஷ் இடம் இருந்து வந்த முனங்கள் சத்தத்தில் அவன் அருகே சென்று என்ன என்று ஒட்டு கேட்க குணாவின் பெயர் தெளிவாக கேட்டு விட்டது.
குணாவின் பெயரை கேட்டவள் குழப்பமாக எதோ யோசித்தவள் அப்படியே பூனை போல வெளியே சென்று விட்டாள்.
” இந்த பேரை எங்கேயோ கேட்டிருக்கோமே எங்க…” என்று யோசித்த படி மறுநாள் கல்லூரியில் வகுப்பில் அமர்ந்திருந்தவளை
“வித்தியா….” என்ற குரல் கலைக்கவும் யார் என்று நிமிர்ந்து பார்த்தவள் அங்கு நின்றிருந்த குணாவை பார்த்து
“ஏ… லட்சுமி எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ” என்று கை அசைக்கவும் அவள் பின்னே ஓடி வந்த சுபா குணாவின் மீது மோதி நின்று “எருமை குணா ஏண்டி விட்டு வந்த என்ன ” என்று மூச்சு வாங்க நின்றாள்.
“ஆமா உன் பேரு குணால ” என்று வித்தியா ஒரு பக்கம் அதிர்ந்து போய் நிற்கவும்,
“அவ பேரு தான் உலகம் அறிந்த ஒண்ணாச்சே டி குணா குண்டாத்தான்னு “
“அப்படி கூப்டாத சுபா பெருச்சாளி ” என்று இருவரும் அடித்து கொண்டு நிற்பதை பார்த்து தலையில் அடித்து கொண்ட வித்தியா
“இவளுங்கள…” என்று பல்லை கடித்து கொண்டு பிரித்து விட்டு ” சண்டை போடாம இருக்க மாட்டிங்களா டி “
“நானா ஆரம்பிச்சேன் வித்தியா அவன் தான் ஆரம்பிச்சா ” என்று குணா குழந்தை போல கை நீட்டி கம்பலயின்டு செய்யவும் அவள் கன்னம் பிடித்து கிள்ளியவள்
“சரி சரி விடு லட்சு செல்லம்” என்று குணாவை கொஞ்சி ஒரு பக்கமும் சுபாவை மறுபக்கமும் அமர வைத்தவள்
“என்ன லட்சுமி அதிசயமா இந்த பக்கம் வந்திருக்க “
“அதுவா வித்தியா ஒரு விஷயம் கேட்க வந்தேன். உனக்கு அண்ணா இருக்காங்களா “
“ம்ம்ம் இருக்காங்களே வேலை பார்த்துட்டு இருக்கான் “
“அவங்க பேரு மகேஷா ” என்று குணா ஆர்வமாக கேட்க
“ம்ம்ம் மகேஷ் தான் உனக்கு எப்படி என் அண்ணாவை தெரியும் “
” அதை நான் சொல்றேன் வித்தியா ” என்று அவளை சுபா அவள் பக்கம் திருப்பி
“எங்க அக்காவ மாப்பிள்ளை பார்க்க வந்தாங்கல அவங்க உங்க அண்ணா ஃபிரண்டு தான்டி “