பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்… பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத,  நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது, மதுரைக்கு அவுடர்ல ஒரு ரிசார்ட் இருக்குலா, அங்க ரெண்டு நாள் புக்  பண்ணி இருக்கேன்.  நம்ம பிள்ளைகளுக்காக சரண், முடியாதுன்னு சொல்லாத…”

.    அஜி பள்ளி தோழி யாரோ சொல்ல, மூன்று நாளாக அந்த பாடு தான். அவள் அப்பாவிடமும் போனில் அதையே சொல்ல, பிள்ளையை சமாதான படுத்த தான் போகலாம் என்று சொல்கிறான் என்று இவள் நினைக்க, உண்மையிலே  புக் பண்ணி விட்டான்.

   “ பிள்ளைகளுக்கு ஆயிரம் ஆசை வரும், நம்ம சூழ்நிலை ஒன்னு  இருக்கு. வாய் திறந்து கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து தான் ஆகணுமா… உங்க போக்கு எனக்கு சரியா படலை, ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க…”

       “நீ ரொம்ப கெடுபிடி, அதான் நான் கொஞ்சம் செல்லம். சின்ன பிள்ளைக தான, ஒத்துக்கோ சரண். நாமளும்  அவங்களை  எங்கேயும் கூட்டி போகலை. தொழில் தொடங்கிட்டா எனக்கும் நேரம் இருக்காது…” பலவாறு சமாதானம் செய்து தான் சம்மதிக்க வைத்தான்.

     சரண்யாக்கு இது எல்லாம் அநாவசிய செலவு… மறு நாள் இரவு அந்த குட்டி குடும்பம் ரிசார்ட் நோக்கி கிளம்பி விட்டது. அவனின்  இனோவோ கார்  எடுத்துட்டு வந்தான். இது தான் முதல் முறை காரில் செல்வது.

       “கார்ல போறோம்மாப்பா… யார் காரு?…”

    “லட்டு குட்டி, பட்டு குட்டி காரு…”

   என்ன என்று அதிசியமாக பார்த்தவர்கள்.  “எங்க கார, யார் வாங்குன?…”

     “அவங்க அப்பா வாங்கி குடுத்தாங்க…”   

     “ நியாப்பா… இது நம்ம காரா, நாங்க ஸ்கூல்க்கு கார்ல போகலாமா…” 

     “ஷ், விஜி ஆடாத, அமைதியா உட்கார்…” என்ற அதட்டல். யாருக்கு என்று தெரியவில்லை.  வெற்றி வாயை முடி கொண்டான்.

       பிள்ளைகள் காரில் போற குதூகலம், கை தட்டி, ஆடி கொண்டு தான் வந்தார்கள். வெற்றி , மகள்களின் மகிழ்ச்சியை திரும்பி பார்த்து கொண்டே வர,

     “ ரோட்டை பார்த்து ஓட்டுங்க…” ஒரு அதட்டல். 

    “சரண், சாப்பிட்டு போகலாம். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். பிள்ளைக பசி தாங்க மாட்டாங்க…” ஒரு ஹோட்டல் முன் நின்றது.

       பெரிய, வசதியான ஹோட்டல் அது… குடும்பமாக உள்ளே நுழைய, அங்கே அவள் மொத்த குடும்பமும் இருந்தது. பிரியாவின் கணவன் வந்திருக்க, வெளியில் வந்து இருப்பார்கள் போல… அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று குடும்பமே வந்தது தன்னை தவிர,  இதனால் தானே இவள் ஒதுங்குவதும்.  பெயருக்கு கூட இவளை அழைக்க வில்லை, நாலு தெரு தள்ளி தான் வீடு. இதை தான் இவள் சொல்வதும், எங்கள் தகுதியை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.

       “சரண், உங்க வீட்டு  ஆளுங்க…”

       “நான் இதுவரைக்கும் பார்க்காமையா இருப்பேன், விட்டுடுங்க…” கிளம்பி வெளியே வரும் போது தான் சிவகுமார் பார்த்தார். அவர்களும் கிளம்பி விட்டார்கள்.

  மகளை  பார்த்ததும் வந்து மாப்பிள்ளையிடம் விசாரிக்க, சொல்லி விட்டான். பிள்ளைகளுக்கு லீவு, ரிசார்ட் போகிறோம் என்று…

  பிரியா, திவ்யாவின் பார்வை சரண்யா மீது தான். ஒரு அறிமுக பேச்சு மட்டும் தான். யாரும் நகையை பத்தி பேசவில்லை. 

        சுகந்தி கூட கொஞ்சம் நெகிழ்ந்து போய் தான் இருந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து மகள் குடும்பத்துடன் இருக்க, கண் நிறைந்தது. சிவகுமார் தனியே சென்று வெற்றியுடன்  பேசி வந்தார்.  ஏனோ பெண்களுக்கு ஒட்ட வில்லை. சரண்யா உடை, கணவன் அருகில் நின்றது, அவர்களின் கார் என்று பிரியா நெருங்க கூட இல்லை. என்னவோ தடுத்து விட்டது. 

        வெற்றி குடும்பம் கிளம்ப, பிள்ளைகள் காரிலே உறங்கி  விட்டார்கள். சரண்யா, அவள் குடும்பத்துடன் அதிகம் பட்டு கொள்ளாதது போல தோன்ற,  கேட்டு விட்டான்  வெற்றி.

          “அதுவா, நான் படிக்கலை, நீங்களும் பிடிக்கலை… ஆனா, நீங்க தான் உங்க தம்பிய படிக்க வச்சீங்க, உங்க தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு பார்த்தீங்க. அதே நேரம் உங்களையும் உயர்த்தி கொண்டீங்க. ஆனா, நான் அவங்களை நம்பி, அவங்க ஆதரவுல தான் நாலு வருசம் பிள்ளைகளை வளர்த்தேன்.  எதுக்கும் அவங்க கிட்ட நிக்குர நிலை தான். ஆனா, இன்னைக்கு?… நான் நல்லா இருக்க கூடாது அப்படிலாம் இல்லை. அவங்களை தாண்டி நிக்க கூடாது. இப்போ அவங்களுக்கு ஒரு போட்டியா நான் தெரியுறேன்…” என்று சரண்யா விளக்க. வெற்றிக்கு ஒன்றும்  புரியவில்லை. பெண்கள் விசயம் போல, கேட்டு கொண்டான்.

        “நான், எம் பிள்ளைக எல்லாம் இப்படி வருவோம்ன்னு அவங்க எதிர்பார்க்கல. எம் பிள்ளைகளுக்கு நான் பார்ப்பேன் தான். ஆனா  இன்னைக்கு நாங்க  வாழ்ற இந்த வாழ்க்கை உங்களால தான் அந்த நன்றி எனக்கு இருக்கும்…” என்று சரண்யா சொல்லும் போதே, அவள் கையை பிடித்து தடுத்து விட்டான் வெற்றி.

    “என்ன நன்றி. என் குடும்பத்தை நான் தான் பார்க்கணும். நான் நல்லா இருக்கேன், நல்ல சம்பாதிக்கிறேன். அதிலிருந்து ஒரு பகுதிய என் தம்பிக்கு குடுக்குறேன், எம் தங்கச்சிக்கு குடுக்குறேன்னு சொல்லலாம்.  எம் பொண்டாட்டிக்கு  ஒரு பகுதி குடுக்குறேன்னு சொல்ல முடியுமா… எனக்கானது எல்லாம்  உங்களுக்கு உரியது, உரிமையானது சரண். அதை மனசுல பதிய வை…” அழுத்தமாக சொல்ல, அமைதியாக அவதானித்தாள் சரண்யா.

        அங்கிருந்த இரண்டு நாளும் பிள்ளைகள் ஒரே ஆட்டம் தான். பிள்ளைகளுக்கான விளையாட்டு நிறைய இருக்க, ஒன்றையும் விட்டு வைக்க வில்லை. பெற்றோர்களையும் விட வில்லை. சரண்யாக்கு இவர்களோடு ஓட முடியாது, ஒதுங்கி வேடிக்கை மட்டும் தான். வெற்றி தான் பிள்ளைகளுக்கு ஈடு கொடுப்பான்.  

       எப்போதும் தாயை ஒன்றும் அஜி கூட மெல்ல தந்தை பக்கம் நகர்ந்து விட்டாள். நல்ல உணவு, உறக்கம் என்று சரண்யாக்கு ரெஸ்ட் தான்.  வெளியில் பிள்ளைகளுக்கு என்று காட்டி கொண்டாலும், அவள் அழுத்தம் குறைக்கவும் தான்.

    வெற்றி அவர்களை எல்லாம் போட்டோவாக எடுத்து தள்ளினான்.  அதை தான் பார்த்து கொண்டு இருந்தாள் அபிராமி.

      குடும்பமாக இருக்கும் வெற்றியை பார்க்க, பார்க்க தாள வில்லை.  அவன் ஸ்டேட்டஸ் எல்லாம் மனைவி, மகள்கள் மட்டும் தான். ஏனோ தன் காயத்தை ஆற விடாமல், வலியை மட்டும் கொடுத்து கொண்டு இருந்தாள். ஒவ்வொரு போட்டோவாக பார்த்த படி வர, ஒரே ஒரு போட்டோவில்  மட்டும் வெற்றியும், சரண்யாவும் தம்பதிகளாக நின்று இருந்தார்கள்.

    மெருன் நிற சுடிதாரில் சரண்யாவும், வெள்ளை சட்டையில் வெற்றியும் மனைவியை நெருங்கி நின்று இருந்தான். அதுவரை ஏதோ ஒரு ஆதங்கத்தில் பார்த்து வந்தவள், இருவர் முகத்தில் இருந்த புன்னகை காயத்தில் கத்தியை வைத்து திருகியது போல் இருக்க, காட்டு கத்தலாக கத்த தொடங்கினாள்.  தடுக்க வந்த யாரையும் விட வில்லை.

     என் வாழ்க்கையை எல்லோரும் சேர்ந்து அழிச்சுட்டீங்க, இது என் இடம் யாரோ ஒருத்திக்கு  தூக்கி கொடுத்துடீங்களே…” என்று அரட்ட தொடங்கினாள்.

      அன்று இரவு தான் வெற்றி குடும்பம் வீடு திரும்பியது. வரும் வழியில் வெற்றிக்கு ஒரு சவாரி வர, காலையில் கிளம்ப வேண்டும். வீடு வந்தவன் உறங்கும் பிள்ளைகளை படுக்கையில் போட, தாயிடம் இருந்து போன், அவசரம் உடனே வா என்று… மனைவியை பார்த்து கொள்ள சொல்லியவன்,  அரக்க பரக்க ஊர் திரும்பினான். வீடு செல்ல மணி பன்னிரண்டு,

      “என்னம்மா! யாருக்கு என்ன, ஏன் அவ்வளவு அவசரமா வர சொன்ன…” பதட்டமாக வெற்றி கேட்க.

      அவர் அழுது கொண்டே, “ஐயோ! வெற்றி இந்த அபி தாண்டா…” என்றவர் நடந்ததை சொல்ல.

      வெற்றிக்கு அவ்வளவு கோபம். “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா… என்னவோன்னு ஓடி வந்தா, அபி அழுகுறான்னு சொல்ற. அவ அழுதா, நான் என்ன பண்ண…”  அவ்வளவு கோபம், தூக்கம் கெடுத்து ஓடி வந்தானே…

       “என்னடா இப்படி சொல்ற. நீ வந்து அவ கிட்ட பேசு…”    

        “நான் வந்து பேசவா… என் பொண்டாட்டி என்னை கிழிச்சு எடுத்துடுவா… நான் முன்னவே அபி கிட்ட தெளிவா பேசிட்டேன். இனி என்னை விடுங்க. இதை தான்னு சொல்லி இருந்தா வந்தே இருக்க மாட்டேன்…”  எரிச்சலில் கத்தி சென்றான் மகன்.

   மூன்று மணிக்கு சவாரி இருக்க, நான்கு மணி நேரமாவது நல்ல உறக்கம் வேண்டும்.  என்னவோ என்று பயந்து வர, கதை சொல்லும் தாயின் மேல் கடுப்பு எகிறியது. மீண்டும் மதுரை  வர மணி இரண்டு. வீடு செல்வோமா என்று தோன்றிய போதும் தொந்தரவு செய்ய மனதில்லை.  மனைவி, பிள்ளைகளை பார்க்காமல் செல்லவும் முடியவில்லை.  ஆந்திரா செல்ல வேண்டும், வர மூன்று நாள் ஆகும். 

        மனைவி போன் செய்ய எடுத்து விட்டாள். வீடு வருவதாக சொல்லி விட்டான்.  வந்த உடன் பிள்ளைகளை பார்த்து கிளம்ப வேண்டும். 

       சரண்யா இஞ்சி டீ, பிஸ்கெட், பழம் எல்லாம் எடுத்து வைத்தாள். அவனும் தன்னை தயார் செய்து கொண்டான் . கிளம்பும் முன் பிள்ளைகள் நெற்றியில் முத்தம் வைக்க,

       “ காலையில் எழுந்ததும் அப்பா எங்கேன்னு தான்  முதல்ல கேட்பாங்க…” என்ற மனைவியை பார்த்து சிரித்தான். ஆயிரம் பத்திரம் சொல்லி கிளம்பினான்.

     சாமி படத்தில் இருந்த எலுமிச்சை  பழத்தை அவன் பையில் வைக்க, அவன் முகத்தில் ஒரு புன்னகை. வழியனுப்ப வந்தவளை கீழ வர வேண்டாம் என்று தடுக்க, பிடிவாதமாக உடன் வந்தாள் சரண்யா. 

     “பார்த்து  இருங்க, வீடியோ கால் பண்றேன். பிள்ளைக மேல கை வைக்காத சரண். நானும் இல்லை என்ன கேட்டாலும் வாங்கி கொடு, சரியா…” என்ற கணவனை பார்த்தாள் பெண்.

     பகல் முழுக்க பிள்ளைகள் உடன் ஆட்டம், அடுத்து அவன் ஊர் சென்று விட்டான், இனி சவாரி செல்ல வேண்டும். தூக்கமே இல்லாமல்  ஓடுகிறான் தங்களுக்காக, மனம் கவலைப்பட்டது. 

       “சரி நான் வாரேன் சரண். பார்த்து, பத்திரமா இருங்க..” என்றவன், ஏதோ வேகத்தில் லேசாக அனைத்து விடு விக்க, அவனே அரண்டு விட்டான். என்ன சொல்வலோ  என்று,  அவள் நார்மலாக இருக்கவும் தான் நிம்மதி.  அவளை மேலே போக சொல்லி வண்டி ஏற, மாடியில் நின்று பார்த்து  கொண்டு தான் இருந்தாள். 

      மனைவியை உள்ளே போக சொல்ல, அவள் மறுத்து  அவனை செல்லுமாறு சைகை காண்பித்தாள். வாடா புன்னகை கணவன் முகத்தில், கை அசைத்து விடை கொடுத்தான். இதுவரை இருந்த கண் எரிச்சல் மறைந்து உல்லாசம் மிகுந்தது.