“சொல்லுங்க சார்” என்று அவன் நேரே ஆய்வாளரின் முன்னே சென்று அமர,

“சக்தி இவங்க ஏதேதோ சொல்றாங்களே” என்று அவர் சுவேதாவை கைகாட்ட,

“என்ன சொல்றாங்க சார். அவங்க சொல்றதுக்கெல்லாம் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரணுமா? நடந்த விஷயங்கள் ஊருக்கே தெரியுமே. என்கிட்டே விசாரிக்க என்ன இருக்கு?” என்று சக்தி அவரிடமே கேட்டு வைக்க,

“உங்க சூழ்நிலை எனக்கு புரியுது சக்தி. ஆனா, புகார்ன்னு வந்துட்டா நானும் விசாரிக்கணுமா இல்லையா. அதோட, உனக்கும் தெரியப்படுத்தனும் இல்ல. அதுக்காக தான் வர சொன்னேன்.”

“என்ன செய்ய சொல்றிங்க இப்போ?” என்று அவன் கேட்கும்போதே,

“முத்து. நடந்தது என்னன்னு உனக்கு தெரியும் இல்ல” என்றார் சொக்கநாதர்.

“ஐயா”

“அந்த பிள்ளையோட அப்பனையும், சித்தப்பனையும் வர சொல்லு. இந்த பொண்ணு பேசுறதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது”

“ஐயா. ஏற்கனவே தகவல் சொல்லிட்டேன்” என்ற ஆய்வாளரின் பேச்சில்,

“சக்தி” என்று அவன் அருகில் வந்துவிட்டாள் சுவேதா.

“சக்தி நான் சொல்றதை கேளுங்க ப்ளீஸ். எனக்கு நீங்க வேணும். என்னால உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது சக்தி. என் அப்பாகிட்ட பேசு ப்ளீஸ். அவர் சொல்றத கேளு. என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவள் பழைய பல்லவியையே திருப்பி படிக்க, சக்திக்கு அவள் பேச்சு பிடிக்கவே இல்லை.

அந்த ஆண்மகனின் அகங்காரம் அங்கே தூண்டிவிடப்பட, ” ஏய்” என்று அதட்டியபடியே எழுந்து நின்றுவிட்டான் அவன்.

கோபத்துடன் கையையும் உயர்த்திவிட, “சக்தி” என்று காவலரும், சொக்கநாதரும் ஒரே நேரத்தில் அவனை நோக்கி குரல் கொடுக்க, உயர்த்திய கைகளை அதே கோபத்துடன் காற்றில் வீசினான் அவன்.

“என்ன உன் அப்பன் பேச்சை கேக்கணும்? நான் எதுக்கு உன் அப்பன் பேச்சை கேட்கணும்? யாரு அவன்? முதல்ல நீ யாரு? நிச்சயம் தானே பண்ணினோம். அதையும் ஒன்னுமில்லன்னு சொல்லி முறிச்சுட்டு போனது உன் அப்பனும், சித்தப்பனும் தான். அதோட எல்லாம் முடிஞ்சுது.”

“பொம்பளை பிள்ளையாச்சேன்னு பொறுமையா எடுத்து சொன்னா, என்னையே போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுப்பியா நீ? என்ன உன் பஞ்சாயத்து? காதலிக்கிறீயா என்னை. இப்போவே கல்யாணம் பண்ணனுமா?” என்று சக்தி கேட்டதில் சொக்கநாதருக்கு சகலமும் ஆடிப் போனது.

“சக்தி” என்று அவர் குரல் கொடுத்தது காதில் விழாதது போல், “சொல்லு. இப்போ இங்கே கல்யாணம் பண்ணிப்போமா? அதோட உன் குடும்பத்தை நீ மறந்துடணும். முடியுமா?” என்று சக்தி கேட்டதற்கு சுவேதா பதில் கூறாமல் நிற்க,

“அதெப்படி தம்பி கல்யாணம் பண்ணுவீங்க. பெத்தவன் நான் என்ன செத்தா போய்ட்டேன்” என்றபடியே உள்ளே நுழைந்தார் மாணிக்கம்.

“யோவ். அதை உன் பொண்ணுகிட்ட சொல்லுய்யா. என் தம்பியை வெட்டிவிட சொல்ல இவ யாரு? முதல்ல நீ உயிரோட தானே இருக்க. உன்கிட்ட சொல்லாம இவ ஏன் இங்கே வந்து நிற்கிறா? கேளுய்யா மொத.” என்று ஏக வசனத்தில் தான் பேசினான் சக்தி.

அவன் பேச்சில் சொக்கநாதருக்குத் தான் போன உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது.

மாணிக்கம் கோபத்துடன் மகளிடம் திரும்ப, கண்ணீருடன் நின்ற மகளைக் காண பாவமாக இருந்தாலும், கோபமும், அவர் ரத்தத்தில் ஊறியிருந்த ஜாதி வெறியும் அதை மிஞ்சி நின்றதில், மகளை ஓங்கி ஓர் அறை விட்டார் அவர்.

காவல் ஆய்வாளர் பாய்ந்து வந்து அவரை தடுக்க, “விடுங்க சார்” என்று அவரை உதறிவிட்டு மீண்டும் மகளை

நெருங்கியவரை அவரது தம்பி ஷண்முகம் தான் பிடித்து நிறுத்தினார்.

அதன்பிறகு அரைமணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு மகளை சரிக்கட்டி அவர்கள் கிளம்ப, நிச்சயம் நின்று போனதற்கு எந்த வகையிலும் சக்தியும், அவன் குடும்பமும் காரணமில்லை என்றும், இனி அவன் பெயரில் எந்த புகாரும் பாதி செய்ய மாட்டோம் என்றும் எழுத்துப் பூர்வமாக உறுதி எழுதி வாங்கியிருந்தனர் காவல் நிலையத்தில்.

சக்திக்கு சுவேதாவை நினைத்து மனதின் ஓரம் சற்று வருத்தம் இருந்திருந்தாலும், இன்றைய அவளது செயலில் அது மொத்தமாக துடைத்து எறியப்பட்டு இருந்தது.

‘எத்தனை சுயநலம்டா சாமி.’ என்ற எண்ணம்தான். என்னவோ தப்பித்துக் கொண்ட உணர்வுடன் அவன் காவல் நிலையத்தை விட்டு வெளியே வர, அதற்குள் அவனைத் தேடி வந்திருந்தார் முத்தையா.

வாசலில் நின்றிருந்த சண்முகத்தை பார்க்கவும், கையை முறுக்கிக்கொண்டு அவர் முன்னேற, சக்திக்கு அவரை பிடித்து நிறுத்துவது பெரிய பாடாக இருந்தது.

“விடுங்க மாமா. எல்லாம் முடிஞ்சுது” என்று அவன் தடுக்க,

“பண்றதெல்லாம் பண்ணிட்டு, புகார் வேற கொடுப்பானுங்களா. இங்கேயே வந்துடறேன். அதுக்கும் சேர்த்து கொடுக்க சொல்லுங்க மாப்பிள்ள” என்று கத்தியவர்,

“நீங்க ஏன் தனியா வந்திங்க” என்று மாமனாரையும், மருமகனையும் வறுக்க,

“பொட்டப்புள்ள விஷயம் முத்தையா. ஊரைக் கூட்டி படை திரட்ட சொல்றியா?” என்றார் சொக்கநாதர்.

சக்தி வெகுவாக போராடி முத்தையனை காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வர, அப்போதும் கோபத்துடன் தான் காணப்பட்டார் அவர்.

சுந்தரவடிவு, ” என்னண்ணே ஏன் இம்புட்டு கோபம். என்னாச்சு உங்களுக்கு?” என்று பதட்டமாக, அவரிடம் நடந்தது மொத்தத்தையும் கூறிவிட்டார் முத்தையன்.

வடிவு ஆடிப்போய் நிற்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல தங்கச்சி. எல்லாம் பேசி முடிச்சாச்சு.” என்று அவரே வடிவின் பதட்டத்தை தணிக்கவும் செய்தார்.

“என் பிள்ளைக்கு நேரமே சரியில்லேண்ணே” என்று வடிவு அழ,

“அவனுக்கென்ன தங்கச்சி. என் மாப்பிளை ராஜா. அவனைப்போல ஒரு மருமகன் கிடைக்க அந்த பயலுக்கு கொடுத்து வைக்கல. இப்பவும் எதையாவது பண்ணி இழுத்திட மாட்டோமான்னு தான் பொண்ணை அனுப்பி வச்சிருக்கான் போல. நீ ஆகுற வேலைய பாரு தங்கச்சி. எவன் என்ன செய்யுறான்னு நான் பார்த்துக்கறேன்.” என்றவர் வேகமாக கிளம்பிவிட்டார்.

சக்தி அவன் அறையில் இருக்க, வடிவு அவனுக்கு காபி வைத்துக் கொடுக்கவும், “ஒன்னும் இல்லம்மா எனக்கு” என்றவன் அமைதியாக படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

அன்றைய நாளுக்கான மகிழ்வு அந்த இடத்தில் இருந்து ஒரு பதட்டத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டதில், திக் திக் என்ற உணர்வுடன் தான் காணப்பட்டனர் சொக்கநாதரும், முத்தையனும்.

பார்த்து பார்த்து அத்தனையும் அவர்கள் செய்திருந்தாலும், ஏதோ ஒரு எச்சரிக்கை உணர்வுடன் தான் காணப்பட்டனர் இருவரும்.

தங்கப்பாண்டியனுக்கு நடந்தது எதுவும் தெரியாததால் அவர் உற்சாகமாக வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, நிச்சயத்திற்கு நேரம் நெருங்கியதால் அவரை மேடைக்கு அழைத்தனர்.

மேடையிலும், ஒருவித சோர்வுடன் தான் காணப்பட்டான் சக்தி. மீனாட்சிக்கு அவன் முகம் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும், அங்கிருந்தவர்கள் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்க அதில் அவள் கவனம் மாறிப் போனது.

சொக்கநாதரும், மனோன்மணியும் பேரனுக்காக தட்டை மாற்றிக்கொள்ள, ஆனந்தத்தில் ததும்பிய விழிகளுடன் தட்டை வாங்கிக் கொண்டனர் முத்தையன்-வள்ளியம்மை தம்பதியினர்.

தட்டு மாற்றிக் கொள்ளவும், திருமண ஓலை வாசிக்கப்பட, அதில் அடுத்த மாதத்தில் வந்த ஒரு முகுர்த்த நாளை பெரியவர் ஒருவர் வாசிக்க, மீனாட்சியும், சக்தியும் ஒரே நேரத்தில் தன் தாத்தனைத் தான் முறைத்தனர்.

சொக்கநாதர் அந்த இருவரின் பார்வையையும் சந்திக்காமல், முத்தையனை கட்டியணைத்து தன் மகிழ்வைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்.

அதே மண்டபத்தின் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்து இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த வெற்றி, நிச்சயம் முடியவும் வேகமாக யார் கண்ணிலும் படாமல் வெளியேறிவிட்டான்.