இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு. அதை மெய்பிப்பது போல சர்வேஷ் மீண்டும் பேசிவிட்டான்.
சர்வேஷ்க்கு, பெண்ணவளின் எல்லா சமிக்கைகளும் எனக்கு சாதகமாக இருக்க.. எப்படி அவள் என் அழைப்பினை ஏற்காமல் இருக்கலாம்.. நேரில் வந்த பிறகும்.. வீட்டில் கூட என்னை எப்படி அவள் தவிர்க்கலாம் என ஓடிக் கொண்டே இருக்கிறது.
சர்வேஷ், கார் வந்ததும் அதே கோவத்தோடுதான் வீடு வந்தான். நேரம் செல்ல செல்லதான் அவனுக்கு வலிக்கத் தொடங்கியது. அவளிடம் பொறுமையாக பேச வேண்டும்.. அவளின் கண்களை ஆராய வேண்டும்.. என்னை பார்க்கும் பார்வையை உணர வேண்டும்.. என்னிடம் ஏன் பேசவில்லை.. என்மீது கோவமா எனதான் அவளிடம் வினவ வேண்டும் என எண்ணி சென்றான்.
ஏனோ அவளை பார்த்ததும் பதறியவனின் பொறுமை சிதறி போக.. காரியம் கைமீறி போகிற்று.
சர்வேஷ் வீட்டில்..
அக்காக்கள் இருவரும் பேக்கிங் வேலையில் இருந்தனர் இரவில். காலையில் வேலை இருக்க.. அம்மா எடுத்து வைத்த பொருட்களை தம்பிக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
துர்கா, மதியமாக சென்னை வந்திருந்தாள் பையனோடு. அவளின் கணவர் எப்போதும் போல வரவில்லை. வரலக்ஷ்மியின் கணவர் கார்த்திக்.. எடையை சரிபார்த்து.. திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
சர்வேஷ வீடு வந்ததும் நேரே தன்னறைக்கு சென்றவன்.. அக்கா மாமா அழைத்து சந்தேகம் கேட்டும் கூட வெளியே வரவில்லை.
அக்காக்கள் இருவருக்கும் எதோ இருக்கிறது என புரிந்தாலும் என்ன கேட்பது என இருந்தனர்.
சர்வேஷ் தன்னுடைய நிலைபாட்டினை யோசித்து யோசித்து கலக்கமாகினான். இப்போது சென்றால் வருவதற்கு எப்படியும் ஒருவருடமாகும் என யோசித்தவன் கொஞ்சம் பயந்தான். வர்ஷினி அதற்குள் வீட்டில் காட்டும் மாப்பிள்ளைக்கு தலையாட்டிவிட்டால். இப்போது வேறு எக்கச்சக்கமாக பேசியிருக்கேன்.. நாளை வரைதான் எனக்கான நேரம்.. அவளிடம் பேசிட வேண்டும்.. என கொஞ்சம் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தான்.
அன்னை எல்லோருக்கும் டீ போட்டிருந்தார். அன்னை மகனை அழைத்தார். சர்வேஷ் வெளியே வந்து டீ குடித்தான்.
கார்த்திக் மாமா “சர்வா.. அல்மோஸ்ட் எல்லாம் சரியாக இருக்குப்பா.. எந்த பொருட்கள் எல்லாம் இருக்கு என ஒரு லிஸ்ட் எழுதி வைத்திருந்தனர் அதையும் அவனிடம் காட்டி பேசிக் கொண்டிருந்தார்.
துர்கா “என்ன டா.. இன்னமும் ஒருமாதிரி இருக்க.. வேலை எல்லாம் நல்லா போகுதுல்ல.. கை ஒன்னும் பிரச்சனையில்லையே” என்றாள்.
சர்வேஷ் முகம் வெளிறி போனது.. அம்மாவை பார்த்தான் சங்கடமாக. துர்கா அமைதியானாள்.
டீ குடித்து முடித்ததும் லக்ஷ்மி “அம்மா தூங்குங்க.. இன்னமும் கொஞ்சம்தான் நாங்க வந்திடுவோம்” என சொல்லி உறங்க அனுப்பினார் அன்னையை.
சர்வேஷ், ‘இந்தமுறை விட முடியாது அவளை’ என முடிவெடுத்துக் கொண்டவன் “அக்கா, வர்ஷினியை கல்யாணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்றான்.
லக்ஷ்மி “உன்னை வந்து பார்த்ததே.. அந்த பெண்ணா” என்றாள்.
துர்கா “ஓ.. இந்த ரெண்டுமாசத்தில் லவ்வா” என்றாள்.
கார்த்திக் யோசனையோடு “அதான் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு அன்று சொன்னியா” என்றார்.
சர்வேஷ் “எனக்கும் அவளுக்கும் ஸ்கூல்லிருந்தே பிடிக்கும்.. நடுவில் நீங்கதான் ஏதேதோ செய்து என்னை அவகிட்டயிருந்து தள்ளி வைத்திருந்தீங்க” என்றான்.
லக்ஷ்மி “ஆமாம் அப்படியே குழந்தை.. அப்போவே முடியாது இந்த பெண்ணைத்தான் காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே” என்றாள்.
சர்வேஷ் தலையில் கை வைத்துக் கொண்டான் “லக்ஷ்மி.. அப்போது காதல் எல்லாம் ஏதுமில்ல.. என்னை யோசிக்கவே விடவில்லை நீங்க. எனக்கு வேலை கிடைத்ததும்.. நன்றி கடன்.. மாமா பெண்ணை கல்யாணம் செய்துக்கன்னு சொன்னீங்க.. எனக்கு அப்போது இவள் நினைவுதான் வந்தது. இவள் ஒருமாதிரி உள்ளேயே இருந்தா அக்கா.. எனக்கு இப்போதுதான் ஆரம்பித்தது என சொல்ல தெரியலை.. இவளை பிடிக்கும் காரணமே இல்லாமல். அப்புறம் கல்யாணம் நின்றதன் பிறகு.. ஒருமுறை ஹைட்ராபாத் போனேன்.. இவள் அப்போதுதான் காலேஜ் முடித்திருந்தால் போல.. அவ அண்ணனை பார்த்தேன் இவளை பார்க்க முடியலை.. செட்டாகுதுன்னு வந்துட்டேன்” என்றான் தளர்ந்த குரலில்.
லக்ஷ்மி “ஓ.. இப்போது அவள் கண்ணில் பட்டதும் கல்யாணம் செய்துகறேங்கிரியா” என்றாள் கிண்டலாக.
சர்வேஷ் அக்காவை முறைத்தான்.
கார்த்திக் “சும்மா இரேன் லக்ஷ்மி” என்றான்.
சர்வேஷ் “அவகிட்ட கொஞ்சம் ஹர்ஷா பேசிட்டேன்.. என்ன பண்றதுன்னு தெரியலை..” என்றான்.
லக்ஷ்மி “டேய் லவ் சண்டைதான.. அதை நாங்க தீர்க்கனுமா” என்றாள்.
“அக்கா.. எதுவும் பண்ண வேண்டாம் என்னை விடு.. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் உள்ளே எழுந்து சென்று கதவினை சாற்றிக் கொண்டான்.
துர்க்கா “அவன் நம்மகிட்ட எதோ சொல்ல வந்தான்.. ஏன் லக்ஷ்மி அவசரப்படுற..” என்றார்.
லக்ஷ்மி “அக்கா எல்லாவற்றுக்கும் நம்மையே தேடுகிறான் அக்கா.. நாமும் அவனை எந்த முடிவும் எடுக்கவிட்டதில்லை.. தனக்கு எது வேண்டும்ன்னு அவனே முடிவெடுக்கட்டும் அக்கா..” என்றாள்.
துர்கா “இல்ல லக்ஷ்மி, நாமும் அவன் கேட்பதை செய்து கொடுக்கனுமில்ல” என்றாள்.
“அது அவன் கேட்க்கட்டும்..” என்றாள்.
சர்வேஷ் யோசனையோடுதான் இருந்தான்.. அவளிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டான்.
சர்வேஷ் காலையிலேயே அவளிடம் பேச வேண்டும் என எண்ணினான். அவள் அலுவலகம் கிளம்புவாள்.. உண்ணுவாள் என கணக்கிட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.
மதியம் ஆக ஆக.. அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா என ஓடிக் கொண்டே இருந்தது உள்ளுக்குள்.. விரல்கள் அவன் பேச்சினை கேட்க்காமல் அழைத்துவிட்டது அவளுக்கு, வர்ஷினி அவனின் அழைப்பினை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
வர்ஷினிக்கும், எப்போதடா அவன் தன்னை அழைப்பான் எனதான் இருந்தது. தன்னுடன் பேசாமலே போய்விடுவானோ என எண்ணமும் வர.. எப்படி இதனை கையாள்வது என அவளும் விழித்துக் கொண்டுதானிருந்தாள்..
கண்கள் கசிய அவனின் எண்ணினை வேடிக்கை பார்த்தாள். மனது இதனை பேசி தீர்த்துக் கொள்ள எண்ணுகிறது. அதற்கு பயமாகவும் இருக்கிறது.. உடனே அடாவடியாக பேசினால் என்ன செய்வது.. பிரச்சனை மீண்டும் பெரிதாகவிட்டால்.. என தோன்ற அழைப்பினை ஏற்கவில்லை.
சர்வேஷ், அவளின் அலுவலகத்திற்கு வந்துவிட்டான்.. சற்று நேரத்தில்.
வர்ஷினிக்கு செய்தி அனுப்பினான்.. ‘அலுவலகத்திற்கு வெளியே இருக்கிறேன்.. நீ வரியா.. இல்லை உள்ளே வரவா’ என.
வர்ஷினிக்கு, இந்த செய்தியும் அடாவடியாகவே தெரிந்தது. கிளம்பினாள் அடுத்த இருபது நிமிடத்தில். அதற்குள் சர்வேஷ் இரண்டு மிஸ்டு கால்ஸ் கொடுத்துவிட்டான்.
வர்ஷினி.. அவனுக்கு அழைத்து கொண்டே லிப்ட் வந்தாள்.. ‘எங்கே இருக்கீங்க’ என கேட்டாள்.
‘இந்த கேட்டின் முன் நில்லுங்க..’ என சொல்லிக் கொண்டே வண்டி எடுத்து வந்தாள்.
சர்வேஷ் அவளை சரியாக கண்டுக் கொண்டான்.. கோவங்கள் எல்லாம் மேகமாக தள்ளி நிற்க.. காதல் நிலா சீறிக் கொண்டே அவன் முன் வந்து நின்றதை ரசித்தான்.
ஏதும் பேச்சில்லை இருவருக்கும் நடுவில்.. ஹெல்மெட்டுக்கு நடுவில் அவளின் பார்வையை உணர்ந்தவன்.. வண்டியில் ஏறி அமர்ந்தான்.
ஏனோ பறந்தது வண்டி.. சர்வேஷ்க்கு இந்த கோவத்திலும் லேசாக புன்னகை வந்தது “என்னை ஊருக்கு அனுப்ப உனக்கு இஷ்ட்டமில்லை போல” என்றான்.. எல்லா கோவமும் வேகமும் தள்ளி போக.. விளையாட்டும் சமாதானமும் கலந்த வார்த்தையில், அவளிடம் வாய் கொடுத்தான்.