“ஐ லவ் யு டி பாப்பு”, என்று சொன்னவன் அவள் முகம் முழுக்க முத்தங்களை கொடுத்து விட்டு கழுத்தில் இறங்கினான்.  நேரம் செல்ல செல்ல முத்தத்தின் வேகம் அதிகமானது. அவள் மீதான தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக களைய “லைட்டையாவது நிறுத்து மாமா. கூச்சமா இருக்கு”, என்று சிணுங்கினாள் யாழி.

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் செய்கையைத் தொடர அவளால் என்ன செய்ய முடியுமாம். அவனது விருப்பத்திரற்கு தன்னை ஒப்படைத்தாள்.

அவன் தேவைகள் புரிய வெட்கமும் கூச்சமும் வந்தாலும் அவள் உணர்வுகளும் அவனைக் கேட்டது. அவளது சங்கு கழுத்திலும் தோள்களிலும் அவனது மீசையால் குறுகுறுப்பூட்ட அவன் கொடுக்கும் உணர்வில் கரைந்து கொண்டிருந்தாள்.

அவன் உதடுகள் அவள் உதடுகளைக் கவ்விக் கொள்ள கரங்களோ விருப்பத்துடன் அவள் மேனியில் உறவாடியது. அழுத்தி பிடித்து அவளை மொத்தமாக சிவக்க செய்து கொண்டிருந்தான்.

வெற்று தேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள “மாமா”, என்று அழைத்தவள் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவனை தனக்கு ஆடையாக்கினாள்.

முதல் உறவு முடிந்த பின்னும் அவனை நேருக்கு நேர பார்க்க முடியாமல் அவள் தடுமாற “என்னைப் பாருடி, என்னை ரசிக்க மாட்டியா? நான் மட்டும் உன்னை ரசிச்சேன் தானே?”, என்று அவளைச் சீண்டினான்.

“முதல் நாளே எப்படி ரசிக்கவாம்? கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்குறேன்”, என்று சொன்னவளுக்கு அவனே கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் தேவைகள் நீண்டு கொண்டே செல்ல அதை கொடுப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை.

விடியலின் அருகாமையில் கூட அவன் அவளை தேடினான். “வேண்டாம் மாமா, இன்னைக்கு போதும்”, என்று அவள் சொல்ல “எனக்கு வேணுமே?”, என்றவன் நினைத்ததை சாதித்தான்.

வேண்டாம் என்றவளும் அவன் பின்னந்தலையை இறுக்கிப் பிடித்து அவனுக்கு ஒத்துழைத்தாள். அவன் கண்களில் வழிந்த அதீத மயக்கம், தெரிந்த காதல் போதை, அவளை முழுதாக அறிந்ததால் வந்த பரவசம் என அவ்வளவு அழகாக இருந்தவனிடம் “தூங்க விடு டா மாமா”, என்றவள் அவனை அணைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

அவளது முகம் அவனுக்கும் ஒரு நிறைவைக் கொடுக்க தாம்பத்தியத்தின் ருசி அவனை வெகுவாக மயக்கத் தான் செய்தது. “இதுக்கு தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்றாங்க போல?”, என்று எண்ணிக் கொண்டான். அவ்வளவு நிறைவு அவன் மனதில். கூடவே இப்படி ஒரு உறவை வேறு ஒரு பெண்ணுடன் அவனால் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடிந்திருக்குமா என்பது கேள்விக் குறி தான்.

காலை பதினொரு மணி போல தான் மெதுவாக கண் விழித்தாள்  யாழி. அவளால் அசைய கூட முடிய வில்லை. அப்படி ஒரு சுக அயர்வு அவளுக்குள்.

அவள் கண் விழித்ததும் “அப்பாடி கும்பகர்ணி எந்திச்சிட்டியா? இந்தா பிரஸ் பண்ணிட்டு இந்த நூடுல்சை சாப்பிடு. வீட்ல இருந்து பத்து தடவை கால் வந்துருச்சு. லஞ்சுக்கு அங்க போகணும்”, என்றான்.

“நேத்து தூங்க விடாம படுத்தி எடுத்துட்டு நான் கும்பகர்னியா?”, என்று கேட்ட படி முறைத்தாள்.

“உன் மாமன் தான் மா ஹெவி பெர்பார்மன்ஸ் பண்ணிருக்கேன். நான் எந்திக்கலையா?”

“சி பேச்சை பாரு. இருங்க குளிச்சிட்டு வரேன். சாப்பிட்டு கிளம்பலாம்”, என்றாள் வெட்கத்துடன்.

“பாப்பு, ஹெல்ப் பண்ண வரவா டி?”, என்று கேட்டான் காதலாக.

“இப்ப நீங்க வந்தா நம்ம நைட் சாப்பாடுக்கு தான் போவோம்”

அவள் முகத்தில் இருந்த அயர்வை பார்த்தவன் அவளை தொந்தரவு செய்ய மனதில்லாமல் “போய் குளிச்சிட்டு வா”, என்று அனுப்பி வைத்தான்.

குளித்து உணவை உண்டு விட்டு கிளம்ப வாசல் வரை சென்ற பிறகும் அவளை உள்ளே இழுத்து கட்டிக் கொண்டவன் அவள் உதடுகளை சிறை செய்து விட்டு “இப்பவும் நீ எனக்கு வேணும்னு தோணுது டி. அங்க போய் டைம் கிடைச்சா தூங்கிரு. இன்னைக்கு நைட்டும் உன்னை தூங்க விடுவேனான்னு தெரியலை”, என்று சொல்லி அவளை சிவக்க வைத்து விட்டே அழைத்துச் சென்றான்.

புது மணமக்களுக்கு அங்கே வரவேற்பு அமோகமாக இருந்தது. யாழிக்கு தான் அனைவரையும் பார்க்க வெட்கமாக இருந்தது. அவளை இலக்கியா மற்றும் ஜூலி இருவரும் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்து விருந்தும் கோலாகலமாக ஆரம்பித்தது.

அதற்கு பின் வந்த நாட்கள் அனைத்தும் அதிபன் மற்றும் யாழிக்கு பொன்னால் பொரிக்கப் பட வேண்டியவை. அவ்வளவு காதலுடன் நகர்ந்தது. அதுவும் ஹனிமூன் பயணம் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு அவ்வளவு அழகாக சென்றது.

அங்கிருந்து திரும்பி வந்ததும் இருவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். யாழி மருத்துவமனை, ஜான் மருத்துவமனை சிறப்பு வகுப்பு என்று படு  பிஸியாக இருந்தாள். தினமும் இரவு சேகர், செழியன், தாத்தா அனைவருடனும் கதை பேச அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

அதிபனும் புது பிஸ்னஸில் அதிக கவனம் வைத்து உழைக்க வேண்டி இருந்தது. அவனுக்கு தேவையான உதவிகளை அவனுடன் படித்த நண்பர்களும் செய்து கொடுத்தார்கள். மொத்தத்தில் அவனுக்கும் அமோக வளர்ச்சி தான்.

இருவருக்கும் பகலில் என்ன தான் வேலைகள் இருந்தாலும் இரவில் காதல் புறாக்களாக சிறகடித்துப் பறந்தார்கள். முன்பு இருந்ததை விட அவர்களுக்குள் நெருக்கமும் காதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது.

அவர்களின் காதலுக்கு பலனாக திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதம் கழித்து யாழி கருத்தரித்தாள். அதிபன் இப்போது வேண்டாம் என்று தான் முதலிலே சொல்லி இருந்தான். ஆனால் யாழியோ பிடிவாதமாக இருந்து காரியம் சாதித்துக் கொண்டாள்.

விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் அவளைத் தாங்கியது. கொஞ்சம் சதை போட்டு தாய்மையின் பூரிப்பில் அழகாகிக் கொண்டே இருந்தளின் மீது அளவில்லாத காதலை வைத்திருந்தான் அதிபன்.

மற்ற அனைவருக்கும் வாழ்க்கை இயல்பாக தான் சென்று கொண்டிருந்தது. இனியன் ஐ.பி.எஸ் பணியை விரும்பி ஏற்றுக் கொண்டான். அவனுக்கு இப்போது வட மாநிலத்தில் போஸ்டிங் போடப் பட்டிருந்தது.

அனைவருக்கும் சின்ன பையனாக இருந்த விஷ்வா இப்போது பொறுப்புள்ள ஆண்மகனாக மாறி அவனது கம்பெனி மற்றும் இனியனின் கம்பெனியையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டான்.