“வீட்டு மாபிள்ளை நீங்க. உங்களை எதுத்து பேச முடியுமா? என் தங்கச்சி கொடுக்குற சீரை தலை வணங்கி ஏத்துக்குறேன் போதுமா?”, என்று சிரித்த படி அதிபன் கேட்க அனைவரும் சிரித்தார்கள்.
அவர்கள் கீழே இறங்கியதும் யாழி அவனையே பார்க்க “என்ன டி அப்படி பாக்குற? மாமனை சைட் அடிக்கிறியா?”, என்று கேட்டவன் ரகசியமாக அவள் இடையை கிள்ளி வைத்தான்.
அவனை மேலும் முறைத்துப் பார்த்தவள் “அதெல்லாம் இல்லை. அன்னைக்கு அப்பா எப்படி இப்படி பேச கத்துகிட்டன்னு கேட்டாங்க. மாமா கிட்ட இருந்துன்னு உன்னை தான் சொன்னேன். ஆனா இப்ப கன்பார்மா தெறிஞ்சிட்டு. உன் கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன் போல டா மாமா. என்னா பேச்சு பேசுற?”, என்று கேட்டாள்.
“டி என்னை வாயாடி ன்னு சொல்லுறியா?”
“சி சி அது வாயாடி இல்லை. நீ வாயாடன் மாமா”, என்று சொல்ல அவனுக்கும் புன்னகை மலர்ந்தது.
அடுத்து ஜோடியாக மேடை ஏறிய ஜான் மற்றும் ஜூலியைக் கண்டு இருவரும் புன்னகைக்க மணமக்களுக்கு பிளாட்டினம் மோதிரத்தை பரிசாக கொடுத்தவன் அவர்களை மாற்றிக் கொள்ளவும் வைத்தான். பின் ஒரு கவரை யாழி கையில் கொடுத்தவன் “இது என் ழிக்கான ஸ்பெஷல் கிப்ட், அப்புறம் இந்த ஐடியாவை என் டார்லிங் தான் சொன்னா”, என்று ஜூலியை பெருமையாக சொன்னான்.
அதை அவசரமாக அதே நேரம் ஆர்வமாக பிரித்தாள் யாழி. “இந்த வில்லங்கம் பிடிச்சவன் அப்படி என்ன கிப்ட் கொடுத்துருப்பான்”, என்று அதிபனும் ஆர்வமானன்.
அந்த கவருக்குள் ஒரு லட்டர் இருந்தது. யாழி அந்த பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். அதிபனும் அதை எட்டிப் பார்த்தான். அது ஒரு பணி நியமன ஒப்பந்தம். அதாவது யாழியின் ஃப்ரீ நேரத்தில் ஆன்லைன் மூலமாக ஜானின் மருத்துவமனை டாக்டர்களுக்கு சிறப்பு கிளாஸ் எடுக்கும் ஒப்பந்தம் தான் இது. அதற்கென்று ஒரு பெரிய தொகையும் சம்பளமாக போட்டிருந்தது.
அதைக் கண்டு சந்தோஷப் பட்ட யாழி “டேய் ஜா என்ன டா இது?”, என்று கேட்டாள்.
“வாரத்துல இரண்டோ இல்லை மூனோ கிளாஸ் தான் இருக்கும். ஒழுங்கா அக்சப்ட் பண்ணிக்கோ”, என்றான் ஜான்.
இந்தியா மதிப்பு படி பார்த்தால் அது அவள் இங்கே வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக தான் இருந்தது.
“அடேய் நீ போட்டுருக்குற சம்பளத்தை பாத்தா நிறந்தரமா அங்கயே டாக்டரா வந்துறலாம்னு தோணுது ஜா. இப்ப தான் தெரியுது என் நாடு என் நாட்டு மக்களுக்கு தான் வைத்தியம்ன்னு சொல்லி டாக்டர்கக்கு படிக்க வர பசங்க அப்புறம் எதுக்கு பாரின் போறாங்கன்னு. இவ்வளவு சம்பளம் போட்டா அங்க குடியுரிமை வாங்காம என்ன செய்வாங்க. ஐயோ ஐயோ லட்ச லட்சமா குடுக்குறானே”, என்று சந்தோஷமாக புலம்பினாள். அவளை மற்ற மூவரும் சிரிப்புடன் வேடிக்கை பார்த்தார்கள்.
“நான் ஜஸ்ட் சொன்னேன், நீ என்னை உன் ஆஸ்பத்திரிக்கு ஓனராவே ஆக்கினாலும் நான் என் ரேவதி அம்மாவுக்கு அசிஸ்டண்டா இங்க உள்ள மக்களுக்காக தான் வேலை பாப்பேன். கூடவே என் நண்பனுக்காக இந்த ஆபரை ஏத்துக்குறேன்”, என்றவள் உரிமையாக அவன் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஜான் கையில் கொடுத்தாள்.
“பாஸ் எனக்கு இன்னும் நாலு நாள் லீவ் இருக்கு. எனக்கும் என் டார்லிங் ஜூலிக்கும் சிங்கார சென்னையை சுத்தி காட்டுறீங்களா?”, என்று கேட்டான் ஜான்.
அவனை முறைத்து பார்த்தவன் “இன்னும் என் பொண்டாட்டிக்கு முத்தம் கூட ஒழுங்கா குடுக்கலை டா. இப்ப ஊர சுத்துறதா முக்கியம். இப்ப என்ன உனக்கு ஊரை சுத்தி பாக்க கைடு தானே வேணும்? என் கிட்ட ரெண்டு அடிமை இருக்காங்க. உங்களுக்கு துணைக்கு அனுப்பி வைக்கிறேன். இப்ப போய் சாப்பிடுங்க”, என்றான் அதிபன்.
“பந்தியில யாழி செஞ்ச உப்புமா இருக்கா பாஸ்?”, என்று கேட்டான் ஜான். அவன் வெறுப்பெற்ற அதைக் கேட்க வில்லை. உண்மையிலே சொல்கிறான் என்று புரிந்து யாழி அவனை நண்பேண்டா என்று பெருமையாக பார்க்க “அட பாவமே, இவன் இன்னுமா திருந்தலை”, என்று வாய் விட்டே புலம்பிய அதிபன் இனியனை அழைத்து அவர்களை சாப்பிட அழைத்துச் செல்ல சொன்னான்.
“வாழ்க்கைல உப்புமாவை மட்டும் செஞ்சிறாத டி. மத்த படி நீ விஷம், சாரி ரசம் வச்சு கொடுத்தா கூட சமத்தா உன் மாமன் சாப்பிட்டுக்குவேன்”, என்று சொல்லி அவளுடைய கண்டன பார்வைக்கு ஆளானன்.
“என்ன டி முறைக்கிற? ஏற்கனவே லவ் பண்ணனும்னு முதலிரவு இப்ப கிடையாதுன்னு சொல்லிட்ட. அதையே இந்த குட்டி நெஞ்சு எப்படி தாங்குதுன்னு தெரியலை. இப்படி அனல் தெறிக்க முறைக்காத மா. தாங்க மாட்டேன்”, என்றான் பாவமாக.
“அதெல்லாம் பிளான் சேஞ் ஆகிருச்சு டா மாமா”, என்று சிறு வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.
“அடியே சந்நியாசம் வாங்க போறேன், நாட்டுக்கு சேவை செய்ய போறேன், ஊருல உள்ள குழந்தைகள் இருக்க நமக்கு எதுக்கு குழந்தன்னு யோசிச்சு எதையாவது சொல்லிறாத டி. சத்தியமா தாங்க மாட்டேன்”, என்று பயத்தில் அலறினான்.
“அப்படி எல்லாம் இல்லை மாமா, இன்னைக்கே பர்ஸ்ட் நைட் தான்”, என்று கண்ணடித்தாள்.
“ஏது ? எப்புட்றா?”
“சீக்கிரம் குழந்தையை பெத்து சேகரப்பா கையில கொடுக்கணும்னு பிக்ஸ் ஆகிட்டேன்”
“அப்பாடி, என் மாமன் புண்ணியத்துல நான் பிழைச்சேன், அன்னைக்கு முத்தத்துக்கு அப்புறம் எனக்கு எப்படி தோணுச்சு தெரியுமா?”, என்று ரகசியமாக கேட்க “பிளீஸ் இப்ப ஏதும் சொல்லாத மாமா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்று வெட்கப்பட்டாள் யாழி.
அடுத்து மேடை ஏறியது இனியனும் விஷ்வாவும் தான். இருவரும் சேர்ந்து அவர்களுக்கான ஹனிமூன் டிக்கட்டையும் அதற்கான அவர்களின் பிளானையும் கொண்ட கவரை மணமக்களுக்கு பரிசாக கொடுத்தார்கள்.
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான், மலையேற மச்சினன் தயவு வேணும்னு நீங்க ரெண்டு பேரும் புருவ் பண்ணிட்டீங்க டா. இதுவல்லவோ பெரிய கிப்ட். நான் கூட பிளான் பண்ணலை டா. எங்க என் வாழ்க்கைல இப்படி ஒண்ணு நடக்காதோன்னு நினைச்சேன்”, என்று சொல்லிய அதிபன் அவர்கள் இருவரையும் அனைத்துக் கொள்ள யாழி விழுந்து விழுந்து சிரித்தாள்.
இனியனும் விஷ்வாவும் சிரித்த படி மேடையில் இருந்து கீழே இறங்க சேகர் மட்டும் மேடை ஏறினார்.
“சேகரப்பா”, என்ற படி யாழி அவரின் கை பற்றிக் கொள்ள அதிபன் அவர்களை அன்புடன் பார்த்தான்.
“பாப்பா இது இந்த அப்பாவோட கிப்ட் டா. நீ வாங்கிப்பியா?”
“எங்க அப்பா எனக்கு செய்யுறதை நான் எப்படிப்பா வேண்டாம்னு சொல்லுவேன்?”, என்று கேட்டவள் லேசாக கண் கலங்க “பாப்பா நீ சிரிச்சிக்கிட்டே இருக்கணும். சின்ன பிள்ளை மாதிரி கண்ணுலாம் கலங்க கூடாது”, என்றவர் அதிபனுக்கு மோதிரம் போட்டு விட்டவர் அவளுக்கு ஒரு ஆறு பவுனில் ஆரம் ஒன்றை அதிபன் கையில் கொடுத்து அணிய சொன்னார்.
அவர் இது வரை சேர்த்து வைத்த பணம் முழுவதையும் போட்டு தான் இதை வாங்கி இருப்பார் என்று புரிந்தது. அதிபன் அவள் கழுத்தில் அதை அணிவிக்க அதை நிறைவாக பார்த்தார்,