“எனக்கும் அதி மாமாவுக்கும் கல்யாணம் வச்சிருக்காங்க மேடம். நான் கல்யாணத்துக்கு அப்புறம் வரட்டுமா மேடம்?”
“இன்னும் என்ன டி மேடம்? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு”
“அது உங்க மருமக கூப்பிடுவா. நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன். வேணும்னா அம்மான்னு கூப்பிடுறேன் மா. ஏன் உங்களுக்கு மருமகளா மட்டும் தான் இருக்கணுமா? மகளா இருக்கக் கூடாதா?”, என்று கேட்டாள்.
“அப்பாடி மகள் இல்லாத குறை இன்னைக்கு போச்சு. நீ அம்மான்னே கூப்பிடு. சரி கல்யாணம் வரைக்கு எல்லாம் நேரத்தை கடத்த வேண்டாம். கல்யாணத்துக்கு முன்னாடி அஞ்சு நாள் கல்யாணத்துக்கு அப்புறம் இருபது நாள் உனக்கு லீவ் வாங்கித் தர வேண்டியது என் பொறுப்பு. நாளைக்கே வந்துரு டி. அதுவும் எனக்கு அசிஸ்டண்டா”
“கண்டிப்பா வந்துறேன் மா, உங்களுக்கு அசிஸ்டண்டா இருக்கணும்னு தானே நான் கைனகாலஜீஸ்ட் எடுக்கவே செஞ்சேன்?”, என்று புன்னகைத்தாள்.
“சரி நீ இப்ப கிளம்பு, நான் இப்பவே உன்னை மெம்பர் கவுன்சில்ல ரிஜிஸ்டர் பண்ணிறேன். நீ நான் வாட்சப்ல கேக்குற தகவல் மட்டும் அனுப்பு. நாளைக்கு காலைல உன் கேபின், உனக்கு மெடிக்கல் கோர்ட் மத்த அக்சசரீஸ் எல்லாம் தயாரா இருக்கும்”, என்று சொல்லி விடை கொடுத்தார்.
அவளும் சந்தோஷமாகவே வீட்டுக்குச் சென்றாள். நடந்த அனைத்தையும் அதிபனிடம் ஒப்புவித்து விட்டு ரேவதி கேட்ட அனைத்தையும் அனுப்பி வைத்தாள். இரவு எட்டு மணி போல தான் அவளது அன்னையும் தந்தையும் வீட்டுக்கு வந்தார்கள்.
“டேடி, அம்மா ஒரு குட் நியூஸ் சொல்லணும்”, என்றவள் தந்தையை கட்டிக் கொண்டாள்.
“சொல்லு டா அம்மு”
“உங்க பொண்ணுக்கு வேலை கிடைச்சிருச்சு. நாளைக்கு ஜாயின் பண்ண போறேன். சர்வீஸ் பாத்துட்டு கொஞ்ச நாள்ல பர்மனன்ட் பண்ணிருவாங்க”, என்றாள்.
“ரொம்ப சந்தோஷமான விஷயம் டா”, என்ற விஷ்ணு அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.
“என் பொண்ணை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு”, என்றார் சவுந்தர்யா.
“இதுக்கு தான் சொன்னேன் இன்னொரு பையன் இருந்திருந்தா நீ இன்னொரு தடவை பெருமை பட்டுருக்கலாம் சவுந்து குட்டி”, என்றார் விஷ்ணு. அதற்கு மகள் “சரியா சொல்றீங்கப்பா. இப்பவும் ஒண்ணும் நாள் ஆகிடலை”, என்றாள்.
“அடியே உன்னை, அந்த மனுசனுக்கு தான் காலைல இருந்து இதே பேச்சுன்னா இப்ப நீயுமா? கொன்னுருவேன் கொன்னு. நான் போய் டிரஸ் மாத்திட்டு நைட் சமையலை பாக்குறேன். இந்த இனியன் கொஞ்ச நேரத்துல அத்தை என்ன சாப்பாடுன்னுட்டு வருவான்? இவனுங்கள விட்டுட்டு தான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை”, என்று புலம்பிய படியே சென்ற சவுந்தர்யாவை இருவரும் நெகிழ்வோடு பார்த்தார்கள்.
“நான் உன் கிட்ட பேசணும் டா அம்மு”, என்றார் விஷ்ணு.
“என்ன பேசப் போறீங்கணனு தெரியும் பா. வாங்க மாடிக்கு போகலாம்”, என்று அழைத்துச் சென்றாள்.
“ஏன் பாப்பா சேகர் அண்ணா பத்தி இது வரைக்கும் சொல்லலை. என் கிட்டயாவது முன்னாடியே சொல்லிருக்கலாம் தானே?”
“அப்ப சொல்லணும்னு தோணலை டேடி, ஆனா சொல்லிருக்கணும்னு இப்ப தோணுது. உங்களுக்கு எப்படி டேடி இந்த விஷயம் தெரியும்”
“இனியன் கிட்ட போட்டு வாங்கினேன்”
“அவன் சரியான ஓட்டைவாய் பா”
“ஆமா டா, அதான் எல்லாம் சொல்லிட்டான். ஆனா உன் அம்மாவுக்கு தெரியக் கூடாது டா. அவ ரொம்ப சென்ஸிட்டிவ்”
“ஆமா டேடி, அதனால தான் நம்ம வீட்டுக்கு போக முடிவு எடுத்தீங்களா?”
“ஆமா குட்டி மா, இங்கயே இருந்தா உன் பெரியம்மா எதையாவது உன் அம்மா கிட்ட உளற வாய்ப்பு இருக்கு”
“நிச்சயமா செய்வாங்க. அவங்களை விட்டு தள்ளி தான் இருக்கணும். காலைல சின்ன மாமாவுக்கு விட்டீங்க பாருங்க டோஸ். அப்படியே எனக்கு உங்களை கட்டி பிடிச்சிக்கணும் போல இருந்துச்சு. இந்த இனியன் தான் தடுத்துட்டான். ஐ லவ் யு டேடி”, என்ற படி அவரை அணைத்துக் கொண்டாள்.
“ஐ லவ் யு டூ குட்டி மா. சரி என் மாப்பிள்ளை என்ன சொல்றான்?”
“ஹா ஹா என்னை என் பொண்டாட்டிக்கு இல்லாம பண்ணிருவீங்க போல ரெண்டு பேரும்”
“இருந்தாலும் நீங்க பெரிய துரோகம் பண்ணிட்டீங்க பா. எனக்கு தம்பி பாப்பா கொண்டு வந்துருக்கணும். அம்மாவுக்கு சொன்னது தான் உங்களுக்கும். இப்பவும் டைம் இருக்கு”
அவள் காதை பிடித்து திருகியவர் “அடி கழுதை அப்பாவையே கிண்டல் பண்ணுறியா? நீ சீக்கிரம் என் பேரப் பிள்ளையை பெத்து கையில கொடு. நாங்க வளத்துக்குறோம்”, என்றார்.
“அவ்வளவு தானே டுவின்சா கொடுத்துட்டா போச்சு. ஒண்ணு உங்களுக்கு இன்னொன்னு செழியன் மாமாவுக்கு. எனக்கு அங்க இருக்கற சேகரப்பா கையில என் குழந்தையை கொடுக்கணும் பா”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“ஒன்னோ ரெண்டோ எல்லாத்தையும் சேகர் அண்ணன் கிட்டயே கொடு மா. இந்த அப்பா பெருமை தான் படுவேன்”, என்று நெகிழ்ந்து உரைக்க அது யாழியின் மனதில் தெளிவாக பதிந்து போனது.
“மாமா உனக்கு நல்ல நேரம் தான் போல? முதல் ராத்திரிலே உனக்கு தீயா வேலை இருக்கு”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் தந்தையிடம் “சரிப்பா. இனி சேகரப்பா சந்தோஷமா மட்டும் தான் இருப்பாங்க”, என்றார்.
“சரி டா மா. அப்புறம் நம்ம வீட்டுக்கு போனதும் அம்மா கூட போய் கல்யாணத்துக்கு தேவையான எது வேணும்னாலும் வாங்கிக்கோ டா. அப்பா வேணும்னாலும் கூட வரேன்”, என்றார்.
“அப்பா நாளைல இருந்து நான் ரொம்ப பிஸி. நீங்களும் அம்மாவும் போய் எனக்கு தேவையானது வாங்குவீங்களாம். நான் அதை சந்தோஷமா வச்சிப்பேனாம்”
“நாங்க வாங்கினாலும் உனக்கு பிடிக்கணுமே டா?”
“அதிக அன்போட எனக்கு அது எப்படி இருக்கும்னு பாத்து பாத்து வாங்க போறீங்களே? அதை விடவா நான் எனக்கு பிடிச்சதை வாங்க போறேன்?”
“சரியான வாயாடி, நல்ல பேச கத்துகிட்ட நீ”
“எல்லாம் இந்த அதி மாமா கிட்ட இருந்து தான் பா”
“குட்டி மா, உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே? அன்னைக்கு உன் கிட்ட முதல்ல கேக்காம நான் சரின்னு சொல்லிட்டேன். உன் கிட்ட பேசிருக்கணும். சந்தர்ப்பம் இப்ப தான் அமையுது. அதி உனக்கு பெஸ்ட் சாய்ஸ்ன்னு தோணுச்சு டா”, என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் “அப்பா”, என்று அரம்பித்தவள் அவளுடைய காதல் கதையையும் அதிபன் காதலைப் பகிர்ந்ததையும் சொன்னாள்.
“என்ன பண்ணுறது எனக்கு கிடச்ச சொந்தங்கள் எல்லாம் அவ்வளவு ஸ்வீட் ? அதான் இப்படி சந்தோஷமா இருக்கேன்”
“நீ எப்பவும் இப்படியே இருக்கணும் டா”
“இருப்பேன் பா, நீங்க எல்லாரும் என் கூட இருந்தா என் சந்தோஷத்துக்கு என்ன குறை? சரி வாங்க கீழ போகலாம். அம்மா தனியா இருப்பாங்க”, என்று சொல்லி அவரைக் கீழே அழைத்து சென்றாள்.
அன்றைய இரவில் அதீத காதலில் முக்குளித்த பின்னர் நிறைவான மனதுடன் சவுந்தர்யாவை அணைத்திருந்தார் விஷ்ணு.
“என்ன ஐயாவுக்கு இன்னும் தூக்கம் வரலையா?”
“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சவுந்து”, என்றவர் மகளின் காதலைச் சொல்ல “நிஜமாவா சொல்றீங்க? நம்ம யாழியா அதி குட்டியை லவ் பண்ணினா? பாருங்களேன் அவனுக்காக வருணை கல்யாணம் பண்ண கூட போனாளே. எனக்கு என்னவோ இது கடவுள் போட்ட முடிச்சுனு தோணுதுங்க. அவங்க ரெண்டு பேரும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருந்தா சந்தோஷமா இருக்க மாட்டாங்க”, என்றார் சவுந்தர்யா.
“நம்மளை மாதிரியே பெஸ்ட் கப்பில்ன்னு சொல்லு”, என்ற படி அவர் அனைத்துக் கொள்ள சவுந்தர்யாவும் காதலாக கணவரை அணைத்துக் கொண்டார்.
யாழி மற்றும் அதிபனின் திருமண வேலைகள் நல்ல படியாக சென்று கொண்டிருந்தது. திருமணத்திற்கு இலக்கியாவுக்கு அழைப்பு சென்றது. செழியன் மற்றும் அதிபன் இருவரும் தான் சென்று அழைத்தார்கள்.
அதே போல வருண் குடும்பத்தை அழைக்க செழியன் மற்றும் புவனா இருவரும் சென்றார்கள். வெண்ணிலா வருவது அவர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் ரேவதி மற்றும் வருணுக்காக அழைப்பு விடுக்க பட்டது.
ஆனால் கடைசி வரை செழியன் தண்டாயுதபாணி, சரஸ்வதி மற்றும் சத்யாவதியை அழைக்க வில்லை. அவர்களை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டனர்.
“என்னை தப்பா நினைக்காதீங்கப்பா, என் மகனோட கல்யாணம் நிறைவா இருக்கணும்னு நினைக்கிறேன். அவங்க இருந்தா அது அப்படி இருக்காது”, என்று தந்தையிடம் மன்னிப்பு கேட்டார் செழியன்.
“என் பேரன் கல்யாணத்தை பாக்க அவங்களுக்கு அருகதை இல்லை செழியா. நீ அதை விட்டுத் தள்ளிட்டு வேலையைப் பாரு”, என்றார் வேணு கோபாலன்.