“என்ன திடீர்ன்னு? உங்களுக்கு தான் ஸ்டேட்டஸ் முக்கியமே. நானெல்லாம் உங்க அளவுக்கு ஸ்டேட்டஸ் கிடையாது.” என்றான் கணேஷ்.

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். கண்டிப்பா எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். நான் இப்படித்தான். இப்படித்தான் இருப்பேன். எனக்கு ஒளிச்சு மறைச்சு நடிச்சு இந்த பிலா பிலா வேலையெல்லாம் தெரியாது. ஸ்ட்ரெயிட்டா பாய்ண்ட் தான். ஸ்டேட்டஸ் இல்லைன்னா வளர்த்துக்கோ. முடியாதுன்னா சொல்லு நான் வளர்த்து விடுறேன்” என்றாள் ஆதிரா.

“இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றான் கணேஷ் எரிச்சலுடன்.

“அது கூடவே பிறந்தது” என்றாள்.

“உனக்கு தைரியம் அதிகம் தான் ஆதிரா. வீட்டுக்குள்ளயே வச்சு, அக்கா மாமா முன்னாடி இவ்வளவு போல்டா லவ் ப்ரொபோஸ் பண்ற?” என்றான் தேவ்.

“என்ன பண்றது மாமா? இவனைப் பார்த்தா பாவமா இருக்கு? சின்ன பிள்ளையில இருந்து பார்த்து வெறுத்துப் போன  மூஞ்சி வேற? இப்போ லவ்வர் செத்துட்டான்னு அழுது வடியிறான். ஒரு தடவை வாழ்க்கை தான் குடுத்துப் பார்ப்போமேன்னு தோணுது” என்றாள்.

“என்னால முடியாது” என்றான் கணேஷ்.

“முடியாதுண்ணா போடா. கணேஷ் இல்லைன்னா தினேஷ்ன்னு போய்ட்டே இருப்பேன்” என்றவள் முறைத்துவிட்டு சென்று விட்டாள்.

“ஏன் கணேஷ்?” என்றான் தேவ்.

“இவங்க வீட்ல பிரண்ட்ஸ்ஷிப் வச்சுக்கவே ஸ்டேட்டஸ் பார்ப்பாங்க ஜெய் அண்ணா. இதோ இவ மட்டும் தான் கொஞ்சம் விதி விலக்கு” என்றான் ஆராவைக் காட்டி.

“நீ நினைக்கிற மாதிரி இல்லை கணேஷ். ஆதிரா நல்ல பொண்ணு. யோசிச்சு முடிவு எடு கணேஷ். நாங்க நாளைக்கு  கிளம்பனும்” என்றான்.

“ஓகேண்ணா” என்றவன்,

“வரேன் ஆரா” என்றான். அதுவரை அமைதியாக இருந்த ஆரா, அப்போது தான் வாயைத் திறந்தாள்.

“என்கிட்டே சொல்ல உனக்கு ஒண்ணுமே இல்லையா கணேஷ்” என்றாள்.

“இருக்கே” என்றவன்,

“இனியாவது சொந்த புத்தியோட இரு. உன்னைக் கெடுக்க மித்ரா இல்லைன்னாலும், வாழ்க்கையில ஒவ்வொரு சிச்சுவேஷன்லயும் மித்ரா மாதிரி நிறைய பேர் நம்ம மைண்டை டைவேர்ட் பண்ண வருவாங்க. அதையெல்லாம் கடந்து தான் வரணும்” என்றான்.

“இந்த அட்வைஸ் எல்லாம் உனக்கும் பொருந்தும் தான?” என்றாள் நக்கலாய்.

“சரி நமக்குன்னு வச்சுக்கோ” என்றவன் கிளம்ப,

“டேய் கணேஷ்” என்றாள் ஆதிரா.

“என்ன?” என்பதைப் போல் அவன் பார்க்க,

“அப்ளிகேஷன் டைம் நாளையோட முடிஞ்சுடும். நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. என் கம்பெனியில ஜாயின்ட் பண்ணனுமா வேண்டாமான்னு?” என்றாள்.

“இப்ப அவனை எதுக்குடி உன்னோட கம்பெனிக்கு வேலைக்கு கூப்பிடுற?” என்றார் சுலோச்சனா.

“அங்க மட்டும் தான் வேகன்சி இருக்கு பாட்டி, அதான்” என்று நக்கலாய் உரைத்தபடி சென்றவளைப் பார்த்து  ஆராவிற்கு மூச்சு வாங்கியது.

“எப்படி ஆரா இவளை சமாளிக்குறிங்க?” என்றான்.

“அவ சின்ன பிள்ளையில இருந்தே அப்படித்தான் ஜெய்” என்றவளின் முகத்தில் சோர்வைக் கண்டவன்,

“பீல் பண்றியா ஆரா?” என்றான்.

“குற்ற உணர்ச்சியா இருக்கு ஜெய். என்னாலதான் மித்ரா இறந்தாளோன்னு” என்றாள் கண்கள் கலங்கியபடி.

“கண்டிப்பா உன்னால இல்லை. ஆனா நடந்ததை அவளால ஏத்துக்க முடியலை. இப்போதைக்கு அவளால வேற எதுவும் செய்ய முடியாது. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கா” என்றான் தேவ்.

“எப்படி அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் தோணியிருக்கும்?” என்றாள் ஆரா.

“அது உன்னைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படித்தான் தோணும்” என்றான் சிரிப்புடன்.

“ஏன்?” என்றாள்.

“ம்ம் மல்கோவா மாம்பழம் மாதிரி இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது” என்று உல்லாசக் குரலில் கூறியவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“நீங்க இப்படித்தான் பேசுவிங்கன்னு தெரிஞ்சும் வாயைக் குடுத்த என்னை சொல்லணும்” என்றாள்.

“நீ தான் எதையும் குடுக்கவே இல்லையே?” என்றான்.

“ஆளை விடுங்க சாமி” என்று தெறித்து ஓடியவளைக் கண்டு சிரித்துக் கொண்டான் சத்ய ஜெயதேவ்.

அத்யாயம் 24:

மூன்று மாதங்களுக்குப் பிறகு…

காலையிலேயே தன்னிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தவனைப் பார்த்து ஆராவிற்கு ‘அய்யோ’ என்றிருந்தது.

“விடுங்க ஜெய்” என்ற அவளின் குரலை அவளுக்கே கேட்காதபடி செய்திருந்தான்.

“நீதானடி அரைநாளை கூட வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு சொன்ன?” என்றான்.

“எப்பா சாமி தெரியாம சொல்லிட்டேன். அதுக்குன்னு இப்படியா?” என்றாள்.

“சும்மா சொல்லக் கூடாதுடி. அங்கிளும் ஆன்ட்டியும் உணர்ந்து தான் உனக்கு பேர் வச்சிருக்காங்க” என்றான்.

“என்னன்னு?”

“ம்ம்..! ஆரண்யா அப்படின்னா என்ன? அடர்ந்த காடு, பசுமை, செழிப்புன்னு அர்த்தம். நீயும் நல்லா செழிப்பா தான்டி இருக்க” என்றான் மேலும் கீழும் பார்த்தபடி.

“உங்களை” என்று பல்லைக் கடித்தவள்,

“பார்க்குறது பேசுறது எல்லாமே டபுள் மீனிங்” என்றாள்.

“ச்சாச்ச..! நான் போய் அப்படியெல்லாம் பேசுவேனா ஆரா?” என்றான்.

“அப்படி மட்டும் தான் பேசுறிங்க ஹீரோ. ஆனா வெறும் பேச்சு மட்டும் தான். வேலைன்னு வந்துட்டா பொண்டாட்டி எல்லாம் கண்ணுக்கே தெரியறதில்லை.” என்றாள்.

“அடிப்பாவி, நான் எப்போ அப்படி இருந்தேன்” என்றான்.

“சும்மா நடிக்காதிங்க ஜெய். ஒன் மந்த் ஷூட்டிங்னு சொல்லிட்டு போயிட்டு பார்ட்டி பைவ் டேய்ஸ் கழிச்சு தான் வந்திங்க. உங்களுக்கு எப்பவுமே என்னை தவிக்க வச்சுட்டே இருக்கணும்” என்றாள் கோபமாக.

“இன்னுமாடி அதைப் பிடிச்சு தொங்கிட்டு இருக்க. நான் என்ன பண்றது ஆரா? போன இடத்துல டிலே ஆகிடுச்சு. ஆனா, மறக்காம டெய்லி ட்வைஸ் நான் உனக்கு வீடியோ கால் பண்ணேன் தானே” என்றான் அப்பாவியாய்.

“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என்றாள்.

“வேற எதுக்கு குறைச்சல்ன்னு சொல்லு, தீர்த்து வச்சிடுவோம்” என்றவனின் கைகளில் அவள் இடையில் புகுந்து விளையாட,

“ஜெய் பிளீஸ்..! அப்பறம் டைம் ஆகிடும்” என்றாள்.

“ஓகே ஓகே, கிளம்பலாம்” என்றவன், துரிதமாய் கிளம்பியிருந்தான்.

“நாம எங்க போறோம்ன்னு சொன்னாத்தான் அதுக்கு தகுந்து டிரஸ் பண்ண முடியும்” என்றாள்.

“அது சஸ்பென்ஸ். எப்பவும் போல உனக்கு என்ன பிடிக்குதோ அதையே வியர் பண்ணிக்கோ. லைக் சேரியா இருந்தாலும் ஓகே தான்” என்றான்.

“என்னவோ போங்க”  என்றபடி கிளம்பி வந்தவளைப் பார்த்தவன்,

“பியூட்டிபுல்” என்றான்.

“நீங்க கூடத்தான் செம்மையா இருக்கீங்க” என்றாள்.

“அதை கொஞ்சம் ரொமான்ட்டிக்கா சொல்லலாம்” என்றான் தேவ்.

“ஹோ சொல்லலாமே” என்றவள், அவனை இடையோடு கட்டி அணைத்து, அவன் முகம் பார்த்தபடி,

“செம்மையா இருக்கீங்க ஜெய்” என்றாள். அவளைப் பார்த்து கண் அடித்து சிரித்தவன்,

“ஷாட் ஓகே “ என்றான்.

“உங்களை” என்று அடிக்கத் துரத்தியவளை, கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்,

“நிஜமாவே நான் இன்னைக்கு ஹேப்பியா இருக்கேன் ஆரா” என்றான்.

“உங்க முகத்துலையே தெரியுது ஜெய்” என்றவளின் இதழ்களை முற்றுகையிட்டு முத்தமிட்டு , தன் மகிழ்ச்சியை பகிர்ந்தவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அவன் நடித்து இயக்கிய படத்திற்கான ப்ரிவியு ஷோவிற்கு தான் அவளை அழைத்து சென்றிருந்தான்.

“வீட்லயே சொல்லியிருக்கலாமே ஜெய்” என்றாள்.

“சொல்லி இருக்கலாம் தான். ஆனா கிக்கா இருக்காதே” என்றான்.

“படத்தை பார்த்து முடிக்கிற வரைக்கும் எதுவும் பேசக் கூடாது” என்றான்.

“நல்லா இல்லைன்னா கழுவி ஊத்துவேன், பரவாயில்லையா?” என்றாள்.

“ஓகே” என்றான்.

அந்த படத்தின் ப்ரொடியூசர், முக்கிய இயக்குனர்கள், சில பிரபலங்கள் என்று அனைவரும் இருக்க, அவர்களைப் பார்த்தவளுக்கு கொஞ்சம் மிரட்சியாக இருந்தது.

“இன்னும் இந்த நடுக்கத்தை நீ விடலையாடி” என்றான் சிரிப்புடன்.

“என் பக்கத்துல தான் இருப்பிங்க” என்றாள்.

“கண்டிப்பா, உன் பக்கத்துல உட்கார்ந்து தான் பார்க்கணும்” என்றான்.

அவன் நடித்த ஏதோ ஒரு படம் என்று அமர்ந்தவளுக்கு, முதல் சில காட்சிகள் வரை அது தங்களுக்கானது என்று புரியவில்லை. ஆனால் படம் போகப் போக, அதில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் தங்கள் வாழ்க்கையில் நடந்ததைப் போன்றே இருக்க, சந்தேகமாய் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“நீ நினைக்கிறது கரெக்ட் தான். படத்தைப் பாரு” என்றவன், அவள் கைகளை தன் கைகளுக்குள் இணைத்துக் கொண்டான்.