“அதான் என்னைப் பார்க்க வந்துட்டு, எங்க அக்காவை பார்த்த உடனே பிளாட் ஆன மாதிரி ஆக்ட் குடுத்து, உங்க காதல் கிளியை கவர்ந்துட்டு போனிங்களா?” என்றாள் சிரிப்புடன்.

“ஆதிரா” என்று காயத்ரி அதட்டிக் கொண்டே வர,

“அடுத்து பெர்பார்ம் பண்ண வந்துட்டாங்க மாமா. உங்களை நான் வளைச்சுப் போடா ட்ரை பண்ற ரேஞ்சுக்கு இப்போ அட்வைஸ் பண்ணி குமிப்பாங்க. நான் எஸ்கேப் ஆகுறேன்” என்றவள், காயத்ரியை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

“அவ அப்படித்தான் மாப்பிள்ளை. ஏதாவது ஏடாகூடமா பேசிட்டே இருப்பா. நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க” என்றார்.

“ஆதிரா நல்ல பொண்ணு தான் ஆன்ட்டி. நீங்க ஏன் அப்படி பார்க்குறிங்க? ஷி இஸ் அ பிரிலியண்ட் கேர்ள். நம்ம எல்லாரை விடவும் ஆட்களை எடை போடுற திறமை ஆதிராகிட்ட இருக்கு. எனக்கு ஆதிரா மாதிரி ஒரு சிஸ்டர் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றான் தேவ். அவனின் பேச்சைக் கேட்டு வேகமாய் வந்தவள்,

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னை சிஸ்டரா அடாப் பண்ணிக்கோங்க. எனக்கும் இந்த வீட்ல இருந்து போர் அடிக்குது. ஒரே மம்மி, ஒரே டாடி, சேம் ஹவுஸ், சேம் லைப். எனக்கும் ஒரு சேன்ஜ் வேண்டாமா?” என்றவள் ஆராவிடம் சென்றாள்.

“உனக்கு வாய் மட்டும் குறையாது” என்ற காயத்ரிக்கும் சிரிப்பு வந்தது.

அங்கே சுலோச்சனாவோ ஆராவை ஆய்ந்து எடுத்துக் கொண்டிருந்தார்.

“மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கியா ஆரா?” என்று இலை மறைக் காயாய் ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பாட்டி நிஜமாவே நான் சந்தோஷமா தான் இருக்கேன்” என்றாள் ஆரா.

“எங்களுக்காக பொய் சொல்லலையே” என்றார்.

“சத்தியமா நான் சந்தோசமா இருக்கேன்” என்றாள் ஆரா அழாத குறையாக.

அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டே வந்த ஆதிரா,

“மாமா உங்களுக்கு அடுத்த படத்துக்கு டைட்டில் வேணுமா?” என்றாள்.

தேவ் புரியாமல் பார்க்க,

“சத்தியமா நான் சந்தோஷமா இருக்கேன்” இது தான் டைட்டில். எப்படி இருக்கு? உங்க பொண்டாட்டி வச்சது தான்” என்று ஆதிரா சொல்ல, பக்கென்று சிரித்திருந்தான் தேவ்.

“அங்க பாருங்க, எங்க பாட்டி அவளை கதற வச்சுட்டு இருக்காங்க. போய் காப்பாத்துங்க பாவம். இல்லைன்னா சத்தியமா நீங்க சந்தோஷமா இருக்க முடியாது” என்றபடி சென்றாள் ஆதிரா.

“ஆரா” என்றவனின் குரலில் அவள் வேகமாய் வர,

“சொல்லுங்க ஜெய்” என்றாள் பாவமாய்.

“முதல்ல உட்கார்ந்து சாப்பிடு. நான் தான் சாப்பிட்டேன். நீ சாப்பிடவே இல்லையே” என்றான்.

“பசியில்லை ஜெய்” என்றாள்.

“அதெப்படி பசிக்காம போகும். நீ உட்கார் முதல்ல” என்று டைனிங் டேபிளில் அமர வைத்தவன், அவளுக்கு பரிமாற,

“அய்யோ மாப்பிள்ளை, நான் எடுத்து வைக்கிறேன். நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு” என்று காயத்ரி பதறிக் கொண்டு வந்தார்.

“பரவாயில்லை ஆன்ட்டி” என்றவன்,

“சாப்பிடுடி” என்றான் அதட்டலாய்.

“எனக்கு மனசுக்கு என்னவோ போல இருக்கு ஜெய், ஏதோ பாரமா.. என்னவோ நடக்கப் போறது போல” என்றாள் மெதுவாய்.

“அதெல்லாம் ஒன்னும் நடக்காது” என்றவன் தானே அவளுக்கு ஊட்டவும் செய்ய, இதற்கு மேல் சாக்கு சொன்னால் கோபப்படுவான் என்று எண்ணியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஆக இவளுக்கு இந்த வீட்ல யாராவது ஊட்டிட்டே இருக்கணும். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சீனை நான் பார்க்கணுமோ தெரியலை” என்ற ஆதிராவின் குரலில் திரும்பியவள், அவளை முறைத்தாள்.

“என்னடி முறைப்பு? எப்பவும் பாட்டி ஊட்டுவாங்க.இன்னைக்கு மாமா , நாளைக்கு?” என்றாள் ஆதிரா.

“ம்ம், என் பிள்ளை ஊட்டுவான். உனக்கென்னடி?” என்றாள் ஆரா.

அவளின் வார்த்தையில் சுலோச்சனாவின் மனம் அப்போது தான் நிறைந்தது. மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலகியிருந்தது.

அத்யாயம் 23:

சரியாக அதே நேரத்தில் மித்ராவின் செல்லில் இருந்து ஆராவின் நம்பருக்கு விடாமல் போன் வர, ஆராவோ அதை எரிச்சலுடன் கட் செய்து கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் போன் வர, மொபைலை ஸ்விட் ஆப் செய்தாள்.

“யார் போன்ல?” என்றான் தேவ்.

“மித்ரா” என்றாள்.

“எதுக்கு இத்தனை முறை கூப்பிடனும்?” என்றான்.

“தெரியலை ஜெய்” என்றாள்.

அப்போது ரவிக் குமார் கையில் போனுடன் பதட்டத்துடன் வந்தார்.

“ஆராம்மா” என்றவருக்கு வார்த்தைகள் வரவில்லை.

“மித்ரா அப்பா போன் பண்ணினாராமே, நீ எடுக்கலையாடா?” என்றார்.

“என்னாச்சுப்பா?” என்றாள் புரியாமல். அவர் முகத்தில் இருந்த தவிப்பு அவளுக்கு என்னவோ ஏதோ என்று தோன்ற வைத்தது.

“மித்ரா பொண்ணு சூசைட் பண்ணிக்கிச்சாம். இப்போதான் அவங்க அப்பா கால் பண்ணார்” என்று ரவிக் குமார் சொல்லி முடிக்க, அதிர்ச்சியில் ஆராவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.

“எப்படி அங்கிள்? என்ன பிராப்ளம்?” என்றான் தேவ்.

“தெரியலை மாப்பிள்ளை. ஊர்ல இருந்து வந்த பொண்ணு யார்கூடவும் பேசாம இருந்திருக்கா. இன்னைக்கு ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம். கடைசில இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கா? என்ன பிரச்சனைன்னு தெரியலை” என்றவர்,

“உனக்கு எதுவும் தெரியுமாடா ஆரா?” என்றார் பதட்டத்துடன்.

அவளுக்கு வார்த்தைகள் வராமல் திணற,

“அவளுக்கு என்னப்பா தெரியும்? அவ என்ன மித்ரா கூடவா இருக்கா? நீங்க அங்கிள் ஆன்ட்டியை தான் கேட்கணும்?” என்று ஆதிரா நேரத்திற்கு பதில் சொன்னாள்.

“பக்கத்து வீடு தான மாமா?” என்றான் தேவ்.

“இல்ல மாப்பிள்ளை. பழைய வீடு இருக்குற தெருவுல இருக்காங்க. நாங்க இங்க வந்து த்ரீ இயர்ஸ் ஆச்சு. மூணு ஸ்ட்ரீட் தள்ளி போகணும்” என்றார் ரவிக் குமார்.

நடந்த பிரச்சனைகள் எதுவும் அவருக்கு தெரியாததால்,

“என்ன ஆரா இப்படி நிக்கிற? வாடா போகலாம்?” என்றார் ரவி.

அவள் அவருடன் கிளம்ப முறபட, அவளைத் தடுத்தான் தேவ். ஆரா பாவமாய் பார்க்க, அதைப் பார்த்த ஆதிரா,

“மாமா நடந்த எதுவும் இங்க யாருக்கும் தெரியாது. அது அப்படியே இருந்துட்டு போகட்டும். இப்போ ஆரா போகலைன்னா அது நல்லா இருக்காது. சூசைட் வேற. நான் கூட போயிட்டு கூட்டிட்டு வரேன்” என்றாள் மெதுவாக.

அவனுக்கும் அவள் சொல்வது சரியென்றே பட்டது.

ஆரா அவனைப் பார்க்க,

“நான் பார்த்துக்கிறேன். நீ போயிட்டு வா” என்று கண்களை அமர்த்தினான் தேவ்.

“சாரி அங்கிள்! என்னால வர முடியாது. ரீசன் உங்களுக்கே தெரியும்” என்றான்.

“அய்யோ நீங்க சொல்லனுமா மாப்பிள்ளை.  நாங்க போயிட்டு வந்திடுறோம்” என்றவர் அவர்களைக் கிளப்பிக் கொண்டு போனார்.

அங்கே மித்ராவின் பெற்றோர்கள் அழுது கொண்டிருக்க, ஆராவைப் பார்த்தவுடன் அவர்கள் அழுகை கதறலாக வெளி வந்தது.

“என்ன பிரச்சனைன்னே தெரியலை ஆராம்மா. சென்னைல இருந்து வந்த பொண்ணு நல்லா தான் இருந்தா. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தான்னு தான் தெரியலை. அவளுக்கு நாங்க என்ன குறை வச்சோம்?” என்று அவர்கள் அழுக, காரணம் தெரிந்த ஆராவும், ஆதிராவும் அமைதியாய் இருந்தனர்.

இத்தனை வருடங்கள் உயிர் தோழியாய் இருந்தவளை இப்படி சடலமாகப் பார்க்க முடியவில்லை ஆராவால். தன்னால் தானோ என்ற குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் வாட்டத் தொடங்கியது. அவளை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருக்க, ஓட்டமும் நடையுமாக அங்கே வந்து சேர்ந்திருந்தான் கணேஷ்.

வந்தவனின் முகத்தில் அதிர்ச்சியும் வேதனையும் அப்பிக் கிடந்தது. ஒரு காலத்தில் தான் உயிராய் நேசித்தவளை இப்படி காண்பான் என்று நினைக்கவில்லை. கண்ணீர் துளிகள் உருண்டோட நின்றிருந்தவனைப் பார்த்த ஆதிராவுக்கு பாவமாய் இருந்தது. அவள் ஆராவின் கையை சுரண்ட, அப்போது தான் கணேஷை கவனித்தாள் ஆரா. பார்த்தவள் பட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஆரா” என்றவன் அவள் கையைப் பிடிக்க, அவனை முறைத்தபடி கையை உருவிக் கொண்டாள்.