சுஜா பேசப்பேச விக்கித்து நின்ற அனைவரும் வளரை வெறுப்புடன் பார்த்தனர். ‘ச்சே இவ்வளவுதானா நீ’ என எல்லோரும் சொல்லாமல் சொன்னதாக வளர் நினைத்தார்.
“சுதிமா என்னை மன்னிச்சிடுடா.அப்போ எனக்கும் சின்ன வயசு. என்னால ஒன்னும் பண்ண முடியல.” என்ற சுபாஷ்,
“அதுக்கு பின்னாடி, நான் பாக்க நெறைய தடவை இவங்க இங்க இப்படி நடந்துகிட்டதால எனக்கு அது பழகிப்போச்சிடா. அதான் இப்போ எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல”. எனவும் பரிதாபமாக சொன்னான்.
“இதுவரைக்கும் ஓகே. உங்களுக்கு இவங்கல்லாம் மூணாவது மனுசங்க. அவங்க வலி உங்களுக்கு தெரியல. ஆனா இனி ராகினியக்கா நிலமை….. இதையே அவங்ககிட்டயும் தொடரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”
“போலிஸ்காரர் உங்க வீட்டுல அவங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகுது? எங்க வீட்டுல எங்கம்மாவுக்கு இவங்க அப்பப்போ வந்து போறப்பவே பாதகம் நடந்திருக்கு. இவங்களோடவே இருக்கப்போற அக்கா நிலை எப்படி இருக்கும்?” கேள்வி மேல கேள்வியாக சுஜா கேக்க, பதிலில்லை யாரிடமும்.
பாட்டி, “குட்டிமா இங்க அப்பா வீடுன்னு உரிமையில அப்படி நடந்தா எல்லா இடத்திலயும் அப்படியே நடக்க எம்புள்ளைக்கு என்ன பைத்தியமா? அதெல்லாம் மருமவகிட்ட ஒழுக்கமாதான் நடந்துப்பா. என்னை நம்பி கையை சரிபண்ணுமா.”என கெஞ்ச
“உங்கள நம்பியா? இனியும் உங்கள நம்ப நானென்ன மூளைங்கிற சாம்பல் நிற வஸ்து இல்லாதவளா? உங்ககிட்ட இருந்து நாங்க விலகி பல வருசம் ஆச்சி. உங்களுக்காக நான் ஏன் இதை சரி பண்ணனும்? நீங்க உங்க மகள மட்டும் பாருங்க போதும். எங்கள எங்க தாத்தா பாத்துக்குவார்” என்றாள் சுஜா.
“குட்டிமா நிலமெல்லாம் என் பெயரிலதான் இருக்கு. அதை உன் பெயரில மாத்தி வச்சிடறேன். தயவுசெஞ்சி இவ கையை சரி பண்ணிடுமா.” தன் மகளை போல சொத்து என்றதும் வாயை பிளந்து கொண்டு சொன்னதை செய்வாள் என நம்பி கெஞ்ச ஆரம்பித்தார் பாட்டி
“அம்மா இந்த கைகாரிக்கிட்ட எதுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்க? தேடினா ஒரு வைத்தியன் கிடைக்காமலா போயிருவான்? இதுக்கு போய் நிலத்தை எல்லாம் அவ பேருல எழுதறேன்னு சொல்ற. அப்ப இவ்வளவு நாளா காத்திருந்த எனக்கு என்ன தருவ?” என வளர் கத்திக்கொண்டே தன் அம்மாவை தள்ள வர,கைகள் வராமல் கலங்கி நின்றார்.
“பாப்பா அவ கை இப்படியே இருக்கட்டும், நீ ஏதும் சரி செய்யாதே. அவங்கம்மாவையும் கூட கூட்டிட்டு போறேன். ஊட்ட, கழுவ, குளிப்பாட்டி விட ஆள் வேணுமில்ல. ஆனா அந்த வாயையும் கொஞ்சம் பேச முடியாம நிப்பாட்டி விட்டுட்டேன்னா, உனக்கு புண்ணியமா போயிடும்.” என்ற சக்திவேல்
“ஏன்டி இன்னும் உனக்கு என்ன தரனும்? பையன பெத்த மிதப்புல பேசறயா? பேரன், பேத்தி எடுக்குற வயசில அம்மா வீட்டுக்கு சொத்துக்கு ஆளா பறக்குற? பொம்பளயாடி நீயி? பிசாசு. பிசாசு பெத்த பிசாசு. உனக்கு, உங்கம்மாவுக்கு எல்லாம் தோலை உரிச்சி உப்பு தடவனும். மருமகள, மகளா பாக்காம கொடுமை பண்ணினா அடுத்த ஜென்மத்துல கூட மோட்சம் கிடைக்காது…”
“இவ்வளோ நாள் பேச வேண்டியதுக்கு மேல பேசிட்டா. அப்பமுட்டுல முட்டுக்கொடுக்க நல்ல ஆளா இருந்ததால எம் பொண்டாட்டி காலந்தள்ளிட்டா. வார மருமக யாருக்குன்னு பாக்கும்? வாப்பூட்டும் போட்டுடு கண்ணு. உனக்கு பாவம் வருமுன்னு உங்க பாட்டி சொன்னா நம்பாத. இதுவரை இவங்க செஞ்ச அநியாயத்துக்கு வராத பாவமா இப்போ ஒரு நல்லது செய்யும்போது வரப்போகுது?” எனவும் பேச
“ஆனா அடுப்படி எங்க இருக்கு பாப்பா? அந்த தோசை திருப்பிய பழுக்க காய்ச்சிட்டு வந்து எங்கையில கொடு. அவ நாக்குல ஒரு சூடு வச்சிட்டு எனக்கு ஒன்னு வச்சிக்கிறேன்.”
“கூட பொறக்கலன்னாலும் முறைக்கு பாத்தா இவங்க என் தங்கச்சிங்கதான். இவங்கள பேசறது தெரியாம நானும் கிட்டதட்ட முப்பது வருசத்த கடத்திட்டேன். ஊருக்கு பெரிய மனுசனா வெள்ளையும், சொள்ளையுமா சுத்தியிருக்கேன். கூடயே பீடைய வச்சிக்கிட்டு…. ச்சே இவள நான் எவ்வளவு நம்புனேன்..”
“உன்கிட்ட பேசும்போதும் கூட பொறந்தவீட்டு சொந்தம் விட்டுப்போகுதுன்னு உளறிக்கிட்டிருக்கா அப்படின்னு நினைச்சேன். ஆனா விசம். உடம்பு முழுவதும் விசம், ஆத்தாளுக்கும், மகளுக்கும்.” என்றவர்
“மாமா இதுவரை உங்க பொண்ணுக்கு யாராவது சூடு வச்சிருக்கிங்களா?” என்றார்.
தாத்தா என்ன பேசுவது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தவர் மருமகன் கேள்வி கேக்கவும், பதறி போய், “இல்லங்க. எங்க பொண்ண நாங்க அடிச்சதே இல்லை. முறைச்சாவே பயந்துக்கும்.” என வேகமாக சொன்னார்.
“பாப்பா எவ்வளவு பெரிய பொய்ய அசால்ட்டா சொல்றார் பாரு உங்க தாத்தா. முறைச்சா இந்தம்மா பயப்படுமாம். இத எங்கிட்டயே சொல்றாரே, இவங்க மத்தியில நியாயம் கிடைக்குமா?” நக்கலாக கேட்ட சக்திவேல்,
வளரிடம் “நேற்றைக்கு நீ ஒன்னு சொன்னியே நியாபகம் இருக்கா? பொண்ணு குடுக்கலன்னு சொன்னா சொந்தமில்ல, செத்தா இழவில்லைன்னு மிரட்ட சொன்னியே? இப்போ சொல்றேன் கேட்டுக்க, இனி உனக்கு இளைப்பாறன்னு வர தாய் வீடு இல்லை.”
“நாளைக்கு நாம தாய்மாமனுக்கு பத்திரிகை வைப்போம். அவங்களும் வந்து முறை செய்வாங்க. அதெல்லாம் எப்பவும் போல நடக்கும். ஆனா இனி உனக்கு இங்க யாரோடையும், ச்சே ஏன் எல்லாரையும் சொல்லனனும், உங்கம்மாகூட போன்லியோ, நேராவோ தொடர்பு இருக்ககூடாது. ஏதாவது விசேஷத்துல பாத்தா பேசிக்க.”
“அங்கேயும் நலம் விசாரிக்கலாம். எந்தங்கச்சிங்கள புரணி பேசுனிங்க, அதுவும் கட். பாத்து ஒழுங்க இருந்துக்குங்க.” என்றவர்
“கிளம்பு போலாம். கை விழுந்து போனதுக்கு என்னாச்சின்னு கேக்கறவங்களுக்கு ‘எங்கண்ணிக்கிட்ட வாலாட்டினேன். பதிலுக்கு கையை திருப்பிவிட்டுட்டாங்க’ன்னுதான் சொல்லனும். அதுலையும் ஏதாவது கோக்குமாக்கு பண்ணிங்க கண்டந்துண்டமா வெட்டி காக்கைக்கு போட்டுடுவேன், பாத்து நடந்துக்குங்க.” என வேகமாக பேசினார்.
“ஏன்டி கழுத! உங்கண்ணனுக்கு வேல கிடைக்க சிபாரிசு பண்ண யேம்பேரன் வேணும். ஆனா உனக்கு அவன கட்டிக்க கசக்கும். யேன் மவள முடமா மாத்துவ, இத கேக்க யாரும் வரமாட்டாங்கன்னு நெனச்சியா? நானிருக்கேன் யேன் மவளுக்கு” என்று பாட்டி சண்டைக்கு வர
“என்னது.. இன்னைக்கு வேலயில சேந்த உன் பேரன் மூணு வருசம் முன்னாடி எங்கண்ணனுக்கு சிபாரிசு பண்ணினானா? இதென்ன புது கதை?” என்ற சுஜாவை
“வயசுல பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும் பாப்பா” என்று ஈஸ்வர் தடுக்க
“அண்ணா இப்பவாச்சும் என்ன நடந்தது? ஏன் நடந்தது?ன்னு வாய திறக்கறானா பாருங்க? இவனுக்கெல்லாம் என்னால இனிமே மரியாதை தரமுடியாது” என்றவள், பாட்டியிடம்
“தன்கிட்ட பேசறவ ராகினியா? மோகினியா?ன்னு தெரியாம கடலை போட்டவன் எங்களுக்கு சிபாரிசு பன்றானா? ஆச்சர்யமா இருக்கே! யாரையோ பாக்க வந்தவன் எதுக்கு என்னைய பாக்க வந்தமாதிரி நேத்து பிலிம் காட்டினான். வந்தவன் நேரா உங்க ஊருக்கு வரவேண்டியது தான? அங்க என்ன வேலைன்னு கேட்டு சொல்லுங்க?” என்றவள், சக்திவேலின் பக்கம் திரும்பி
“போன வாரம் அந்த பொண்ணு போன் பண்ணி “நாந்தான் ராகினி பேசறேன். எனக்கு உங்கள நேருல பாக்கனும். எங்கப்பாம்மா கல்யாணம் நிச்சயம் வரை பாக்க கூடாது, பேச கூடாதுன்னு சொல்றாங்க. என்னால உங்கள பாக்காம, பேசாம இருக்க முடியாது. இந்த வாரம் கண்டிப்பா என்னைய பாக்க வரனும்” அப்படின்னு சொல்லுச்சி”
“இந்த லீவுக்கு ஊருக்கு வரேன்னு சொன்னதும், மீட் பண்ண வேண்டிய இடத்த சொல்லுச்சி. அடையாளம் தெரியாதேன்னு கேட்டதிற்கு சுதிகிட்ட ப்ரெண்டாயிடறேன். நீங்க வாங்க நான் பாத்துக்கிறேன்னு சொல்லுச்சு. அதான் அங்க வந்தேன்.” என்ற சுபாஷ்.
“எங்கம்மா சுதிகிட்ட பண்ண கலாட்டாவுல நானு அந்த பொண்ண பாக்காமயே திரும்பி வர்றமாதிரி ஆயிடுச்சி. நான் வீடு வர்றதுக்குள்ள நீங்க நிச்சயம் ஏற்பாடு பண்ணிட்டிங்க” என்றான்.
“நாங்க கண்டுபிடிக்க போயி பொழச்சிங்க. இல்லனா என்னவாயிருக்கும் என்பது கூடவா புரியாது. ஐபிஎஸ்ஸின் லீலைகள்னு பேப்பர்காரங்க போட்டு நாறடிச்சிருப்பாங்க.” என்றாள் சுஜா.
“இவங்க பண்ணுன எல்லாத்தையும் மன்னிச்சுடு கண்ணு. நாங்க கிளம்பறோம். நீ கண்டிப்பா கல்யாணத்திற்கு வரனும். சாக்குபோக்கு சொல்லக்கூடாது பாத்துக்க” என்று சுஜாவின் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்கள் சுபாஷின் அப்பாவும், பெரியப்பாவும்.
“இருங்க மாமா. கையை சரி பண்ணி விட்டுடுறேன். அவங்க பாவத்தை அவங்களே சுமக்கட்டும்” என்ற சுஜா, ஏதோ ஒரு நரம்பை சுண்ட,
“ஐய்யோ அம்மா” என மடிந்து உட்கார்ந்து கதறினார் வளர்.
அருகில் வந்த சுபாஷ், “கொஞ்ச நேரத்துல சரியாகிடும் பயப்படாதிங்க” என்று கூறி
“அம்மா, பாட்டி நல்லா கவனிங்க. சுதிமா முழுசும் நல்லா கத்துக்கிச்சி. அதனால டக்குனு சரி பண்ணிடுச்சி. நான் அரைகுறையா கத்துக்கிட்டேன். பாதி மறந்திடுச்சி. சரி பண்ணவும் தெரியாது.” என்க
“இதை ஏன் இப்ப சொல்ற?” என இருவரும் திரும்பி பார்க்க
“ ஸோ ராகினிகிட்ட கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க. அத்தைங்கள அடக்கி ஆள நெனச்சமாதிரி எம்பொண்டாட்டிகிட்ட நடந்திங்க கோவத்துல நான் ஒரு நரம்ப சுண்ட நினைச்சி, வேற ஏதாவது ஆனாலும் ஆயிடும். கைகால் வராமகூட போலாம், யாரு கண்டா” என கூலாக சொல்ல, பாட்டியும், வளரும் அதிர்ச்சியில் பேச்சி வராமல் நின்றனர்.
“நாம வந்த விசயத்த விட்டுட்டு வேற விசயத்தை பேசிக்கிட்டு இருக்கோம் பாருங்க” என சுபாஷின் பெரியப்பா கூற
“மாமா, வளரு என்ன நெனச்சி இந்த சம்பந்தம் வேணாமுன்னு சொல்லுச்சோ தெரியல. ஆனா இது ஒத்து வருமுன்னு எனக்கு தோணல” என்றார் சுஜாவின் பெரியப்பா குணவேல்.
“ஏன்பா குணம், இப்படி பட்டுனு சொல்ற? பாப்பாகிட்ட கேட்டுட்டு, வீட்ல எல்லாருகிட்டையும் கலந்துகிட்டு சொல்லுங்கப்பா” என அவர் வலியுறுத்தி சொல்ல
“மாமா பெரியப்பா சொல்றதுதான் சரி. அத்தை பேசுனது, நான் பேசுனது எல்லாம் பாத்து பதட்டத்துல இருக்காங்க இப்போ. இது சரி வராது, வேணாமே” என சுஜா மெதுவாக ஆனால் தெளிவாக சொல்ல
“நடந்த எல்லாத்தையும், முழுசா அவங்க பாத்தாங்க. உன் பேருல தப்பில்லைன்னு தெரியுமேமா சுஜா” என அவர் மறுபடியும் சொல்ல
“நாளைக்கு ஒரு கருத்து வேறுபாடு வந்தாலும், இவ எந்த நரம்ப சுண்டி நம்மல முடமாக்கிடுவாளோன்னு ஒரு பயம் வரும் அவங்க வீட்டில இருக்கவங்களுக்கு. அதனால இதை விட்டுடலாம். நானும் படிக்கனும், வேலைக்கு போய் சுயமா சம்பாதிக்கனும்”
“இன்னும் நிறைய, நிறைய ஆசைகள் எனக்குள்ள இருக்கு. அவங்கள அவங்களுக்கு ஏத்ததுபோல வேற ஒருத்தரை பாத்துக்க சொல்லுங்க. என்னை விட்டுடுங்க.” என்றவள் தன் அண்ணன்களுடன் போய் நின்றாள்.
“சூப்பர்டா செல்லம்” என அண்ணன்கள் இருவரும் அவளுக்கு கை கொடுத்தனர்.
“அண்ணா பாப்பா சொல்றதுதான் சரி.” என தன் அண்ணனிடம் சொன்ன சக்திவேல், சுஜாவிடம் திரும்பி “பாப்பா, கல்யாணம் பேசலன்னாலும் விருந்தினரா அவங்கள உபசரிக்கலாம் கண்ணு” என்க
“தேங்க் யூ மாமா.” என்று உள்ளே சென்ற சுஜா நிமிடத்தில் கையில் ஸ்வீட், காரம் அடங்கிய தட்டுக்களுடன் வந்து ஆளுக்கொன்றாய் கொடுத்தாள்.
“ரெடியா வச்சிருந்தியாமா?” என ஒருவர் கேட்க
“ஆமாங்கம்மா. தண்ணீர் கொடுத்துட்டு போய் இதை கொண்டுவரலாமுன்னு தட்டு பலகாரமிருந்த சம்படமுன்னு எடுத்து வச்சிட்டு வந்திருந்தேன். இப்போ போனதும் பரிமாறி எடுத்துட்டு வந்தேன்” என்றாள் சுஜா.
“அண்ணா பாப்பாவோட டீ நீங்க இதுவரை சாப்பிட்டதில்லைதான? பாப்பா உன்னோட ஸ்பெஷல் டீ வேணும்டா” என சக்திவேல் கேக்க, வளரும் வந்திருந்த பெண்களில் ஒருவரும் நக்கலாக சிரித்தனர் ‘இவளெங்கே இருபது பேருக்கு ஸ்பெஷலா டீ போட போறா? டீன்னு ஒன்ன இவ போடறதே பெருசு’ என
பலகாரங்களை சாப்பிட்டு முடிக்கும் முன் உள்ளிருந்து ஒரு குரல் “அண்ணா” என்க சுகனும் ஈஸ்வரும் எழுந்து சென்று தட்டுகளில் ஆவி பறக்கும் டீ தம்ளர்களை ஏந்தி வந்தனர். அதற்குள்ளாகவா என பார்த்தபடி அதை சுவைத்தனர். மெச்சுதலாக சுஜாவை பார்த்தனர்.
சக்திவேல் மறுபடியும் ஒருமுறை மாமியாரிடம் எச்சரித்துவிட்டு தன் உறவினர்களுடன் கிளம்பினார்.
“குட்டிமா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே. ஏன் சொல்லல? உன் அண்ணனுங்களுக்கும் தெரியும் போல இருக்கு? ஏங்கண்ணு சொல்லல? சொல்லியிருந்தா நானு கண்டிச்சிருப்பேனே?” என தாத்தா வருத்தத்துடன் சொல்ல