“குற்ற உணர்ச்சிங்கிறது கொஞ்சம் கூட இல்லை. செஞ்ச தப்புக்கு கொஞ்சமாவது பீல் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா இப்பவும் அப்படியே இருக்க? இனியும் அதைத்தான் செய்வேன்னு என்கிட்டயே தைரியமா வேற சொல்ற?” என்றான் தேவ்.
“கண்டிப்பா. இப்பவும் சொல்றேன் யாருக்காகவும் என்னால ஆராவை விட முடியாது, அவளுக்காக கூட. இது சுயநலம், கேடுகெட்டத் தனம் இப்படி எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. ஐ டோன்ட் கேர். பட் ஐ வான்ட் ஆரா” என்றாள் மித்ரா.
“ஏன் புரியாம? தி கிரேட் ஆக்ட்டர், டேரக்டர் மிஸ்டர். சத்ய ஜெயதேவ் அலைஸ் சத்ய தேவ் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றாள் தெனாவெட்டாய்.
“நாட் பேட், என்னோட புல் நேம் முதற்கொண்டு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்க. ஆனா, என்னோட இன்னொரு குணத்தைப் பத்தி தெரியாதது தான் வருத்தமா இருக்கு. ஒரு பொண்ணாச்சேன்னு இவ்வளவு தூரம் பொறுமையா பேசிட்டு இருக்கேன். அட்லாஸ்ட் ஒரு சான்ஸ். நடந்த எல்லா பிரச்சனையும் மறந்துட்டு திருந்துற வழியைப் பார். நான் ஆராகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். கடைசி வரை அவ பிரண்ட்ஷிப்பாவது மெயின்டெயின் ஆகும். மாட்டேன்னு அடம் புடிச்சா, நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான் தேவ்.
“நான் என்ன சார் தப்பு பண்ணேன் திருந்துறதுக்கு. இடையில வந்தது நீங்கதான். சோ நீங்கதான் கிளம்பனும்” என்றவள்,
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சார்? இத்தனை வருஷம் அவ ஜெய் நினைப்புல இருக்குறது உங்கமேல இருந்த லவ்ன்னு நினைக்கிறிங்களா? இல்லவே இல்லை. ஒவ்வொரு நாளும் ஜெய் பத்தின விஷயங்களையும், அவளோட காதலையும் அவளை மறக்க விடாம ஸ்ரீராம ஜெயம் எழுதுனது போல, நான் தான் பேசி பேசி அவளை உங்க நினைப்புலையே இருக்க வச்சேன். அதுல எனக்கு விருப்பம் இல்லை தான். ஆனா, உங்களை மறந்துட்டா, வீட்ல பார்க்குற பையனை மேரேஜ் பண்ணிட்டு போயிடுவாளே? அதான், எனக்கு மனசுக்கு வருத்தமா இருந்தாலும், உங்க நினைப்பை அவளுக்கு ஞாபகப்படுத்திட்டே இருந்தேன். அவ்வளவு சீக்கிரம் அவளால அதிலிருந்து வெளிய வர முடியாது” என்றவள் நக்கலாய் சிரிக்க,
“நீயென்ன லூசா?” என்றவன்,
“உன்னை இப்பதான் அறிவாளின்னு சொன்னேன். உடனே நீ பெரிய முட்டாள்ன்னு நிரூபிக்கிற பார்த்தியா? ஜெய்யும் தேவ்வும் வேற வேற கிடையாது. அவ எதுக்கு என்னோட நினைப்புல இருந்து வெளிய வரணும். வரவே வேண்டாம். எனக்கும் அது தான் வசதி மிஸ்.மித்ரா. ஜெய்யா அவ மனசுக்குள்ள நுழைஞ்ச எனக்கு ஜெயதேவ்வா எப்படி நுழையனும்னு நல்லாவே தெரியும். என் பொண்டாட்டியை கரெக்ட் பண்ற வேலையை நான் பார்த்துக்கிறேன். தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு நீ ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க. என்னைப் பத்தி பேசி பேசி அவ மனசுல என்னை ஸ்ட்ராங்கா பதிய வச்சிருக்க. இப்போ அவ நினைவா இருக்குறதும் நான்தான். நிஜத்துல அவளோட உணர்வா இருக்குறதும் நான் தான். யாரா இருந்தா என்ன? ஆரா என் கூட இருக்கா, எனக்கு அது போதும். அதுக்கு உனக்கு நன்றி சொல்லியே ஆகணும்” என்று நக்கலாய் உரைத்தவன்,
“உன் மூச்சுக் காத்து கூட இனி ஆராமேல படக் கூடாது. மீறி பட்டது, இப்ப பேசிட்டு இருக்குற மாதிரி பேசிட்டு எல்லாம் இருக்க மாட்டான், இந்த சத்ய தேவ். முடிச்சுவிட்டு போயிட்டே இருப்பேன். ஜெய் மாதிரி சாப்ட்டா இருப்பேன்னு நினைச்சுடாத.” என்றவன் கிளம்ப எத்தனிக்க,
“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவிங்க?” என்றாள் திமிராய்.
“நீ சொல்லித்தான் பாரேன். என்ன பண்ணுவேன்னு நான் செயல்ல காட்றேன். ஒரு டீலை எப்படி முடிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்ச பொண்ணுன்ற ஒரு காரணத்துக்காக விட்டுட்டு போறேன். மைன்ட் இட்” என்று கட்டளையிடும் தொனியில் கூறிவிட்டு வெளியேறியவனைப் பார்த்தவளின் கண்களில் சிநேகமில்லை.
காரில் ஏறியவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. அதை அடக்க வழி தெரியாமல் ஸ்டீயரிங்கை குத்தினான்.
“டேமிட்..! ஒரு சின்ன பொண்ணு என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கா. இது கூட தெரியாம இத்தனை நாள் நானும் பைத்தியக்காரன் மாதிரி இருந்திருக்கேன். இப்படியும் கூட இருப்பாங்களா? குளோஸ் பிரண்ட்ன்னு கூட பார்க்காம? எப்படி இவளால இந்த அளவுக்கு திங்க் பண்ண முடிஞ்சது?” என்று எண்ணியவன்,
“எல்லாம் அந்த அரைவேக்காட்டுக்காரி ஆராவை சொல்லனும். தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, கூட இருக்குறவங்களோட நிஜ முகம் தெரியாம இப்படியுமா ஒருத்தி, கண்மூடித்தனமா ஒருத்தியை நம்புவா?லூசு லூசு” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
‘கூட இருந்தவளோட நிஜ முகம் மட்டுமா அவளுக்குத் தெரியலை. உன்னோட நிஜ முகம் கூடத்தான் அவளுக்குத் தெரியலை. அதுக்காக அவளைத் திட்டுவியா நீ? அவளோட அந்த வெகுளித் தனமான குணம் தானே உன்னை ஈர்த்தது’ என்று அவன் மனம் அவனுக்கு எதிராய் வாதிட,
“அந்த வயசுல அப்படி இருந்தா சரி. இப்ப வரைக்கும் அப்படியே இருந்தா என்ன பண்றது? அவளை நிறைய மாத்தணும்” என்று எண்ணிக் கொண்டவன், அடுத்து ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்தான்.
“தேவ் சாப்பிடாம கூட காலைலயே வெளிய கிளம்பி போயிட்டன்னு சொன்னாங்க. யுவன் உன் கூட வரலை போல. எதுவும் முக்கியமான வேலையாப்பா?” என்றார் சிவகாமி.
“எஸ் மாம். முக்கியமான ஒரு பெர்சனை மீட் பண்ண வேண்டியிருந்தது. ஆமா ஆரா கீழ வந்தாளா?”என்றான்.
“நீங்க மட்டும் எப்படி தனியா போவிங்க? நான் வேணும்னா கூட வரவா மாம்” என்றான்.
“இருக்கட்டும் தேவ். போயிட்டு நான் நாளைக்கு வந்துடுவேன்.நான் வந்ததுக்கு அப்பறம் நீ ஆராவை அவங்க வீட்டுக்கு ஒரு முறை அழைச்சுட்டு போயிட்டு வந்துடு. அது தான் முறையும் கூட. அப்பறம் ஷூட்டிங்னு போக ஆரம்பிச்சா, எப்போ வீட்டுக்கு வருவன்னே தெரியாது” என்றார்.