“பார்த்தியா பொய் சொல்ற? நீ என் புருஷன் இல்லை” என்றாள் தலையை ஆட்டியபடி.
“சரி நான் இல்லை” என்றான்.
“பார்த்தியா இப்பவும் பொய் சொல்ற? நீ தான் என் புருஷன்” என்றாள்.
“சரி நான் தான் உன் புருஷன்” என்றான் அப்பவும் அமைதியாக.
“இல்லை ஜெய் தான் என் புருஷன்” என்றாள்.
“சரி, ஜெய் எங்க?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஜெய் எங்க?” என்று யோசித்தவள்,
“அவன் தான் இல்லையே? “ என்று அழ ஆரம்பித்தவளை,
“யார் சொன்னா ஜெய் இல்லைன்னு. உன் ஜெய் இருக்கான்” என்றான் தேவ்.
“பார்த்தியா பொய் சொல்ற?நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்றாள் தள்ளாடியபடி.
“நிஜமாடி நான் தான் உன் ஜெய்” என்றான் சீரியஸாக.
அவன் பேச்சில் வாய்விட்டு சிரித்து வைத்தாள் ஆரா.
“எதுக்கு சிரிக்கிற?” என்றான் அவளைப் பிடித்து நிலையாய் நிறுத்தியபடி.
“அப்பறம் நீ ஜெய்ன்னு சொன்னா சிரிப்பு வராதா?” என்று குளறினாள்.
“ஏன்? ஜெய் எப்படி இருப்பான்?” என்றான்.
“ஜெய் உன்னை விட ஒல்லியா இருப்பான். ஆனா, நீ இங்க பாரு சிக்ஸ் பேக் எல்லாம் வச்சு நல்லா பல்க்கா இருக்க. அவனோட ஹேர் அலை அலையா அடங்காம ஆடும். இங்க உன்னோட ஹேர் உன்னை மாதிரி ஸ்டிப்பா நிக்குது. ஜெய் கண்ணுல அமைதி மட்டும் தான் இருக்கும். இங்க பார் உன் கண்ணு எப்படி சிவந்து என்னை பயமுறுத்துதென்னு” என்றாள்.
“விளங்கிடும், ரொம்ப பெரிய ஆராய்ச்சி தான்.அதுக்காக ஆறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியேவா இருக்க முடியும்” என்று நினைத்துக் கொண்டவன்,
“சரி நீ இரு. நான் போய் உனக்கு லெமன் ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று அவன் நகரப் போக,
அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள்,
“பழரசமா?” என்றாள்.
“ஆமா” என்றான்.
“இதழ் ரசம் தான் வேணும்” என்றாள். அவள் கேட்ட தொனியில் சிரிப்பு வந்தது அவனுக்கு.
“நீ ஒரு மார்க்கமாத்தான்டி இருக்க?” என்று நினைத்தவன்,
“எதுக்கு விடிஞ்சதும் என் மண்டையை உடைக்கிறதுக்கா?” என்றான் சிரிப்புடன். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் வாந்தி வருவதைப் போல் வாயைப் பொத்த,
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் பாத்ரூமில் விட்டான். அடுத்த நிமிடம் அவள் கடகடவென்று அனைத்தையும் வாமிட் செய்திருக்க, அனைத்தையும் சுத்தம் செய்தவன், அவளை நகர்த்தி ஷவருக்கு அடியில் நிறுத்த,
“அய்யோ மழை பெய்யுது” என்று அதற்கும் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தாள்.
“சேரியை ரிமூவ் பண்ணுடி” என்றான்.
“மாட்டேன். நீ வெளிய போ” என்றவள் அப்படியே ஷவருக்கு அடியில் அமர்ந்துவிட்டாள்.
“என்னடி பண்ற?” என்றான் பாவமாய்.
“பார்த்தா தெரியலை, நான் தியானம் பண்ண போறேன்” என்றாள். அவனுக்கு பக்கென்று சிரிப்பு வர, அவளின் அட்டூழியங்களைப் பார்த்திருந்தவனுக்கு, அப்போது தான் முழுவதும் நனைந்ததில் அவள் அங்கங்கள் அவனுக்கு கண்ணுக்கு விருந்தாகி, அவனுக்கு சோதனையாக மாற,
“ரைட்டு ஒரு முடிவோட தான் இருக்கா” என்று நொந்து கொண்டவன், வெளியே சென்று அவள் கப்போர்ட்டில் ஒரு நைட்டியை எடுத்து வந்தவன், அவளுக்கு மாற்ற முற்பட,
“ஹேய் என்ன பண்ற?” என்று துள்ளி விலகினாள் ஆரா.
“இதுலயெல்லாம் ரொம்பத் தெளிவு தான்” என்றான்.
“டிரஸ் சேஞ் பண்ணனும் ஆரா” என்றான் பொறுமையாக.
“நான் தியானம் பண்ணிட்டு இருக்கேன். அதை கலைக்கிற நீ” என்று அதட்டினாள்.
“டிரஸ் மாத்திட்டு வெளிய வந்து தியானம் பண்ணு. நான் கலைக்கவே மாட்டேன்” என்றான் நமட்டு சிரிப்புடன்.
அவன் புடவையை உருவப் போக,
“அய்யோ ரேப்,ரேப்..! யாராவது வந்து என்னை காப்பாத்துங்க” என்று கத்தத் தொடங்க,
“ஹேய் வாயை மூடுடி” என்று ஒரு அதட்டல் போட்டான். அவன் குரலில் அவள் கப்சிப் என்று அடங்க, அப்போதும் அவள் தள்ளாட்டம் நிற்கவில்லை. பரபரவென்று அவள் உடையைக் கலைந்தவன், நைட்டியை மாற்றிவிட, அவனுக்குத் தான் உணர்வுகள் உள்ளுக்குள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
பிரஷில் பேஸ்ட்டை வைத்துக் கொடுத்தவன்,
“பிரஷ் பண்ணு”என்றான் அதட்டியபடி. அவன் அதட்டலுக்கு பயந்து அவள் அமைதியாய் அவன் சொன்னதை செய்ய,
“சொல்ற விதத்துல சொன்னா தான் மேடம் கேட்பாங்க போல” என்று எண்ணியவன்,
“பிரஷ் பண்ணி முடிச்சுட்டியா?” என்றான்.
அவனை முறைத்தபடி அவள் வர, வாயைத் துடைத்து விட்டவன், மீண்டும் தூக்கிக் கொண்டு சென்று மெத்தையில் விட்டான்.
“நான் வர்ற வரைக்கும் பேசாம இருக்கணும்” என்று அதட்டியவன், நேராய் சென்று ஷவருக்கு அடியில் நின்றான். நீருக்கு அடியில் நின்று உணர்வுகளை அடக்கியவன், குளித்து முடித்து வர, அதுவரை பாத்ரூம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரா.
“சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” என்றான் இப்போது கனிவுடன்.
“வேண்டாம்” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“சரி அப்போ படுத்துக்கோ” என்றான். லைட்டை அமர்த்தி தானும் படுக்க, அப்போதும் அவள் அமர்ந்திருப்பதை பார்த்தவன், இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள, அவளோ நெளிந்தாள்.
“தூங்குடா” என்றவன், நெற்றியில் முத்தமிட்டு,அவளை அணைத்தபடி தட்டிக் கொடுக்க, அவன் அணைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் ஆரண்யா.