நெஞ்சம் 46

அந்தப் பெரிய வீடே விழாக் கோலம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது.

வீட்டில் ஆட்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர்.

“ டேய் மகேந்திரா என்னடா அங்க ரூமுக்குள்ள பண்ணிட்டு இருக்க? வெளில வாட ஊரு பட்ட வேளைய வைச்சுக்கிட்டு. அங்கே போய் சாப்பாடு ரெடியான்னு பாத்து கால் பண்ணு “

என்று கத்திக்கொண்டிருந்த தங்கத்தின் குரல் கேட்டு தலையை வாரிக்கொண்டிருந்த சீப்பை கீழே போட்டு தலையை போட்டு கைகளால் கலைத்தபடி

“ஆ…. தெரியாம இங்க வந்து நானே மாட்டிக்கிட்டனே. எல்லாம் இந்த மயூரி மேம் ஆல வந்திச்சி “ என்று தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான்.

எப்போதும் இந்த மாதிரி ஃபங்ஷன் என்றால் மீட்டிங் இருக்கு என்று பொய் சொல்பவனை த்ரூவ் மூலம் கையோடு அழைத்து வர வைத்து விட்டாள் மயூரி.

ஆம் மகேந்திரன் வேலை பார்த்து கொண்டிருந்தது ஜெய்யின் அலுவலகத்தில் தான் அது தான் இப்போது த்ரூவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே.

அதனாலயே வர முடியாது என்று சாக்கு சொல்லிக்கொண்டிருந்தவனை. த்ருவ் மூலமே தூக்கி வர வைத்து விட்டாள் மயூரி.

அதில் புலம்பிய படி மகேந்திரன் “ முதல்ல இந்த கம்பெனில பேப்பர் போடணும் “ என்று முனங்கிய படி திரும்பி பார்க்க இவனின் மனைவி ஆரவள்ளியை காணவில்லை

“இவ எங்க போனா இங்க தான இருந்தா எங்க பசங்கள வேற காணோம் “ என்று தேடி கொண்டு  வெளியே சென்றான்.

அங்கே ஆரவள்ளியோ வள்ளி, மீனாட்சியுடன் ஐக்கியம் ஆகி வேலை செய்து கோண்டிருக்க அதை பார்த்து நெஞ்சில் கைவைத்த மகேந்திரன்

“ எது நடக்க கூடாதுன்னு இவல இங்க வர விடாம  பண்ணோண்ணோ அது நடந்துட்டு இருக்கே….. போச்சி போச்சி இனி இங்க வரனும் அடம் பிடிப்பாலே “ என்று புலம்பி கோண்டிருந்தவனின் தோளில் விக்ரமன் கைவைத்து

“அண்ணா…. என்ன தனியா நின்னு டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க?“ என்று சிரித்தவனை பார்த்து முறைத்த மகேந்திரன்

“என்னடா என்ன பாத்தா டான்ஸ் ஆடுற மாதிரியா இருக்கு “

“நீ டான்ஸ் ஆடுறியோ இல்ல குறளி வித்தா காட்டுகிறாயோ அதை பார்த்துச் சொல்ற அளவு நான் உன் அளவு ஃப்ரீயாக இல்லை அண்ணா “

என்று சொல்லி சென்றவனை பார்த்து முறைத்து நின்றிருக்க

“என்னடா மகி… பண்ணுற அங்க மண்டபத்தில்ல உன்ன தேடிட்டு இருக்காங்க “ என்று கத்தியபடி வீரா வரவும்

“இதோ சித்தப்பா… “ என்று வேகமாக சென்றவன் “ என்ன… ஒரு பொடுசுகளையும் காணோம் “ என்று சுற்றி பார்த்தபடி மகேந்திரன் சொல்ல

“எல்லாரையும் நம்ம மயிலும் வேதாவும் பாத்துட்டு இருக்காங்க மகி”

“ஓ… அதான் இவ்வளவு சைலண்டா இருக்கா இடம் “ என்று பேசியபடி சென்றனர்.

அதேநேரம் மாடியில் அறையில் மயூரி மற்றும் வேதா குழந்தைகளை அடக்க தலையால் தண்ணி குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது வேதா “ அக்கா என்னால முடியல அக்கா …” என்று  தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட

“அச்சோ வேதா என்ன ஆச்சு என்ன பண்ணுது ஸ்டெயின் பண்ணிக்காதன்னு சொன்னா கேட்கிறாயா “ என்று அதட்டிய மயூரியை பார்த்து சோர்வாக சிரித்த வேதா

“ ஆராதனவ வச்சிட்டு நீங்க மட்டும் தனியா என்னக்கா பண்ணுவீங்க“

“அவளபத்தி பயமே இல்ல வேதா பகல் முழுக்க இடியே விழுந்தா கூட எழுந்திருக்க மாட்டா பசிக்கு மட்டும் தான் முழிச்சி கத்துவா மத்த படி பகலுக்கும் செத்து நைட் தான் நம்மல வச்சி செய்வா  “ என்று சிரித்தாள் மயூரி.

மயூரிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் மாறனுக்கு திருமணம் என்று முடிவு செய்து விட்டனர்.

முதலில் தங்கம் என்ன செய்வரோ என அனைவரும் யோசித்து தயங்க அவரோ “ எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று சிரித்தவரை அனைவரும் இதுக்கா என்பது போல தான் பார்த்து வைத்தனர் .

அதன் பிறகு அனைத்தும் ஜெட் வேகம்தான் மாறனுக்கும் நேரம் இன்றி போக ஊரில் வயல் ரிசர்ச் கல்யாண வேலை என்று இருந்தான்.

யாழினி திருமணத்திற்கு அவளின் அண்ணனாக த்ரூவ் தான் அனைத்தையும் செய்வேன் என்று வந்து நிற்க ஆர்யன் மற்றும் த்ருவ் பேசி ஒன்றாக முடிவு எடுத்து இருவரும் சேர்ந்து செய்தனர்.

திருமணத்திற்கு ஒரு மாதம் என்ற நிலையில் அடுத்த நல்ல செய்தியாக வேதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரியவர விக்ரமன் தலைகால் புரியாமல் தான் ஊரை சுற்றி வந்தான்.

இதை கேள்விப்பட்ட வீரா மற்றும் தங்கம் தான் குழம்பி போய் நின்றனர் . எப்படி இது பிடிக்காம தானே திருமணம் நடந்துச்சி என்று யோசித்து குழம்பியவர்கள் பின் அதை என்னமோ என்று கடந்து சென்று விட்டனர்.

அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி விட இன்று திருமண நாளும் வந்து சேர்ந்தது.

இங்கு மயூரி மற்றும் வேதாவை பாவமாக பார்த்திருந்த ரூத்

“அக்கா… வேணும்னா… நான்… நான் பசங்கள கிளப்பட்டா….” என்று ஒரு வழியாக நினைத்ததை தடுமாற்றத்துடன்  பேசி முடித்தவள் .

ஒரு பயம் கலந்த பார்வையை தர “ அட ரூத் ஏன் இப்படி பயப்படுற எங்கள பாத்து நாங்க என்ன கடிச்சா சாப்பிடப் போறோம் “ என்று வேதா சிரிக்க

அதற்கு ரூத் கடினப்பட்டு உள்ளே எழும் பயத்தை தலையில் தட்டி அனுப்பி விட்டு சிரிக்க முயன்றாள். எங்கே அவள் முகத்தில் இருந்த வியர்வையை பார்த்தே மயூரி அவள் பயத்தை புரிந்து கொண்டு.

“இங்க வா… ரூத் “ என்று அழைத்ததும் அவள் அருகே சென்று அட்டென்ஸனில் நிற்க, அவள் நின்ற விதத்தில் சிரிப்பு வர சிரித்த படி அவளை அருகில் அமர வைத்தவள்

“நீ என்ன பண்ணிட்டு இருக்க ரூத் “

“நானா.. நானு.. காலேஜ் படிக்கிறேன் செகண்ட் இயர் பிசிக்ஸ்…க்கா ” மயூரி முகம் பார்க்க தயங்கி கண்களை அலையவிட்டு படி அவள் பேசினாள்.

“காலேஜ் படிக்கிறியா உனக்கும் ஸ்டெல்லாவுக்கும் எத்தனை வயது வித்தியாசம் ரூத் “ என்று அதிர்ந்து மயூரி கேட்க

“பத்து வயசு க்கா நான் பிறந்து கொஞ்ச நாள்ல அம்மா இறந்துட்டாங்க பாட்டி தாத்தா தான் வளர்த்தாங்க “

என்று ரூத் சொன்னதை கேட்டு அவள் தலையை வருடிய மயூரி “ ஏன் இவ்ளோ பயப்படுற உங்க அக்கா பார்த்திருக்கிறாயா எத்தனை பேரு வந்தாலும் தைரியமா இருப்பா அந்த மாதிரி இருக்க வேணாமா “

அதற்கு ரூத் தலையை மேலும் கீழும் ஆட்டி வைக்க வேதா “ பாக்க க்யூட்டா பொம்மை மாதிரி இருக்க ரூத் “ என்று அவள் கன்னம் கிள்ள ரூத் முகம் சிவந்து சிரித்த படி

“நான் பசங்களை ரெடி பண்ணட்டுமா க்கா “ என்று இம்முறை அவள் வார்த்தைகள் தெளிவாக வந்து விழ மயூரியும் தலை அசைத்து அவளை அனுப்பி வைத்தாள்.

ரூத் அவர்களை கிளப்பி முடிக்கவும் இவர்களை அழைக்க மேலே விக்ரமன் வரவும் சரியாக இருக்க அவன் பின்னாலேயே ஸ்டெல்லாவும்  புடவையை பிடிக்க முடியாமல் பிடித்து கொண்டு தங்கையை தேடி வந்து விட்டாள்.

ரூத்தும் அக்காவை பார்த்து வேகமாக அவள் கையை பிடித்து கொண்டாள். அதன் பின் வீடு செல்லும் வரையும் ரூத்தை அவள் அருகிலேயே வைத்துக்கொண்டாள் ஸ்டெல்லா.

பின் அனைவரும் கிளம்பி மண்டபம் சென்றனர்.

அங்கே வேதாவை ஒரிடத்தில் அமர வைத்து ஜூஸை மிரட்டி குடிக்க வைத்து நிமிர்ந்தவன் கண்ணில் த்ரூவ் வில அவன் அருகே சென்று தோளை இடித்த விக்ரமன்

“என்ன ப்ரோ நீங்க எப்போ குட் நியூஸ் சொல்லப்போறீங்க”

“இப்போ அது தான்டா ரொம்ப முக்கியம் “ என்று த்ரூவ் அழுத்துகொள்ள

“பின்னே முக்கியம் இல்லாம எங்க சீனியர் நீங்க இருக்கும் போது நாங்க இப்படி மிங்கிளா சுத்துராத பார்க்கும் போது மனசு வலிக்குது ப்ரோ “

“அவ்ளோ அக்கறை இருக்குறவன் சீனியருக்காக வெயிட் பண்ணிருக்கனும் டா “ என்று பேசியபடி அவன் அம்மாவை திரும்பி பார்த்துக்கொண்டான்.

அங்கே அமுதா  அனைவரிடமும் நன்றாக சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார் அதில் மனம் நிம்மதியாக விக்ரமன் பேசியதை கேட்க தொடங்கினான்.

“ ப்ரோ உங்களுக்கு அறுபதே ஆனாலும் இருபது ன்னு தான் ப்ரோ சொல்லுவாங்க. அப்படி ஃபிட்டா இருக்கிங்க ப்ரோ.

ஆனா என்ன பாருங்க முப்பது கூட ஆகல அதுக்குள்ள ஊருல பாதி பேரு அங்கிள் அங்கிள் தான் கூப்பிடுறாங்க. எதோ என் வேதாளம் பாவம் பட்டு வாழ்க்கைய தந்துருக்கா அத விட முடியுமா ப்ரோ “ என்ற விக்ரமனை மேலிருந்து கீழே பார்த்தவன்.

“ என்ன என்னலாம் ரீல் சுத்துறா பாரு “ என்று எண்ணியபடி தலையசைத்து வைத்தாவின் பார்வையோ அங்கே நின்று கொண்டிருந்த ஸ்டெல்லாவில் பட்டு திரும்பியது.

அங்கே ஸ்டெல்லாவோ ரூத் கையைப் பிடித்தபடி அதித்தி ஆர்யன் அருகே நின்றிருந்தாள். இது வரை புடவையே கட்டியிராதவள்  இடுப்பில் புடவை நிற்பேனா என்று ஆட்டாம் காட்ட.

 அதை ஒரு கையில் இழுத்தபடி மற்றொரு கையில் ரூத்தை பிடித்தபடி தவித்து கொண்டு நிற்பவளை அடிக்கடி கண்களாலேயே ஒருவன் களவாடி கொண்டிருந்தான்.

மயூரி ஆசையாக புடவை வாங்கி இதை தான் கட்ட வேண்டும் என்று அவள் சொல்லியிருக்க அதை மறுக்க மனம் இன்றி கட்டியது தான் தவறாக போய் விட்டது.

 வாய்க்குள் “ இன்னொரு தடவ வாழ்க்கையிலே இந்த புடவைய கட்ட கூடாதுடா “ என்று முனங்கிய படி தான் இருந்தாள்.  இவை அனைத்தையும் உதட்டில் தவலும் புன்னகையுடன் த்ரூவ் ரசித்து கொண்டிருந்தான்.

அங்கே மேடையில் அனைத்து சாங்கியமும் நடந்து கொண்டிருக்க ஐயர் “ பொண்ண கூட்டிட்டு வாங்கோ….” என்று சொல்லிவிட அதித்தி மயூரி இருவரும் சேர்ந்து  தான் யாழினியை அழைத்து கொண்டு வந்தானர்.

யாழினியை பார்த்த மாறன் கண் இமைக்க மறந்து பார்த்தான், பார்த்தான், பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.

அந்த சிவப்பு வர்ண புடவையில் செங்காந்தள் மலரென வந்து அமர்ந்தவளை எத்தனை நேரம் பார்த்திருந்தான் என்று தெரியவில்லை பின் ஐயரின் அழைப்பில் தான் சுயம் வந்து மந்திரங்கள் சொல்ல தொடங்கினான்.

இங்கு யாழினியோ தலை குனிந்தபடியே அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். நிமிர்ந்து மாறனை பார்ப்பேனா என்பது போல தான் செய்து கொண்டிருந்தாள். மாறனுக்கு அவள் முகத்தை காட்டாது முடிந்த வரை தலையை குனிந்தபடி இருந்தாள்.

பின் கோபம் இருக்காத திருமணம் முடிவு ஆன பிறகு நேரில் வந்து ஒரு முறை பேசினான? நிச்சயதார்த்தம் அன்று பார்த்தது அப்போது கூட கண்களால் தங்கத்தை காட்டி விட்டு பேசாமல் சென்றவன் ஆயிற்றே.

 அந்த கோபத்திலேயே இன்று வரை மாறனின் போன் அழைப்பை கூட எடுக்காமல் போக்கி காமித்து கொண்டிருக்கிறாள்.

இப்படி யாழினி நினைத்தபடி தலையை குனிந்தபடியே இருக்க மாறன் எப்போது தாலி ஐயரிடம் இருந்து வாங்கினான் எப்போது அதை அவளின் கழுத்தில் சுற்றி கட்டினான் என்று புரியாமல் அவள் கழுத்தில் இருந்த தாலியை பேந்த பேந்த முழித்திருந்தவள் காதில்

“யாழ்…” என்று மாறன் குரல் கேட்டு எதோ யோசனையில் அவள் நிமிர்ந்து பார்க்க மாறன் அவள் வகுட்டில் குங்குமம் வைத்து

“ ஐ லவ் யூ யாழ் “  என்று அழகான சிரிப்புடன் கூறினான்.

பின் அவன் அவளின் கன்னம் தாங்கி நெற்றியில் இதழ் பதித்து விலகினான் யாழினியின் மாறன்.

மாறனின் செயலில் தங்கம் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து பார்க்க மீனாட்சி

“ என்னடி இது….” என்று வாயை பிளந்தார் என்றாள் விக்ரமன் “ சூப்பர் மாறா…. என்ஜாய் “ என்று கத்தியபடி பப்பர் பட்டாசு வைத்து ஒரு வழி செய்திருந்தான் .

இதில் அதிராமல் சிரிப்புடன் பார்த்திருந்தது நம் வள்ளி மட்டுமே அவரை பார்த்து மஞ்சு “என்ன சித்தி நீங்க ஷாக் ஆகல “

“நான் என் மஞ்சு ஷாக் ஆகணும் எனக்கு தான் என் பையன் பண்ணின  கேடித்தனம் தெரியுமே “ என்று சொன்னவர் பதிலில் மஞ்சுக்கு தான் ஷாக்கே.

மாறன்  இத்தனை நாள் தன்னிடம் காதலை சொல்ல வில்லையென்ற ஏக்கம் இருந்தாலும் அதை காட்டாமல்தான் இருந்தாள். அதான் திருமணமே ஆக போகிறதே என்று இருந்தும் மனதில் ஒரு வித எதிர்பார்ப்புடனேயே தான் இருந்தாள் யாழினி.

அவர் எதிர்பார்த்தது போல மாறன் இவளிடம் காதல் சொல்லி விட முகம் மகிழ்ந்து புன்னகை முகமாக கண்கள் கலங்கிய யாழினி

“ ஐ லவ் யூ மாறன் “ என்று பதில் அளித்தபடி இருவரும் நெற்றி முட்டி சிரிக்க அது அழகாக நிழற்படமாக ஆக்கப்பட்டிருந்தது.

                                    முற்றும்.