நெஞ்சம் 45

ஊரில் தனியாக இருந்து பைத்தியம் பிடிப்பது போல ஆகி விட்டது தங்கத்திற்கு. அந்த பெரிய வீட்டில் தனி ஆளாக நின்று சுற்றிப் பார்த்தவர் தலை வெடிப்பது போல வலிக்க தலை வலி மாத்திரை போட்டு மதியம் சாப்பிட கூட மறந்து படுத்து விட்டார்.

படுத்தவர் கனவில் அவர் ஏங்கும் அனைத்தும் வந்தது. மனைவி மீனாட்சி, மகள் மஞ்சு, தம்பி வீரா, அவனின் மனைவி வள்ளி என்று அனைவரும் வீட்டில் இருப்பது போல கனவு வர அதை முகத்தில் அரும்பிய புன்னகையுடன் கண்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கரிய புகை போல வந்த பல உருவம் அனைவரையும் அடித்து தூக்கி செல்வதை பார்த்து பயந்து “ஏ…. எல்லாரையும் விடு…. யாருடா நீங்க….” என்று கத்தியபடி வெளியே செல்ல அங்கே தரைக்கு பதிலாக கருநிற கடல் பரந்து விரிந்து இருந்தது.

இந்த கரிய புகை அந்த கரும் கடலுக்குள் அனைவரையும் இழுத்து செல்ல “ மீனாட்சி….“என்று கத்திகொண்டு எழுந்தமர்ந்தார் தங்கம்.

“ என்னது இது நமக்கு எப்பவும் இப்படி கனவு வராதே “ என்று முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தவர் இதயம் வேகமாக துடிக்க அருகில் இருந்த மேசையில் இருந்து தண்ணீரை எடுத்தார்.

அப்போது அவர் கை பட்டு அவரின் கைப்பேசி உடைந்து நொருங்க தலையில் கைவைத்த படி அமர்ந்து விட்டார்.

இப்போது அனைவரையும் பார்க்க வேண்டும் போல தோன்றியது. தொன்றிய மறுநொடி வேகமாக கீழே இருந்த போனை ஆன் செய்ய பார்க்க அது எப்போதோ அதன் உயிரை விட்டிருந்தது.

இப்போது எப்படி அனைவரையும் அழைக்க போன் உடைந்து போயிருக்க யாரின் நம்பரும் இவருக்கு தெரியாது மீனாட்சி தான் எதோ நோட்டில் எழுதி வைத்திருப்பாள்.

அது நினைவு வந்த மறுநிமிடம் அந்த நோட்டை தேட அது கிடைக்கவில்லை அதற்கு பதில் மயூரியின் விசிட்டிங் கார்டு தான் கிடைத்தது.

அதை வெறித்து பார்த்தபடி ஹாலில் தங்கம் அமர்ந்திருக்க

“ அப்பா….. என்ன நீங்க மட்டும் இருக்கீங்க எங்க அம்மா தங்கச்சி யாரையும் காணோம் “

என்று வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்த மகேந்திரனை முறைத்த தங்கம் “ சாவுக்கு கூப்பிட்டா பாலுக்கு வருவியாடா…”  என்று எரிந்துவில

“அப்பா… அது வந்து வேலை கொஞ்சம் அதிகம் ப்பா…” என்று நெலிந்தவனை மேலும் கீழும் பார்த்தவர்

“என்ன மூஞ்சியெல்லாம் அங்க அங்க திட்டு திட்டா வெள்ளையா அசிங்கமா இருக்கு “ என்று முகத்தை சுளித்தவரை பார்த்து தலையில் அடித்துக்கொள்ள தான் தோன்றியது.

பின் எவ்வளவு காசு செலவழித்திருப்பான் இந்த அளவு முகம் வெள்ளையாக மாறா அதை இவரிடம் சொன்னால் புரிஞ்சுப்பாரா என்ன.

“நம்ம ஊர் கலர் தான்டா அழகு அத விட்டுட்டு வெள்ள வெளேர்னு அசிங்கமா “ என்று சொல்லிவிட்டு செல்பவரிடம் சிரித்து வைத்து சமாளித்தான்.

மமகேந்திரனக்கு இந்த கிரமம் நம்ம ஊரு இது எதுவும் பிடிக்காது. சிறுவயதில் இருந்தே சென்னைக்கு போக வேண்டும் அங்கேயே இருக்க வேண்டும் என்று ஆசையில் தான் வளர்ந்தான்.

அதே போல வளர்ந்ததும் சென்னையில் வேலைக்கு சேர்ந்து இப்போது முழு சென்னை வாசியாகவே மாறிவிட்டிருந்தான்.

“ஆமா எங்க மருமகளும், உன் புள்ளைங்களும்”

“ அது எப்பாவது தான் ஊருக்கு வரோம். அதான் அவ அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்னு போயிருக்கா. அங்க இருந்து உடனே வந்துருவா ப்பா. உம்மா பாக்க தான் போய்யிருக்க “ என்று கேவலமாக சமாளித்தவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு அந்த காடையே வெறித்தவர்.

பின் யோசனை வந்தவராக “ இந்த காடு இருக்க இடம் உனக்கு தெரியுமா டா “ என்று மகேந்திரனிடம் நீட்ட,

அதை வாங்கி பார்த்த மகேந்திரன் புருவத்தை நெறித்து யோசித்தபடி “ இந்த காடு உங்க கிட்ட எப்படி ப்பா “

“ அது நம்ம மயிலு இருக்கால அவளோடது தான் ப்பா “

“என்னது மயிலோடதா ? இதுல மயூரின்னு போட்டுறுக்கு “

“அது தான் மயிலோட இன்னொரு பேரு ப்பா “

“என்னது மயூரி மேடம் என் தங்கச்சியா “ என்று இவன் நெஞ்சில் கைவைக்க

“ என்ன மேடம்னு சொல்லிட்டு இருக்க உனக்கு அவ வீடு சென்னையில தெரியுமா தெரியாதா  “

“அப்பா அவுங்க ஃபிரண்டு கம்பெனில தான் நான் வேலை பார்க்கிறேன் ப்பா “

“அப்படியா அப்போ உனக்கு மயில் வீடு தெரியுமா “

“ம்ம்ம் ஏரியா தெரியும் வீடு கூட வர்க் பண்றவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க “

“அப்போ வா என்ன உடனே அங்க கூட்டிட்டு போ “

“என்ன உடனேவா… அப்பா இப்போ தான் சென்னையில இருந்து இங்க வந்திருக்கிறேன் திருப்பி உடனே சென்னைனா டயடா இருக்கு ப்பா..”

“ உன்ன கூட்டிட்டு போறியான்னு கேக்கல கூட்டிட்டு போன்னு சொல்றன். ஒழுங்கா நான் போருமையா சொல்றப்போவே கூட்டிட்டு போ “

“இதுக்கு தான் நான் இங்க வரவே யோசிச்சன்.” என்று முனங்கிய படி அன்று இரவே மகேந்திரனுடன் சென்னைக்கு தனியாக தங்கம் கிளம்பி இருந்தார்.

“ கண்ணே களை மானே கண்ணிரண்டில் கண்டேன் உனை நானே….”

என்று பாட்டை கேட்டு கொண்டே வாயில் இளநீர் வழுக்கையை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் மயூரி.

ஹாலில் இவள் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருக்க உள்ளே ஆர்யனோ லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த மயூரி எழுந்து கழிப்பறை சென்று வந்தவள் “ என்ன காலைல இருந்து இத்தன வாட்டி போய்டு வந்துடோம் தண்ணி ரொம்ப குடிச்சிடோமா என்ன “ என்று யோசித்தவள்

“டெலிவரிக்கு இரண்டு வாரம் தான் இருக்கு நல்ல தண்ணி குடிங்கன்னு டாக்டர் தான சொன்னாங்க “ என்று தலையில் தட்டி யோசித்தவளுக்கு மீண்டும் பாத்ரூம் செல்ல வேண்டும் போல் இருக்க

“ப்ச் என்ன இது…” என்று முனங்கிய படி வேகமாக எழுந்தவளுக்கு அடி வயிற்றில் சுருக்கென்று வலி எடுக்க வயிற்றை பிடித்தபடி அப்படியே அமர்ந்தவள்.

“ஆரி……வலிக்குது ஆரி…” என்று சத்தமாக கத்தியவள் குரல் கேட்டு என்னமோ எதோ என்று பயந்து போய் ஆர்யன் வர

“என்ன ஆச்சி மயிலு …” என்று வந்தவன் மயூரியின் நிலை பார்த்து “ அச்சோ மயிலு…” என்று அவள் அருகே வந்து அவளை பிடித்து எழ வைத்தவன்.

 “பயப்படாத மயிலு ஒன்னுமில்லை இதோ இப்போ ஆஸ்பத்திரி போய்டலாம் “ என்று சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறக்க அங்கே நின்றிருந்தவரை பார்த்து அதிர்ந்தவனாக.

“நீங்களா…” என்று அவன் அங்கு வந்து நின்ற தங்கத்தையும் மகேந்திரனையும் பார்த்து அதிர

மயூரியை அந்த நிலையில் பார்த்த தங்கம் “ அச்சோ புள்ள என்ன ஆச்சு தம்பி மயிலுக்கு “

“வலி வந்துடுச்சி மயிலுக்கு…”

“என்ன நீங்க மட்டும் தான் இருக்கீங்கள கூட வள்ளி மீனாட்சி எங்க “ என்று அவர் கேள்வியால் துலைக்க மயூரி வலியில் “ அம்மா….” என்று கத்தவும் தான்

“ அப்புறம் பேசுவோம் வாங்க தம்பி “ என்று மயூரியின் மறுபக்கம் வந்து அவர் தாங்கி பிடித்து கொள்ள. ஆர்யன் கையில் இருந்த சாவியுடன் திரும்பி கதவை பார்க்க,  தங்கம்

“அடேய் சும்மா தான இருக்க தம்பி கிட்ட சாவி வாங்கி அந்த கதவை பூட்டிட்டு சீக்கிரம் வாடா…” என்று அதட்டி விட்டு இவர்களை கீழே அழைத்து சென்றார்.

கீழே ஆர்யன் கார் ஓட்ட ஏற போனவனை அதட்டி பின் சீட்டில் மயூரி உடன் அமர வைத்து விட்டு மகேர்திரனை கார் ஓட்ட சொல்லி அமர்ந்தார் தங்கம்.

பின் நால்வருமாக ஆஸ்பத்திரி செல்ல காரில் பின் புறம் திரும்பிய தங்கம் “புள்ள தாய்ச்சுப் பிள்ளையை தனியா விட்டுட்டு எங்க தம்பி போனாங்க எல்லாம் “

“அது வந்து பீச்….. நாங்க தான் போய் பார்த்துட்டு வரச் சொன்னோம் “ என்னு சாமிளிப்பை கேட்காத தங்கம்

“ பீச் என்ன நாலைக்கே பறந்தா போயிடவா போது அப்படி அவசரமா இன்னைக்கே போகணும்னு என்ன “ என்று மகேந்திரன் புறம் திரும்பியவர் .

“எங்க உன் போணு “ என்று அவன் போனை வாங்கி அதில் மாறன் எண்ணிற்கு போட்டு காதில் வைத்தார்.

மாறன் போனை எடுத்தது தான் தாமதம் வார்த்தைகள் மானவாரியாக வந்து விழ அங்கே மாறன் குழம்பிப்போய் நின்று விட்டான்.

“ என்னடா நினைச்சிட்டு இருக்கிங்க எல்லாம் பிள்ளையைப் பார்க்க தானடா இங்க கிளம்பி வந்திங்க. அவள பாக்குறத விட்டுட்டு என்னத்தா பார்க்க போயிருக்கீங்க “

“அது பெரியப்பா…. மெரினா தான் வந்தோம் அக்கா சொல்லி தான் வந்தோம் “ என்று மாறன் ஒருபுறம் புரியாமல் பேச

“புள்ள ஏதாவது சொல்ல தான் செய்யும் அதுக்கு விட்டு போவீங்களாடா. இப்போ புள்ளைக்கு வலி வந்துடுச்சி பாரு “

“ என்ன பெரியப்பா சொல்றிங்க “ என்று மாறன் அதிர்ந்து பேச

“மயில் புள்ளைக்கு வலி எடுத்துக்கிச்சிடா மாறா எல்லாரையும் கூட்டிட்டு அவ பாக்குற ஆஸ்பத்திரிக்கு வந்துருங்க “ என்று போனை வைத்து விட மாறனுக்கு சிறிது நேரம் திகைப்பில் ஒன்றும் புரியாமல் நின்றவன்.

பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டல் வந்து சேரும் முன் மயூரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது.

குழந்தையை கண்கள் கலங்க சிரித்த முகமாக வாங்கியவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆர்யன் கையில் இருந்த குழந்தையை பார்த்த தங்கம் “ அப்படியே பொம்மா மாதிரி இருக்கா மருமகனே “ என்று குழந்தை விரலை பிடித்தவரின் வீம்பு கோபம் கௌரவம் என்று அனைத்தையும் அடித்து துரத்தி விட்டு பிறந்திருந்தாள் அந்த குட்டி தேவதை.