அவர்கள் கிளம்பி சென்றதும் அவளுக்கு என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாள் ஆரண்யா.

நாள் முழுவதும் கடையில் வேலை செய்து பழக்கப்பட்டவளுக்கு இப்படி சும்மாவே இருப்பது எரிச்சலைக் கிளப்பியது. செய்வதற்கு வேலையும் இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் அந்த வீட்டில் ஆள் இருக்க, நொந்து போனாள்.

‘எப்படித்தான் சும்மாவே இருக்காங்களோ’ என்று நினைக்காமல் இல்லை.

“என்னம்மா ஆரண்யா? ஏன் என்னவோ மாதிரி இருக்க? அம்மா அப்பா கிளம்பினது வருத்தமா இருக்கா?” என்று சிவகாமி கேட்க,

“இல்ல ஆன்ட்டி. சும்மாவே இருக்க போர் அடிக்குது.” என்றாள்.

“இந்த தேவ் எங்க?” என்று அவர் சுற்றும் முற்றும் பார்க்க,

“அவர் முக்கியமான கால் பேசிட்டு வர்றேன்னு போயிருக்கார் ஆன்ட்டி” என்றாள்.

“அப்போ நீயும் போய் ரெஸ்ட் எடும்மா. எனக்கு பழகிடுச்சு. உனக்கும் போக போக பழகிடும். இல்ல வெளிய எங்கையாவது போயிட்டு வர்றீங்களா? நான் தேவ் கிட்ட சொல்லவா?” என்றார் ஆதுரமாய்.

‘வேற வினையே வேண்டாம்’ என்று நினைத்தவள்,

“இல்ல வேண்டாம் ஆன்ட்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவகாமியின் அருகில் வந்து அமர்ந்தான் யாதவன்.

“என்னம்மா புது மருமகளோட கடலை போட்டுட்டு இருக்கிங்களா?” என்றான் சிரிப்புடன்.

“கடலை போடுற வயசாப்பா எனக்கு?உனக்கும் உன் தம்பிக்கும் தான் என்கிட்டே பேச நேரமில்லை. இப்பத்தான் ஆரண்யா வந்திருக்கா. அதான் பேசிட்டு இருக்கேன்” என்றார்.

“பேசுங்க பேசுங்க..! ஆரண்யாவும் நல்லா கம்பெனி குடுப்பாங்க போல இருக்கே”  என்றான் இரட்டை அர்த்தத்துடன்.

அவன் பேச்சியில் ஏதோ இருப்பதாகப் பட்டது அவளுக்கு.

‘நீ தேவையில்லாம யோசிக்கிற ஆரா. எதார்த்தமா பேசுறது கூட வர வர உனக்குத் தப்பா தெரியுது’ என்று ஒரு மனம் அவளிடம் சொல்ல, அதை அப்படியே விட்டுவிட்டாள்.

“ஆரண்யா.. நான் அன்னைக்கு சொன்ன விஷயத்தை பத்தி யோசிச்சிங்களா? என் கதையோட ஹீரோயின் ரோல்க்கு நீங்க ஆப்ட்டா இருப்பிங்க. இது நல்ல சான்ஸ்” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே.

“சாரிங்க..! எனக்கு நடிக்கிறதுல எப்பவுமே ஆர்வம் இருந்ததில்லை” என்றாள் ஆரண்யா.

“டேய் யாதவா? இந்த வேலை எல்லாம் உன் பொண்டாட்டியோட வச்சுக்கணும். ஆராவே சரின்னு சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார் சிவகாமி.

“அம்மா இந்த பொண்ணுக்கு பிரைட் ப்யூச்சர் இருக்கு” என்றான் யாதவ் விடாமல்.

“அந்த பிரைட் ப்யூச்சரை  என்னால குடுக்க முடியும். என் வொய்ப்  நடிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை” என்ற சத்ய தேவ்வின் குரலில் திரும்பினான் யாதவன்.

“தேவ் நான் என்ன சொல்ல வரேன்னா?” என்று அவன் பேசத் துவங்க,

“ஒன்னும் சொல்ல வேண்டாண்ணா! அவளுக்கு பிடிக்கலைன்னா விட்ருங்க. நடிச்சே ஆகணும்னு கட்டாயப்படுத்துற மாதிரி இருக்கு. இந்த பேச்சை இதோட விடுங்க.” என்றவனின் குரலில் இருந்த கடுமையில் அமைதியானான் யாதவன்.

அதற்குள் யுவன் அழைத்திருந்தான் தேவ்விற்கு.

“சார் காஸ்ட்யூம் டிசைனர் ரக்சனா உங்களைப் பார்க்க வந்திருக்காங்க” என்று சொல்ல,

“வர சொல்லு யுவன். நான் தான் வர சொல்லியிருந்தேன்” என்றான் தேவ்.

சொந்த வீட்டிற்குள் வருபவளைப் போல் வந்தவளை, விழிகள் இடுங்க பார்த்தாள் ஆரா.

“ஹேய் ரக்சனா.. ஹவ் ஆர் யு” என்று யாதவன் அவளை அணைத்து வரவேற்க, அவளின் அந்த மாடர்ன் உடையில் முகம் சுளித்தாள் ஆரண்யா.

“ஐ யாம் குட் யாதவ் சார்.” என்றவளும் யாதவை அணைத்துக் கொள்ள, இதையெல்லாம் பார்க்க வேண்டுமா? என்று பார்த்திருந்தாள் ஆரா.

“ஹாய் சார்” என்றாள் தேவ் முகம் பார்த்து.

“வாங்க ரக்சனா.” என்றவன்.

“மீட் மை வொய்ப் ஆரண்யா” என்றான். சாதாரண காட்டன் புடவையில் கொள்ளை கொள்ளும் அழகில் இருந்தவளைப் பார்த்த ரக்சனாவிற்கு உள்ளுக்குள் புகைந்தது.

“தெரியும் சார்..! உங்க மேரேஜ்ல பார்த்தேனே” என்றவள்,

“ஹெலோ மேம். யாதவன் சார், தேவ் சார் இவங்களுக்கு நான்தான் காஸ்ட்யூம் டிசைனர்” என்றாள்.

“ஹெலோ!” என்று வேண்டா வெறுப்பாய் சொல்லி வைத்தாள் ஆரா.

“கம்மிங் சண்டே நம்ம இண்டஸ்ட்ரி  பார்ட்டி இருக்கு. அதுக்கு ஆராவுக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணனும்.” என்றவனை முறைத்து வைத்தாள் ஆரண்யா.

“ஷயர் சார்..! கண்டிப்பா பண்ணிடலாம். மேடம்க்கு என்ன மாதிரி அவுட் பிட் வேணும்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணிடலாம்” என்றாள். அவள் கால்மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து பேசுவது, தன்னை சீண்டுவதைப் போல் உணர்ந்தாள் ஆரண்யா.

‘அப்படி இருக்காது. ஒரு டிசனைர் அப்படி நினைக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், முகத்தில் எதையும் காட்டாது அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்திருந்த தேவ் அவளைத் தோளோடு  அணைத்துப் பிடித்திருந்தான்.

“கையை எடுங்க” என்றாள் ஆரா மெதுவாக. அவள் சொல்லவும் தான் அவன் பிடி இறுகியது.

“சொல்லுங்க மேம்..! உங்களுக்கு பார்ட்டி அவுட் பிட் பத்தி ஏதாவது ஐடியா இருக்கா?” என்றாள் ரக்சனா. உனக்கெல்லாம் அதைப் பற்றிய அறிவு ஏதாவது இருக்கா? என்பதைப் போல் இருந்தது அவள் தோரணை. இப்போது ஆராவிற்கு அது நன்றாக விளங்க, வெளி வரத் துடித்த கோபத்தை அடக்கியவள் சத்ய தேவ்வை முறைத்தாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் ரக்சனாவிடம் பேசிக் கொண்டிருக்க, ரக்சனாவோ இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்ததைப் போன்று இருந்தது ஆராவிற்கு.

இப்போது சோபாவின் பின்னால் நான்றாக சாய்ந்து அமர்ந்த ஆரா, கால்மேல் கால் போட, அவளின் கால் சத்ய தேவ்வின் மேல் பட்டது. அவளின் செயலை யாதவன் கண்ணை விரித்து பார்க்க, தேவ் அதையெல்லாம் கண்டு கொண்டானில்லை.

“அதான் கால் படுதே..! கொஞ்சம் தள்ளி உட்காருங்க தேவ்” என்றான் ஆரா.

“பட்டா பட்டுட்டு போகுது. நோ இஷ்யூஸ்” என்றான் தேவ்.

ஒரு தோரணையுடன் அமர்ந்து ரக்சனாவைப் பார்த்தவள்,

“மிஸ். ரக்சனா..! என்னோட அவுட் பிட் பத்தி நீங்க கவலைப் பட வேண்டாம். அது எப்படி இருக்கணும்னு நான் டிசைட் பண்ணிக்கிறேன் ரைட். எனக்கு பர்சனலா எந்த டிசைனரும் தேவையில்லை” என்றாள்.

“மேம் அது சார் தான்” என்ற ரக்சனாவின் குரல் இப்போது உள்ளே சென்றிருந்தது.

“அவங்க நல்லா பண்ணுவாங்க ஆரண்யா” என்றான் தேவ்.

“எனக்குத் தேவையில்லை.” என்றாள் பட்டென்று.

“ஓகே சார்..! எப்பவும் போல உங்க அவுட் பிட் மட்டும் பார்த்துக்கிறேன்” என்றார் ரக்சனா.

தேவ் பதில் சொல்லும் முன், ஆராவின் குரல் தடுத்திருந்தது.

“நோ நீட் ரக்சனா” என்ற ஆராவின் குரலில் அதிர்ந்தாள் அவள்.

“என்ன மேம் சொல்றிங்க?” என்றாள்.

“எஸ்..! அவரோட எந்த டிரசையும் நீங்க டிசைன் பண்ண வேண்டாம்னு சொல்றேன்” என்றாள்.

“மேம் ..! இத்தனை வருஷமா நான் தான் பண்றேன். அன்ட் சாரோட படங்களுக்கும் நான் தான் டிசைனர்” என்றாள் ரக்சனா சற்று எரிச்சல் கலந்த குரலில்.

“ப்ரோபஷனலா நீங்க பண்ணிக்கோங்க. ஐ டோன்ட் கேர் அபவுட் இட். பட் பர்சனல் காஸ்ட்யூம்ஸ் இனி நான் பார்த்துப்பேன். உங்க ஹெல்ப் தேவைப்படாது. நீங்க யாதவன் சாருக்கு மட்டும் பண்ணா போதும்.” என்றாள் பட்டுக் கத்தரித்தார் போல்.

“சார் மேம் இப்படி சொல்றாங்க” என்று ரக்சனா தேவ்வை பார்க்க, ஆராவையே பார்த்துக் கொண்டிருந்தவன்,

“அதான் மேடம் சொல்லிட்டாங்களே..! அவங்களே பார்த்துப்பாங்க. நீங்க அண்ணாக்கு மட்டும் டிசைன் பண்ணுங்க ரக்சனா என்றான்.

“அன்ட் ஒரு ப்ரீ அட்வைஸ் பண்ணலாமா மிஸ். ரக்சனா” என்றாள் ஆரா.

“மேம்”

“இந்த ப்ரோபஷன்ல ஆட்டிட்யூட் காட்டலாம் தப்பில்லை. அலட்டல் பிளஸ் ஆட்டிட்யூட் ரொம்ப தப்பு” என்றாள் நேர் பார்வையாய்.

“சாரி மேம்” என்றாள். அவளுக்கு அப்போதைக்கு வேறு வழியில்லை. சத்ய தேவ் மனைவியை பகைத்துக் கொள்வது,  தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடுவதைப் போல என்று அவளுக்குத் தெரியும்.

அறைக்குள் வந்தவளை கையைப் பிடித்து இழுத்தான் தேவ்.  அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி விலகியவளுக்குள் ஒரு நிமிடத்தில் நெஞ்சம் அடித்துக் கொண்டது.

“என்ன பண்ற?” என்றாள் கோபமாய்.

“தேங்க்ஸ்” என்றான்.

“எதுக்கு?” என்றாள் புரியாமல்.

“எதுக்கோ” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“இந்த தொட்டுப் பேசுற வேலையெல்லாம் வேண்டாம்.” என்றாள் எரிச்சலாய்.

“நமக்கு நேத்து தான் மேரேஜ் முடிஞ்சிருக்கு. இப்படி கும்முன்னு ஒரு பொண்டாட்டி இருந்தா எப்படி சும்மா இருக்க முடியும்? அப்படியே அவளுக்குள்ள மூழ்கி முத்தெடுக்கணும் போல இருக்கு ” என்றான் அவள் கன்னத்தை ஒரு விரலால் வருடியபடி.

“எனக்குக் கூடத்தான் கையில கட்டையை எடுக்கணும் போல இருக்கு” என்றாள் நக்கலாய்.

அவளின் நக்கலில் அவன் வாய்விட்டு சிரித்து வைக்க, அவள் ஆவென்று பார்த்திருந்தாள் அவனை.