நெஞ்சம் 43

மீனாட்சியை முறைத்துப் பார்த்த தங்கம் “ எங்கடி கிளம்புற? நீ ஒன்னும் எங்கேயும் போக வேண்டாம் “

என்று தங்கம் கூறியதை கேட்காமல் திரும்பிக்கொண்டு “ சீக்கிரமா போடு தம்பி, ட்ரெயின்னு பஸ்ஸுன்னு எது கிடச்சாலும் பரவாயில்லை “

“ நான் சொல்ல சொல்ல என்னடி பேசிட்டு இருக்க நீ எங்கயும் போக கூடாது “

“ நான்… ஏன் போக கூடாது. என் பொண்ண பார்க்க நான் போவேன் “ என்று அவருள் எழும் பயத்தை மறைத்தபடி திக்கி பேசினார் மீனாட்சி

“யாருடி உனக்கு பொண்ணு அண்ணனையே எதிர்த்து பேசுவான் அவன் பொண்ணு உனக்கு பொண்ணா “

“ உங்க அண்ணா தம்பி… பிரச்சனையில நான் வரல ங்க. நான் என் தங்கச்சி.. வள்ளி பொண்ண பாக்க போறேன் “ என்று அவர் சொல்லி முடிக்கும் முன் அவர் முடியை பிடித்து அடித்திருந்தார் தங்கம்.

எப்போதும் தன் பேச்சை கேட்டு சரி மட்டும் சொல்லும் தம்பியின் மீதான கோபம், நிமிர்ந்தே பார்க்காமல் தலைகுனிந்தே பேசும் வள்ளியின் எதிர்ப்பு என்று கோபத்தில் இருந்த தங்கம் அத்தனையும் மீனாட்சி மீது காட்டி இருந்தார்.

எப்போதும் அறைக்குள் மட்டும் கை ஓங்கும் கணவன் இன்று அனைவர் முன் முடியை பிடித்து அறைந்ததில் அவர் முகம் சிவந்து கண்ணீர் வடிய

“வலிக்குதுங்க விடுங்க ….” என்று அவரின் கையை பிடித்து கெஞ்சினார். அது எங்கே அவர் காதில் விழுந்தது

“எல்லாம் மறந்து போச்சோ…. நான் சொல்ல சொல்ல கேக்காம சென்னைக்கு போவேன் ன்னு ஆடுற”

“அப்பா….. அம்மாவை விடுங்க ப்ளீஸ் ப்பா… “ என்று மஞ்சு ஒரு புறம் கத்திக்கொண்டிருந்தாள்.

இந்த சத்தத்தில் இவர்களை பார்த்த மாறன்

“பெரியப்பா …..என்ன பண்றீங்க பெரியம்மாவ விடுங்க..” என்று தங்கம் கையைப் பிடித்து விளக்க பார்க்க அவர் பிடி இறுகியதே தவிர இலகவில்லை, வலியில் மீனாட்சி வேறு அலற

“ டேய் தங்கம் அவளை விடுடா பாவம்டா அவ “

“அண்ணா…. மதனிய விடுங்க ண்ணா…..என்ன பண்ணிட்டு இருக்கீங்க ன்னா “

என்று அனைவரும் அவரை விலக்க முயல அவரோ இம்மி அளவு அசைவேனா என்று மீனாட்சி முடியைப் பிடித்து மேலும் இழுத்து

“ போட்ட கழுதை உனக்கே இத்தனை திமிர்னா எனக்கு எத்தனை இருக்கும். போவியா சொல்லு சென்னைக்கு போக மாட்டேன்னு சொல்லுடி…. “ என்று அவர் சொல்ல சொல்ல மீனாட்சி

“ என் உயிரே போனாலும் வாயைத் திறக்க மாட்டேன் “ என்று வாயை இறுக மூடிக்கொள்ள அது தங்கத்தை மேலும் வெறியாக்கியது

“ வாயை தொறடி…” என்று மற்றொரு கையால் அவர் தாடையைப் பிடித்து அமுக்கி திறக்க செய்ய இதை பார்த்த மாறன்

“ பெரியப்பா….” என்று கத்தியபடி அவர் கையில் அழுத்தி இழுக்க அதில் அவன் நகம் அவர் கையில் பதிந்து ரத்தம் வர தொடங்கியது.

ரத்தம் வந்தும் அந்த உணர்வு இன்றி தங்கம் முடியை விடா மாட்டேன் என்று இழுக்க மாறன் அவர் இரு கையையும் பிடித்து இழுத்து ஒரு வேகத்தில் தள்ளிவிட சோபாவில் சென்று அவர் விழுந்தார்.

அதில் விழுந்தும் அவர் கோபம் தணியாமல் “ ஏய்…. என்னையே தள்ளி விடுறியாடா…” என்று கத்தியபடி மாறன் கழுத்தை பிடிக்க வர அவர் கையை தட்டிவிட்டு அவரை சோபாவில் தள்ளி விட்ட மாறன்

“ என்ன மனுஷன் நீங்க, உங்க பொண்டாட்டியைப் போட்டு இப்படி அடிக்கிறிங்க “

“ நான் அப்படி தான்டா அடிப்பேன் அவன் ஏன் பொண்டாட்டி. அவள என்ன பண்ணணும்னு நீ சொல்லாதடா நேத்து பெஞ்ச மழைல முளைச்ச காளான் நீ… என்னையே எதிர்த்து பேசுறியா “

“ச்சீ இதை சொல்லக் உங்களுக்கு வெட்கமா இல்ல.”

“நான் ஏன்டா வெட்கப்படணும் புருஷன் பேச்ச கேட்காம ஓடுவன்னு சொல்றளே என் பத்தினி போண்டாட்டி, அவ தான்டா வெட்கப்பட ணும் “

“ ஓ…. புருஷன்ற திமிருல பேசுறீங்களா பெரியப்பா. அவுங்க என்ன நீங்க வாங்குன பொம்மையா நீங்க சொல்ற மாதிரி ஆட.

புருஷன்னா யாரு தெரியுமா தான் பொண்டாட்டிய ராணி மாதிரி பாத்துக்குறவன் தான் புருஷன் இப்படி அடிமை அடிக்குறவன் இல்ல “

“ நான் என் பொண்டாட்டிய அப்படி தான்டா அடிப்பேன். இப்படி வைக்காம தூக்கி தலையில வச்சா நாலு பேரு முன்னாடி அசிங்கப்படுத்திட்டு போய்டுவா டா “

“என்ன புத்தி உங்களுது எவ்ளோ கேவலமாக யோசிக்கிறிங்க. உங்களையெல்லாம்……. திருத்தவே முடியாது “ என்றபடி மீனாட்சியை பார்த்தான் அவர் கன்னம் கன்றி தலை முடி அவிழ்ந்து அழுதபடி பாவமாக இருந்தார் மீனாட்சி.

அவர் அருகே சென்று கையை பிடித்து தூக்கியவன் “ பெரியம்மா இனி நீங்க இங்க இருக்க வேண்டாம் வாங்க “ என்று அழைத்து செல்ல

“ அவள எங்கடா கூட்டிட்டு போற”

“எங்கயோ கூட்டிட்டு போறேன் உங்களுக்கு எதுக்கு “

“அவள விடு மாறா… அவள நான் எங்கயும் விட மாட்டேன் “ என்று வேகமாக மீனாட்சி அருகே வந்தவரிடம் இருந்து மீனாட்சியை இழுத்து அவன் பின்னால் நிற்க வைத்தவன்.

“அவ்ளோ தான் மரியாதை பெரியப்பா உங்களுக்கு.

 இப்போ பெரியம்மா மேல மட்டும் உங்க கை பட்டுச்சி தூக்கி உள்ள வச்சிடுவேன் யாரு எவரு ன்லா பாத்துட்டு இருக்க மாட்டேன் பாத்துக்கொங்க “

“என்னையே மிரட்டுறியா மாறா “

“மிரட்டல நான் செய்ய போறத சொன்ன. இப்போ அமைதியா இருந்தீங்கன்னா எதுவும் பண்ணாம விட்டுருவன் இல்லன்னா நானே பெரியம்மாவ கூட்டிட்டு போய் டைவர்ஸ்ல வாங்கி கொடுத்துருவேன் பாத்துக்கோங்க “

என்று மிரட்டி விட்டு செல்லவும் தான் தங்கம் சற்று அமைதியாகவே ஆனார்.

அதன் பின் அனைவரையும் அங்கிருந்து பழைய வீட்டுக்கே கூட்டி சென்று விட்டான்.

அனைவரும் சென்றபின் தங்கம் கோபத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்த படி “ மீனாட்சி…..” என்று கத்திக்கொண்டே தான் இருந்தார்.

பழைய வீட்டில் மீனாட்சி அழுத படி இருக்க அவர் கையை பிடித்து கொண்டு மஞ்சுவும் அழுது கொண்டு “ அம்மா அழாத ம்மா…” என்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அதை பார்த்த வீரா “ மன்னிச்சிருங்க மதனி அண்ணா இப்படி உங்கள அடிப்பாங்கன்னு நினைக்கல.

அண்ணா இப்படிலாம் பண்ண மாட்டான் எதோ இன்னைக்கு என் மேல இருந்த கோபத்துல தான் இப்படி பண்ணிட்டான் போல “

“ஆமா தம்பி உங்க அண்ணா எப்பவும் எல்லார் முன்னாடியும் இப்படி அடிக்க மாட்டார் தான்.

எப்பவும் ரூம்ல அடிக்கிறவர் இன்னைக்கு மாத்தி எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டார் “ என்று விரக்தியாக பேச

“என்ன மதனி சொல்றிங்க அண்ணா எப்பவும் உங்கள அடிப்பாறா “

“ அமா தம்பி அவருக்கு நான் சின்னதா எதாவது அவரை எதிர்த்து பேசினா போதும் கோபம் அப்படி வரும். அது அவருக்கு பிடிக்காது அப்போலாம் ஞாபகம் வச்சி ரூம்ல போட்டு அடிப்பார் “

“ என்ன மனுஷன் அவர் இப்படி இருக்காரு “ என்று வள்ளி முகத்தை சுளிக்க

“எல்லாம் அவங்க அப்பாவ பாத்து கத்துக்கிட்டது ம்மா. சின்ன வயசுல அவன் அப்பா அவன் முன்னாடி தான் என்ன போட்டு அடிப்பாரு அதை பாத்து வளர்ந்தவன் அவர் மாதிரியே வந்து நிக்குறான்”

“ உங்க பையன சொன்னதும் சமாளிக்காதீங்க பாட்டி. எங்க அப்பாவும் அப்போ அதை பாத்து தான வளர்ந்திருக்கணும் அவர் சரியா தான இப்போ இருக்காரு.

எங்க அப்பா அங்க அம்மா மேல கை வச்சி நான் பார்த்ததே இல்லையே “ என்று மாறன் பேச்சை கேட்டு வீரா

“அப்பா உன்ன அடிச்சி நான் பார்த்ததே இல்லையே ம்மா “

“அது நீ கைக்குழந்தையா இருக்கும் போது தங்கம் ஒருமுறை என்ன கை ஓங்கி அடிக்க வந்துட்டான். அதை பார்த்து உங்க அப்பா அவன அடிச்சி கேட்டப்போ அவன்

‘ நீ மட்டும் அம்மாவ அடிக்கிற ப்பா…. அதே மாதிரி தான் நானும் அடிச்சேன் அதுல என்ன தப்பு இருக்கு ‘ன்னு கேட்டான். இத்தனைக்கும் அவனுக்கு அப்போ ஆறு வயசு தான்”

“என்னது ஆறு வயசுலயா..” என்ற மஞ்சுவை பார்த்து

“ஆமா ஆறு வயசுல அவனுக்கு பிடிச்ச ஆட்டை நான் வித்துட்டன்னு கட்டைய தூக்கிட்டு அடிக்க வந்தவன். அதுல இருந்து தான் உங்க தாத்தா என்ன அவர் பசங்க முன்னாடி அடிக்க மாட்டாரு. அதலாம் பாத்து வளந்து தான் இவன் இப்படி இருக்கான்”

“அப்போ அப்பா அதை பாத்து தான் இப்போ அம்மாவ அடிச்சாங்கள பாட்டி “

“அது மட்டும் காரணம் இல்ல மஞ்சு. பொண்டாட்டினாலே புருஷன் சொல்றத கேட்டு வீட்டொடு ஒதுங்கி இருக்கணும் தானே இங்க எல்லாம் சொல்லி வழக்குறாங்க.

என்ன தான் பொண்ணு பட்டம் படிச்சி பேரு வாங்கினாலும் பையன் மாதிரி வருமான்னு சொல்லியே அவனுங்களுக்கு கொம்ப நம்மளே வங்சி விட்டுறோம் அதோட விளைவு இப்படி பொண்ணுங்கள வீட்டுல இருக்க ஆடம்பர பொருளா ஆக்கி வைக்குறாங்க.”

என்று பேசிய மாறனை கண் கலங்க பார்த்த வெள்ளையம்மா

 “ ஆம்பள புள்ளன்னு தலையில தூக்கி வைக்காம எல்லாரும் சமம்னு பேசுற என் பேரனை மாதிரி என் புள்ளைய வளர்த்திருந்தா இப்படி பிரச்சனை ஆகியிருக்குமா. எல்லாம் என் தப்பு என் வளர்ப்பு தான் தப்பு “ என்று தலையில் அடித்து கொண்டு வெள்ளையம்மா அழுதாள்.

“ என்ன அத்தை இப்படி பேசுறீங்க அந்த காலத்துல நீங்க தனியா என்ன பண்ணியிருப்பீங்க விடுங்க “ என்று சமாதானம் செய்தாள் வள்ளி.

இங்கு சென்னையில் மயூரி வீட்டில் தான் அனைவரும் இருந்தனர். யாழினி எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் அவளையும் கூடவே இருக்க சொல்லி விட்டாள் மயூரி.

இவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்த மறுநாளே மாறன் அனைவரையும் கூட்டி கொண்டு வந்து விட்டான். அதில் ஆனந்தமாக அதிர்ந்த மயூரி

“கூட்டிட்டு வந்துருவன்னு தெரியும் ஆனா இவ்வளோ ஸ்பீடா வருவன்னு எதிர்பார்க்கலடா தம்பி “ என்று புன்னகையுடன் அனைவரையும் வரவேற்றாள் மயூரி.

இவர்களுடன் வீராவை பார்த்து ஒரு நிமிடம் நம்ப முடியாமல் அவரை கண்கள் சிமிட்டி மயூரி பார்க்க அதில் வீரா உடைந்து மயூரி கைகளை பிடித்து கொண்டு

“அப்பாவ மன்னிச்சிரு தங்கம் அப்பா எதுவும் வேணும்னு பண்ணல த்தா “ என்று வருந்தியவரை வெறுக்க தான் முடியுமா

“அப்பா….” என்று அழைத்த மறுநிமிடமே மயூரி கையை கண்களில் ஒற்றிக்கொண்டு அழுது தீர்த்து விட்டார் வீரா.

அனைவரும் உள்ளே வந்த பிறகும் மயூரி வாசலையே பார்த்த படி இருக்க மாறன் “ பெரியப்பா வரல க்கா “

“ஏன்டா அவர் மட்டும் வரல கோபமா இருக்காரென்ன “

“நீ வேற போ க்கா. அவர் வரலயேன்னு சந்தோஷ படு, அவர் பண்ண வேலைக்கு “ என்று மாறன் பல்லை கடிக்க மயூரி என்ன என்று பார்த்தால்.