நெஞ்சம் 39

அந்தப் பெரிய மண்டபம் நிறையும் அளவு ஆட்கள் ஆண் பெண் என்று அமர்ந்து படி குசுகுசுவென்று கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவர் “ இங்க இருந்து போன பொண்ண எவனோ காப்பாத்தி தூக்கிட்டு போய் அவன் பொண்ணா வளர்த்து விட்டிருக்கான்டி “

“அட நீ தப்பா சொல்லுற, இங்க இருந்து கடத்திப் போனவன். அந்த புள்ள நகைய எடுத்துட்டு இவள ரோட்ல விட்டுட்டு போயிட்டானாம். அங்க இருந்த யாரோ அவள பாத்துட்டு ஆசிரமத்துல சேர்த்தாங்களாம்”

“யாருடி இவ அப்படி இல்ல, அந்தப் பொண்ண கடத்தி போனவன் கிட்ட இருந்து போலிஸ் காப்பாத்தி. ஒரு குடும்பத்துல சேத்துருக்கு அங்க வளத்த குடும்பத்துல தான் இப்போ கட்டி வச்சிருக்காங்க “

என்று பல கதைகள் ஓடிக்கொண்டிருக்க இவற்றை கேட்ட படி மாறன் தோளில் கை போட்டு கொண்டு நின்ற விக்ரமன்

“ கதை கிடைக்காம எத்தன டைரக்டர் கஷ்ட பட்டுட்டு இருக்காங்க அவங்க கிட்ட இந்த குரூப் அ கூட்டிட்டு போய் விடனும் டா. எப்படி எதுவும் தெரியாமலே இத்தனை கதை போது பாரு “

“இவங்கெல்லாம் ஈற பேன் ஆக்கி பேன்னா பெருமாள் ஆக்குற கும்பள் போலடா. இத்தனை நாள் எங்க பெரியப்பா கிட்ட இருந்து தான் அக்காவ காப்பாத்தணும் பாத்தன். ஆனா இப்போ தான் புரியுது இந்த கும்பள் கிட்ட இருந்து தான் அக்காவ காப்பாத்தனும்னு “

என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வந்த வெள்ளையம்மா

“வெட்டியா என்னல பண்ணிட்டு இருக்கிங்க… போய் எதவது ஜோலியை பாருங்க “ என்று பத்தி விட்டு சென்றார்.

அப்போது திடீரென்று சல சலத்து கொண்டிருந்த மண்டபம் முழுக்க அமைதி நிலவ என்னவென்று மேடையை பார்த்தார் வெள்ளையம்மா.

அங்கே மயூரி தங்க ஜரிகை இட்ட இளசிவப்பு வண்ண பட்டு புடவையில், பட்டு வேட்டி அணிந்த ஆர்யனின் கை பிடிக்க மேடை ஏறும் அழகை பார்த்தவர்.

இவர் கண்ணே பட்டிருக்கும் என்று எண்ணியவாறாக அங்கே இருந்த படியே கைகளால் நெட்டி முறித்து விட்டு

“ என் கண்ணே பட்டுரும் போல பாக்க ராஜா ராணி போல இருக்காங்க. முடிஞ்சதும் பெரிய பூசணி வச்சி சுத்தி போடணும் ஊர் கண்ணே என் பேத்தி பேரன் மேல தான் “

என்று அந்த பெரியவர் கண் கலங்கி போய் பார்க்க அப்போது அங்கு வந்த மாறன் அவர் கன்னத்தில் இடித்து

“என்ன பாட்டி என் அக்கா மாமாவ இங்கே இருந்தே சைட் அடிக்க போரியா பாட்டி” என்று அவர் தோளோடு அனைத்து பிடித்து கேட்டான்

“டேய் என்டா பாட்டிய குமட்டுலயே குத்துற “

“ம்ம்ம் அங்க மேடையில போய் நல்ல சுத்தி சூடாக்கி உடைக்காம. இங்க இருந்து பண்ணா குத்தாம கொஞ்சவா செய்வாங்க “

“அதுவா மாறா மொதல்ல உங்க பெரியம்மா இல்ல அவ அம்மா போட்டு ஒரு பத்து பேரு போகட்டும்டா… நான் மெல்ல போய் போடுறேன் “ என்று அங்கே சேரில் அமர்ந்தவரை பார்த்து நின்ற மாறனுக்கா காரணம் தெரியாது.

பாட்டி மனதில் என்ன ஓடும் என்று நினைத்தவனாக அவர் அருகே அமர்ந்து கொண்டான். இந்த விஷயத்தில் அவரிடம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார் என்று புரிந்தவனாக அங்கேயே அமர்ந்து கொண்டான்.

அவன் அமர்ந்ததும் மறுபுறம் வந்து விக்ரமனும் அமர்ந்துவிட “ என்னாட இங்க வந்து உக்காந்துடிங்க “ என்று இவர்களை பார்க்க

“ அதெல்லாம் வேலை பாக்க அங்க ஆள் நிறையா பேர் இருக்காங்க பாட்டி “ என்று மாறன் சொல்ல

“ ஆள் இருந்தாலும்…நம்ம நிக்குற மாதிரி ஆகுமாடா “

“பாட்டி…. அதெல்லாம் பெரியப்பா நிக்குறார் அவர் பாத்துப்பாரு “

“ஏன்டா அவன் இங்க வர மாட்டேன்னு சொல்லிடானா “

அதற்கு ஆமாம் என்பது போல மாறன் தலை அசைக்கவும் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறாக வேறு எதுவும் பேச வில்லை.

என்ன தான் அனைத்தையும் ஏற்றுக் கொண்டாலும் இவர்கள் உடன் நின்று இதை எல்லாம் பார்க்க தங்கத்திற்கு மனம் இல்லை அதை உணர்ந்தே யாரும் அவரை கட்டாய படுத்து அழைக்கவில்லை.

அங்கு மேடையில் மயூரி உடன் ஆர்யனயும் அமர வைத்து இருவருக்குமாக சேர்த்து சந்தனம் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மீனாட்சி தான் தொடங்கி வைத்தார்.

அவரை தொடர்ந்து வள்ளி அதித்தி லட்சுமி என்று நெருங்கிய குடும்ப ஆட்கள் வைத்து முடிக்க ஊர் மக்கள் ஒவ்வொருவராக மயூரிக்கு வளையல் பூட்டினர்.

ஒவ்வொருவராக வரும் போதும் “ நல்ல படியா வந்தியே சந்தோஷமா “ என்று பலர் சொல்லி சென்றாலும்

“ இத்தன நாள் கழிச்சி தான் நினைப்பு வந்திச்சா . கட்டுனது தான் கட்டுன நம்ம பையலுங்கல்ல யாரயாவது கட்ட வேணாமா “

என்று முதல் பாதியை சத்தமாகவும் மறு பாதியை மெல்லமாகாவும்  என்று சிலர் பேசிய படி தான் வைத்து சென்றனர்.

இவற்றை எல்லாம் பார்த்த மயூரி “ என்ன இப்படி பேசிட்டு போறாங்க “ என்று நினைத்துக் கொண்டாவல் பின் ஊர் மக்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று விட்டு விட்டாள்.

இப்படி அனைவரும் வைத்து முடித்த பின் தான் வெள்ளையம்மா மாறன் விக்ரமன் மேடை ஏறினர்.

வெள்ளையம்மா கை நிறைய சந்தனம் எடுத்து இருவரின் கன்னத்திலும் தடவி பூ போட்டு ஆசீர்வதித்தவர்.

 அவர் புடவை முந்தானையை இடுப்பில் இருந்து எடுத்து போட்டிருந்த முடிச்சிகளை ஒன்று ஒன்றாக அவிழ்த்தார்.

அதில் ஒரு பெட்டியில் தங்க காப்பு ஒன்று இருக்க அதை எடுத்து மயூரி கையில் போட்டு விட்டவர்

“ இது எங்க பாட்டி எனக்கு என் சீமந்தம் அப்போ  கொடுத்தது. ராசி ஆனது, புள்ள கஷ்டம் இல்லாம பிறக்கும் ம்மா “ என்று போட்டு விட்டார்.

அதில் மயூரி கண்கள் கலங்க உதடோ புன்னகையில் விரிய அவரை பார்த்தாள்.

வார்த்தைகள் எதுவும் வராமல் அவரை பார்க்க அப்போது மஞ்சு “  அப்போ இந்த பேத்திக்கு ஒன்னும் இல்லையா பாட்டி “ என்று விளையாட்டாக இடித்து கேட்க

“அட கழுதை… என் சின்ன பேத்திக்கு இல்லாமலா உன் வளைகாப்புக்கு ஒரு காப்பு வச்சிருக்கிறேன்டி. எங்க பாட்டி இரண்டு காப்பு போட்டாங்க ஒன்னு என் பெரிய பேத்திக்கு இன்னொன்னு சின்ன பேத்திக்கு “ என்று அவர் சிரித்தார் .

மஞ்சு விளையாட்டாகத்தான் கேட்டாள் ஆனால் வெள்ளையம்மா சொன்ன பதிலில் அவரை அணைத்தபடி மஞ்சு “ எங்க மேல அவ்ளோ பாசமா பாட்டி “ என்று அவள் கேட்க

“ பாசம் எல்லாம் பேத்திங்க மேலேதான் போல “ என்று மாறன் நொடித்துக்கொள்ள

“ஏன் மாறா உனக்கும் காப்பு வேணுமா என்ன. ஆனா காப்புக்கு நீ முழுக்காம ஆகணும்மேடா பேசமா டாக்டர் கிட்ட வாய்ப்பு இருக்கான்னு பார்ப்போமா “ என்று விக்ரமன் பேச்சில் கடுப்பான மாறன்

“எருமை மாடே உன்னை …”என்று அவனை போட்டு மொத்தி விட்டான்.

அதில் அனைவரும் சிரிக்க , வெள்ளையம்மா பின் மாணிக்கம் வந்து  பூக்கள் தூவி ஆசிர்வதித்தவர் தங்கத்தில் மோதிரம் ஒன்று போட்டு விட மயூரி

“என்ன அங்கிள் இது …” என்று அழகாக புன்னகைக்க அவர் தலையில் கை வைத்து ஆட்டி சிரித்து நகர்ந்து விட்டார்.

அவர் சென்றதும் வேக வேகமாக வீரா வந்து நின்றார். வீராவை பார்த்த மயூரின் முகம் சிரிப்பை இழந்து நிர்மலமாக மாற அதில் உடைந்தே போய் விட்டார் வீரா.

இவரும் மாணிக்கம் வந்ததிலிருந்து பார்க்கிறார் மயூரி, அங்கிள் அங்கிள் என்று சிரித்த முகமாக பேசிய படி இருப்பதை பார்த்து பொறாமையாக இருக்கிறது.

இங்கு வந்ததிலிருந்து இப்படி வள்ளியிடம் கூட மயூரி பேசிப் பார்த்ததில்லை. அப்படி இருக்க இவருடன் மயூரி இயல்பாக பேசுவதை பார்த்து ஏக்கம் வருத்தம் சோகம் என்று அனைத்தும் தாக்க கண் மயூரியை விட்டு அகல்வேனா என்று தான் இருந்தது.

அப்பாவாக தான் தொற்றுவிட்டோமோ என்று அவர் இடித்து உறைத்தபடி இருக்க சோர்ந்து தான் இருந்தார்.

மேடைக்கு இவர் வந்ததும் மயூரி முகம் மாற்றத்தை காண முடியாமல் வேகமாக மயூரி முகம் பார்க்காமல் நலங்கு வைத்து அவர் வாங்கி வந்த கைச்சங்கிலியை ஆர்யன் மற்றும் மயூரிக்கு போட போக முதலில் மயூரி கை நீட்டவே இல்லை நீண்ட நேரம் அவரின் முகத்தையே பபார்த்திருந்தாள்.

அதில் வீரா கை லேசாக நடுங்க தொடங்கியது முகமும் வேர்க்க தோடங்க தன் மகள் தன்னை என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்று பயம் அதிகம் ஆனாது.

அவர் முகத்தில் இருந்து பதட்டத்தை பார்த்து என்ன யோசித்தாளோ. மயூரி மெல்ல கையை நீட்டி அதை ஏற்றுக்கொண்டாள்.

வீராவுக்கு அதுவே போதுமாக இருக்க மகிழ்ச்சியுடன் சென்று விட்டார். அவர் சென்றபின் மாறன் வந்து ஆர்யனுக்கு தங்கச் செயின் போட்டு விட

“டேய் வளைகாப்பு உங்க அக்காக்கு டா நீயும் உங்க அப்பாவ மாதிரி எனக்கு ஏன்டா செய்ற “ என்று ஆர்யன் சிரிக்க

“இது மச்சான் முறை மாமா.  கல்யாணத்துல போட்டுருக்கனும் அது முடியாம போயிருச்சு அதான் இப்போ போடுறேன் “ என்று சிரித்தவன் மயூரிக்கு ஒரு வளையல் போட்டான்.

அவன் பின் வந்த விக்ரமனும் தங்கச் செயினை எடுத்து ஆர்யனுக்கு போட

“ நீயும் மாடா….” என்று அவனை பார்க்க விக்ரமன் மெல்ல ஆர்யன் பக்கம் குனிந்து அவன் காதில்

“என் கல்யாணம் கன்பார்ம் ஆனா செயின் போடுவன்னு சொன்னல மாம்ஸ் அதான் இது “ என்று கண்ணை அடித்தவன் மயூரிக்கு இவனும் ஒரு வளையல் போட்டு சென்றான்.

இவற்றை எல்லாம் பார்த்த மயூரி கண்கள் கலங்க அழுகை அழுகையாக வந்தது.

இதுவரை சீமந்தம் போன்ற நிகழ்ச்சி எல்லாம் படத்தில் பார்த்து தான் அவளுக்கு பழக்கம். நேரில் செல்ல சொந்தமும் இல்லை அழைக்க தோழிகளும் இருந்தது இல்லை.

அப்படி இருக்க இப்படி நமக்கு எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று எத்தனையோ முறை யோசித்து வருந்தியிருக்கிறாள்.

ஆனால் இன்று இத்தனை பேர் இவளுக்காக என்று நினைக்கும் போது கண்ணீர் நிற்பேனா என்று சொன்னது.

மயூரியை புரிந்தவனாக ஆர்யன் தோழோடு அணைத்து ஆறுதல் செய்தான். அதன் பின் அனைவரும் உன்ன செல்ல விக்ரமன்

“ நீ போய் அக்கா பக்கத்துல உக்காரு எனக்கும் ஒரு இடத்த போட்டு வை நான் இதோ வந்துறேன் “ என்று செல்ல போனவனை பார்த்து

“எங்கடா போற..” என்று சளித்த படி மாறன் கேட்க விக்ரமன் நடந்த படி சுட்டு விரலை தலைக்கு மேல ஆட்டிய படி சென்றான்.

அதை பார்த்த மாறன் “ போறத பாரு பக்கி “ என்று முனங்கிய படி சென்றான்.

இந்த கேப்பில் பாத்ரூம் செல்ல அந்த பக்கம் சென்ற விக்ரமனை அலேக்காக தூக்கி அவன் கதற கதற தூக்கி சென்று விட்டனர்.