நெஞ்சம் 34

கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மாறன் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான் என்றால் அவன் முதுகில் சாய்ந்து கொண்டிருந்த விக்ரமன் விட்டத்தை   பார்த்துக்கொண்டு இருந்தான்.

இருவருமே அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் மூழ்கி போய் இருந்தனர். இவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தனர்.

அப்போது மஞ்சு  உள் அறையில் சீரியல் பார்க்க கையில் போனுடன் அவள் பாட்டியின் கண்ணில் படாமல் பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்தாள். அப்போது அவளின் கண்ணில் இவர்கள் இருவரும் விழ

“என்ன ரெண்டு பேரும் இப்படி உட்கார்ந்துட்டு இருக்காங்க. மூஞ்ச பார்த்த சோகமா வேற இருக்கு” என்று யோசித்தபடி அருகே சென்று எட்டி பார்த்தாள்.

“ ஒரு வேளை எதிர்காலத்தை பத்தி யோசித்து  ஃபீல் பண்றாங்களோ. இருக்கும் இருக்கும் இவுங்க பண்ணுறதை யார் தான் ஏத்துப்பாங்க,

இங்க நார்மல் லவ்க்கே சத்தம் காட்டாம கதையை முடிச்சி குழியை தோண்டி புதச்சிட்டு போய்டுவாங்க இதுல இவுங்க லவ்வ… என்னன்னு சோல்ல.

இருந்தாலும் அண்ணா பாவம்” என்று பெருமூச்சை விட்டவல்

 “ இவனுக்கு லவ் பண்ண போயும் போயும் இந்த குரங்கு அண்ணாவா கிடைக்கனும் “ என்று மனதில் புலம்பியவள் சத்தமாக

“ச்சுச்சுச்சுச்சு….”  என்று பல்லி கத்துவது போல சத்தம் போடவும்,  விக்ரமன் அந்த சத்தத்தில் எப்போதும் போல பயந்து

“ அ… பல்லி “ என்று சத்தம் போட்டு எழுந்து நின்றுவிட்டான்.

 அந்த சத்தத்தில் திடுக்கிட்ட மாறன்

“ ஏ… எருமை ஏண்டா கத்துற “ என்று கத்த

“அது பல்லி சத்தம் போட்டுச்சா… , அதான் மேல விழுந்துடுமோ ன்னு….” என்று சொல்லிய படி சுற்றி பார்த்தவன் அங்கு நின்று இருந்த மஞ்சுவையும் அவள் முழியையும் பார்த்து விட்டு

“பல்லின்னு பாத்தா நீ போட்ட சத்தம் தான அது  “ என்று அவளை முறைக்க  “ அது வந்து….” என்று மேலும் முழித்து மஞ்சு

“ ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க ண்ணா. நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு நீங்க அண்ணா தான் தைரியமா இருங்க “ என்று சொல்லிவிட்டு அவள் ஓடியே சென்று விட்டாள்.

அவள் சென்றதும் “ என்ன இந்த பொண்ணு உளறிட்டு போறா “

“அவ ஒன்னும் உளறிட்டு போல நம்ம சோகமா இருக்கதை பார்த்துட்டு எதோ தப்பா புரிஞ்சிட்டு தைரியம் சொல்லிட்டு போறா “

“ என்ன தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறா……” என்று இழுத்தவன் அவள் சொன்னது புரிந்து தலையில் அடித்துக்கொண்டு

“இவ ஒருத்தி விஷயம் என்னன்னு புரியாம பேசிட்டு போறா “ என்று வாய் சொன்னாலும் உதடு சிரிக்கத்தான் செய்தது.

“எப்படி இருந்தாலும் அண்ணாவமே “ என்று சிரித்தவன் “ நல்ல போண்ணு “ என்று சொல்லிவிட்டு   பழைய போஸ்ஸில் உட்கார போக

“ மேல சாயாம உட்காருடா கச கசன்னு இருக்கு “ என்று திரும்பி அமரவும் இவனும் அவன் அருகில் அமர்ந்து கொண்டான்.

இவர்களை தூரத்திலிருந்து இருந்து மயூரி  பார்த்தவள்  அவர்களின் முகம் காட்டும் சோகம் தாங்காது மெல்ல எழ முயலும் போதே

“ என் கையை பிடித்துக்கொ மயிலு “ என்று ஆர்யன் கைகளை நீட்டவும் அதை பிடித்து மெல்ல எழுந்தவள் மாறன் அருகே சென்று அவன் அருகே அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் மாறன் என்ன என்பது போல அவளை பார்த்தான்.

“ மாறா …”

“ சொல்லுக்கா… என்ன ஆச்சி”  என்று எதவது பிரச்சனையா என்று அவன் அக்கா முகம் பார்க்க , அவள்

“எதுக்குடா இவ்வளோ கஷ்ட படுறிங்க? இப்படி உங்க உறவைத் தப்பா காட்டி இவ்வளவு பண்ணி தான் எல்லாம் ஆகணுமா “

“ அது வீட்டுல எல்லாரும் சம்மதிக்க வேணும்ல க்கா …“

“நீ அதுக்காக மட்டும் பண்ணலன்னு எனக்கு தெரியும் மாறா “

“ தெரிஞ்சும் ஏன் க்கா கேக்குற “

“ தெரிஞ்சது நால தான்டா கேக்குற. இப்படி நீங்க கஷ்ட பட்டு தான் இந்த ஊரை மாத்தனும்னு இல்லை“

“எல்லாரும் மாறுறது நல்லது தான க்கா. எதிர்காலத்துல சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனலாம் வராதுல்ல க்கா“

“ அது அவங்களுக்கா புரியணும்டா. நீ இவ்வளவும் எனக்காக தான் பண்றன்னு புரியுது டா . ஆனா இவ்வளவு பண்ணின பிறகு என்னை ஏத்துக்குறவங்கள என்னால எப்படி ஏத்துக்க முடியும் “

“ அப்பா, பெரியப்பா  உன்ன ஏத்துக்காம இல்ல க்கா அவங்களுக்கு பயம். எங்க உன்ன ஏத்துக்கிட்டா அவுங்க கொள்கை எல்லாத்தையும் தூக்கி போடனுமோ ன்னு பயம் “

“ எனக்கு அது புரியுது மாறா. இருந்தும் பெத்த பசங்கள விட இந்த சாதி அவ்வளவு பெரிசா இருக்குனா அவுங்க மனசு எப்படி இதுல இருகி போய் இருக்கும்.

அத நீ உருக வைக்க பாக்குற மாறா அதுக்காக உன் வாழ்க்கையை பணயம் வச்சி உன் வாழக்கைய கெடுத்துக்காதன்னு தான் சொல்றேன்.

நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் அது என்னால குலைஞ்சு போற மாதிரி ஆகிட கூடாது ”

“ப்ச் … அக்கா ..” என்று ஏதோ மாறன் சொல்ல போக விக்ரமனின் போன் யாஞ்சி… என்ற பாட்டுடன் ஒலித்தது .

அதில் அனைவரும் அவனை பார்க்க ஆர்யன்

“இது விக்ரம் வேதா படம் பாட்டு தான …” என்று ஏற்றம் இறக்கமாக அவனை பார்த்து

“இந்த ரனகலத்தலமும் உனக்கு ஒரு கிலு கிலுப்பாடா “ என்று சிரிக்க, மாறனுக்கு அப்போது தான் அந்த பெயர் பொருத்தம் மண்டையில் உறைக்கவும் கடுப்பில்

“ இங்க அவன் அவன் பக்கத்துல லவ்வர் இருந்தும் பாத்து பேச முடியாம தவிச்சிட்டு இருந்தா உனக்கு ரிங் டோன்ல ரோமன்ஸாடா…” என்று போனை பிடுங்க போனவனிடம் இருந்து தப்பித்த விக்ரமன்

“டேய் மாறா அப்புறமா கூட போனை பிடுங்கி நாள் பூரா வச்சிக்கோடா நான் எதுவும் சொல்லல.  ஆனா இப்போ மட்டும் நான் போன எடுக்கலைன்னா அவ அப்பறம் நிஜம் வேதாளமாவே மாறிடுவாடா “ என்று கெஞ்சியவன் வேக வேகமாக போனை எடுத்து காதில் வைத்தான்.

அந்தப்புறம் வேதா “ விக்கி உங்க அப்பா மாறன் அப்பா பெரியப்பான்னு எல்லாம் சேந்து இங்க வந்துருக்காங்க எதோ நல்ல விஷயம்னு பேசிட்டு இருக்காங்க “ என்று ரகசியக் குரலில் சந்தோஷம் கலந்த படபடப்புடன் பேசினாள்.

வேதா சொன்னதை நம்ப முடியாத விக்ரமன் இது நிஜம் தானா என்ற சந்தேகத்தில் அருகில் நின்று கொண்டிருந்த ஆர்யன் கையில் நறுக்கென்று கிள்ளி விட அவன்

 “ அ…. எருமை ஏன்டா கிள்ளின “ என்று ஆர்யன் கத்த

“அப்போ இது கனவு இல்ல “ என்று சொல்லியவன் தொப் என்று கீழே அமர்ந்தான்.

“ என்ன ஆச்சு ஏன் இப்படி ஷாக் ஆகுற  சொல்லிட்டு ஷாக் ஆகுடா “  என்ற மாறனை பார்த்து

“மாறா… நம்ம பிளான் வர்க் ஆகிட்டு வேதா வீட்டுக்கு அவள பொண்ணு கேட்டு எல்லாரும் போயிருக்காங்க “

என்று அவன் சந்தோஷத்தில் சிரிக்க மாறன்

 “ உண்மையாவாடா “ என்று மகிழ்ந்தவன்

“போனை ஸ்பீக்கர்ல போடுடா” என்று சொல்லவும் விக்ரமனும் போனை ஸ்பீக்கரில் போட்டான்

“ வேதா அங்க யார் யார்லாம் வந்திருக்க “

“ உங்க அப்பா பெரியப்பா அப்பறம் விக்கியோட அப்பா எங்க ஊர் தலைவர் மாரிமுத்துன்னு நாலு பேர் வந்திருக்காங்க  “

“ஓ…  அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்கணு ம்மா கொஞ்சம் பக்கத்துல போய் நில்லு “

மாறன் சொன்னபடி கதவு அருகே சென்று இவள் நின்று கொண்டாள்.

போனில் வழியே இவர்கள் பேசும் அனைத்தையும் சிரித்த முகமாக கேட்டு கொண்டிருந்த மாறன் முகம் இறுதியில் கோபத்தில் மாறியது

“ எனக்கு பொண்ணு தர இவன் யாருடா “ என்று எகிறியவனை இழுத்து பிடித்த விக்ரமன்

“ கொஞ்சம் பொறு அங்க உங்க பெரியப்பா என்ன சொல்றாருன்னு முதல்ல கேப்போம் “ என்று ஆர்யன் அவனை அமைதிப்படுத்தினான்.

அங்கே தங்கப்பாண்டி முகம் முதலில் பிரகாசமாக மாறினாலும் அடுத்த நிமிடமே ஏதோ யோசித்து முகம் வாடியவர்

“இல்லங்க இப்போ நாங்க அவனுக்கு பண்றது இல்ல “

என்று மறுக்கவும் மாரிமுத்துக்கு கோபம் தான் வந்தது “சாதி விட்டு சாதி மாறி ஒன்னும்மில்லாதவன் பெண்ணை மணக்க ஒத்துக்குறவன் என் பொண்ண ஏத்துக்க மாட்டானா “ என்று சினம் வந்தாலும் அதை வெளியில் காட்டாதவராக சிரித்த முகமாக

“ ஏன் தம்பிக்கு இவர் பையன் வயசு தான ஒன்னா சேத்து பண்ணா என்ன தப்பு. இல்லை உறுக்கு மட்டும் தான் உபதேசமா “ என்று நயமாக கேட்டவரை பார்த்து பல்லை கடித்த தங்க பாண்டி

“அப்படி இல்லை மாரி முத்து. எங்க வீட்டு பொண்ணு முழுகாம இருக்கா அவளுக்கு என்னும் இரண்டு மாசத்துல சீமந்தம் முடிச்சி அவ புள்ள பெத்த பிறகு தான் அவனுக்கு பொண்ணு பாக்கணும்னு இருக்கோம். அவ அக்கா முன்னாடி நின்னு தான் இவன் கல்யாணம் நடக்கனும் அதான் இப்போ வேணாம்னு சொன்ன “

“என்னது அக்காவா, இவர் ஒரே பையன் தான உங்க தம்பிக்கு “என்று அவர் குழம்பி போய் பார்க்க, ராஜன் அதிர்ந்து போய்  பார்த்தார். இதை கேட்டு வீராவின் கண்கள் கலங்கி விடுமோ என்று இருக்க கண்களை சிமிட்டி அதை உள்ளே இழுத்து கொண்டு தன் அண்ணை பார்த்தார்.

“ இல்ல என் தம்பிக்கு பொண்ணு ஒன்னு பையன் ஒன்னுன்னு இரண்டு புள்ள.”

“அப்போ நிச்சியம் மட்டும் ஆவது முடிச்சிடுவோமா “  என்று அவர் அவசர படுத்த

“ப்ச் இதோ பாருங்க என் பொண்ணுக்கு சீமந்தம் முடிச்சி தான் எந்த நல்லது நாளும் என் பையனுக்கு நடக்கும் “ என்று வீரா அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட.

இவரும் வாயைப் பூட்டி கொண்டார் இப்போது இல்லை என்றாளும் சீமந்தம் முடியட்டும் என்று காத்திருந்தார்.

“ சரி நாங்க போயிட்டு வறோம் “ என்று மூவரும் கிளம்பி வெளியே சென்றனர்.

வெளியே வந்த ராஜன் “ வீரா , சின்ன வயசுல காணாம போன நம்ம மயிலா திரும்பி வந்துருக்க அந்த போண்ணு எதோ மாறன் நண்பன்னு சொன்னிங்களே “

“அது வந்து….” என்று வீரா இழுக்க தங்கம்

“ சீமந்தம்  மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு சொல்லணும் னு இருந்தோம். அதுக்கு முன்னாடினா தனித்தனியா வந்து புள்ளைய கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்கிருவாங்கன்னு பாத்தோம் .  ஆனா ராஜன், நம்ம விக்கிக்கு தெரியுமே அவன உன் கிட்ட கூட சொல்ல சொல்லியிருந்தனே “ என்று தங்கம் சமாளிக்க

“அவன் எங்க தங்கம் இதெல்லாம் வந்து சொல்லுவான். ஊருல இருக்க நாய் பேய் கதை எல்லாம் உளறிட்டு போவான் முக்கியமானத சொல்ல மாட்டான் . அவன வீட்டுக்கு போய் பார்த்துக்கிறேன் “ என்று அவர் சென்றதும் வீரா கண்கள் கலங்க அவன் அண்ணன் கையை பிடிக்க தங்க பாண்டி

“ என்ன வீரா சின்ன புள்ள மாதிரி வா வண்டிய எடு வீட்டுக்கு போவோம் “என்று அழைத்து சென்று விட்டார்.

தங்க பாண்டிக்கு மாரி முத்து பெண்ணை மாறனுக்கு கட்டி வைக்க மகிழ்ச்சி தான் ஆனால் இவன், நால பின்ன அந்த பெண்ணிடம் போய் திருமண‌ம் நிருத்த எதவது உளறி வைத்தான் என்றாள் விக்ரமனின் திருமணமும் அல்லவா சேர்த்து நின்று விடும்.

அதற்கு பயந்தே சமாளிக்க யோசித்தவர் மயூரியை பற்றி சொல்லியிருந்தார்.

தங்க பாண்டிக்கு மயூரியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எண்ணம் எல்லாம் இல்லை ஆனால் அவரின் சாதி சங்கம் அந்த உறுப்பினர்களின் மரியாதையான பார்வை அது மயூரியை காட்டிலும் பெரிதாக தெரிந்தது.

மயூரி, பெண் பிள்ளை தானே, திருமணம் முடிந்த அவள் எப்படி இருந்தாலும் சென்னையில் தான் இருக்க போகிறாள்  பின் அதற்கு எதுக்கு அவள் விஷியம் இந்த ஊருக்கு தெரிய வேண்டும்.

 அதனாலயே அவளை இந்த ஊரில் இருந்து சென்னைக்கு அனுப்ப பார்த்தார்.

அவள் சென்னைக்கு சென்றுவிட்டாள் அதன் பின் அங்கு சென்று அவளை பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் .

ஆனால் இன்று விக்ரமன் திருமணத்திற்காக எப்படியும் அவர்களை எதிர்க்கத்தான் போகிறார்கள் அதை ஏன் நம் வீட்டு பெண்ணிற்கும் சேர்த்து செய்ய கூடாது என்ற எண்ணத்தில் தான் போட்டு உடைத்தார் .

இங்கு தங்கம் சொல்லி சென்றதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போய் இருந்தனர் .

ஆனால் அதிர்ந்து போய் மகிழ்ச்சியில் இருக்க வேண்டியவளோ ஒரு சலனமும் இன்றி எப்போதும் போல காலை நீட்டி கொண்டு அவள் கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவளை பார்த்த மாறன் “ என்ன க்கா இப்படி இருக்க ? இதுல உனக்கு சந்தோஷம் இல்லையா?  “ என்று சோகமாக அவளை பார்க்க

“இதுல என்ன சந்தோஷம் இருக்கு மாறா “ என்று அவள் புரியாமல் பார்க்க

“அக்கா நீ அப்பா பெரியப்பா மேல கோபமா இருக்கியா “

“அவங்க யாரு மாறா எனக்கு, அவங்க மேல நான் கோபப்பட. கோபம் கூட எனக்கானவங்க மேல தான் மாறா நான் காட்டுவேன் . அவங்க எனக்கு யாரு நான் அவுங்களுக்கு யாரு கோபப்பட “

“அது க்கா…அப்பாவுக்கு உன்ன பிடிக்கும் க்கா பெரியப்பா வாள  தான் எல்லாம் “

“ இதோ பாரு மாறா சொந்த பொண்ண விட அவுங்க அண்ணா சொல்றது தான் முக்கியம்னு  அவருக்கு தோணும்  போகும் போது எனக்கும் அவர் முக்கியம் இல்ல மாறா “ என்று அவள் சென்று விட விக்ரமன்

“உங்க அப்பா அங்க இருந்து கண்ணே மணியேன்னு  ஓடி வர போறாரு ஆனா உங்க அக்கா உங்க அப்பாவ யார் பெற்ற மகோனோன்னு பாத்துட்டு போக போறாங்க பாவம் உங்க அப்பா “

“அவருக்கு இது வேணும் தான் விக்கி “

“ சரி மாறா நான் வீட்டுக்கு போறேன். அங்க போய் அந்த நல்ல செய்திய எங்க அப்பா வாயால கேட்டு வரேன் “ என்று ஓட போனவனை சட்டை காலரை பிடித்து இழுத்தவன்

“பாதி கிணத்தை தாண்டுன எருமை ஏண்டா பாதியில கிணத்துல குதிக்குறன்னு சொல்ற “

“நான் எப்போடா கிணத்தை  தாண்டுன “

“ப்ச்…., லூசு கல்யாணம் முடியுற வரை நீ தப்பி தவறி கூட வேதாவை பிடிச்ச மாதிரி காட்ட கூடாது “ என்று மாறன்  அழுத்தி சொல்லவும் முகத்தை பாவமாக தொங்கப்போட்டு கொண்டான் விக்ரமன்.