தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, “அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?” என்று தேவா அருகில் வந்தான்.
தேவா அவன் இரு கைகளையும் பேண்ட் பேக்கெட்டில் விட்டு கொள்ள, “முறையில நீ எனக்கு தம்பி, அண்ணன் பொண்டாட்டியை கட்டியிருக்க இல்லை” என்றவன்,
“உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைச்சேன் தம்பி. நம்ம பொண்டாட்டிகிட்ட நான் கொடுத்த பரிசு ஒன்னு இருக்கும். என்கிட்ட ஓடி ஒளிஞ்சப்போ நடந்தது. சொன்னாளா? பார்த்தியா? பார்க்காமலா இருந்திருப்ப. அவளை காதலிச்சவன், கிடைச்சதும் பாய்ஞ்சிருப்ப. என் ஞாபக பரிசா வைச்சுக்கோ தேவா” என்று அவன் தோள் தட்டினான் சந்தோஷ்.
எதிர்பார்த்த கோவம் இல்லாமல் அப்படியே நின்ற தேவா, சந்தோஷின் சமநிலையை குலைக்க ஆரம்பித்தான்.
“இனியும் என்னால பொறுத்துக்க முடியாது தேவா. என்னை விடு” என்றவர், கையுடன் எடுத்து வந்திருந்த பிரம்பில் சந்தோஷ் மீது ஓங்கி ஒன்று வைத்தார்.
“ஏய். என்னையே அடிக்கிறியா?” என்று சந்தோஷ் கத்தி வளர்மதியை அடிக்க போக, தேவா ஒற்றை காலால் அவனை தட்டிவிட்டு, மண்ணுக்கு முத்தம் கொடுக்க வைத்தான்.
சந்தோஷ் திமிறி எழ, தேவா சில நொடிகளில் அவனை அடக்கி, கம்பத்தில் கட்டிவிட்டான்.
வளர்மதி அவர் கோவம் தீர, தீர பிரம்பால் அடி வெளுத்துவிட்டார். மகள் அன்றிரவு கத்தியது, அவளின் காயம், அவளின் கண்ணீர் எல்லாம் அன்னையின் கைக்கு அவ்வளவு வலு சேர்த்தது.
“அப்படி போடுங்க. பெத்தவங்க தறுதலையா விட்டா டீச்சர் தான் அடி கொடுக்கணும்” என்று அக்கம், பக்கம் வீட்டுக்காரர்கள் அவ்வளவு நேரம் பொறுத்து இப்போது வளர்மதிக்கு துணை நின்றனர்.
சுந்தரம் ஆட்கள் என்ன முயன்றும் சந்தோஷை நெருங்க முடியாதபடி தேவா மட்டுமில்லை, ஊர்காரர்களும் செய்தனர். வீடியோ எடுக்க பார்க்க, போனையும் உடைத்துவிட்டனர்.
ஆதரவாக பிடித்த மருமகன் கைப்பற்றி பெரும் அழுகை. அவரின் இத்தனை நாள் கோவம், ஏமாற்றம், ஆத்திரம் எல்லாம் தீர்ந்து போனதில், அன்னையின் மனம் குளிர்ந்தது.
துரோகம் அவரின் தன்னம்பிக்கையை உடைத்திருந்தது. அவரின் தைரியத்தை சிதைத்திருந்தது.
லேசாக ஒடிந்து விழும் கிளை இல்லை வளர்மதி. வேர் நன்றாக ஊன்றிய வலுவான பெண்மணி.
இடைக்கால வறட்சி அவரை சாய்த்துவிடாது என்றாலும், தளர்ந்துவிட்டார். மீண்டு விடுவார். ஓர் அடி கூட வளர்ந்துவிடுவார்.
அந்த நம்பிக்கை அவரின் மாணவனுக்கு உண்டு. நான் பார்த்து பிரமித்த ஆசிரியர் இவர்! மகள், மருமகன் எல்லாம் பின்னாளில் வாய்த்தவை. நிலையான உறவு ஆசிரியர், மாணவன் பந்தம் தான்.
தேவா எல்லா சூழ்நிலையிலும், எல்லா இடத்திலும் வளர்மதிக்கு துணை நிற்பான். மருமகனாக இல்லை. மாணவனாக!
முதிர்ச்சி என்ற ஒன்றை அடையும் நேரம் நல்லதும் புரியும், கெட்டதும் புரியும்.
வளர்மதிக்கு குடிக்க தண்ணீர் குடித்து, அவர் தெளிவாகும் வரை உடன் இருந்தான் தேவா.
சந்தோஷை அவன் ஆட்கள் தூக்கி கொண்டு சென்றதை எல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை.
அன்றைக்கான இரவு உணவை தன் வீட்டில் இருந்து எடுத்துவர சொன்னான். உணவுடன் மொத்த குடும்பமும் வந்துவிட்டது. விஷயம் தெரியாமல் இருக்குமா?
“நான் ஓகே துளசி. போதும். எழுந்திரு. எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை. ஓடு” என்று அவரின் இயல்பிற்கு திரும்பினார் வளர்மதி.
ஜெயலட்சுமி, மாலதி சிறிது நேரம் வளர்மதியிடம் பேசினார்கள். உணவு உண்டார்கள். பொதுவாக குடும்பமாக அமர்ந்து, “போனது எல்லாம் போகட்டும். இனி நம்ம குடும்பம், நாம வாழுறதை தான் பார்க்கணும்” என்றார் பசுபதி.
அன்றைய இரவு துளசி, தேவா அங்கேயே தாங்கிக்கொள்ள மற்றவர்கள் விடைபெற்றனர்.
துளசி அம்மாவுடன் தூங்க செல்ல, “என்ன பண்ற நீ? நான் நல்லா இருக்கேன். உன் ரூமுக்கு போ துளசி” என்று துரத்திவிட்டார் அன்னை.
“கொஞ்சம் கூட என் பாசத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. உங்க மாமியார் ரொம்ப மோசம்” என்று தலையணையை கட்டிக்கொண்டு திரும்ப அறைக்கு வந்த மனைவியை பார்த்த தேவா,
“என்னை விட்டு போன இல்லை. உனக்கு வேணும்டி” என்று அப்படியொரு சிரிப்பு.
“சிரிக்காதீங்க?” என்று தலையணையை அவன் மீது போட,
“நீ வந்து மேல விழுடின்னா, தலையணையை தூக்கி போடுற. வளர்ந்திடவா செய்யாத நீ” என்று திரும்ப அவளிடமே தூக்கி போட்டான்.
“என்னை சொல்லிட்டு நீங்களும் தான் தலையணையை தூக்கி போடுறீங்க? ரொம்ப வளர்ந்திட்டிங்க போங்க” என்றாள் மனைவி கிண்டலாக.
“பார்றா. உனக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா? இத்தனை நாள் நல்லபிள்ளை வேஷம் போட்டிருக்க நீ”
“இப்போ சகவாச தோஷம்”
“அடியேய். என்ன பேச்சிலே கொக்கி போடுற”
“ஏற்கனவே மாட்டிகிட்டவருக்கு ஏன் கொக்கி போடணுமாம்”
“நல்ல மூட்ல இருக்க போல” என்று தேவா மனைவியை நெருங்க,
“அது கெட்ட மூட்ங்க” என்றாள் மனைவி.
“ஹேய் நமக்குள்ள இரண்டும் ஒன்னு தாண்டி” என்று மனைவியை தன் கைகளுக்குள் இழுக்க,
“உங்ககிட்ட ஒன்னு காட்டணும்” என்று அவனுள் இணைந்தாள்.
“என்ன?” என்று தேவா அவளின் கலைந்த முடியை மென்மையாக காதோரம் ஒதுங்க வைத்து, காதை விரலால் வருடினான்.
துளசி கூசி சிலிர்த்தவள், “ஒரு நிமிஷம் உட்காருங்க” என்று அவனை கட்டிலில் அமர்த்தி, அவன் முன் நின்றாள்.
துளசி அவளின் இடை சேலையை விலக்க ஆரம்பிக்க, “என்னடி பண்ற” என்ற தேவா கண்கள் விரிய, அவன் உதடுகள் கடிபட்டன.
முழுதும் விலக்கியவள், “எப்படி இருக்கு” என்று கேட்க,
“என்ன துளசி இது?” என்று தேவா அதிர்ந்தான்.
பச்சை குத்தப்பட்டிருந்தது. தேவாவின் முதல் எழுத்து D க்குள் T பிணைந்து இருந்தது.
“அந்த பொறுக்கி உங்ககிட்ட என்ன சொன்னான்னு எனக்கு தெரியாது. நம்ம கல்யாணம் முடிவான உடனே, அவன் காயம் பண்ண தடம் கூட என்கிட்ட இருக்க கூடாதுன்னு பச்சை குத்துகிட்டேன்” என்றாள்.
“துளசி. துளசி” என்றான் தேவா.
“உங்களுக்கு பிடிக்கலையா”
“உயிர் போகுதுடி”
“எனக்கு வலிக்கலை. அவன் கண்ணாடி துண்டுல கிழிச்சப்போவும் வலிக்கலை. இப்போவும் எனக்கு வலிக்கலை. அருவெறுப்பை சுத்தப்படுத்தினேன். அவ்வளவு தான்”
“இப்படி பண்ணனும்ன்னு அவசியம் இல்லை”
“அந்த வடு எனக்கு அருவெறுப்பு தான். எனக்கு வேணாம்”
“எல்லாம் உன் இஷ்டமே இல்லை”
“நீங்களும் எனக்கு இப்போ இஷ்டம் தான்”
“ஹேய். பேச்சை மாத்தாதடி. வலிச்சிருக்கும் இல்லை” என்றவன் ஒற்றை விரல் அவளின் இடையில் உள்ள டேட்டூவை வருட,
“பிடிச்சிருக்கு” என்றாள் துளசி.
“எதுடி?”
“இந்த டேட்டூ, உங்க விரல் நடுக்கம் எல்லாம்”
“நடுங்குதா என்ன? இல்லையே” என்று விரல் விலக்க,
“ஏன் எடுத்தீங்க. திரும்ப வைங்க சொல்றேன்” என்றாள் மனைவி குறும்பாக.
“விரலையே வைக்கணும்ன்னு இல்லை” என்றவன் மென்மையாக தன் உதட்டை அங்கு பதித்தான்.
மிதமான வெப்பம், பூ போன்ற முத்தம்! துளசி தாளாமல் கணவன் தோள்களை பிடித்தாள்.
தேவா ஒற்றை முத்தத்துடன் நிறுத்த முடியாமல், திரும்ப ஓர் முத்தம் வைத்தவன், மனைவியை முழுவதுமாக தன் முகத்துக்கருகில் இழுத்து கொண்டான்.
“இந்த இடுப்பு முழுசா எனக்கு தானடி” என்று முத்தமிட்டபடி கேட்க,
“ஸ்ஸ்” என்ற துளசியின் கைகள் கணவனை இன்னும் வலுவாக பற்றி கொண்டது.