கிருபா மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவன் பெண்கள் போட்ட சத்தத்தில் தான் முழித்தான்.
எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது நான்கு என்று காட்டியது. அதை கண்ட பின் எழுந்து முகத்தை கைகளால் தேய்த்த படி எழுந்து வெளியே சென்றான்.
“ ஏ…. நாலு போடு அந்த காயை வெட்டிருவோம் “
“அச்சோ நாலு மட்டும் விழக் கூடாது… தெய்வமே…”
“அத்தை போடுங்க சீக்கிரம்…” என்று மாற்றி மாற்றி சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்தான் கிருபா.
அங்கே மஞ்சு, வெள்ளையம்மா, அதித்தி, மயூரி என்று நால்வரும் தாயபாஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்தபடி மீனாட்சி, வள்ளி, மொழி என்று அவர்களை சுற்றி அமர்ந்திருந்தனர்.
இவற்றை பார்த்து வாயை பிளந்தவன்
“ நேத்து வரை இந்த பாட்டி தான எதோ உலகமே அழிய போறது மாதிரி ஒப்பாரி வச்சிட்டு இருந்தாங்க. இன்னைக்கு என்னன்னா இப்படி முதல் ஆளா விளையாடிட்டு இருக்காங்க “
என்று யோசித்தவனாக அங்கே சென்று அவன் மனைவி அதித்தி அருகே அமர்ந்து கொண்டான்.
அவன் அமர்ந்ததும் அவன் மடியில் மொழி சென்று அமர்ந்து கொண்டான்.
“ அதித்தி ம்மா ஆறு போடு ம்மா “ என்று மொழி அதித்தியை பார்த்து சொல்ல
“அட ஆறுலாம் வேண்டாம், தாயம் போடு போதும் “ என்று வெள்ளையம்மா சொல்ல அதித்தி அந்த செம்பினால் செய்ய பட்ட தாயக் கட்டையை அவளின் இரு கைகள் கொண்டு உருட்டி “ ஒரு தாயம்…” என்று சொல்லி கீழே போட, அவள் சொன்னது போல தாயம் தான் விழுந்தது.
தாயம் விழுந்ததும் வெள்ளையம்மா சிரித்தபடி “ அப்படி பொடு…” என்று காய் ஒன்றை வெட்டினார்.
“அக்கா அடுத்த ஆட்டம் ஆறு போடுங்க அவுங்கள நம்ம வெட்டுவோம் “ என்று மஞ்சு மயூரியைப் பார்த்து பேச என்று ஆட்டம் சீரியஸாக போனது
இங்கு கிருபா “ இங்க என்ன நடக்குது “ என்று இவர்களை பார்க்க , மொழி
“அதுவா கிருபா ப்பா இது லூடோ கேம். இங்க அந்த வெள்ள பாட்டியும் நம்ம அதித்தி ம்மாவும் ஒரு டீம். இங்க அந்த மஞ்சு த்தை யும் மயூரி த்தையும் ஒரு டீம் ப்பா. அந்த வெள்ள பாட்டி டீம்ல ரெண்டு காய் பழுத்துட்டாங்க நம்ம அத்தை டீம்ல ஒரு காய் தான் பழுத்திருக்காங்க “
“ யார்டா இந்த விளையாட்ட விளையாடலாம்னு மொதல்ல ஆரம்பிச்சது “
“அது அந்த வெள்ளை பாட்டி தான். நான் போன்ல லூடோ விளையாடிட்டு இருந்தேனா…அதை பாத்துட்டு தான் பாட்டி நேர்ல விளையாடாத விளையாட்டு என்ன விளையாட்டு ன்னு கூப்டாங்க “
“ஓ….” என்று இழுத்தவன் அவனும் விளையாட்டில் மும்முரமாக பார்க்க தொடங்கிவிட்டான்.
அப்போது மாறன் மற்றும் விக்ரமன் வேகமாக வீட்டுக்குள்ளே வந்தவர்கள் இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து வாயை பிளந்து நின்று விட்டனர்.
அதன் பின் வந்த விஷயம் முக்கியம் புரிந்து வீட்டை சுற்றி சுற்றி வர அவர்களை புருவம் சுருங்க பார்த்த கிருபா எழுந்து சென்றான்.
“என்னங்கடா இப்படி குட்டி போட்ட பெருச்சாளி மாதிரி வீட உருட்டிட்டு இருக்கிங்க”
“அது பூனை தான ப்ரோ வரும் “
“உங்கள பூனைன்னு சொன்னா , பூனை அசிங்கத்துல ஓடிடும்டா, என் பெருச்சாளி .”
“ப்ச் இந்த விளக்கம் உனக்கு ரொம்ப அவசியமா விக்கி “ என்று அவனை முறைத்தவன் கிருபா பக்கம் திரும்பி
“ மாமா எங்க? இங்க எல்லா இடத்துலயும் தேடிட்டோம் காணோம்”
“ உங்க மாமாவா ….அவன், அவன் பொண்டாட்டி கேட்டான்னு பர்கர் வாங்க போயிருக்கிறான். என்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவான் “
“அப்படியா அண்ணா…” என்ற படி இருவரும் கீழே அமர்ந்தனர்.
அவர்களுடன் அமர்ந்து கிருபா “ இந்த பெருச்சாளி சும்மா மாமா மாமான்னு ஆடாதே என்னென்னு சொல்லுங்க. வாட்ஸ் தா மேட்டர் “
“ சொன்னா நீங்க பண்ணி தருவீங்களா ப்ரோ “
“நான் செய்ற அளவு டாக்ஸ் இருக்குமா “ என்று சட்டை காலரை உயர்த்திய படி கிருபா கேட்க
அவனை மேலிருந்து கீழே பார்த்த மாறன் “ உங்களுக்கு ஏத்த அளவு இருக்குமா தெரியல்லை…… “
“ஓ… அப்போ பரவாயில்லை சொல்லு “
“அதுவா என் அப்பா பெரியப்பா கூட பேசணும் “ அதை கேட்டு நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவன் மாறன் மற்றும் விக்ரமன் பார்வையில்
“என்னது அந்த டான்ஸ் கூடவா “ மனதில் யோசித்தவன்
“நீ சொன்னது கரெக்ட் தான் மாறன் இந்த டாஸ்க்கு பத்து பொருத்தமும் பக்கவா உங்க மாமாக்கு தான் செட் ஆகும் “
என்று எழுந்து சென்றவன் “ யார் கிட்ட போய் கோத்து விட பாக்குறாங்க பாரு. ஜஸ்ட் மிஸ் டா கிருபா “ என்று விளையாட்டை பார்க்க சென்று விட்டான்.
அவன் சென்ற சிறிது நேரம் கழித்து ஆர்யன் அனைவருக்கும் பர்கர் பீட்சா கேக் சிப்ஸ் என்று வாங்கி வந்தவன் அதை அனைவரிடமும் கொடுத்து விட்டு மயூரி அருகே செல்ல போனவனை அப்படியே அலேக்காக தூக்கி விட்டனர் இவர்கள் இருவரும்.
“டேய் என்னடா பண்றீங்க என்னை விடுங்க டா நானே வரேன் “ என்று கத்த கத்த அவனை இழுத்து சென்று விட்டனர்.
இவற்றைப் பார்த்த வெள்ளையம்மா கேக்கை எடுத்து சாப்பிட்டபடி “ பார்த்து ஆத்தா.. இவனுங்கள நம்பி உன் புருஷன விடாத அப்பறம் எங்கேயாவது ஒத்தயில விட்டு வந்துருவாங்க”
“அதெல்லாம் விட மாட்டாங்க பாட்டி “ என்று மயூரி சிரிக்க
“ஆமா ஆமா தனியாலாம் விட மாட்டாங்க ஏதாவது எமகண்டத்தோட கொத்து வேனா விடுவாங்க “ என்று முனங்கிக் கொண்டான்.
வெளியே அழைத்துச் சென்று தான் ஆர்யனை விடவே செய்தனர் இருவரும்
“அட பிசாசுங்களா ஏன்டா இப்படி இழுத்துட்டு வந்திங்க “
“எஸ் பக்காவாக ஒரு பிளான் போட்டு இருக்கோம். அதுல உங்க ரோல் தான் வெயிட்டானது “
“வெயிட்டானதுனா அப்படி என்ன பண்ணணும் “ என்று அவன் கேட்கவும் ப்ளேனை முழுதாக ஆர்யனிடம் சொல்லி முடித்தனர்.
அதை கேட்ட ஆர்யன் “ டேய் உங்க அக்காவ கல்யாணம் பண்ணது ஒரு குத்தமாடா இப்படி என்ன கோத்து விடுறியேடா “
“அது மாம்ஸ் அக்கா ஓட இலவச இணைப்புகள் வேணாமா மாமா “ என்று விக்ரமன் ஆர்யனின் தோளில் கை போட, அட தட்டி விட்டபடி
“ஒரு ஆணியும் வேண்டாம் “
“அப்போ ஓகே மாறா வா நம்ம அக்காவ கூட்டிட்டு போவோம் “
“அவள ஏன்டா நீங்க கூட்டிட்டு போகனும் ”
“நீங்க தான அக்காவ வேனான்னு சொன்னிங்க “
“நான் எப்படா அப்படி சொன்னேன் “
“கொஞ்சம் நேரம் முன்னாடி சொன்னிங்களே மாமா “
“டேய் எதவது எடகுடமா சொல்லி என் குடும்பத்துல பிரச்சனைய கிளப்பிடாதிங்க டா “
“அப்படி பன்ற ஐடியா இல்ல…. தான் அனா …..” என்று மாறன் இழுத்த இழுவையில்
“ உங்களுக்கு போய் ஹெல்ப் பண்றன்னு சொன்னேன் பாரு . சரி என்ன ப்ளேன் பண்ணி தொலையிறேன் “
“தட்ஸ் குட் மாமா” என்று இருவரும் சிரித்தபடி நின்றனர்.
மறுநாள் பிளான் படி விக்ரமன் வேதாவுடன் தோப்பின் வெளியே நின்று கொண்டிருந்தான்.
அப்போது சரியாக அவர்கள் நினைத்த படி தங்கபாண்டி மற்றும் வீரபாண்டி வருவதை அவர்கள் பின்னே நின்று பார்த்து கொண்டிருந்த மாறன் போன் வழியாக விக்ரமனுக்கு சொல்ல.
காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் வழியே இதை கேட்ட விக்கி,
“ம்ம்ம் வேதா… வராங்கலாம் அதை கண்ணுல ஊத்திக்கோ “
“ கண்ணுக்கு எதுவும் பிரச்சினை வராதுதானே விக்கி” என்று வேதா தயங்க
“ப்ச் எதுவும் ஆகாதுடி அதை முதல்ல ஊத்து கிட்ட வந்துடப் போறாங்க “ என்று சீறவும்
வேதாவும் கையில் இருந்த மருந்தை கண்ணில் இரண்டு சொட்டு விட்டு கோண்டாள். பின் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது.
இங்கே தங்கபாண்டி மற்றும் வீரா அவர்கள் பேசுவதை கேட்ட அருகில் சென்ற போது
“விக்கி ப்ளீஸ் விக்கி ஒரு வாட்டி எனக்காக யோசிக்க கூடாதா “ என்று அழுத படி பேசினாள் வேதா.
“ நான் சொன்னது சொன்னதுதான் வேதா திருப்பி திருப்பி அதையே கேட்டு டார்சர் பண்ணாத “
“ நான் பண்றது உங்களுக்கு டார்சர் மாதிரி இருக்கா விக்கி என் லவ் உங்களுக்கு டார்சர் மாதிரி இருக்கா “
“ஏன் இப்போ இப்படி அழுற நீ அழுதா நான் மயங்கி உன்ன ஏத்துபன்னு நினைக்கிறியா “
“அய்யோ விக்கி ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க “ என்று விக்ரமன் கையை பிடிக்கவும் , விக்ரமன்
“ச்சீ கைய எடு” என்று கையை உதறவும் வேதா கலங்கிய விழியுடன் அவனை பார்த்தவள்
“ என்னைக்கா இருந்தாலும் நான் உனக்கு தான் விக்கி “ என்று அழுத படி வேதா ஓடிவிட்டாள்.
இதை பார்த்திருந்த தங்க பாண்டி மற்றும் வீரா வாயை பிளந்த படி
“அந்த பொண்ணு இப்படி அழுதுட்டு கெஞ்சிட்டு போகுது இவன் கல்லு மாதிரி நிக்குறான் என்ன மனுஷன் இவன் “ என்று சொன்ன தங்க பாண்டியை பார்த்த வீரா
“அவனை லவ் பண்ற போண்ணுக்கே இந்த நிலைமைன்னா வேற பொண்ண நாம கட்டி வச்சா உடனே டைவர்ஸ்ல தான் வந்து முடியும் போல ண்ணா “
“இப்போ என்னடா பண்றது “ என்று பேசிக்கொண்டு நிற்கும் போது தூரத்தில் நிற்கும் காரிலிருந்து ஆர்யன் இறங்கி வருவதை பார்த்து
“இவர் இங்க என்ன பண்றாரு “ என்று அங்கேயே மீண்டும் மறைந்து கொண்டனர்.