“அப்பவேவா?” என்றாள் ஆச்சர்யமாய்.

“ம்ம்..! என்னவோ தெரியலை. அப்ப இருந்து அவளோட முகம் என் மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆன பொண்ணு. சின்ன பொண்ணு வேற. இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு எவ்வளவு சமாதானம் எனக்கு நானே சொல்லிகிட்டாலும், மனசு என்னவோ அவளை நினைக்கிறதை நிறுத்தவே இல்லை.

ஒருவழியா இதெல்லாம் ஒரு ஈர்ப்புன்னு என்னை நானே தேத்திகிட்டு வந்தா, மேரேஜ்க்கு முதல் நாள் மண்டபத்துக்கு கிளம்பி மறுபடியும் அதே பொண்ணு பட்டுபுடவையில் தேவதை மாதிரி கண்ணு முன்னாடி நிக்கிறா. அந்த நிமிஷம் எனக்குள்ள அப்படி ஒரு பீல். அந்த யாழினி கிட்ட கூட அப்படி உணர்வை நான் உணர்ந்ததில்லை.

விடிஞ்சா இன்னொருத்தருக்கு மனைவியாகுற பொண்ணை இப்படி பார்க்குறது தப்புன்னு என்னை நானே சமாதனப் படுத்திப் பார்த்தேன். முடியவே இல்லை. ஏதோ எல்லாமே என்னை விட்டு போற மாதிரி ஒரு பீல். எனக்குன்னு யாருமில்லாத பீல். அதான் அன்னைக்கு கீர்த்தனாவை என் கூட வரசொல்லி கூப்பிட்டேன்.

அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவள்,

“நல்லவேளை அண்ணியை அன்னைக்கு உங்க கூட கூட்டிட்டு வந்திங்க. இல்லைன்னா, எங்களோட சேர்த்து அவங்களுக்கும் ஏதாவது ஆகியிருக்கும்” என்றவளுக்கு கண் கலங்க,

“உன்னை ரத்த வெள்ளத்துல பார்த்தப்பதாண்டி உணர்ந்தேன், அதுக்கு பேர் ஈர்ப்பு இல்லை, காதல்னு. எப்படி ஒரு சூழ்நிலையில என் காதலை உணர்ந்திருக்கேன் பாரு. வேடிக்கையா இல்ல” என்றான்.

“போதும் எதுவும் சொல்ல வேணாம்” என்றவளின் கண்ணீரைக் கண்டவன்,

“எப்ப பார்த்தாலும் அழுகையா?” என்றான்.

“இது சந்தோஷத்துல தானா வருது. நான் என்ன பண்ண?” என்றாள்.

“வேதாமா நீ சந்தோஷமா இருக்கியா?” என்றான் ஒரு விதமான மோன மனநிலையில.

“ம்ம். ரொம்ப” என்றாள் சிரிப்பும் கண்ணீரும் கலந்து.

“விஜயை பிடிச்சிருக்கா?” என்றான் மீண்டும்.

“விஜயை மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்றாள்.

“ஒரு ஹக்” என்றான்.

“நோ..!”

“அட்லீஸ்ட் ஒரு கிஸ்” என்றான்.

“நோ..!”

“ஹேய் இதெல்லாம் அநியாயம்டி” என்றான்.

அவனையே காதலாய் பார்த்தவள்,

“எனக்கு ஒரு ஹக், ஒரு கிஸ் எல்லாம் பத்தாதுன்னு சொல்ல வந்தேன். உயிரும் உணர்வுமா எனக்கு எப்பவுமே நீங்க வேணும். உங்க காதல் வேணும்” என்றாள் அவனுள் புதைந்தபடி.

அதற்குமேல் சொல்லவா வேண்டும் வேண்டும் விஜய்க்கு.

முத்தம் சிதறிய முகிலாய், மொத்தமுமாய் சிதறி, முத்த ஜாலங்களால் அவளை வர்ணஜாலமாக்கிக் கொண்டிருந்தான். ஆலிங்கனமும், ஆதர்சனமுமாய் தன் காதலை உணர்த்த, உயிரும் உணர்வுமாய் ஒன்றாகிப் போயிருந்தாள் விஜயின் வேதா.அவனின் பொக்கிஷம் அவள். அவளின் வரம் அவன்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு…

மதுரையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபமே கலை கட்டியிருந்தது. அன்று கிரிதரனுக்கு திருமணம். மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்தவனைப் பார்த்து பெருமூச்சு விட்டான் அகரன்.

“என்னடா மூச்செல்லாம் பலமா இருக்கு?” என்றார் மைதிலி.

“பின்ன என்னம்மா? இவனுக்கே இப்ப தான் கல்யாணம். இதுக்கப்பறம் நீங்க எப்ப எனக்கு பொண்ணு பார்த்து, நான் கல்யாணம் பண்ணி… அதை நினைச்சேன்” என்றான் அகரன்.

“என்னது பொண்ணு பார்க்கனுமா?இருப்பத்தி மூணு வயசுல சாருக்கு கல்யாணம் கேட்குதோ?” என்றார் மைதிலி.

“இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சா தான அட்லீஸ்ட் ட்வென்டி பைவ்லயாவது முடியும்” என்றான் சோகமாய்.

“எடு அந்த தொடப்பக் கட்டையை” என்றார் மைதிலி.

“நோ மம்மி. வயலைன்ஸ் வேண்டாம்” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, பட்டுப் புடவை சரசரக்க வந்து நின்றாள் வேத வர்ஷினி.

“சரண் அண்ணாவும் அவரும் எங்க அகரா?” என்றாள்.

“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும் வேதா. சரண் அண்ணாவாவது எங்கையாவது போயிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா விஜய் அண்ணா நீ எங்க இருக்கியோ அங்க தான அவரும் இருப்பார்” என்றான் கிண்டலாய்.

“மானத்தை வாங்கதடா. இனியாவது மாமான்னு சொல்லி பழகு” என்றாள் வேதா.

“அதெல்லாம் பழகிடுச்சு மாத்த முடியாது” என்றான் அகரன்.

“கனி எங்கடா?” என்றார் மைதிலி.

“பொண்ணு ரூம்ல இருக்கா மைதிலிம்மா” என்றாள் வேதா.

“நான் தான் சொன்னேன்ல. அந்தா இருக்கார் விஜய் அண்ணா” என்று அகரன் சொல்ல  திரும்பினாள் வேதா. பட்டு வேஷ்டி சட்டையில் தனி மிடுக்குடன், தன் ஒரு வயது மகள் மேக வர்ஷினியை பாந்தமாய் மடியில் அமர்த்தியபடி இருந்தவனை கண்ணெடுக்காமல் பார்க்க,

“பப்ளிக்..பப்ளிக்” என்றான் அகரன் சிரிப்புடன்.

“போடா” என்றவள் கணவனை நோக்கி சென்றாள்.

அதற்குள் விஜயின் அருகில் வந்து நின்றிருந்தனர் இருவர். ஒருவன் சித்தார்த் சரண், இன்னொருவன் துருவ் மனோகரன். அவர்கள் இருவரையும் ஒரு கையால் அணைத்துக் கொண்டான் விஜய்.

“மாமா.. பாப்பா ஏன்க்கு..” என்று துருவ் மழலை குரலில் கேட்க, சித்தார்த்தோ அவனை முறைத்தபடி நின்றான். இதற்கும் துருவ் ஏழு மாதம் மூத்தவன்.ஆனால் சித்தார்த் தான் பெரியவன் தோரணையில் அவனை முறைத்தான்.

வேதா வரவும் இருவரும் அவளைப் பற்றிக் கொண்டனர்.

“அத்த..பாப்பா” என இருவரும் கேட்க,

“என் செல்ல குட்டிங்க ரெண்டு பேருக்கும் பாப்பா வேணுமா?” என்றாள்.

“ஆமா” என்று ஒன்றாய் தலையை ஆட்டினர்.

“நீங்க ரெண்டு பேரும் குட்டி பையன்ஸ். பாப்பா உங்களை விட குட்டி பொண்ணு. உங்களால தூக்க முடியாது. நீங்க பெரிய பையனா வளர்ந்தப்பறம் தூக்கலாம் சரியா?” என்றாள்.

“சரி” என்றான் துருவ். அப்போதும் சித்தார்த் முறைக்க,

“என்னடா பெரிய மனுஷா முறைக்கிற?” என்றாள்.

“பாப்பா” என்றான் பிடிவாதமாய்.

அவனின் பிடிவாதம் உணர்ந்தவள் விஜயை பார்க்க,

“சித்தார்த் கம்” என்று அவன் கையில் கொடுப்பதைப் போல் அவனே பிடித்திருந்தான். குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்த பிறகே விட்டான் சித்தார்த்.

துருவ் பாவமாய் பார்க்க, அவனிடமும் விஜய் அதே போல் கொடுத்தான். துருவும் முத்தம் வைக்க, அவனை முறைத்தான் சித்தார்த்.

“இந்த வயசுலையே இப்படி முறைச்சுகிட்டு நிக்கிறிங்க?” என்றபடி வந்தான் சரண்.

“எல்லாம் பாப்பாக்கு தான்” என்றாள் வேதா.

“தேவதையோட தேவதை பாப்பாவை யாருக்கு பிடிக்காம போகும்?” என்ற சரண்,

“மாமாகிட்ட வாங்கடி தங்கம்” என்று கையை நீட்ட,

மேக வர்ஷினியோ பொக்கை வாய் சிரிப்புடன் அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“அண்ணா இந்த குட்டிக்கு அவர் இருந்தா போதும். நம்மளை எல்லாம் கண்ணுக்கே தெரியாது” என்ற வேதா விஜயை முறைக்க,

“உனக்கு பொறாமைடி” என்றான் விஜய்.

“ம்ம் லைட்டா” என்றாள் சிரிப்புடன்.

விஜய் மார்க்கமாய் பார்த்து வைக்க,

“ப்ரொபசர் பார்வை சரியில்லை. இது பப்ளிக் பிளேஸ்” என்றாள்.

“சோ வாட். என் கண்ணு என் பொண்டாட்டி நான் பார்க்குறேன்” என்றான்.

“நீ பாரு ராசா? யாரு வேணாம்னா? என் மருமகளை என்கிட்டே குடுத்துட்டு நீ என்ன நடத்துவியோ நடத்து” என்ற சரண் குழந்தையை வாங்கிக் கொண்டு நகர,

“ஏங்க மானத்தை வாங்குறிங்க?” என்றான் வெட்கச் சிரிப்புடன்.

“இதென்னடி வம்பா போச்சு. பார்த்தாலும் தப்பு. பார்க்கலைன்னாலும் தப்பு. நான் பேசாம என் பொண்ணோட ஒரு ஓரமா உட்கார்ந்திருந்தேன். சும்மா கும்முன்னு பக்கத்துல வந்து உசுப்பேத்துறது நீ. அப்பறம் அங்க பார்த்திங்க இங்க பார்த்திங்கன்னு சொல்ல வேண்டியது” என்றான் உல்லாசமாய்.

“நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே?”

“இனிமே அப்படி பார்ப்பேன். நீ சொல்லுவா. அதான் முன்னாடியே சொல்லிட்டேன்” என்றவன் பார்வை மாற,

“ஆளை விடுங்க” என்று நகரப் போனவளை இழுத்து கைவளைவில் நிறுத்திக் கொண்டான்.

“தள்ளி போன, கொன்னுடுவேன். ஒழுங்கா என் கூடவே நிக்கணும்” என்றான்.

“அதுக்கு நீங்க ஒழுங்கா பேசாம இருக்கணும்” என்றாள் முனுமுனுப்பாய்.

மேடையில் இருந்த கிரி,

“மாம்ஸ், கல்யாணம் எனக்கு” என்றான் பாவமாய்.விஜய் சிரிக்க,

 “சரிடா நல்லவனே. நீ தாலியை கட்டு” என்றான் அகரன்.

“எங்கடா விடுறிங்க?” என்றவன் தாலியைக் கட்டினான்.

“ரொம்ப ஓவராத்தான் போறாங்க சின்ன அத்தை” என்றாள் சந்தியா.

“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்” என்றார் நீலாவதி.

“நானும் உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு தான் இருக்கேன்” என்றான் அகரன்.

“கடைசி வரைக்கும் திருந்த மாட்டிங்க” என்றவன் அவர்களை முறைத்து வைத்தான்.

இவர்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை விஜய்க்கு. மகளை ஒரு கையில் வைத்திருந்தவன், மனைவியை ஒரு கையால் அணைத்திருந்தான்.

“பெர்பெக்ட் ஸ்டில் சார். சூப்பர் ஜோடி” என்று போட்டோ கிராபர் சொல்ல,

“வேதா”

“ம்ம்”

“விஜயை பிடிச்சிருக்கா” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“யோவ் போயா. இது கல்யாண மண்டபம்” என்று வெட்கத்துடன் நகர, விஜய் சிரித்த சிரிப்பில் அனைவரும் இவர்களைத்தான் பார்த்திருந்தனர்.

முத்தம் சிதறிய முகிலே..!

அமைதியா படிச்சவங்க எல்லாம் கருத்தை சொல்லிட்டு போங்க டியர்ஸ்.