“விஜய் சாருக்கு என்னாச்சு? அவங்க அம்மா தவறிட்டாங்களாமே?” என்று ரம்யா கேட்ட கேள்விகளுக்கு கூட அவள் பதில் சொல்லியிருக்கவில்லை.
“சாரோட அம்மா இறந்ததுக்கு நீ ஏன் ஒரு வாரம் காலேஜ் வரலை?” என்ற கேள்விக்கு கூட அவள் பதில் சொன்னாளில்லை.
முப்பதாம் நாள் மோட்ச தீபமேற்றி, படையலிட்டு சாமி கும்பிட்டு முடித்த மறுநாள் காலை கிளம்புவதற்கு ஆயத்தமாய் இருந்தனர் வேதாவின் குடும்பத்தினர்.
“அப்போ நாங்க கிளம்புறோம் தம்பி” என்று விஜயிடம் சொல்ல,
“ஓகே அங்கிள்” என்ற விஜயின் குரலில் உணர்வேயில்லை.
“எத்தனை நாளைக்கு தம்பி இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருப்பிங்க. கஷ்ட்டம் தான். ஆனா மீண்டு வந்து தான ஆகணும் தம்பி” என்றவர்,
“வேதா பார்த்துக்கோமா” என்றார்.
“சரிங்கப்பா” என்று அவள் தலையை ஆட்ட,
“கீர்த்தனா உடம்பை பார்த்துக்கோமா” என்ற மைதிலி,
“இந்த நேரத்துல சொல்லக் கூடாது தான். பத்து நாளல்ல சந்தியாவுக்கு வளையல் பூட்டனும்.அவளுக்கு ஒன்பதாவது மாசம் ஆரம்பிச்சுடும். நீங்க வரும் போது கவனமா வாங்க” என்றார் மைதிலி சரணிடம்.
“நான் பார்த்துக்கிறேன்மா. நீங்க போயிட்டு போன் பண்ணுங்க” என்று அனைவரையும் அனுப்பி வைத்தான் சரண்.
“நீங்க இன்னும் கிளம்பலையா?” என்பதைப் போல் யாழினியின் குடும்பத்தை பார்த்து வைத்தான் சரண். முப்பது கும்பிட வந்தவர்கள் கிளம்பாமல் அங்கேயே இருந்து எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தனர்.
விஜய் கையை இறுக மூடி கோபத்தை கட்டுப்படுத்த,
“காலேஜ் கிளம்பனும் வாங்க” என்ற வேதா அவனை அந்த இடத்தில் நிற்க விடவில்லை.
“நான் திரும்பி வரும் போது, யாராவது என் கண்ல பட்டிங்க” என்று விரலை நீட்டி எச்சரித்தவன், கோபம் கலந்த மனநிலையுடன் தான் கல்லூரிக்கு கிளம்பினான்.
“கோபத்தை குறைங்க முதல்ல” என்றாள் வேதா.
“பேசாம போய்டு. அவங்களை வீட்டுக்குள்ள விட்டதே எனக்கு பிடிக்கலை. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கா ஓட்டிகிட்டு வந்து, அப்பறம் மொத்தமா உரிமை கொண்டாடுவாங்க. சுயநலத்தோடா உச்சகட்டம் அவங்க” என்றான்.
“நேத்து அத்தைக்கு சாமி கும்பிட்டாதால வந்தாங்க. அந்த இடத்துல என்ன சொல்ல முடியும். இன்னைக்கு கிளம்பிடுவாங்க. நீங்க பேசாம இருங்க” என்றவள் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
கிளாசிலும் அமைதியாகவே இருந்த வேதாவைப் பார்த்து ரம்யாவிற்கு தான் மண்டை காய்ந்தது.
“வேதா ஏன்டி இப்படி இருக்க? என்னதான் ஆச்சு உனக்கு?” என்று கேட்டுத் தவித்துவிட்டாள்.
“கொஞ்சம் தலைவலி மச்சி. வேற ஒண்ணுமில்லை” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
“இந்த வேதா ஏன்டி இவ்வளவு அமைதியா இருக்கா. கொஞ்ச நாளா ஆளே சரியில்லையே?” என்று ஹரிணி லாவிடம் சொல்ல,
“ம்ம். நானும் கவனிச்சேன்” என்றாள் லயா.
“நம்ம விஜய் சார் முகம் கூட சரியில்லை. என்னவா இருக்கும்?” என்றாள் ஹரிணி.
“அவரோட அம்மா இறந்த பீலிங்கா இருக்கும்” என்றாள் லயா.
அன்று வகுப்பிற்கு வந்த விஜயும் என்னவோ போல் இருந்தான். தலைவலி அவனுக்கு மண்டையை உடைத்துக் கொண்டிருக்க, இறுகிப் போன முகத்துடன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு இவருக்கு? ஏன் என்னவோ போல இருக்காரு?” என்று எண்ணியவள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.வேதா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் கருத்தில் இதெல்லாம் படவில்லை.
“இல்ல. இன்னைக்கு என்னவோ எனக்கு வித்யாசமா தெரியுது” என்றாள்.
ஹரிணி விஜயைப் பார்க்க, அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் அவன் வேலையில் கவனமாய் இருந்தான்.
“என்னவோ தப்பா இருக்கே” என்றாள் ஹரிணி.
“இன்னைக்கு விஜய் சார்க்கு கிளாஸ் எடுக்குற மூட் இல்லை போல. என்னவோ எடுக்கனும்னு எடுக்குற மாதிரி இருக்கு” என்றாள் லயாவும்.
“சாரி காய்ஸ்..! இன்னைக்கு கிளாஸ் ஓவர். நெக்ஸ்ட் கிளாஸ்ல பார்ப்போம். கேரி ஆன்” என்றவன் அடுத்த நிமிடம் வெளியே சென்றுவிட்டான்.
“விஜய் சார் பாதி கிளாஸ்லையே கிளம்பிட்டார். இதெல்லாம் சரித்திரத்துல தான் குறிச்சு வைக்கணும்” என்று ஆனந்த் சொல்லிக் கொண்டிருக்க, வேதாவின் சிந்தனை முழுவதும் விஜயை சுற்றி தான்.
ஆர்வக் கோளாறில், இருக்கும் இடம் மறந்து எழுந்து சென்றவள் அங்கு சென்று கொண்டிருந்தவனைப் பார்க்க,
“ஹேய் வேதா என்னாச்சு? ஏன் சாரையே பார்த்துட்டு இருக்க?” என்றாள் ரம்யா.
“பச் விடு ரம்யா” என்று சலித்தாள் வேதா.
“இன்னும் அவரைப் பார்க்குறதை நீ விடலையா? என்ன பொண்ணு நீயெல்லாம்? அன்னைக்கு என்னவோ பெரிய இவளாட்டம் பேசுன?” என்றாள் லயா.
ஏற்கனவே அவனுக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தவளுக்கு, லயாவின் பேச்சைக் கேட்கும் பொறுமை எல்லாம் அறவே இல்லை.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு. அவர் என் புருஷன். அப்படித்தான் பார்ப்பேன். அதுல உனக்கென்ன வந்தது?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவள்,
“புருஷனா?” என்று அவர்கள் அதிரும் முன்பு ரம்யா தான் அதிர்ந்திருந்தாள்.
“என்ன மச்சான் சொல்ற?” என்று ஆனந்த் அதிர்ந்தவனாய் கேட்க,
“எஸ்..! ஐ ஆம் மேரிட். ஐ ஆம் மிஸ்ஸஸ். விஜய ரகு நந்தன். போதுமா? நான் பார்க்குறதுல இப்ப உங்களுக்கு பிரச்சனை இல்லையே?” என்று ஹரிணியிடம் கேட்டவள்,
“உங்க யாருக்காவது வேற ஏதாவது கிளியர் பண்ணனுமா?” என்றாள் மற்றவர்களிடம்.
“ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் மச்சான்” என்றனர் நண்பர்கள்.
“கோபப்படாத மச்சி. நான் உனக்கு எல்லாத்தையும் அப்பறமா சொல்றேன்” என்றவள் வேகமாய் ஸ்டாப் ரூம் செல்ல, அங்கே அவன் இல்லை.
“என்னாச்சு வேதா?” என்றபடி வந்தான் சரண்.
“விஜய் சார்” என்று அவள் இழுக்க,
“அது அவனுக்கு தலைவலியா இருக்குன்னு லீவ் சொல்லிட்டு கிளம்பிட்டான். ஈவ்னிங் உன்னை நான் பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றான்.
“அவரை எதுக்கு தனியா அனுப்புனிங்க?” என்றாள்.
“ஏன் என்னாச்சு?” என்றான்.
“அந்த யாழினி பேமிலி இன்னும் வீட்ல தான் இருக்காங்க. இவர் ஏற்கனவே கோபத்துல இருக்கார்” என்று வேதா சொல்ல,
“ஆமால்ல இதை எப்படி நான் மறந்தேன்” என்று யோசித்த சரண்,
“அண்ணி வீட்ல தான்டா இருக்கா. நான் கால் பண்ணி சொல்லிடுறேன்” என்றான்.
“ம்ம்..” என்று செல்லப் போனவள்,
“அண்ணா எனக்கும் லீவ் வேணும். வந்து சைன் பண்ணி குடு” என்றாள்.
“விஜய் கிளம்பிட்டான். நீ எப்படிமா போவ?” என்றான் சரண்.
“நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன். இல்லைனா அகரன்கிட்ட வண்டி சாவி வாங்கிக் குடுங்க. அவனை நீங்க பிக்கப் பண்ணிக்கங்க” என்றாள்.
“சரி வா..!” என்றவன் அவளுக்கு லீவ் அப்ளிகேஷன் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான். வரும் வழியெல்லாம் அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
“பேசாம அண்ணி சொன்ன மாதிரி இன்னைக்கு லீவே போட்டிருக்கலாம். இவர் வர்றதுன்னா என்னையும் கூட்டிட்டு வர்றதுக்கென்ன?” என்று அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டே வந்தாள்.