பெண்களின் வேதனையை நினைத்தவனுக்கு அவர்களை போய் இவ்வளவு கேவலமாக நினைத்து விட்டானே என்று வேதனையாக இருந்தது…
கதவை சாத்திவிட்டு,சத்தம் போடாமல் அவளின் அருகில் வந்தான்…
“போயிட்டானா” என்று எழுந்து பார்த்தாள்,அவளுக்கு அருகில் நின்றவனை வெகு சாதாரணனமாக பார்த்து விட்டு மீண்டும் படுத்துகொண்டாள்…
ஏண்டி உனக்கு பயமா இல்லையா??
எதுக்கு…
ஒரு வயசு பையன் கூட இருக்கிற அதை நெனச்சி தான்…
யாரு நீ வயசு பையானா???செம்ம காமெடி போ என்று சிரித்தவளை கடுப்பாக பார்த்தான்…
33 வயசாகுது நீ வயசு பையன்னு சொல்ற…உங்களுக்கு மட்டும் என்ன madam 26 ஆகலையா??
உன்கிட்டா நான் இப்போ கேட்டனா??
அர்ஜுன் ஏற்கனவே வயிறு வலிக்குது நீ எதையாவது பேசி இன்னும் கடுப்பாக்காத…
என் மேல இன்னும் உனக்கு நம்பிக்கை இருக்கா அம்ம்மு??
இந்த கேள்வியை கேட்டதும் அவளின் கண்களில் நீர் வழிந்தது….
அம்மு அழாத…sorry டி…
எதுவும் பேசாமல் கண்களை மூடி கொண்டாள்…அவளின் அருகில் சென்று அவளை மடி தாங்கி கொண்டான்…
அவளும் அவனின் வயிற்றை கட்டி கொண்டு கண்களை மூடியவளுக்கு கண்களில் நீர் வந்து கொண்டே இருந்தது…..அந்த கண்ணீர் அவனையும் நனைத்தது…
கடந்த காலத்தில அவன் அவளை படுத்திய கஷ்டத்திர்க்கு இப்போது என்ன பதில் அவன் கொடுப்பான் எப்படி அவளுக்கு ஆறுதல் அளிப்பான்…
Sorry அம்மு என்றதும் அவளுக்கு அழுகை இன்னும் வெடித்தது…
“உனக்கு எவ்வளவு கோவம் இருந்தாலும் என்னை அடிச்சிரு அம்மு இப்படி அழுகாதடி” என்றவனுக்கும் கண்களில் நீர் வழிந்தது…
எழுந்து அமர்ந்தவள்,அவன் முகத்தை பார்த்து ஏன் அர்ஜுன் இப்படி பண்ண??உன்னை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா??
அம்மு எனக்கு சத்தியமா இதுக்கு என்ன பதில் சொல்லி உன்ன சமாதான படுத்துறதுன்னு தெரிலடி!!
உன்னோட சமாதனம் எனக்கு தேவையே இல்லை போடா…உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் போ என்றவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விசும்பலாக மாறியது….
அவனின் மேலே சாய்ந்து உறங்கி விட்டாள்…..இவனால் தான் பல நாள் தூக்கத்தை துளைத்து இருந்தாள் இன்று அவளின் அருகில் அவன் இருப்பதால் நிம்மதியில் உறங்கி விட்டாள்…
அவளை அப்படியே பெட்டில் படுக்க வைத்தவனின் சட்டையை விடாமல் பிடித்திருந்தாள்…அவளின் அருகிலே படுத்து கொண்டான்…தூக்கத்திலே அவனை அணைத்து கொண்டு உறங்கி விட்டாள் அதில் துளியும் காமமா இல்லை சேயை தாங்கும் தாயை போல் அவளை அணைத்து கொண்டு அவனும் உறங்கி விட்டான்…
“”இந்த காமம் இல்லாத அணைப்பு கூட உண்மையான காதலில் மட்டும் சாத்தியம்…
“கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக.
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே…”
“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா ..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா”
அவளின் முனங்கல் சத்ததில் எழுந்தான்…
அவளை பார்த்தபோது வலியில் வயிற்றை பிடித்துகொண்டு படுத்திருந்தாள்…
அம்மு அம்ம்மு…
எதுக்கு அர்ஜுன் கத்துற…
நீ போயிட்டு குளிச்சிட்டு வா நம்ம HOSPITAL போகாலாம்….
சரி என்றவளால் எழ கூட முடியவில்லை…
அவளை அப்படியே தூக்கி கொண்டு போய் வாஷ் ரூமில் விட்டு விட்டு…அவள் கையில் ஒரு TOWEL ஒன்றை குடுத்தவன்,நான் போயிட்டு கிளம்பி வரேன்…குளிச்சிட்டு ரெடியாக இரு…DOOR லாக் பண்ணிட்டு போறேன்…பயபடாதா…
சரிடா நீ போ..
உனக்கு நக்கலா அதிகாமகிருச்சிடி இப்படி தான் பேசுவ…
உனக்கு என்ன பேசாம போ…
அவன் குளித்துவிட்டு கிளம்பியவன்…அவளுக்கு வயிற்றுக்கு இதமாக இருக்க கூடிய மோரை கலந்து வந்து கதவை தட்டினான்…
அம்மு!!உள்ளே வரட்டுமா??
“வேண்டாம்ன்னு சொன்ன போகவா போற…”
“அதுவும் சரி தான்” என்றவன்,அவளின் கையில் மோரை கொடுத்து பருக வைத்தான்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அம்மு…அவ்வளவா எனக்கு தெரில்லை உனக்கு என்ன கொடுக்கணும்ன்னு…
ரொம்ப தொல்லை பண்றேன்னு விஷம் ஏதும் கலக்களையே???
கலந்திருக்கலாமோ??
போடா…
புடவையில் தான் கிளம்பி இருந்தாள்….
“அம்மு!! முகத்தை பார்த்தா பாவமாக இருக்கிற ஆனால் பேச்ச பார்த்தா அப்படி ஒன்னும் தெரியவில்லை…”
பெரிய கண்டுபிடிப்பு தான்….
உன்னை புடவை கட்டாதன்னு தான சொன்னேன்…
நீ சொன்னா நான் கேட்ருவேனா….
சரி கிளம்பி தொலை போவோம்..
சரி வந்து தொலையிறேன்…
கீழே காலை ஐந்து மணிக்கு அவனின் தாய் கீழே வரும்போது, இவர்களும் கீழே வந்தனர்…
கொஞ்ச நேரத்திலே, “ஏன் அர்ஜுன் பேசாம வர” என்று கேட்டவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தான்..
எப்பவுமே இப்படி தான் இருக்குமா??
ஆமா…தெரிஞ்சி என்ன பண்ண போற…
வர போறவங்கள நல்லா பார்த்துப்பேன் இல்லையா??
Ohh அர்ஜுன்க்கு கல்யாண ஆசை வந்துருச்சா??
வயசாகுதே…
அப்போ பொண்ணு ரெடி ஆக இருக்கு அப்படிதானே…
ஆமாம்….ரெடின்னு தான் நினைகிறேன்…
ஆமா ஆமா நீ இருக்க அழகுக்கு எல்லா பொண்ணுங்களும் QUE ல வந்து நிற்பாங்க பாரு…
“ஏண்டி எனக்கு என்ன குறைச்சல்ன்னு சொல்லுடி..”
அப்போது தான் அவனை திரும்பி பார்த்தாள்….
தன்னை விட சற்று நிறம் அதிகம் தான்…ஜிம்முக்கு சென்று உடலை அவ்வளவு கச்சிதமாக வைத்து கொண்டிருந்தான்…கூர் நாசி…பெண்களுக்கு தான் பேபி லிப்ஸ் என்பார்கள் ஆனால் இவனுக்கும் பேபி பிங்க் நிறத்தில் இருந்தது…முன்பே அவன் அழகன் தான் அனால் இப்போது வயசாகி கொண்டே செல்வதால் இன்னும் பேரழகனாக இருந்தான்…அவன் முகத்தில் எப்பவுமே இருக்கும் அந்த சிரிப்பு மட்டும் கொஞ்சம் இல்லாதது போல் இருந்தது..
என்ன madam சைட் அடிச்சிடிங்க்ளா??
ஆமா உன்னை சைட் அடிக்கிறாங்க…போடா என்று திரும்பி கொண்டாள்…
எங்க இருந்துடி இந்த அளவுக்கு வாய் பேச கத்துகிட்ட…சரியான கொழுப்புடி உனக்கு..
ஆமா ஆமா நீ சமச்சி போட்டத சாப்டுட்டு தான் எனக்கு கொழுப்பு அதிகமா இருக்கு பாரு….
அம்மா தாயே இதுக்கு மேல உங்கிட்ட வாய குடுக்க எனக்கு விருப்பமில்லை…
அர்ஜுனை பார்த்த அந்த டாக்டர்,ஹே அர்ஜுன் !HOW are you ?
ஹே ஷாலு I M FINE…WHAT ABOUT YOU…
அம்ரிதாவிர்க்கு காதில புகை வராத குறையாக இருந்தது…
ஏன்டா வந்த நோயாளிய பார்க்காம இவ எதுக்கு இவன்கிட்ட இந்த வழி வழியிரா??
“சும்மாவே இவன் ஆடுவான் இதுல இவ வேற படுத்துறா”
டாக்டரை முறைக்க முடியாததால் அவனை முறைத்தாள்…
டேய் அர்ஜுன்??
நீங்க அப்பறமா வழிஞ்சிகோங்க…இப்போ எனக்கு TREATMENT பாருங்க….
ஐயோ sorry அம்மு…
போடா விளக்கெண்ணை…
உனக்கு எதுக்குடி கடவுள் இந்த அளவுக்கு வாய குடுத்துருக்காரு…
உனக்கென்னடா…
உன்கிட்டா பேச என்னால முடியாது சாமி..
டாக்டர் ஷாலினிக்கி இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று ஒன்னும் புரியவில்லை.. ஆனாலும் அதை பார்க்கும்போது நன்கு புரிந்து விட்டது அர்ஜுன் அவளை எந்த அளவுக்கு காதலிக்கிறான் என்று…
ஷாலு இவளுக்கு TREATMENT பாரு….முடிஞ்சா இவ வாய்க்கும் ஒரு ஊசிய போடு…
போடா…
அவளை செக் பண்ணி பார்த்துவிட்டு ஒன்னும் இல்லை அர்ஜுன் அவ நல்லா இருக்கா…இந்த நேரத்துல சிலருக்கு இப்படி தான் இருக்கும்…இந்த tablet ,சிரப் குடிங்க சரி ஆகிரும்…
ஓகே தேங்க்ஸ் ஷாலு நாங்க கிளம்புறோம்..
ஓகே அர்ஜுன்…
அம்மு நீ காருக்கு போ நான் வந்துடுறேன்…
எனக்கு போக தெரியும்…நீ உன்னோட வழியிற வேலைய பாரு…
“அம்ம்மு”…. என்று கத்தியதும் அவள் ஓடிவிட்டாள்…
இவர்களை பார்த்த ஷாலினிக்கு அவ்வளவு சிரிப்பு வந்தது…
அர்ஜுன் ஒன் செக்…அவளை ரொம்ப love பண்றியா??
அதற்க்கு பதில் சொல்லாமல் ஒரு சிரிப்போடு சென்று விட்டான்…
காரில் அவளோடு செல்லும் வரை அமைதியாகவே சென்றான்…
அம்மு!!
சொல்லு கேட்குது…
ஏண்டி எப்போ பார்த்தாலும் உர்ருன்னு இருக்க..
இந்த மூன்று வருஷத்துல நிறைய விஷயம் இழந்துட்டேன் அர்ஜுன்…உன்னால அதை சீக்கிரம் கடக்க முடிஞ்சிருச்சி ஆனால் என்னால முடிலையே என்ன பண்றது…
நான் ஒன்னு கேட்கவா அர்ஜுன்??
காரை ஓரமாக நிறுத்திவிட்டு,சொல்லு அம்மு..
நேத்து இரவுல இருந்து எதுக்கு இப்படி அக்கறை காட்ற…திரும்பவும் என்னை விட்டுட்டு எப்போ போகலாம்ன்னு இருக்க..
என்னடி இப்படி பேசற…
நீ மனிஷனே இல்லை தெரியுமா சரியான devil டா நீ…உன்னை எதுக்கு தான் திரும்பவும் பார்த்த தொலைச்ச்னோ??உன்னை நான் திரும்பவும் நம்பி இருக்கவே கூடாது என்று சொல்லும்போது அவளுக்கு அழுகை வெடித்தது…
இந்த மூணு வருஷத்த கடக்க நான் எப்படி கஷ்டபட்டேன்னு உனக்கு தெரியுமா??வெளிய சிரிச்சாலும் உள்ளுகுள்ள உடைஞ்சு போயிருக்கேன்…
மனசு ரொம்ப வலிக்குது அர்ஜுன்…என்னை ஏன்டா விட்டுட்டு போன…எதுக்கு என்னோட வாழ்க்கைல வந்த…உன்னால தான் எனக்கும் தூக்கம் போச்சி,நிம்மதி போச்சு எல்லாமே போச்சு…திரும்பவும் நீ விட்டு போறத என்னால தாங்க முடியாது அர்ஜுன்…
உன்மேல் இருந்த நம்பிக்கை எல்லாம் மொத்தமாக போயிருச்சி….திரும்பவும் உன்னை நம்பி நான் ஏமாற விரும்பல…போதும் அர்ஜுன் எல்லாமே போதும்…
உன்னோட வாழ்க்கை முறையும் என்னோட வாக்கை முறையும் எப்பவுமே ஒத்து வராது…
அவள் பேச பேச அவனுக்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது….அவள் அவளின் வலிகளை சொல்லிவிட்டால் ஆனால் நான் பட்ட வேதனைகள்??