வீட்டிற்குள் கூட நுழையாமல் தின்னையில் தன் மருமகளின் கையைப் பிடித்தபடி பதற்றமாக வெள்ளையம்மா அமர்ந்திருந்தார்.
வாய்பாட்டுக் கடவுளிடம் யாசகம் கேட்டபடி இருக்க கண் என்னவோ கேட்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.
மதியம் வரை வீட்டில் இருந்த தங்கப்பாண்டி மற்றும் வீரப்பாண்டி அப்போது தான் தொப்பு, மில், என்று ஒரு சுற்று பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தனர்.
அண்ணன் தம்பி இருவரும் ஒரே புல்லட்டில் தான் வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே புல்லட்டை நிறுத்தி விட்டு திரும்பியபோது தான் தின்னையில் பதறிய முகத்துடன் கை நீட்டி இவர்களை அழைத்தபடி அமர்ந்திருக்கும் வெள்ளையம்மாவை பார்த்தனர்.
பார்த்த மறு நொடி என்னமோ எதுவென்று ஓடித்தான் இருவரும் சென்றனர். தன் மகன்களை பார்த்த வெள்ளையம்மா இருவரின் கையை பிடித்தபடி “ ப்பா….. “ என்று வார்த்தையின்றி அவர் அருகே அமர வைத்துவிட்டார்.
இவர்கள் வரவும் மீனாட்சி உள்ளே சென்று விட்டார்.
இருவரும் அம்மாவின் முகத்தை பார்த்து என்னவோ என்று “ என்ன ஆச்சியம்மா “ என்று ஒன்று போல கேட்க வெள்ளையம்மா அனைத்தையும் சட் என்று போட்டு உடைத்து விட்டார்.
அதைக் கேட்ட மறு நொடி வீரபாண்டி வெள்ளையம்மா கையை உதரிக்கொண்டு எழுந்து நின்றவர்
“என்ன உளறுற ம்மா, அவுனுங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க அவுங்க நட்பை போய் தப்பா பேசுற “ என்று கத்திக்கொண்டு இருக்க அதுக்கு அப்படியே மாறாக தங்கபாண்டி அமைதியாக யோசிக்க தொடங்கினார்.
வெள்ளையம்மா சொன்னதை கேட்டு யோசித்தவருக்கு ஒருவேளை இப்படி இருக்குமோ என்று தான் தோன்றியது. தோன்றிய மறு நிமிடம்
“ வீரா செத்த அமைதியா இரு. இது பொறுமையாப் பேச வேண்டிய விஷயம் “ என்று அமைதிபடுத்த பார்க்க, வீர பாண்டி
“என்ன ண்ணா நீயும் அம்மா சொல்றது சசரின்ற மாதிரி பேசுற. அண்ணா தம்பி மாதிரி பழகிட்டு இருக்க புள்ளைங்கள தப்பா யோசிக்காதிங்க ண்ணா “ என்று ஒரு நல்ல தந்தையாக அவர் மகனை பற்றி சரியாக புரிந்து பேசினார்.
உடனே தங்கப்பாண்டி “ சரி உன் பையன் அப்படி இல்லன்னே வச்சிப்போம் அப்போ அந்த சின்ன பையன் அவன் அம்மா எங்க.”
“அது அண்ணா அதுக்கு வேற காரணம் எதவது இருக்கும் “
“வேற என்ன காரணம் இருக்கும் நீயே சொல்லு வீரா”
“அது, அது,.. ண்ணா …” என்று அவர் திணறி தான் நின்றார்.
“அம்மா, நீ இத பத்தி யார் கிட்டயும் மூச்சு விட கூடாது. இது நம்ம பையன் வாழ்க்கை நினைவு இருக்கட்டும். வள்ளி மீனாட்சி மஞ்சுன்னு யார் மூலமாவும் இது வெளிய தெரிய கூடாது ம்மா “ என்று பல முறை சொல்லியே அனுப்பி வைத்தான்.
அதன் பின் தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று கதவைச் சாற்றி விட்டு போனை எடுத்தவர் இதை பற்றி முழுமையாக தெரிய விரும்பி யூடியூபில் வாய்ஸ் பட்டனை அமுக்கி
“பையன் பையன் திருமணம் பற்றி சொல்லு, பையன் பையன் திருமணம் பற்றி சொல்லு “ என்று சொல்ல அது பல வீடியோக்களை காட்டியது.
வீரா அவன் அண்ணா செய்வதை பார்த்துவிட்டு “ என்ன அண்ணா பண்றீங்க… இதை ஏன் இப்போ பாக்குறீங்க “ என்று முகத்தை சுளிக்க
“அட… நீ வேற வீரா. அது என்னன்னு தெரிஞ்சி கிட்ட தான ஒரு முடிவு எடுக்க முடியும். வீரா நம்ம பையன் வாழ்க்கை நம்ம தான் என்ன எதுன்னு பாக்கணும் டா “ என்று போனை பார்க்க அதில் இவர்கள் தேடியதை தவிர மற்ற அனைத்து வீடியோவும் வந்தது.
அதை பார்த்த தங்கப்பாண்டி “ இதை என்னன்னு போட்டு தேட வேற எதோலாம்மோ வருதே. இது என்னடா கல்யாணம் முன் காதல் அனுபவம்னு பேசுறான் “
“அந்த போனை இங்க தாங்க ண்ணா “ என்று அதை வாங்கி
“ஓரினச்சேர்க்கை திருமணம் “ என்று சொல்லவும் அதை பற்றி நிறைய வீடியோக்கள் வந்தது.
“ஓ…. இதுக்கு பேரு ஓரினச்சேர்க்கையா…. அமா வீர இது எப்படி உனக்கு தெரியும்”
“அது அண்ணா, இந்த போன் பாக்கும் போது ஒரு வாட்டி இப்படி ஒரு வீடியோ வந்துச்சி இரண்டு பசங்க கல்யாணம் பண்ண மாதிரி அதை வச்சி தான் போட்டன் “
“ஓ… சரி சரி “ என்று அதை ஒன்று ஒன்றாக பார்க்க தொடங்கினர்.
அதை எல்லாம் பார்த்த வீராவுக்கே இப்போது மாறன் மீது லேசாக சந்தேகம் வந்து விட்டது.
“ஒரு வேலை இப்படி இருக்குமோ “ என்று தலையை போட்டு குழப்பிக்கொள்ள தங்கப்பாண்டி
“வீரா, இத இப்படியே விட்ட நம்ம பையனும் இப்படி வந்து நிக்க வாய்ப்பு அதிகமா இருக்கு அதுக்குள்ள எதவது பண்ணணும்டா “
“நானும் அதான் யோசிக்கிறேன் ண்ணா என்ன பண்ண , இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கிறேன் “
“ஆனா நம்ம பையன் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்கிறானேடா என்ன பண்ண அதுவும் அந்த சின்ன பிள்ளை வேற இருக்கு “
“அதான் அண்ணா யோசனையா இருக்கு மொதல்ல இவனுங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும் ண்ணா. அந்த சின்ன பிள்ளைய கூட நம்ம பாத்துக்கலாம் “
“வீரா பேசாம நம்ம ஏன் இந்த விக்கிக்கு முதல்ல கல்யாணம் பண்ணி அனுப்பக்கூடாது “
“நல்ல யோசனை தான் அண்ணா மாறனுக்கு தெரியாம இவன் கல்யாணத்தை முடிச்சுட்டா எல்லாம் சரி ஆகிடும் நினைக்கிறேன் ண்ணா “
“ம்ம்ம் வீரா நாளைக்கே நம்ம ராஜன் கிட்ட இதை பத்தி பேசுவோம். ஆனா அதுவரை இந்த விஷயம் நமக்கு தெரியும்னு அவனுங்க கிட்ட காமிச்சுக்கக் கூடாது வீரா “
“ம்ம்ம் சரிண்ணா நான் அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லிடுறேன் “
“ இது தெரியும் தெரிஞ்ச நம்ம மவன் ஊருக்கு முன்னாடி அவன் கூட வாழ போயிடுவான்டா. எதுக்கும் ஜாக்கிரதையா தான் இருக்கணும் “ என்று எச்சரிக்கை செய்து விட்டே சென்றனர்.
இங்கு விக்ரமனுக்கு திருமணம் செய்யும் வேலையில் ஒரு குடும்பமே இறங்கி வேலை செய்வது தெரியாமல் அவன் பாட்டுக்கு இரவு உணவு முடித்துவிட்டு மொழியை தூக்கி கொண்டு அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
“ டேய் பக்கி அவன விட்டு போட ….” என்று மாறன் கத்த கத்த பைக்கில் வைத்து தூக்கி சென்றுவிட்டான்.
விக்ரமனுக்கு தெரியும் தனியே வீட்டுக்கு சென்றாள் இன்று செருப்படி நிச்சயம் என்று அதனாலயே மொழியை தூக்கி சென்றுவிட்டான்.
அவன் அம்மா ராஜாத்தி சிறு பையன் முன் அடிக்க மாட்டார் என்று நம்பிக்கையில் அவன் வீட்டுக்கு செல்ல, அங்கே இவன் நினைத்தது போல ராஜன் மற்றும் ராஜாத்தி இருவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி தான் நின்றனர்.
அதில் விக்ரமனினுக்கு கூடுதலாக ஒரு வால் ஒன்று முளைத்துவிட மொழியை தூக்கியபடி
“பேபி இதுதான் உங்க பாட்டி, இப்படி முறப்பா இருக்கிறாரே இவர்தான் உங்க தாத்தா. அப்புறம் இங்க தான் சமைப்பாங்க இங்க தான் தூங்குவாங்க பேபி “ என்று மொழியை தூக்கிக்கொண்டு அந்த வீட்டில் இருந்த எறும்பு புற்றை கூட விடாது சுற்றி காட்டினான்.
இதை பார்த்திருந்த ராஜனுக்கு வாய் நமநமவென அவனை திட்ட வரவும், குழந்தையை வைத்து கொண்டு எப்படி திட்ட என்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார்.
ராஜாத்தி அவன் செய்த அழும்பை கன்னத்தில் கை வைத்தபடி சோர்வாக பார்த்திருக்க, அப்போது மொழி தூக்கத்திற்கு கண்களை கசக்கியதை பார்த்த ராஜாத்தி
“டேய் விக்கி பேபி புள்ளைக்கு தூக்கம் வந்துடுச்சி போலடா, போய் தூங்க வைடா காலைல கூட இந்த வசந்த மாளிகைய சுத்தி காட்டு, இது எங்கயும் போகாது “ என்ற அம்மாவின் குரலில் தான் மொழி முகத்தையே பார்த்தான் விக்ரம் அதன் பின் மொழியை அழைத்துக்கொண்டு
“சரி பாய் ம்மா, நானும் தூங்க போறேன் “ என்று உள்ளே நுழைய போக ராஜாத்தி
“விக்கி அந்த பேபி புள்ளக்கு நைட் எதவது கொடுத்தியாடா சாப்பிடாம வெறும் வயித்துல தூங்க விடாதடா” என்று கத்த
“அதெல்லாம் மாறன் வீட்டுலயே சாப்பிட்டோம் ம்மா “ என்று கதவை அடைத்துக்கொண்டான்.
“ இந்த குரங்கை நம்பி அந்தத் மாறன் எப்படி தான் இந்த புள்ளைய கொடுத்தானோ “ என்று பெருமூச்சு விட்ட படி எழுந்து சென்றார்.