சர்வேஷ், விழுந்த வேகத்தில்.. வலது கையில் பிராக்சர். ஆபரேஷன்தான் சரியான வழி என்றனர் மருத்துவர்கள்.
குடும்பத்தார் எல்லோரும் அவனின் அறை வாசலில் கவலையோடுதான் நின்றனர். ‘காலையில்தான் பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஆகிவிட்டதே..’ என அக்கா மாமா அம்மா எல்லோருக்கும் கவலை. இன்னமும் மூன்று வாரத்தில் ஊர் செல்ல வேண்டுமே பிள்ளை என.
துர்கா குடும்பம் கிளம்பி வந்துக் கொண்டிருந்தனர் சென்னைக்கு.
கார்த்திக்கு கோவம்.. அவன் குடித்து விழுந்ததில். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.. இதைபற்றி. வண்டியிலிருந்து விழுந்துட்டான் எனதான் சொல்லியிருந்தார்.
கார்த்திக்கு, எதோ சரியாகபடததால்.. அந்த இரவு நேரத்தில் ராக்கேஷ்ஷிற்கு அழைத்து.. நடந்ததை சொன்னார். பின்னர் “என்ன நடக்குது ராக்கேஷ்.. ஏதாவது சொல்லுங்களேன்.. அவனை கேட்டால்.. அப்புறம் அப்புறம்ன்னு சொல்றான்..” என்றார் வருத்தமான குரலில்.
இப்படி எல்லோரையும் பதற வைத்தவன்.. ராக்கேஷ், வந்து பார்க்கும் போது.. மருந்துகளின் உதவியோடு உறக்கத்தில் இருந்தான்.. அமைதியாக.. நிம்மதியாக.
ராக்கேஷ் நண்பனை அறையின் உள் வந்து பார்த்தான். நெற்றியில் அடி.. கால்களிலும் நல்ல அடி.. ரத்தகட்டுகள் ஆங்காங்கே.. அவனின் நிறத்திற்கு பளிச்சென தெரிந்தது காயங்கள்.
வெளியே வந்தான் ராக்கேஷ்.
கார்த்திக், ராக்கேஷிடம் அவனின் போனினை கொடுத்தார்.. “கொஞ்சநேரம் இருக்கீங்களா.. நான் வராவை வீட்டில் விட்டு வருகிறேன்.. பிள்ளைகள் தனியா இருக்கு” என்றார்.
ராக்கேஷ் “நீங்க எல்லோரும் போங்க.. காலையில் அப்ரேஷன் போது வந்திடுங்க.. இப்போது நான் இருக்கேன்” என சொல்லி.. சமாதானம் செய்து எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பு வைத்தான்.
அதிகாலையில்தான் ஆபரேஷன். அப்போது வந்தால் போதுமே.. பயப்படும்படி ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருந்ததால்.. எல்லோரும் கிளம்பினர் வீட்டிற்கு.
ராக்கி முயன்று உடைந்த அவனின் போனினை ஆன் செய்தான். மனது கேட்க்காமல் அவனின் தரவுகளை ஆராய்ந்தான். அப்போது.. வர்ஷினிக்கு செய்தி அனுப்பியிருக்கிறான் சர்வேஷ்.
முதலில் “சாரி” என நாலுமுறை.
அடுத்து.. ‘பார்க்கணும் பேசணும்’ என இரண்டுமுறை.
வர்ஷினி சற்று நேரத்திற்கு முன்தான் பார்த்திருப்பாள் போல.. அப்போதும் அவளிடமிருந்து ஏதும் பதில் வரவில்லை.
ராக்கேஷ் நொந்து போனான்.. நண்பனை எண்ணி.
மறுநாள் ஆபரேஷன் நல்லவிதமாக முடிந்தது.. உறவுகள் எல்லோரும் மருத்துவமனையில்தான் இருந்தனர்.
ராக்கேஷ் காலையில் வீடு வந்துவிட்டான்.
பின் மாலையில் சர்வேஷ் கண்விழித்துவிட்டான் என தெரிந்துதான் மருத்துவமனை வந்தான் ராக்கேஷ்.
ராக்கேஷ் வந்து “ஏன் டா.. இப்படி நிலை தெரியாமல் குடிக்கும் அளவுக்கு என்னா ஆச்சு” என்றான்.
ராக்கேஷ்.. அவன் பார்த்த செய்தியையும்.. இவனின் பேச்சினையும் கனெக்ட் செய்துக் கொண்டு.. நண்பனையே பார்த்திருந்தான்.
சர்வா “என்ன ராக்கி..” என்றான்.
“ஏன் டா.. உண்மையை மட்டும் சொல்லு.. நீயாகத்தானே விழுந்த” என்றான்.
சர்வா திரும்பிபடுக்க முயன்றான்.. நண்பனின் பார்வையிலும் கேள்வியிலும். முடியாதுதானே. நண்பர்களிடம் மட்டும் அப்பட்டமாக மாட்டிக் கொள்வோம். ஓடவும் முடியாது.. தப்பிக்கவும் முடியாது.
ராக்கி “ஏன் டா.. அப்போது அந்த பெண்.. உண்மையாக இருந்தது டா.. நீதான் வேற நினைப்பில்.. அவளை காயப்படுத்தின. இப்போதும், நீ அதைதான் செய்கிறாய் அவளுக்குன்னு.. உனக்கு தெரியலையா” என்றான்.
சர்வேஷ் “டேய்.. இல்லை டா.. அப்படி எல்லாம் இல்லை டா.. நீயும் ஏதும் பேசாத” என்றான்.
“அஹ.. அப்படியா.. விடுவதற்குத்தான் இத்தனை வருஷம் கழிச்சி என் கண்ணில் பட்டாளா?.. எப்படி விட சொல்ற.. முடியாது. அவளுக்கு என்னை பிடிக்கும்.. என்னை மட்டும்தான் பிடிக்கும். கோவம்.. சரியான கோவம்தானே.. இருக்கட்டும்.” என்றான் வெறித்த பார்வையோடு.
நண்பன் “பிரச்சனையாகிட போதுடா.. அவங்க வீட்டில் அவளுக்கு அலைன்ஸ் பார்த்துட்டு இருக்காங்க டா.. இந்த வருஷத்தில் பிக்ஸ் ஆகிடும்.. நீ தேவையில்லாமல்..” என்றான்.
ஏதும் பதில் சொல்லவில்லை கண்களை மூடிக் கொண்டான் சர்வா. மனக்கண்ணில் அவளின் முகம்.. “எத்தனையோ பேரினை பார்த்திருப்பா டா.. ஏன், இன்னமும் தனியா இருக்கா” என்றான்.
ராக்கி “டேய்..” என்றான்.
“எனக்கும் தெரியாது டா.. அவளை பார்த்ததும் இப்படி.. ஒரே பிடியாக நிற்பேன்னு. அவளுக்கும் தெரிந்திருக்காது. எதோ இருக்கு டா.. இன்னமும் எங்களுக்குள்” என்றான் எதோ கவிஞனாக.
“போதும் டா.. இன்னமும் தெளியலை போல.. தூங்கு.. பேசலாம்” என சொல்லி வெளியே வந்தான் ராக்கி.
!@!@@!@!@!@!@!@!@!@!@!@!
எல்லோருக்கும் விடுமுறை முடிந்து பள்ளிநாட்கள் தொடங்கியது.
மீண்டும் நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் முதல் ஒருவாரம் சென்றதே தெரியவில்லை. வகுப்புகளும் ஏதும் பெரிதாக நடக்கவில்லை.. பள்ளி உற்சாகமாகவே இருந்தது.
வர்ஷினிக்கு, இப்போது பள்ளியின் சூழல் பழகியிருந்தது.. ஓரளவு தெலுங்கு தமிழில் பேசுமளவு தேறியிருந்தாள். அதனால் இந்த வருடம் தோழிகள் சிலர் அவளோடு பேசினர். வகுப்பு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர் வர்ஷினியோடு பேச.
பள்ளியில் இவளின் தோற்றம்.. ஆங்கிலமொழி ஆற்றல் கண்டு.. அவளை ஆசிரியர்கள் அடிக்கடி அழைத்து பேசினார். காலை நேர ப்ரையர்ரில்.. சில செய்திகளை சொல்ல.. வாய்ப்பு கிடைத்தது வர்ஷினிக்கு. அதனால், அவள் எல்லோருக்கும் தெரிந்தமுகமாகினாள். கொஞ்சம் கொஞ்சமாக.. ‘இது என் இடமும்தான்..’ என உணரத் தொடங்கினாள் வர்ஷினி.
சர்வேஷ்க்கும், நேரம் சரியாக இருந்தது பள்ளி.. மாலையில் கிரௌண்டில் நண்பர்களோடு ஒரு புட்பால் மேட்ச்.. அதை முடித்துக் கொண்டு.. கேண்ட்டினில் சமோசா உண்டுவிட்டு.. டியூஷன். இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு செல்லுவான். என்னமோ விளையாடாமல் அவனால் இருக்கவே முடியாது. மீராவிடம் பேசுவதில்லை.. மீண்டும் அவள் வீட்டிற்கு இவர்கள் இருவரும் பேசுவது தெரிந்து பிரச்சனை.. வேறு டியூஷன் சென்றுவிட்டாள். பள்ளியில் அவளை பார்க்கவே முடியவில்லை. சர்வேஷ், எதையும் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் சேர்ந்தே சுற்றும் நண்பர்களும் இருக்க.. சர்வேஷ் அலட்டிக் கொள்ளவில்லை எதற்கும்.
இப்போதெல்லாம் அடிக்கடி வர்ஷினியை அவன் கிரௌண்ட்டில் பார்க்கிறான்.. வராண்டாவில் பார்க்கிறான். ஆனால், அவள் தன்னை பார்ப்பதேயில்லை என உணர்ந்தான்.
பள்ளி எலெக்ஷ்ன் நேரம்.. இந்தமுறை பிரதாப் அந்த தேர்தலில்.. தலைமை மாணவன் பொறுப்பிற்கு போட்டியிட்டான். இந்த ஐந்து நண்பர்களும்.. தாங்களே நிற்பது போல வேலை செய்தனர் நண்பனுக்காக.
பிரதாப், வர்ஷினி.. பள்ளியில் பிரபலம்.. நல்ல ஆங்கிலமொழியில் பேசுவாள் என்பதால்.. இப்போது பிரதாப்.. தன் தோழி என்ற முறையில்.. வர்ஷினியை தன் பிரச்சாரத்திற்கு அழைப்பதற்காக.. அவளை பார்க்க வந்தான், அவளின் வகுப்பிற்கு.
பிரதாப் கண்களால் தேடினான் வர்ஷினியை.
ஷர்மி இருவரின் டிபன் பாக்ஸ்களோடு வெளியே வந்தாள்.
பிரதாப் “எங்க, வர்ஷி” என்றான்.
“ஸ்டாப் ரூம் போயிருக்கா” என்றாள். இப்போது இரு தோழிகளும் ஒரே வகுப்பு. பிரதாப், தலையை கோதிக் கொண்டே நின்றான்.
பிரதாப் தன் நண்பர்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் வர்ஷினி வந்தாள்.. ஷர்மி வர்ஷினி இருவரும் பேசிக் கொண்டே உண்டனர். அப்போது சொன்னால் பிரதாப் வந்து சென்றதை. வர்ஷினி “எதற்கு பார்க்க வந்தாங்க” என்றாள். இப்படியே இருவரும் பேசிக் கொண்டே உண்டனர்.
பிரதாப் உமர் இருவரும் வந்தனர் இப்போது.
பிரதாப் “ஹாய் வர்ஷினி ” என்றான்.
வர்ஷினியும் புன்னகை முகமாக தலையசைத்தாள். எல்லோரும் டியூஷனில் பாரத்துக் கொள்வார்கள்தான். முன்போல.. இவளோடு நடப்பதில்லை. இப்போது சர்வேஷ் வந்து சேர்ந்துக் கொள்ள.. இந்த கூட்டணி பேசிக் கொண்டே பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீடு வருவர். அதனால் டியூஷனில் பார்த்து புன்னகைப்பதோடு சரி.
இப்போது பிரதாப் “நாளைக்கு.. ஆப்டர்நூன்.. கிளாஸ் வைஸ்.. கேம்பைங் செய்ய போகனும்.. நீ என்சார்பாக வந்து கேம்பைங் செய்து தருவியா..” என்றான்.
வர்ஷினி ஹாப்பியாக சரி என்றாள்.
உமர் “வர்ஷினி பெர்மிசன் கேளு.. உங்க கிளாஸ் டீச்சர் யாரு.. நாங்களும் காலையில் வந்து கேட்க்கிறோம்” என திட்டமிட்டனர். வர்ஷினி புன்னகை மாறாமல் கண்களை உருட்டி சரி என்றதே பிரதாப்க்கு போதுமானதாக இருந்தது. “தேங்க்ஸ்” என்றான்.
வர்ஷினியும் ‘சரி’ என தலையசைத்தாள். அவளிற்கு இந்த நட்பினை இழந்த வருத்தம் இருந்தது.. அவளின் தெலுங்கு தமிழ் உச்சரிப்பினை கலாய்த்துக் கொண்டே பேசிக் கொண்டே வருவார்கள்.. இவள் ‘இந்த வார்த்தை எப்படி சொல்லணும்’ என கேட்க்கும் போது சொல்லியும் கொடுப்பார்கள். சர்வேஷ் பேசுவதில்லை என வருத்தம் இருந்தாலும்.. இந்த கலகலப்பிற்கு முன்னால்.. அவன் தன்னிடம் பேசவில்லை என்றாலும் பெரிதாக தெரியவில்லை பெண்ணுக்கு.