அதே மனநிலையில் கிளம்பி கல்லூரி வந்தவளை வரவேற்றது என்னவோ ஆனந்தின் சோகமான முகம் தான்.

“என்ன மச்சான் டல்லா இருக்க?” என்றாள் சிரிப்புடன்.

“அதையேன் கேட்கிற வேதா? நானும் வந்தப்ப இருந்து அதைத்தான் கேட்கிறேன். வாயவே திறக்க மாட்டேன்றான்” என்றாள் ரம்யா.

“வொய் சோகம்?” என்றாள்.

“எல்லாம் உன்னால தான்” என்றான் ஆனந்த்.

“நான் என்னடா பண்ணேன்?”

“நீதான வேதா அனுப்பறேன்னு சொல்லிட்டு அனுப்பலை. நான் ஏதோ அவசர அவசரமா எதையோ எழுதிட்டு வந்திருக்கேன். விஜய் சார் பார்த்துட்டு என்ன சொல்ல போறாரோ?” என்றான் பாவமாய்.

“டேய் என்னடா ஆளாளாலுக்கு ஓவரா பண்றிங்க. இது காலேஜ்டா. ஏதோ ஸ்கூல் ரேஞ்சுக்கு பயப்படுறிங்க?விடு மச்சான் பார்த்துக்கலாம்.” என்றாள்.

“அப்போ நீ நிஜமாவே எழுதலையா?” என்றான்.

“யார் சொன்னா? அதெல்லாம் எழுதியாச்சு?” என்றாள்.

“அப்பறம் ஏன் என்கிட்டே பொய் சொன்ன வேதா?” என்றான் கோபமாய்.

‘இவனொருத்தன் நான் எங்கடா எழுதுனேன்.?’ என்று நினைத்தவள்,

“அது இயர்லி மார்னிங் எழுந்து எழுதினேன் மச்சான். அதான் உனக்கு சென்ட் பண்ண மறந்துட்டேன்” என்றாள்.

“என்னவோ போ..!” என்று நொந்து கொண்டான்.

“நீ என்னடி அமைதியா இருக்க? என்ன பண்ணி வச்சிருக்க?” என்றாள் வேதா.

“அதெல்லாம் எழுதிட்டேன். என்ன நல்லா எழுதலை அவ்வளவு தான்” என்றாள்.

“என்ன இப்படி சாவகாசமா சொல்ற?”

“ஆமா, சார் எழுதிட்டு தான் வர சொன்னார். நல்லா எழுதிட்டு வாங்கன்னு சொல்லலை. சார் சொன்னதை மட்டும் தான் செய்வேன்.” என்றாள் ரம்யா கண அக்கறையாக.

“சரித்தான்..ரெண்டு பேரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களைத் தாண்டி சென்றான் விஜய்.

“சார் வந்துட்டார், வாங்க போய் சப்மிட் பண்ணிட்டு கிளாஸ் போகலாம்” என்று அவர்களை இழுத்துக் கொண்டு சென்றாள் ரம்யா.

“என்ன மார்னிங்கே வந்திருக்கிங்க?” என்று எதுவும் தெரியாதவனைப் போல் கேட்டு வைத்தான் விஜய்.

“சார் அசைன்மென்ட் சப்மிட் பண்ண வந்தோம்” என்றனர், ரம்யாவும் ஆனந்தும்.

“அப்படியா?” என்றவன் அவர்களை நீட்டிய பைலை வாங்கிக் கொண்டான்.

“அப்பறம் ஆனந்த்” என்றான் அசைன்மெண்ட்டில் பார்வையை பதித்தபடி.

“சார்..!” என்றான் பவ்யமாய்.

“எந்த புக்ல ரெபரன்ஸ் எடுத்திங்க?” என்றான்.

“சார், அது எல்லா புக்லயும் தான். ரொம்ப கஷ்ட்டப்பட்டு எடுத்தேன் சார். நைட் எல்லாம் தூங்க கூட இல்லை” என்றான் உண்மை போலவே.

“ஆஹான்..!” என்றான் விஜய் தலையை ஆட்டியபடி.

“மாடு..மாடு..! ரீல் ஏற்கனவே அந்து போனது தெரியாம என்னமா நடிக்கிறான்.” என்று எண்ணிய வேதா,

“மச்சான் ஓவர் பெர்பாமன்ஸ் உடம்புக்கு ஆகாது. கொஞ்சம் அடக்கி வாசி” என்றாள்.

“ஒரு டாப்பிக் கிளியரா இருக்கு. இன்னொரு டாப்பிக் அந்தல் சிந்தலா இருக்கு. ஏன் இதை காப்பி பண்ணலையா?” என்றான்.

“சார்..!” என்றான் அதிர்ந்து.

“இல்ல, கிண்ட்ஸ்ல இருந்து சரியா காப்பி பண்ணலையான்னு கேட்டேன்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“ங்கான்..! ஆமா சார்” என்றான் அசடு வழிந்தபடி.

“அப்பறம் வேதா நீங்க எதுல இருந்து ரெபரன்ஸ் எடுத்திங்க” என்றான் சிரிக்காமல்.

“அது வந்து சார்..தூக்கக் கலக்கத்துல எடுத்து எழுதுனது சார். எதுலயோ எடுத்து எப்படியோ எழுதிட்டேன் சார்”  என்றாள் பாவமாய்.

“இது லாஸ்ட் வார்னிங். இனியொரு முறை இப்படியெல்லாம் எக்ஸ்கியூஸ் தர மாட்டேன். யு மே கோ நவ்” என்றான்.

“அப்பாடி எப்படியோ தப்பிச்சுட்டோம்” என்ற ரம்யா,

“டி வேதா.. இன்னைக்கு எழுதிட்டு வந்த அசைன்மெண்ட்ல இருந்தது உன்னோட ஹேண்ட்ரைட்டிங் மாதிரி இல்லையே?” என்றாள் ரம்யா சந்தேகமாய்.

“அடியாத்தி? இந்த அளவுக்கா நோட் பண்றா?” என்று நினைத்தவள்,

“வேற யார் எழுதுன மாதிரி இருக்கு?” என்றாள் அதி முக்கியமாய்.

“எனக்கு ரொம்ப பார்த்து பழகுன ஹேண்ட்ரைட்டிங் மாதிரி இருக்கு” என்றாள் ரம்யா.

“இருக்கும்ல..! அதான் தினமும் கிளாஸ்ல எழுதறாரே.” என்று எண்ணியவள்,

“உனக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்து கண்ணு சரியா தெரியலைன்னு நினைக்கிறேன். கிளாஸ்க்கு டைம் ஆச்சு. போகலாம் வா” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.

என்றுமில்லாமல் அன்று கூடுதல் அழகாய் இருந்தான் விஜய். எப்போதும் போல் அவன் பாடத்தில் மூழ்கியிருக்க,

“ஹரிணி” என்றாள் லயா மெதுவாக.

“ம்ம்..!!”

“விஜய் சார் இன்னைக்கு ரொம்ப ஹேண்ட்சமா இருக்கார்ல” என்றாள்.

“ம்ம் ஆமா. நானே சொல்லனும்னு நினைச்சேன். கிரீம் பேண்ட், புளூ ஷேர்ட்ல ஆள் சும்மா ஜம்முன்னு தான் இருக்கார்” என்ற ஹரிணி வேதாவைப் பார்க்க, அவளோ தீவிரமாய் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். 

“இந்த வேதா விஜய் சாரை பார்க்குற பார்வையே சரியில்ல மச்சி” என்றாள் லயாவிடம்.

 “ஆமா” என்ற லயா வேகமாய் திரும்பி வேதாவைப் பார்க்க, அவள் ‘என்ன?’ என்பதைப் போல் பார்த்து வைத்தாள்.

“விஜய் சார் ஏன் ஆளு. அவரை சைட் அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத” என்றாள் மெதுவாக.

“ஆஹான்..!சரி வச்சுட்டு போ. யாருக்கு வேணும் உன் விஜய் சாரு” என்றாள் வேதா கடுப்பாக.

“டி வேதா” என்று ரம்யா அழைக்க,

“என்ன?” என்றாள்.

“இன்னைக்கும் சாரும் நீயும் ஒரே கலர் டி” என்றாள்.

“எருமை, நல்லா பாரு நான் வயலட். அவர் புளு ஷேர்ட்.” என்றாள்.

“எல்லாம் புளு கலர் பேமிலி தான” என்றாள் ரம்யா.

“மூடிட்டு எழுதுடி. இன்னைக்கெல்லாம் வெளிய போய் நிக்க தெம்பில்லை” என்ற வேதா பாடத்தை கவனிக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் விஜய்.

‘இந்த ஆரம்பிச்சுட்டார். என்னவோ நான் மட்டும் தான் இங்க பேசுற மாதிரி. என்னைய தவிர யாரையும் கண்ணுக்குத் தெரியாது போல’ என்று சலித்துக் கொண்டவள், அவன் முறைப்பது தெரிந்தும் தெரியாதவள் போல் காட்டிக் கொண்டாள்.

அதற்கடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. 

விஜயின் திருமணம் எதனால் நின்று போனது என்ற கேள்வி மட்டும் அவ்வப்போது அவளுக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். நேரம் வரும் போது கேட்டுக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு விட்டுவிடுவாள்.

வேதாவுக்கும், அகரனுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடந்து முடிந்திருந்தது. அவளின் முழு கவனமும் படிப்பில் செல்ல,  தேர்வுகள் அனைத்தையும் நல்ல முறையில் எழுதியிருந்தாள். 

சந்தியாவிற்கு ஏழாம்  மாதம் நடந்து கொண்டிருந்தது. ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்வது என்று ஏற்பாடு செய்திருந்தனர். 

கனிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. சரண்-கீர்த்தனாவுடன் இடையில் ஒரு நாள் ஊருக்கு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தாள் வேதா.

அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து  வெளியே வந்தவள் பார்த்தது, அவளுக்காக காத்திருந்த நந்த குமாரைத் தான்.

“ஹாய் வேதா..! ஹவ் ஆர் யு?” என்றான் நந்தகுமார்.

“பைன், நீங்க என்ன திடீர்ன்னு?” என்றாள் புரியாமல்.

“எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணும். வெளிய போய் பேசலாமா?” என்றான்.

“எதைப் பத்தி பேசணும்?” என்றாள் நிதானமாய்.

“உனக்கு நடந்த மேரேஜ் பத்தி அம்மா- அப்பா சொன்னாங்க. எனக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது. ஐ ஆம் சாரி” என்றான்.

“இட்ஸ் ஓகேங்க!” என்றாள்.

“நான் உங்க சிஸ்டர் வளைகாப்பு பங்க்ஷன்லயே  வந்து பேச ட்ரைப் பண்ணேன். பட் முடியலை.” என்றான் நந்தகுமார்.

“சோ..!” என்றாள் யோசனையாய்.

“நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும் என் மனசை மாத்திக்க முடியலை வேதா” என்றான்.

“இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறிங்க?” என்றாள் நிதானமாய்.

“ஏதாவது காபி ஷாப்பில் போய் பேசலாமா? மிஸ்டர் விஜய்க்கு இந்த மேரேஜ்ல இன்ரெஸ்ட் இல்லைன்னு சொன்னாங்க” என்றான்.

“இதோ அவரே வந்துட்டார்” என்று விஜயை காட்ட,

“என்ன?” என்பதைப் போல் பார்த்து வைத்தான் விஜய்.

“ஹெலோ மிஸ்டர் விஜய்” என்று நந்தகுமார் கைகொடுக்க, விஜய்யும் பதிலுக்கு கை கொடுத்தான்.

“எனிதிங்க் இம்பார்டன்ட்?” என்றான் கேள்வியாய்.

“இந்த மேரேஜ்ல உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு தெரிஞ்சு எனக்கு வாழ்க்கை குடுக்க வந்திருப்பாருன்னு நினைக்கிறேன். ஐ ஆம் கரெக்ட்” என்ற வேதா விஜயை முறைத்தாள்.

“நீ கார்ல வெயிட் பண்ணு” என்று கீயை அவளிடம் தர, அதை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு சென்றாள்.

“வேதா” என்று நந்தகுமார் ஏதோ பேச முற்பட,

“இங்க பாருங்க மிஸ்டர் நந்தகுமார். உங்களை ஹெர்ட் பண்றது என் நோக்கமில்லை. பட் ஒரு விஷயம் நீங்க தெளிவா புரிஞ்சுக்கனும். ஷி இஸ் மை வொய்ப். என் முழு மனசோட, விருப்பத்தோட தான் அவளை மேரேஜ் பண்ணேன். அன்ட் ஐ லவ் ஹெர் சோ மச். உங்ககிட்ட யாரோ தப்பா கன்வே பண்ணியிருக்காங்க. நீங்க அவளை பார்க்க வர்றது இதுவே கடைசியா இருக்கட்டும்.” என்றான் விஜய் தெளிவாக.

அவனின் பேச்சில் உண்மை தெரிந்து உணர்ந்திருந்தான் நந்தகுமார்.

“ஐ ஆம் சாரி” என்று புன்னகைக்க முயன்றவனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை. வேகமாய் காரை கிளப்பிக் கொண்டு சென்றவனின் மனநிலையை விஜய்யால் தெளிவாக உணர முடிந்தது.

‘இப்ப தான் கொஞ்சம் சகஜமா மலையிறங்கி வந்தா. அதுக்குள்ள வந்து மறுபடியும் மலையேத்தி விட்டுட்டானுக. மறுபடியும் முதல்ல இருந்தா. உனக்கு நேரமே சரியில்லை விஜய்’ என்று புலம்பிக் கொண்டு சென்று காரை செலுத்திக் கொண்டிருந்தவனை நெருப்பாய் முறைத்தாள் வேதா.

‘என்ன இந்த முறை முறைக்கிறா? இவளுக்கு வர வர என் மேல பயமே இல்லாம போய்டுச்சு. இவளை சாப்ட்டா ஹேண்டில் பண்ணவே கூடாது’ என்று நினைத்தவன்,

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? போறவன் வர்றவன் எல்லாம் வாழ்க்கை குடுக்குறேன்னு வந்து நிக்க நான் என்ன பப்ளிக் பிராப்பர்ட்டியா?” என்றாள் கோபமாய்.

“இனிமேல் வர மாட்டான். தெளிவா சொல்லிட்டேன்” என்றான்.

“என்னன்னு?” என்றாள் கோபமாய்.

காரை ஓரமாய் நிறுத்தியவன், அவளைப் பார்க்க,

“நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று கேட்டு முடிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்த விஜய், அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான். 

முதல் இதழ் முத்தம். மொத்த ஜென்ம ஏக்கத்தையும் முடித்து வைத்த முத்தம். அவனின் மொத்த காதலையும் முத்தத்தின் வழியாக கடத்திக் கொண்டிருந்தான். இமைகள் மூடி,இதயம் அதிர்ந்து,குருதி சூடேறி உணர்வில் கலந்து உயிரில் உருகி நின்றாள் பெண்ணவள்.

இதழ் சிறையை விடுவிக்க தோன்றவில்லை அவனுக்கு. விடுபடும் எண்ணமும் இல்லை அவளுக்கு. அந்த முத்தத்தின் சந்தத்தில் லயித்திருந்தவர்களுக்கு சுற்றுப் புறம் உறைக்கவில்லை.அருகில் சென்ற வாகனத்தின் ஹாரன் ஒலியில் முதலில் மீண்டவன் அவன் தான்.  மீண்டவன் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். அவள் மலங்க மலங்க விழிக்க,

“ம்ம்..! என்ன சொன்னேன்னா?” என்று நிறுத்தினான்.

“என்ன சொன்னிங்க?” என்றாள் திக்கி திணறியபடி.

“அவ என்னோட ப்ராப்பர்ட்டி. எனக்கே எனக்குன்னு சொந்தமான பிராப்பர்ட்டின்னு தெளிவா சொல்லிட்டேன்” என்றான் சிரிப்புடன்.

“வாயாலயே  பதில் சொல்லியிருக்கலாம்” என்றாள்  முனுமுனுத்தபடி.

“வாயால தான பதில் சொன்னேன். வேணும்னா இன்னொரு முறை சொல்லட்டுமா?” என்றான் மந்தகாசமாய்.

“ஆத்தி..! ஒன்னும் வேணாம்” என்றவள் தவிப்புடன் பார்வையை வெளியே பார்ப்பதைப் போல் பார்த்து வைக்க, அவனோ சிரிப்புடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

இன்று போய் நாளை வா என்பதை போல் பிரச்சனையும் அவர்கள் பின்னாடியே வந்து கொண்டிருந்தது.