அத்தியாயம் 13:

அம்மு!!!

போதும் என்று கையை மட்டும் அவனை நோக்கி காட்டினாள்..நான் இங்க வந்தது professional மட்டும் தான் மத்தபடி personal எதுவும் கிடையாது…

உங்க தங்கச்சிய பார்க்கணும் அவ்வளவு தான் அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க…

இந்த ரூம் தான் உள்ளே போங்க என்று கூறிவிட்டு, அவன் வேகமாக அவனுடைய ரூமுக்கு செல்வதை பார்த்து கொண்டே நின்றாள்..

பிறகு தன்னை சமாளித்து கொண்டு,கதவை தட்டினாள்..உடனே உள்ளிருந்து ஒரு பெண் அவளை புரியாத பார்வை பார்த்தாள்…

சம்யுக்தாவிர்க்கு இவளை யாரென்றே தெரியவில்லை…

KIYAA(என்ன )

I M the designer of your WEDDING SAREE..

Come INSIDE…

SAARA SAMAN UTHA LO AUR JALDI BAHAR NIKAL JAO(அளவு எடுத்துட்டு சீக்கிரம் வெளிய கிளம்புங்க..)

அஷ்வினுக்கு உடனே அழைத்து உள்ளே வருமாறு கூறினாள்…

உள்ளே அவனை பார்த்ததும் சம்யுக்கு எதுமே புரியவில்லை…இது உண்மையா? இல்லை கனவா??அவளின் கண்ணில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது…

அஷ்வின்…என்று அழைத்தவளுக்கு வாயில் வார்த்தையே வரவில்லை…

“சம்யு” என்று அவளை அழைத்தவன் அவளை அணைத்து கொண்டான்…

உடனே  அம்ரிதா திரும்பி கொண்டாள்..

என்ன சம்மு இப்படி அழுது அழுது இப்படி இளச்சிட்ட என்று கூரியவனுக்கும் கண்ணில் நீர் வழிந்தது…

அன்று உன் காதலை ஏற்காமல் விட்டதுக்கு இன்று வரை வருத்தபட்டு கொண்டு தான் இருக்கிறேன்…என்னை மன்னிச்சிரு சம்மு…

I LOVE YOU சம்மு…

நிஜமாவா அஷ்வின்…

உனக்காக  தான் நாங்க இங்க வந்துருக்கோம் சம்மு…

இவங்களுமா??

YES சம்மு…உன்னை பத்தி சொன்னதும் கண்டிப்பா போலாம்ன்னு சொன்னது என்னுடைய தோழி அம்ரிதா தான்…

அஷ்வின் நான் திரும்பலாமா இப்போ!!

ஹஹஹா என்று இருவருமே சிரித்தனர்…

அம்மு இன்னுமா நீ இங்க இருக்க…??

ஏன் கேட்க மாட்ட,அதான் உன்னோட ஆள பாத்துட்டல்ல…

அம்மு உன்னை போயி நான் வெளிய போன்னு சொல்வேனா சொல்லு…

உங்க ரெண்டு பேருக்கும் எந்த ஒரு அறிமுகமும் தேவை இல்லைன்னு நினைக்கிறேன் சரியா??

ஆமா இவங்க உன்னோட ஆளு சம்மு,நான் உன்னுடைய தோழி அம்மு…

மூவருக்குமே இப்போது சிரிப்பு வந்து விட்டது…

ரொம்ப இயல்பாக பேசும் அம்ரிதாவை சம்யுக்தாவிர்க்கு நிரம்ப பிடித்து விட்டது…

சம்யுக்தா,அம்ரிதாவை இறுக அணைத்து தேங்க்ஸ் என்றாள்..

“சம்யு நீ ரொம்ப அழகா இருக்க…”

உன்னை விடலாம் நான் ஒன்னும் அழகு இல்லை அம்மு…

ரெண்டு பொண்ணுங்க மாத்தி மாத்தி காம்ப்ளிமென்ட் கொடுத்துக்கிறத இப்போ தான் பார்க்கிறேன்…

உனக்கு பொறாமை அஷ்வின்…

சம்மு எனக்கு ஒரு சந்தேகம்?

கேளு அஷ்வின் ..

ஒருவேளை நான் வராம இருந்திருந்தால், நீ என்ன பண்ணிருப்ப அவனையே கல்யாணம் பண்ணிருப்பியா??இல்லை தவறாக ஒரு முடிவ எடுத்திருப்பியா ???

ரெண்டுமே இல்லை அஷ்வின்…உன்ன தேடி வந்து கட்டாய கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு எல்லா ப்லான்னும் பக்காவா போட்டு விட்டேன். என்று கலகலவென்று சிரிக்கும் இவளை பார்த்த இருவருமே வாயில் கை வைத்து விட்டனர்…

அம்மு நான் அப்போவே சொன்னேன்ல இவள் காதல் தீவிரவாதின்னு…

ஆமா அஷ்வின் இப்போ தான் நானும் பார்க்கிறேன்…அப்போ கூட நான் நம்பவில்லை அஷ்வின்…

சரி எல்லாத்தையும் விடுங்க…

சம்மு உன்னோட காதல் விஷயம் உங்க வீட்டுல யாருக்கெல்லாம் தெரியும் என்று கேட்டாள்  அம்ரிதா??

என்னோட அண்ணன்  அர்ஜுன்க்கு மட்டும் தான் தெரியும்…வீட்டுல அம்மா அப்பாக்கு தெரியாது…

அர்ஜுன்க்கு நீ யாரா love பண்ணன்னு தெரியுமா??இல்லை தான??

ஆமா அம்மு…

நம்ம பிளான் என்னன்ன??

நீ எப்பவும் போலவே கல்யாணத்துக்கு சந்தோஷமா ரெடியாகு….யாருக்குமே சந்தேகம் வராத அளவுக்கு இருக்கணும் சரியா??முக்கியமா உன்னோட அண்ணாக்கு எதுவுமே தெரிய கூடாது ஓகே வா…

அஷ்வின் நீ என்ன பண்றன்னா??

சம்யுக்தாவோட அம்மா,அப்பாக்கு தேவையான எல்லா உதவியும் பார்த்து பார்த்து செஞ்சு அவங்களுக்கு உன் மேல் ஒரு நல்ல ஒபினியன் வர மாறி நடந்துக்கோ சரியா…

சம்மு இன்னொரு சந்தேகம் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை எப்படி??

அம்மு இன்னும் அவன் முகத்தை கூட நான் பார்க்கவில்லை….பெரிய பிசினஸ் man,FOREIGN ல இருக்காங்களாம்…

இதை அவள் சொல்லும்போது அவளை காதலோடு பார்த்தான் அஷ்வின்…

அதை புரிந்து அவளும் தலை குனிந்தாள்…

சம்மு என்னது இது??என்று அதிர்ச்சியாக கேட்ட அவனை இருவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்…

உனக்கு வெட்க பட தெரியுமா ??

“டேய் அஷ்வின்” என்று அவளை அடிக்க தொடங்கினாள்…

திடீர்ன்னு நீ பொண்ணு மாறி நடந்துகிட்டா  நான் என்ன பண்ண…?

சொல்லுவடா சொல்லுவ…

அவள் அவ்வளவு அருகில் வந்ததும்,அவளை இறுக அணைத்து கொண்டான்…

ஹலோ??

அம்மு நீ திரும்பிகோ…

அடேய் அஷ்வின் நான் உன்னோட தோழி…உங்க romance அப்பறம் வெச்சிக்கலாமே??

அம்மு! அம்மு! உன்னை கெஞ்சி கேட்கிறேன் இவன்கிட்ட ஒரு காதலை சொல்லி அதுக்கு பதில் வாங்குறதுக்கே எனக்கு மூன்று வருடத்திற்க்கு மேலாகி விட்டது…

ஒரே ஒரு KISS பண்ண வரான்…வாங்கிக்கிறேன் அம்மு…

நீங்க ரெண்டு பெரும் செம்ம சேர்க்கை போங்க…எதையோ பண்ணி தொலைங்க என்று திரும்பி காதை மூடி கொண்டாள்…

அம்மு இப்போ நீ திரும்பலாம்…

சரி அம்மு…உனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு கண்டிப்பா எதாவது கெட்ட பழக்கம் இருக்க பல வாய்ப்புகள் இருக்கும்…அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளை ,பிசினஸ் man வேற கண்டிப்பா இருக்கும்…அவனோடய வீக்னெஸ் தான் இப்போ நமக்கு பலம் சம்மு…

இது கொஞ்சம் பழைய ஐடியா தான் ஆனால் கண்டிப்பா வேலை செய்யும்….

பிசினஸ் man ஆக இருந்தால் கட்டாயம் கெட்ட பழக்கம் இருக்குமா???

அப்போ என்னோட அண்ணா அர்ஜுனிர்க்கு எதாவது இருக்குமா??

இதற்க்கு பதில் ஏதும் சொல்லாமல் அம்ரிதா அமைதியாகி விட்டாள்…

நான் ஏன் கேட்கிறேன்னா அவன் ஒரு மூணு வருஷமா,காதல் தோல்வி அடைஞ்ச மாறியே இருக்கான்…முன்னலாம் அந்த அளவுக்கு ரூல்ஸ் போடுவான் இப்போலாம் எதையுமே கண்டுகிறது இல்லை…சொல்லபோனா ஒரு சிரிப்போடு நிறுத்திகிட்டான்…முகத்துல எப்பவுமே சோக கீதம் தான்…

அஷ்வின்,அம்ரிதாவின் முகத்தை தான் பார்த்தான் …

அவள் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை…

சம்மு!!!உனக்கு ட்ரெஸ் அளவுலாம் எடுத்துக்கிறேன்,என்ன மாறி டிசைன்ன்னு நீ பார்த்து சொல்லு and MATERIALS நான் கொஞ்சம் வாங்கணும் என்னை வெளிய கூட்டிட்டு போக ஒரு ஆள் வேண்டும்..

அதான் நான் இருக்கானே அம்மு..

உங்க romance நீங்க CONTINUe பண்ணுங்க…ஆனால் யாருக்கும் தெரிய கூடாது..

Romance எல்லோருடைய முன்னாடியும் பண்ண முடியாது அம்மு என்றாள் சம்யுக்தா..

ஹே அஷ்வின்!! இவளை எங்க இருந்து தான்  பிடிச்சியோ போ …

பேசிக்கொண்டே அவளுடைய அளவுகளை எல்லாம் எடுத்தவள்…

உனக்கு என்ன மாறி டிசைன் வேண்டும் அம்மு….

உங்க சாரி டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு அம்மு..

கண்ணன்-மீரா மாதிரி ஆனால் கண்ணன்-ருக்மிணி இருக்க மாறி வேண்டும்….புல் ரெட் colour இருக்கணும்…

நீ சொல்ற டிசைன்ன சாரில பண்ணிடுறேன்…

உனக்கு LEHANGA and சாரி ரெண்டுமே வேணுமா??

எனக்கு ரெண்டுமே வேணும் சம்மு…

அவளை பார்த்து சிரித்தவள்,அப்போ இன்னைக்கு ஆரமித்தால் தான் சரி வரும் சம்மு…நீயும் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டி இருக்கும்,அஷ்வின் நீயும் தான்…

இங்க PROFESSIONal ஆக DESIGNING முடிச்ச ரெண்டு பேறாவது உதவிக்கு வேண்டும்…

அதை எல்லாம் பார்த்துக்கலாம் அம்மு….நானே உனக்கு ரெடி பண்ணி கொடுக்கிறேன்..

ஆமா சம்மு ஒன்னு கேட்க மறந்துட்டேன்..

நான் தான் சாரி டிசைன் பண்ணனும்ன்னு எப்படி முடிவு பண்ண…உனக்கு என்ன முன்னவே தெரியாதே??

வீட்டுல எல்லாரும் யார்கிட்ட சொல்லி டிசைன் பண்ணலாம்ன்னு கேட்ட அப்போ தான் அர்ஜுன் உங்க நேம் சொன்னான்…நீங்க பண்ண சாரி டிசைன் எல்லாம் அம்மாகிட்ட காட்டி தான் உங்களை வர வெச்சிருக்கான்…

“அம்ரிதாவிர்க்க் ஏதோ புரிவது போல் தான் இருந்தது” அதை எல்லாம் யோசிக்க விடாமல் அவள் வேலை அவளை இழுத்து கொண்டது…

சரி அம்மு வெளிய போகணும் போலாமா??

போலாம் அம்மு…

நம்மள கூட்டிட்டு போக அர்ஜுன் தான் வருவான்…

சரி…

சரி அம்மு ,சம்மு கிளம்பி போயிட்டு வாங்க..

இருவரும் சேர்ந்து கீழே சென்றனர்…மதிய நேரம் ஆகி இருந்தது…அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்..

வா அம்மு,சம்யுக்தா…வாங்க சாப்பிடலாம்…

அஷ்வின் எங்கே??

வந்துட்டு இருக்காங்க ஆன்டி…

அவன் வந்ததும் சாப்பிட அமர்ந்தனர்…

ஆன்டி டிரஸ் மெட்டிரியல்ஸ் எல்லாம் வாங்க வெளிய போகணும்…

சரிமா போயிட்டு வாங்க…சம்யுக்தாவ கூட்டிட்டு போ…

அர்ஜுன் நீ இவங்க ரெண்டு பேரையும் வெளிய கூட்டிட்டு போயிட்டு வா சரியா…

சரி மா…

அம்மு நீ வந்ததுல இருந்து நான் ஏதோ சென்னைல இருக்கிற மாறி ஒரு பீல் ஆகுது அம்மு…

இவங்க யாருமே தமிழ்ல பேசவே மாட்டாங்க….

வாய திறந்தா ஹிந்தி இல்லை இங்கிலீஷ் அவ்வளவு தான்…

அங்கிள் என்னை கல்யாணம் பண்ண அப்போ கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டாங்க ஆனா இவ்வளவு வருசதுத்துல பேசினதே இல்லை…

நீ வந்ததும் தான் ஏதோ தெரிஞ்சத பேசறாங்கடா…

எனக்கு தமிழ் மொழின்னா உயிர் ஆன்டி…

நான் தமிழ் பேசறத விட நீங்க எல்லோரும் எனக்காக தமிழ்ல பேசறது எனக்கு சந்தோசமா இருக்கு ஆன்டி…

சம்யுக்தாவும் உங்கள மாறியே அழகா தமிழ் பேசறா ஆன்டி…உங்கள மாறியே அழகாவும் இருக்கா…

உனக்கு நான் நல்ல சாப்பாடு தான் சமைத்து கொடுக்க சொல்லிருக்கேன் இவ்வளவு ஐஸ் எல்லாம் வைக்க வேண்டாம் அம்மு…

உனக்கு எப்போ கல்யாணம் அம்மு ??

இந்த கேள்வியை கேட்டதும் அம்ரிதாவின் முகம் சுருங்கி விட்டது…அப்படி நடந்தா உங்களை தான் முதலில் கூப்பிடுவேன் ஆன்டி…

அவளின் முகத்தில் இருந்த சோகமும்,அர்ஜுனின் முகத்தில் இருந்த சோகமும் எதையோ சொல்ல வந்தது போல் தான் இருந்தது…

“சரிம்மா போயிட்டு வந்துடுறேன்” என்று சிரித்து கொண்டே கூறும் மகளின் முகத்தை பார்த்ததும் திருஷ்டி சுற்றி போட்டார்…இப்போ தான் உன்னோட முகத்துல கல்யாண கலையே வந்துருக்கு சம்மு…

அவளது முகமும் வெட்கத்தில் சிவந்து விட்டது…நல்ல பால் நிறத்தில் இருப்பாள்,அளவான உயரம், அளவான உடம்பு, இடை வரை முடி நீண்டு இருந்தது அதை ஒற்றை க்ளிப்பில் அடக்கிருந்தாள்…

கல்யாண பொண்ணு பூ வைக்காம இருக்க கூடாது சம்மு என்றவர்,அவளுக்கும் அம்முவிர்க்கும் தலை நிறைய பூவை வைத்து விட்டார்…

அம்மு நீ எப்படி இவ்வளவு நீட்டு முடிய சமாளிக்கிற??

பழகிரிச்சி சம்யு…

இந்த முடியவே என்னால சமாளிக்க முடியவில்லை…நீ எப்படி தான் MAINTAIN பண்ணுறியோ?

“எல்லாமே ஆரம்பத்தில் கஷ்டமாக தான் இருக்கும் சம்யு போக போக சரி ஆகிரும்” என்று அவளையும் அறியாமல் அர்ஜுனின் முகத்தை பார்த்து கூறினாள் அந்த நேரம் அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்…

அர்ஜுனின் தாயிற்கு இப்போது நன்கு புரிந்து விட்டது…ஆனால் இது எப்படி சாத்தியமாகியது??