அவளும் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தால் ஆனால், அவனின் மேல் இருந்த காதலை அவள் வாய்விட்டு சொல்லவில்லை..அவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது…
சரி அம்மு நீ சென்று தூங்கு என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு அவனும் உறங்க சென்று விட்டான்…
அவளை பொறுத்தவரை இந்த பொழுதை மட்டும் ரசித்துகொள்ளலாம் என்ற மனநிலையில் தான் இருந்தாள் வேறு எதுவும் அவனிடம் அவள் எதிர்பாரவில்லை…
அவன் சென்று சோபாவில் படுத்து கொண்டான்…அவள் சென்று பெட்டில் படுத்து கொண்டாள்…
Good night அர்ஜுன்…
Good night அம்மு…
சோபா உனக்கு COMFORTABLE ஆக இருக்கா அர்ஜுன்??
“இல்லைன்னா என்ன பண்றதா இருக்கீங்க” என்று குறும்பாக சிரிப்போடு கேட்டவனை முறைத்தாள்…உங்க பக்கத்துல கொஞ்சம் இடம் கொடுப்பிங்களா madam…
அவளும் அதே குறும்போடு,எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு அர்ஜுன் …
இப்பவும் சொல்றேன் அம்மு…இவ்வளவு நம்பிக்கை என்மேல் உனக்கு வேண்டாம்..
“உன்னோட விசயத்துல நான் கெட்டவன் தான் அம்மு…”
உண்மையிலே அவளின் விஷயத்தில் கெட்டவனாக தான் மாற போகிறான் இன்னும் இரண்டு நாட்களில்…சில எதார்த்தமான வார்த்தைகள் சில நேரம் அப்படியே பழித்து விடுகிறது…
அப்படியா!!
சரிங்க madam தூங்குங்க…
அதற்க்கு அவள் பதில் கூட கூறாமல் உறங்கி விட்டாள்…அவள் உறங்கியதை கணித்தவன் தானும் உறங்கி விட்டான் …சில நாட்களாக தூக்கத்தை தொலைத்தவன் இன்று நிம்மதியாக உறங்கி விட்டான்…
அதிகாலையில் எழும்போதே காபியின் மனம் மூக்கை துளைத்தது..
அவளை தேடினான்,பால்கனியில் அமர்ந்து அதை ரசித்து பருகி கொண்டு இருந்தாள்…
அவளை தொந்தரவு செய்யாமல் தன்னை சுத்தம் படுத்தி கொண்டு வந்தான்…
Good morning அம்மு..
Good morning அர்ஜுன்..
அவளை பார்த்தவன்,all ஓகே தான் ..
“என்னது அர்ஜுன்..”
நான் வாங்கிட்டு வந்த உடை உனக்கு சரியாக தான் இருக்கு போலே என்று குறும்போடு தான் சிரித்தான்…
அதே குறும்போடு அவளும் அவனை பார்த்து சிரித்தாள்..
“அச்சா” என்று அவனும் சிரித்தான்…
அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தான்…அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்…
உனக்கு இந்த வெள்ளை நிற சுடிதார் அழகா இருக்கு அம்மு…
அப்படியா !!அர்ஜுன் சொன்னா சரி தான்…
இப்போ கால் வலி பரவால்லையா அம்மு??
“கொஞ்சம் வலியாக இருக்கு அவ்வளவு தான்” அர்ஜுன்…
உடனே எழுந்து சென்று அந்த களிம்பினை எடுத்து வந்து,அம்மு கால் காட்டு oinment போட்டு விடுறேன்…
வேண்டாம் அர்ஜுன் நான் போட்டுகிறேன்…oinmentகுடு என்று கையை அவனிடம் நீட்டினாள்…
அவன் அவளின் கையை பிடித்து இழுத்ததும்,கொஞ்சம் விட்டு இருந்தாள் அவன் மேல் மொத்தமாக சரிந்து இருப்பாள்…அவளை தன் மடியின் மேல் அமர வைத்தான்…
“Madam இப்போ உங்க கைய நீட்டுங்க பாப்போம்” என்றவனுக்கு அவளால் பதில் கொடுக்க முடியவில்லை…
வெட்கத்தில் அவள் முகம் சிவந்து விட்டது….
அவனும் அவளை வேண்டும் என்று இழுக்க வில்லை…எதார்த்தமாக தான் இழுத்தான்…
அவளின் முகம் செவ்வானம் போல் அவ்வளவு அழகாக சிவந்து இருந்தது….அந்த சிவந்த முகத்தை தன் கையில் ஏந்தியவனுக்கு உலகமே மறந்து போனது…
அம்மு !!!
ம்ம்ம்…
“எப்படி இப்படி பேபி டால் மாறி இருக்க” என்று கேட்டவன் அவளின் மேல் வரும் அந்த பிரத்யேக நறுமணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தொலைத்து கொண்டு இருந்தான்….
“உயிரில் பூபரித்த காதலியும் நீ தான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீ தான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான்
இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான்”
உணர்ச்ச்யில் இருந்து வெளியே வந்தவன், அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, அவனின் அருகில் அவளை அமர வைத்து ,அவளின் காலில் மருந்தை போட்டு விட்டான்…
இந்த முறை அவள் வேண்டாம் என்று கூறவே இல்லை…அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்…
அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன” என்று கேட்டான் …
“நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க அர்ஜுன்…”
அப்போ madam என்னை சைட் அடிக்கிறிங்க அப்படிதான..
ஆமா இப்போ அதுக்கென்ன அர்ஜுன்…நீ மட்டும் என்னை ஹக் பண்ணுவ ,கிடைக்கிற கேப்ல கிஸ் பண்ணிருவ…நான் சைட் கூட அடிக்க கூடாதா என்ன??
சரிங்க madam நீங்க சொன்னா கேட்டுக்க வேண்டிதான்…
சரி அம்மு …உன்னோட பேஷன் ஷோ எப்போ நடக்குது…டைம் என்ன அம்மு…
எனக்கு இப்போ மீட்டிங் ஒன்னு இருக்கு நான் கிளம்பனும் அதான் கேட்கறேன்…
Evening தான் நடக்குது அர்ஜுன்…டிரஸ் எல்லாம் DESIGN பண்ணி முடிச்சிட்டேன்…
நீ கிளம்பும்போது நானும் உன்னோடு வந்துறேன்…
இப்பவே கிளம்பிறியா அம்மு ??
ம்ம்ம்…
நான் மதியம் வந்துருவேன் அம்மு…நானே கொண்டு போய் விட்டுடுறேன் அம்மு அதுவரை இங்கு இரு …
உனக்கு ஓகேன்னா சொல்லு அம்மு..எந்த ஒரு கம்பல்சன்னும் இல்லைடா…
ஒன்னும் பிரச்சனை இல்லை அர்ஜுன்…அவகிட்ட நான் சொல்லிடுறேன்…
ஓகே அம்மு நீ ரெஸ்ட் எடு நான் கிளம்பிட்டு வரேன்…
ஓகே அர்ஜுன்…
அவன் சென்றதும்,அவள் கிட்சேன்க்கு சென்று பூரி வைத்து,உருளை கிழங்கு குருமா வைத்து முடித்தாள்…
முகத்தில் மோதிய முடி கற்றைகளை ஒரு கை அவளுக்கு ஒதுக்கி விட்டது…
பயந்து திடீர் என்று திரும்பியவலின் அருகில் அர்ஜுன் அவ்வளவு நெருக்கத்தில் நின்று கொண்டு இருந்தான்…அவளின் மூச்சு காற்று அவன் மேல் படும் அளவிற்க்கு நெருக்கமாக இருந்தனர் இருவரும்…
சரி என்றவலுக்கு அந்த நெருக்கத்தின் தாக்கதால் மனசு படபடப்பாக இருந்தது…
அவளின் கையில் தண்ணியை குடுத்தவன்..இதை குடி அம்மு சரி ஆகிரும் என்று கிண்டல் செய்தான்…
அர்ஜுன்ன்னன்… என்று சிணுங்கினாள்…
அவளுக்கு சப்பாத்தி எடுத்து வைத்துவிட்டு,அவனும் எடுத்து சாப்பிட்டான்…
அவன் சமையல் எப்படி இருக்கு என்று சொல்வானா என்று அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்..அதை தெரிந்தும் அவன் அமைதியாக சாப்பிட்டு கொண்டே இருந்தான்…
அர்ஜுன் சமையல் எப்படி இருக்குன்னு நீ சொல்லவே இல்லை…??
சொல்றேன் அம்மு என்றவன்,கை கழுவிவிட்டு வந்தவன்,அவளை தேடி கிட்சென்க்கு சென்றவன்,
அம்மு …
சொல்லு அர்ஜுன் என்றவள் அனைத்தையும் டேபிளில் இருந்து கிட்சேனுக்கு ஒவ்வொன்றாக எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்…
அவளின் கையை பிடித்து இழுத்தான்…
என்ன என்றாள்..
எப்படி இருக்குனு கேட்ட அம்மு பதில் வேண்டாமா??
வேணும் வேணும் அர்ஜுன் சொல்லு…
பதில் உடனே வேணுமா இல்லை, தாமதமாக பதில் வந்தாள் கூட உனக்கு ஓகே வா…
“இப்போ தான சாப்பிட்ட அதனால இப்போவே சொல்லிரு…”
SURE AHH அம்மு…
ம்ம்ம்..
அவள் எதிர்பாரா நேரத்தில்,அவளின் இதழ் நோக்கி குனிந்தான்….அவளின் மேல் இருந்த அத்தனை ஏக்கத்தையும் அந்த ஒரே இதழ் முத்ததில் புரிய வைத்து விட்டான்…அவளை விட்டு விலக முடியாமல் விலகியவன், உன்னோட லிப்ஸ் மாறி சப்பாத்தியும் செம்ம SOFT அம்மு..
சொல்லிவிட்டு உடனே கதவை பூட்டிவிட்டு மீட்டிங்க்கு உடனே சென்று விட்டான்…
அவளால் தான் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வர முடியவில்லை…அவனின் முதல் இதழ் முத்தம் அவளின் உயிர் வரை தீண்டி சென்றது…
“காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பா இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானத்தில்
பறப்பேனா இல்லை மிதப்பேனா
நீ இல்லையேல் நான் மண்ணிலே
இருப்பேனா தொலைவேனா,மறிபேனா”
அவனின் நினைவுகளில் இருந்தவள் பெட்டில் படுத்து கொண்டு,அவன் கொடுத்த இதழ் ஒற்றலை ரசித்து கொண்டு இருந்தாள்…
“இந்த ரசிப்பே நாளை கசப்பாக மாற போகிறது” என்பதை அறியாமல் இந்த பேதை பெண் கனவில் மிதந்து கொண்டு இருந்தாள்….
அலுவலகத்தில் இருந்து வந்தவன்,தன்னிடம் இருந்த சாவியை திறந்து கொண்டு பூனை போல் சத்தம் போடாமல் உள்ளே வந்தான்…..
அவன் வருவதற்கு அரை மணிநேரம் முன்பாக தான் உறங்கி விட்டாள்…
அவளின் அருகில் சென்று,அவளின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்…தூங்கும்போதுகூட சிரித்து கொண்டே தான் தூங்குகிறாள்…குடுத்து வைத்தவள் தான் அம்மு….
அவளை எழுப்பி விடாமல் அவளின் தலையை கோதி விட்டான்…
அம்மு என்று அழைத்தான்…
அவள் எழவில்லை…எந்த ஒரு பெண்ணையும் அர்ஜுன் இப்படி எல்லாம் ரசித்து பார்த்ததே இல்லை…
அவளை ரசிக்க மட்டுமே அவனுக்கு தோன்றியதே தவிர அவளிடம் அத்து மீற எல்லாம் அவளிடம் தோன்றவில்லை…
அவனை பொறுத்தவரை அவள் ஒரு பேபி DOLL…அதை எல்லாம் மீறி அவளிடம் ஏதோ ஒன்று இருப்பது போல் தான் தோன்றியது..
அவள் லேசாக கண்ணை திறந்து பார்த்தாள்…அவனை பார்த்து சிரித்ததும் பதிலுக்கு அவன்,
Madam தூக்கம் போதுமா??
கால் வலிச்சுது,TABLET போட்டதும் தூக்கம் வந்துருச்சி அர்ஜுன்…நீ எப்போ வந்த??
இப்போ வலி கொஞ்சம் ஓகே வா அம்மு??
ம்ம்ம் ஓகே தான்…
சாப்டியா அர்ஜுன்??
நீ அம்மு?
இல்லை அர்ஜுன்..நீ வந்ததும் சாப்பிடலாம்ன்னு இருந்தேன்…
சாப்பிடலாமா அர்ஜுன் ??
உன்னை யாரு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க சொன்னது அம்மு..
நீ ஏன் அர்ஜுன் இவ்வளவு நேரம் சாப்பிடமா இருந்த அதே மாறி தான் இதுவும்…
வா சாப்பிடலாம் அர்ஜுன்…
அம்மு உனக்கு செம்ம வாய்டி..
ஹஹஹா என்றவள் …சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்து விட்டு,வா அர்ஜுன்!!
அவள் முகத்தை துடைத்து கொண்டு அமர்ந்ததும்,அவன் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…
“அந்த NOSEPIN பார்க்கும்போதுலாம்,உன்னை பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு” என்றவன் அதன் மேல் இருந்த தண்ணீர் துளிகளை துடைத்து விட்டான்….
அந்த NOSEPIN பார்க்கும்போது தாமரையின் மேல் இருக்கும் நீர்த்துளி மாறி அழகா இருக்கு அம்மு”