பள்ளியில் வீட்டுக்கு வந்தவள், பையைத் தூக்கி அதன் இடத்தில் போட்டு , பசிக்கவும் சமையல் அறைக்கு சென்று பார்த்தாள் யாழினி. எப்போதும் இவள் வந்ததும்
“போய் முகத்தை முதல்ல கழுவிவிட்டு வாடி…. “ என்று கத்தும் அம்மாவை இன்று காணவில்லை. சமையல் அறையும் சுத்தப்படுத்தப்படாமல் காலையில் சமைத்து வைத்தது போல இருக்க, அவற்றை எட்டி பார்த்தபடி
“என்ன இது சமையலறை இப்படி இருக்கு இந்த மம்மி எங்க “ என்று சுற்றி பார்த்துபடி அங்கிருந்த ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டே வீட்டை சுற்றி சுற்றி வந்தாள்.
வீடே காலியாக இருக்கவும், வாசலில் சென்று அமர்ந்து விட்டாள். வீட்டில் தொலைபேசியும் இல்லை என்ன செய்ய என்று அந்த சிப்ஸ் முழுக்கச் சாப்பிட்டு முடித்தவள் எழுந்து பக்கத்து வீட்டுக்கு சென்று
“அக்கா…. அக்கா….” என்று அழைக்கவும் அங்கு வந்த பக்கத்து வீட்டு அக்கா
“ஏ… யாழினி உங்க அக்கா கிட்ச்சிட்டாங்களா டி “ என்று அவளை பார்த்து கேட்கவும், ஒன்றும் புரியாத யாழினி
“என்னது க்கா, அக்காவா, அவ வேலைக்கு போயிருப்பா நைட் தான் வருவா க்கா “
“என்ன சொல்றடி வேலைக்கா? உங்க வீட்டுல எல்லாம் உங்க அக்காவ காணோம்ன்னு தான் தேடப் போயிருக்காங்க. ஏன் உனக்கு தெரியாதா “
“நான் இப்போ தான் ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வந்தேன் க்கா எனக்கு தெரியாது. ஏன் அக்காக்கு என்ன ஆச்சி “ என்று உள்ளே போன குறளில் யாழினி கேட்கவும்
“எனக்கும் என்னென்னு தெரியலடி, ஆனா மதியத்தில்ல இருந்து உங்க வீட்டுல ஒரே பிரச்சினை , எனக்கே உங்க அப்பா போட்ட சத்தத்துல தான் உங்க அக்கா காணோம்ன்னே தெரியும். அதான் நீ வந்ததும் கேட்டன் “ என்று அந்த பக்கத்துவீட்டு க்கா பேசியதை கேட்டு யாழினிக்கு ஒன்றும் புரியவில்லை.
தலைக்குள் ஏதேதோ யோசனைகள் ஓட அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு “ சரிக்கா நான் ..அப்போ அப்புறம் வர “ என்று திரும்பி நடக்க அந்த பெண்
“ உங்க அக்கா வந்ததும் சொல்லுடி… “ என்று சொல்லிவிட்டு சென்றாள்.
வீட்டுக்குள்ளே வந்தவள் அவள் அறையில் சென்று கட்டிலில் படுத்து கண் மூடிக்கொண்டாள்.
கண் முன் நேற்று இரவு அக்கா வந்து பேசியது தான் வந்தது. எப்போதும் சண்டை போட்டு திட்டி என்று இருக்கும் அக்கா அன்று சண்டை போடாமல் யாழினி அருகே படுத்தபடி தயங்கி தயங்கி பேச தொடங்கினால்.
“யாழ் …தூங்கிட்டியா…”
“ஆமா தூங்கிட்டேன், துங்கிட்டேன், நீயே போய் தண்ணி எடுத்து குடி “ என்று கவிழ்ந்து படுக்கும் தங்கையை நினைத்து சிரிப்பு வர அதை அடக்கி கொண்டு
“ ஸ்கூல் முடிச்சி என்ன பண்ண போற யாழ் “ என்று மெதுவான குரலில் பேசவும் யாழினி “ என்ன ஆச்சு இவளுக்கு இவ இப்படிலாம் பேச மாட்டாலே” என்று யோசித்தவாளாக
“ நோ ஐடியா இசை , இப்போதைக்கு எக்ஸாம் முடிக்கனும் அவ்ளோதான் வேற எதுவும் யோசிக்கல “
“ எதுவுமே யோசிக்கலயா யாழ்,“ என்று ஆச்சரியமாக தமிழ் கேட்க
“படிக்கவே டைம் இல்லையாம் இதுல எங்க இருந்து இதெல்லாம் யோசிக்க “
“சரி இப்போ டைம் இருக்குல யாழ் இப்போ யோசி என்ன படிக்க போறன்னு “ என்று கேட்டதும் நீண்ட நேரம் அமைதியாக எதோ யோசித்த யாழினி
“ ம்ம்ம் … பேசாம நானும் உன்ன மாதிரி தமிழ் லிட்ரேச்சரே படிக்கவா இசை “
“ப்ச் லூசு… எனக்கு தமிழ் பிடிச்சிச்சின்னு நான் அதை படிச்சேன். அதே மாதிரி உனக்கு பிடிச்சத படிக்க சொன்ன நான் படிச்சத சொல்ற லூசு.. உனக்குதான் தமிழே வராதே “
“வராதுதான்…… அப்போ என்ன எடுக்க எனக்கு தெரியல்லை இசை “ என்று தமிழ் புறம் திரும்பி அவளை பார்த்த படி கேட்கவும் தமிழ் அவளின் காதை பிடித்து இழுத்து
“ உனக்கு வேற என்ன தான் தெரியுமோ…, சரி அப்போ நீ பேசாம பிகாம் எடுத்து படி அது முடிச்ச பிறகு பேங்கிங் எக்ஸாம் எழுதினா பேங்க் வேலைக்கு போலாம் “
“ஐ… பேங்க் வேலையா! சூப்பர், அதுனா நிறைய லீவ் தருவாங்கல“ என்று கண்களை விரித்து பேசவும் அவள் தலையில் தட்டிய தமிழ்
“நான் உன் எதிர்காலத்தைப் பத்தி பேசுனா நீ எதை பத்தி டி பேசுற . லீவ் அவ்ளோ முக்கியமா உனக்கு“ என்று அவள் முடியை பிடித்து ஆட்ட பதிலுக்கு யாழினி அடிக்க என்று இரவு நடந்தது கண் முன் படமாக விரிய யாழினி கண்களில் இருந்து தண்ணீர் ஆறேன விழுந்தது.
“இசை…..நீ எங்க போன. நீ போக போறது நாளையா நைட் என் கிட்ட இப்படி பேசுனா “ என்று எதேதோ யோசித்தபடி அவள் அறையில் கற்சிலை என அமர்ந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாள் என்று தெரியவில்லை திடீரென்று கேட்ட அவளின் அப்பாவின் சத்தத்தில் தான் சுயம் வந்து எழுந்து வெளியே வந்தாள்.
ஹாலில் அவளின் அம்மா அப்பா அவர்களுடன் சொந்தங்கள் பலர், புதிதாக பலர் என்று இருக்க வெளியே செல்லவே பயந்து போனாள் யாழினி.
கதவு அருகேயே நின்ற படி அவள் கண்கள் தமிழை தான் தேடியது. எவ்வளவு தேடியும் அவள் தேடியவள் அங்கு இல்லாமல் போக சோர்ந்த முகத்துடன் அங்கேயே நின்று விட்டாள்.
அப்போது அவளின் அப்பா சிவனேசன்“ யாருக்கு சந்தேகம் வராதபடி இத்தனை நாள் இருந்திருக்கா கழுதை”
“ இப்போ இருக்க பிள்ளைங்க எல்லாம் இப்படி தான்ப்பா. பொண்ணுங்கள மெத்தப் படிப்பு படிக்காம வீட்டுல அடக்கி வச்சா இத்தனை தூரம் போகுமா எங்க கேட்கிறீங்க “ என்று வயதில் மட்டும் பெரியவரானவர் ஒருவர் சொல்ல
“ஆமாம் ஐயா, பன்னிரண்டு போதும் அவள காலேஜ் அனுப்பாதேன்னு சொன்னா. யார் கேட்ட ஒரு டிகிரி படிச்சா தான் பத்திரிக்கைல பேர் பக்கத்துல போட நல்லா இருக்கும்னு சொல்லியே அனுப்பிட்டா “ என்று அருகில் இருந்த தமிழின் அம்மாவுக்கு இரண்டு அடி விழ அவர்
“ படிக்க போற இடத்துல இப்படி பண்ணிட்டு வருவான்னு நான் என்ன பார்த்தேன் “
“நீ பார்பியோ இல்லையோடி உன் பொண்ணை நான் பார்த்த நேரம் அவள துண்டு துண்டா வெட்டி போடுறது உறுதி “ என்று ஆக்ரோஷமாக கத்தியதை கேட்டு அதிர்ந்த யாழினி அப்போதே கண்களை மூடி கடவுளிடம்
“ அப்பா பிள்ளையார் ப்பா என் அக்காவ இவுங்க கண்ணுல படவே விட்டுறாத. அவ எங்கயவது நல்லா இருந்த போதும்” என்று மனதார வேண்டிக்கொண்டாள்.
பாவம் அவள் அறியவில்லை நடக்க இருப்பதை அவர் நினைத்தாலும் தடுக்க இயலாது என்று.
அக்காவுடன் சண்டை போட்டு எதிரி போல முகத்தை தூக்கி சென்றாலும் அம்மா அப்பாவை விட பாசத்தை அதிகமாக காட்டியவளும் அவள் தான். அப்படி இருக்க தன் அக்காவை இவர்களிடம் இருந்து காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தான் தோன்றியது.
இப்படியே அக்காவிற்காக வேண்டிக்கொண்டு அவள் இல்லாத அறையில் தனியே நாட்களை தள்ளிக்கொண்டு இருந்தாள் யாழினி.
அக்கா சென்ற மறுநாள் யாழினி எப்பவும் பள்ளிக்கு கிளம்பி வர அவளை அனுப்பவே ரொம்ப யோசித்தனர். பின் அது பெண்கள் பள்ளி என்ற ஒரே காரணத்திற்காக தான் அனுப்பினர்.
இப்படியே அவளின் தேர்வும் முடிந்து ரிசல்ட் வரும் நாளும் வந்தது . பன்னிரண்டு வகுப்பில் ஒரளவு நல்ல மதிப்பெண் எடுத்தே பாஸ் ஆகியிருந்தாள் .
அதை அவள் அம்மா அப்பாவிடம் சொன்னதற்கு முறைப்பையே பரிசாக தந்தனர். அதில் வருத்தம் வந்தாலும் அன்று என்னமோ அவளின் மனம் அவள் அக்காவை மிகவும் தேடியது.
அதனாலேயே அவளுக்கு ஜூரம் வந்திருக்க விரைவாக உணவு உண்டுவிட்டு மாத்திரை போட்டு தூங்கி விட்டாள் யாழினி.
யாழினி தூங்கும் போது அவளை உலுக்கி விளையாடுவாள் தமிழ், அதை போல அன்று மாத்திரையின் உதவியால் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தவளின் கனவில் வந்து யாழினி உலுக்கவும் திடுக்கிட்டு எழுந்தவள்
“இசை தூங்க வீடு….” என்று தூக்கத்திலேயே திரும்பியவளுக்கு அப்போது தான் நிஜம் நினைவுக்கு வர கண்களை திறந்து விட்டத்தை பார்க்க தொடங்கி விட்டாள்.
மனம் எங்கும் எதோ வலி அக்கா என்று சத்தம் இல்லாமல் சொல்லி பார்த்துக்கொண்டால். எத்தனையோ முறை இசை இவளிடம் அக்கா என்று அழைக்க சொல்லி கேட்டிருக்கிறாள் அன்று எல்லாம் அழைக்காமல் விட்டு விட்டு இன்று அவள் இல்லாத நேரம் அழைக்கிறாள்.
என்ன என்று சொல்ல இப்படி ஒரு நாள் வரும் என்று முன்பே தெரிந்திருந்திருந்தாள் அக்கா அக்கா என்று தினமும் அழைத்திருப்பாளோ என்னமோ.
குழம்பிய மனதை சரி செய்துவிட்டு உறங்க கண் மூட போகும் நேரம் அவளின் அப்பா சிவனேசன் குரல் கேட்க எழுந்து கதவின் அருகே சென்று நின்று கவனித்தாள் இந்நேரம் என்ன பேசுகிறார்கள் என்று.
“ ஒருத்தி ஓடுனது பத்தாதுன்னு இவளையும் ஓட வைக்க போறியாடி “ என்று கோபமாக சிவனேசன் பேச , சித்திர
“ பெரியவ பண்ண தப்ப இவ பண்ண மாட்டாங்க ஒரு டிகிரி கூட இல்லன்னா கல்யாணம் பண்ண மாப்பிள்ளை கிடைக்க கஷ்டம் ஆகிடும் “
“அந்தக் கவலை உனக்கு வேணாம் நம்ம சீனிவாசன் இருக்கான்ல, அவ இவ படிக்கல நாலும் பரவாள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டான் “ சீனிவாசன் இவர்கள் போல கடை வைத்திருக்கிறான் அவனை தான் தமிழுக்கு முடிக்க பாத்திருந்தனர்.
அவள் இல்லை என்றதும் அவள் தங்கையை பதினைந்து வயது வித்தயசத்தில் திருமணம் செய்ய கேட்டதும் சிவனேசனும் ஒற்றுக்கொண்டார்.
“அப்படியா.. அப்ப சரி, இவளையாவது நல்லா ஊர் பக்க கல்யாணம் பண்ணி வச்சிடணும் “
“ஆமா பெரியவ பண்ணிட்டு போன அசிங்கத்துக்கும் சேர்த்து பண்ணணும்டி “
“ம்ம்ம் ங்க “ என்று ஏதோ யோசித்தவர் “ இன்னைக்கு போலீஸ் வந்து இங்க விசாரிச்சிட்டு போச்சே, அது ….ஒன்னும் ஆகாதுல ங்க “
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது டி, எல்லாம் வெலி ஆல வச்சுதான் பண்ண. மாட்டுனாலும் திருட்டுனு தான் சொல்ல சொல்லியிருக்கேன் “
“அப்போ சரிங்க போலிஸ் வந்ததும் கொஞ்சம் பயந்துட்டன் ங்க. அதுல அந்த போலீஸ் வேற உங்க பொண்ணு இருக்க இடம் தெரியாதுன போலீஸ் கம்ப்ளைன்ட் ஏன் தரலன்னு கேள்வியா கேட்டு கொன்னுட்டா “
“ம்ம்ம் அதான் நீ எதுவும் சொல்லாம அழுது சமாளிச்சிட்டியே இனி யாரும் வர மாட்டாங்க அவங்க உடம்பை கூட நானே வாங்கி எரிச்சிட்டு வந்துட்டேன் “
“அந்த பையன் உடம்பையும் சேத்தா, அவனை யாரும் வாங்க வரலையாங்க “
“இதுங்க பண்ண அசிங்கத்துக்கு யார் வருவா, நான் தான் சரி வாங்கலன்ன பிரச்சனை ஆகிடும்ன்னு வாங்கின “ என்று இருவரும் பேசியதை கேட்டு வாய் மூடி மடங்கி அமர்ந்துவிட்டாள் யாழினி.
இவள் காதுகளை நம்ப முடியாமல் “ இல்ல இது கனவு…, இசைக்கு ஒன்னும் ஆகிருக்காது, எழுந்திரு யாழினி “ என்று அவள் கையை வலிக்க கிள்ளி கொண்டாள்.
கை சிவந்து கன்றிப்போய் இது கனவல்ல நிஜம் என்று உறுதி படுத்த முட்டியில் முகம் புதைத்து அழுதாள்.
கண்ணீர் வற்ற அழுதாள். ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று ஏங்கி ஏங்கி அழுதவல் இரவு முழுக்க தூங்கவே இல்லை அதன் பலன் உடல் நிலை சரியில்லாமல் போய் மயங்கி ஜொரத்தில் விழுந்தாள்.
அதிலிருந்து வெளி வரவே மூன்று நாள் ஆனது அவளுக்கு. இந்த மூன்று நாளும் சாக்கடைக்குள் இருப்பது போல உடல் கூசத்தான் இருந்தாள்.
மூன்று நாள் முடிந்து ஒரு முடிவெடுத்தவளாக அங்கிருந்து அவள் சேர்த்து வைத்த பணத்துடன் சென்னை சென்று விட்டாள்.
சென்னைக்கு சென்ற யாழினியின் ஒரே குறிக்கோள் அவள் அக்காவின் மரணத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் அதற்காக அவளின் உயிரே போனாலும் பரவாயில்லை என்ற கோபத்துடன் அவள் வந்து சேர்ந்தது என்னமோ த்ரூவிடம் தான்.