அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள், பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.
அப்பாவை உங்களை விட சொல்லு என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட… இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான்.
சாயந்தரம் எப்படி வருவாங்க என்றான் நேரடியாக அவளிடம்.
ஆம் நேற்று இரவே முடிவு செய்து விட்டான். அவள் பதில் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி இனி நேரடியாக தான் அவளுடன் பேச்சுக்கள் என
பிள்ளைகள் மூலமாக கிடையாது.
மேகலா பதினோரு மணிக்கு மேல வந்துடுவா என்று எங்கோ பார்த்து சொல்ல
அவள் எந்த திக்கில் பார்த்து சொன்னாளோ அங்கே முன்னே சென்று நின்றான்
என்றும் இல்லாத நாளாக இது என்ன என்று அவளின் முகம் அதிருப்தியை காண்பிக்க, கண்களும் கண்டனத்தை காண்பித்தது.
அதனை கண்டுகொள்ளாமல் அவளை பார்த்து புன்னகைத்து சென்றான்
புன்னகைத்து நிற்க தான் ஆசை, ஆனால் காலையில் அவளை எதற்கு டென்ஷன் படுத்தவேண்டும் என்று சென்று விட்டான்.
அவன் செல்வதை முறைத்து பார்த்து நிற்க, பைக்கில் அமர்ந்து அதனை எடுத்துக் கொண்டு எதிர் வீடு சென்றான்
கல்லூரிக்கு விடுமுறை எடுத்து ராஜ நாராயணன் தயாராக நிற்க… புது பைக்கை ஜமீன் மாளிகையின் கேட்டின் உள் கொண்டு சென்று அதன் நிறுத்தி உள்ளே சென்றான் தமிழ்செல்வன்.
இது கொஞ்சம் ஓவர் தான் என்று தான் தோன்றியது அவளுக்கு அவனை ஒதுக்கி வைத்து தயாராக சென்றாள்.
ஆம் ருத்ரா டெக்ஸ்டைல் மில்ல்ஸ் ன் நிர்வாகி அவள். அவளின் தாத்தாவின் பெயர் ருத்ரமூர்த்தி, அவரின் பெயரின் சுருக்கம் தான் ருத்ரா டெக்ஸ்டைல் மில்ஸ்.
அவளின் திருமணம் முடிந்து ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு, அவளின் தாத்தாவின் முன் நின்றாள்,
அப்போது தான் மெதுவாக நடக்க முடிந்து சற்று உடலும் தேறியிருந்தாள்.
என் படிப்பை நிறுத்தி என்னைக் கல்யாணம் செஞ்சி வெச்சிட்டீங்க.
ஆனா எனக்கு வருமானம், உங்க கிட்ட வந்து காசு செலவுக்கு வேணும்னு கேட்க முடியாது, எவனும் எனக்கு சம்பாரிச்சு குடுக்கணும் னு அவசியமில்லை என்று நிறுத்த
இப்போது என்ன கலாட்டா செய்கிறாள் என்று அதிருப்தியாய் பார்த்தார் அவர்
அந்த பார்வைகேல்லாம் சற்று அசரவில்லை
நீங்க நினைச்சதை நடத்திடீங்க, அப்போ நான் கேட்டதை நீங்க செஞ்சு தான் ஆகணும். என் பேருக்கு ஏதாவது தொழிலை மாத்தி அதுல வருமானம் எனக்கு வர்ற மாதிரி செய்ங்க.
எனக்கு உங்ககிட்ட காசுக்காக வந்து நிக்கறது பிடிக்கலை. மங்கம்மா கிட்டையோ மங்கம்மா பையன் கிட்டையோ காசு வாங்க வைக்காதீங்க…
கேசவ நாராயணனின் காதுகளில் இது விழ…
நீ அடங்கவே மாட்டியா இப்போ தான் கொஞ்சம் எல்லாம் அடங்கியிருக்கு
நான் என் தாத்தாக்கிட்ட பேசறேன் நீங்க இதுல தலையிட வேண்டாம் இல்லை தலையிடுவேன்னு சொன்னா, நீங்களும் சேர்ந்து தானே அவனை கல்யாணம் செஞ்சு வெச்சீங்க, அப்போ சொத்து குடுங்க, எதுவும் குடுக்காம எல்லாததையும் நீங்க எடுத்துக்க ப்ளான் பண்றீங்களா என்று பளிச்சென்று கேட்க
ஐயோ இதென்ன பெரியவர் முன்பு இவள் இப்படி பேசுகிறாள் என்று அவர் பார்க்க
ஒன்னு சொத்து இல்லை நான் அவர்கிட்ட பேசும் போது நடுவுல வரவேண்டாம் எனக்கு நீங்க பொறுப்பில்லை அவர் தான் பொறுப்பு. இத்தனை நாள் அப்படி தானே இப்போ எதுக்கு நீங்க வர்றீங்க
அவளின் வார்த்தைகளில் கேசவ நாராயணன் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார்.
அப்பா கிட்ட இப்படி பேசக் கூடாது என்று பெரியவர் அவளை அடக்க
அப்பா என்று சலிப்பது போல சலித்தவள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அமர்ந்து விட்டாள். காலில் சுளீரென்ற வலி…
அது முகத்திலும் தெரிய.
அமைதியாக கைகட்டி அமர்ந்தவள் வலி சற்று மட்டுப் பட்டதும் அவளின் தாத்தாவை பார்த்து கேட்டது இது தான்,
நீங்க என்னை நம்பலைல்ல
நம்பறேன் நம்பலை வேற நீ என் பேச்சை கேட்கலை அதனால நமக்கு எவ்வளவு அவமானம்
என்ன பெரிய அவமானம் நீங்க என்னை விட்டுக் குடுத்துட்டீங்க என்று வலிக்கும் காலை எடுத்து மற்றொரு காலின் மேல் போட்டு மெதுவாக நீவி விட்டாள்.