தேன் சாரல் நீ  2

      சுஜா யாரையோ பார்த்துக்கொண்டே பேச, திரும்பிய சுகந்தன் அதிர்ந்தான்.

     “இவரா? இவர் எப்படி இங்கே? அதுவும் இன்னைக்கு? என்ன நடக்குமோ?”  சுற்றியுள்ளவர்களை பார்த்து பதறினான்.

       சுஜா    எழுந்தவள் , அவர்கள் அருகில் சென்று  கூலாக, “ வாங்க  சுபாஷ் அண்ணா. வாங்க ஈஸ்வர் அண்ணா. இப்பதான் உங்களை பத்தி சுகன் அண்ணாகிட்ட பேசிட்டு இருந்தேன். வாங்க வந்து எங்களோட ஜாயின் பண்ணிக்கிங்க”  என்றாள்.

        இருவரில், உயரமாகவும் பேரழகனாகவும் இருந்தவன் கோபமாக, “ ஏய் சுதி உனக்கு எத்தனை முறை சொல்றது  நான் உன் அண்ணனில்லை.  உன்  அத்தை மகன், அத்தான். இன்னொரு முறை இப்படி கூப்பிட்ட மறுபடியும் கூப்பிட வாய்    இருக்காது பாத்துக்க” என கோபத்தில்  கொதிக்க,

           “சுபாஷ் அத்தான் ப்ளீஸ் அமைதியா இருங்க. சுஜா விளையாடுது. அது சின்னப்புள்ள தான,  புரியாம பேசுது. நீங்களும் கத்தி பேசினா அது பயந்துடும்.” என அந்த ஈஸ்வர் என்று அழைக்கப்பட்டவன் அமைதிபடுத்தினான்.

    இருவரும் நல்ல திடகாத்திரமாக, உயரமாக ஒரு முறை பார்த்தால் மறுமுறை திரும்பி பார்க்கத்தூண்டும் ஆணழகன்களாக இருந்தனர்.

     ஈஸ்வர், சுகந்தன், சுஜா மூவரின் முகஜாடையும் ஒத்திருந்தது. இனியும் உட்கார்ந்து இருந்தால் சரியாயிருக்காது என்று எண்ணிய சுகன், எழுந்து சென்று

      “வாங்கத்தான். எப்போ வந்திங்க? அத்தை, மாமா நல்லா இருக்காங்களா?” என்றவன், அவன் பதிலளிக்கும் முன்

     “அண்ணா, நேத்து வந்திங்கன்னு இப்பதான் சுஜா சொல்லுச்சி. இந்த சில்வண்டை காப்பாத்தி விடறதே உங்க வேலையா இருக்கு. நீங்க உங்க வேலைய விட்டுட்டு மேடம்கிட்ட ஜாயின் பண்ணிக்கிங்க. நீங்க அங்கேயும், இங்கேயும் அலைய தேவையில்லை” என்றான் நக்கலாக.

     சுபாஷ் இப்போது சுகனின் கையை பின்புறமாக திருப்பி பிடித்தபடி, “ சுகா என் முன்னாடியே சுதியை நக்கலடிக்கிற, பாத்து இருந்துக்கோ! சுதியை பாத்துக்கிறதை விட உனக்கும், உன் அண்ணனுக்கும் முக்கிய வேலை இருக்கா, என்ன? இரு மாமாகிட்ட கேக்கிறேன்” என்க

    சுகன் “அத்தான் என் பேச்சை நான் வாபஸ் வாங்கிக்கிறேன். நாலு நாள்ல எக்ஸாம் இருக்கு. கை உடைஞ்சா எழுத முடியாது. கையை விடுங்க ப்ளீஸ். சுஜா  விடச் சொல்லு. நேரா இங்க வந்துட்டிங்களா?” என பேச்சை மாற்ற

    “உங்க ரெண்டு பேருக்கும் என்ன சொல்லட்டும் அண்ணா?” ஈஸ்வரிடம் சுஜா கேக்க, ஈஸ்வர் சுபாஷிடம் கண்களால் மன்னிப்பு கேட்டபடி, சுஜாவை இழுத்துக்கொண்டு சென்றான்.

     “சுஜா ப்ளீஸ். இப்ப எதையும் பேசாத. அவனை டென்ஷன் பண்ணாத. வா நாம அவன கூல் பண்றமாதிரி ஏதாவது வாங்கிட்டு போகலாம்.” என்றவன்,

     “ஐய்யோ சுஜா, நம்ம வீட்டுல பொறந்த ராட்சசியும் வந்திருக்கு. நான் நீ குடுத்த வரவேற்புல மறந்துட்டேன். இன்னைக்கு என்னென்ன நடக்கப்போகுதோ? அப்பா, சித்தப்பா வேற காய்ச்சியெடுப்பாங்க.” என பதறியவன்,

     “சுஜா நீ ஆடர் குடுத்துட்டு வா. என்னோட நாலு பேரு. நான் போய் அத்தையை ரிசீவ் பண்றேன். யேன் தலையை காப்பாத்தி விட்டுரு தாயி உனக்கு புண்ணியமா போகும்” கையெடுத்து கும்பிட்டபடி வேகமாக ஓடினான்.

     மற்றவர்கள் இந்த  மௌன நாடகத்தை ஏதும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, சுகனுக்கும், அந்த சுபாஷுக்கும் ஈஸ்வர் சுஜாவிடம் கெஞ்சுவது புரிந்தது.

     ஆனால் இருவருக்கும் இரு வேறு மனநிலை. சுபாஷ் கோபத்துடனும், சுகன் மௌன சிரிப்புடனும் கவனித்தனர். சுஜா யாரையும் கண்டுக்காமல் ஆடர் கொடுத்தவள், அருகிலிருந்த  சேரில் உட்கார்ந்தாள்.

    ஈஸ்வர், ஒல்லியான முன் ஐம்பதுகளில் வயதிருக்ககூடிய ஒரு பெண்மணியை அழைத்துவர, தலையில் கைவைத்த சுகன், சுஜாவை பார்த்து அவனும் கும்பிட்டு விட்டு ஓடினான்.

      “வாங்கத்த. நீங்க வந்திருக்கிறதா அத்தானும் சொல்லல. அண்ணனும் சொல்லல. தெரிஞ்சிருந்தா நான் காருக்கே வந்திருப்பேன்.” என்றவன் சுஜாவை தலையாட்டி கூப்பிட்டான். பின் கண்ணனிடம் திரும்பி, “கண்ணா ஒரு சேர் எடுத்துட்டு வா இங்க” என்றான்.

     சுஜா மெதுவாக நடைபயிலும் குழந்தை போல அடிமேல் அடி வைத்து வந்தவள்,

      “வாங்கத்த. மாமா நல்லா இருக்காரா? நீங்க நல்லா இருக்கிங்களா?” என்றவள், ஈஸ்வரையும், சுகனையும் போதுமா? என்பது போல பார்த்தாள்.

    “உட்கார்ந்து பேசுங்கத்த. நீங்க இங்க வர்றதா அப்பா சொல்வேயில்ல. அப்பாக்கும் நீங்க வந்திருக்கறது தெரியாதா?” என்றவள் சுபாஷை முறைக்க

    அம்மாவின் பின்னால நகர்ந்து நின்று உதடை பிதுக்கி இல்லையென்பது போல தலையாட்டினான்.

    “வயசுப்புள்ள சாயங்காலம் ஹாஸ்டல் போகாம இங்கென்ன கூத்தடிச்சிக்கிட்டிருக்க? உங்கப்பன் படிக்க அனுப்பினா நீ இங்க என்ன  பண்ணிக்கிட்டு இருக்க?” மேலும் அந்தம்மா பேசும் முன் சுஜா,

    “நான் என்ன பண்ணினதை நீங்க பாத்திங்க? சொல்லுங்க பாக்கலாம்? எனக்கு பிரைஸ் கிடைச்சதுக்கு என் ப்ரெண்ட்ஸ்  டிரீட் தராங்க. இதுல என்ன தப்பை கண்டீங்க?  அண்ணனும் என்னோட இருக்காங்க.”

  “ நான் படிக்க வந்த இடத்துல வந்து தப்புத்தப்பா பேசறது, நடந்துக்கிறது நீங்க. ஆனா எங்கிட்ட சண்டைக்கு வர்றீங்க. உங்க அதிகாரத்த இங்க காட்டாதிங்க, சரியா?” என்று வேகமாக பேசிவிட்டு சுபாஷிடம் திரும்ப, அவன் தோப்புக்கரணம் போடுவதுபோல காதை பிடிக்க,

     “சுபாஷண்ணா, உங்கம்மா செய்யறது சரியா? நீங்களே சொல்லுங்க” என்றாளே பார்க்கலாம், மூவரும் சரண்டர் என்பதை போல கைகளை தூக்க, “அப்படின்னு என்னோட ப்ரெண்ட்ஸ் கதறது உங்க யாரு காதுலயும் கேக்கலியா? பப்ஸ் வேற ஆறிக்கிட்டிருக்கு, சாப்பிடுங்க” என்க

    “அப்பா, தப்பிச்சோம் இன்னைக்கு” என பெருமூச்சு விட்டனர் மூவரும்.

      “அந்த பயம் இருக்கனும்.” என உதடசைத்தவள், தன் அத்தைக்கு பப்ஸ், டீ கொடுத்தாள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்க, சுஜா, காயுவை தவிர்த்து மற்ற பெண்கள் அனைவரும் ஹாஸ்டல் சென்றனர்.

    “பாத்ரூம் எங்க இருக்கு? காட்டுங்க” என சுஜாவின் அத்தை கேட்க, சுஜா காயுவிடம் கூட்டிச் செல்லும்படி தலையசைத்தாள். அவளும் “வாங்கம்மா, நான் கூட்டிட்டு போறேன்”னு சொல்லி அழைத்துச்சொல்ல,

     “சுபாஷு இது சரியில்ல. இதுக்குமேல உனக்கு மரியாதை இல்ல. நான் உன்னை அத்தான்னு கூப்பிடனுமா? நீயெல்லாம் ஐபிஎஸ் எப்படி பாஸ் பண்ணின? எங்க உன்னோட வலது கை? ஈஸ்வரா முன்னாடி வா. இன்னைக்கு இருக்கு உனக்கு” என சுகன் சுஜா போல பேச,

      “ஒழுங்கா எடுங்க ம்ம்ம்…” என சுஜா சொல்ல மூவரும் அவரவர் பர்ஸை கொடுத்தனர்.

     “மூணு பேரும் கவனிங்க. அம்மா சொல்லுச்சி. எங்க வீட்டு ஆட்டுகுட்டி சொல்லுச்சி அப்படின்னு யாராவது எங்கிட்ட ஏதாவது சொன்னிங்க சங்குதான், ஞாபகம் வச்சிக்கிங்க.”

     “அப்புறம் இந்த அத்தை மகனே, அத்தானேன்னு என்னால பாடவெல்லாம் முடியாது. சுபாஷு நான் என்ன சொல்லி கூப்பிட்டாலும் ஈஸ்வரையும், சுகனையும் எப்படி பார்க்கறேனோ அப்படித்தான் உன்னையும் பார்க்கறேன். சரியா?”

    “ உங்கம்மாகிட்ட சொல்லி வைய்யி. இனிமேல சொல்லாம கொள்ளாம இங்க வந்துச்சி நீயும் காலி, உங்கம்மாவும் காலி பாத்துக்க. அப்படியே இந்தப்பக்கம் வந்தா வந்த வேலைய பாத்துகிட்டு போயிக்கிட்டே இருக்கனும். என்ன புரியுதா?” என சொல்லி சுபாஷின் பர்ஸை காலி செய்தவள், காலி பர்ஸை திருப்பிக் கொடுத்தாள்.

    ஈஸ்வரின் பர்ஸில் க்ரிடிட் கார்டையும், சுகனின் பர்ஸில் ஆயிரம் ரூபாயையும் எடுத்துக் கொண்டாள்.

     “மூணு பேருக்கும் தேங்க்ஸ்” எனச் சொல்லி ஈஸ்வரின் தோளில் சாய்ந்தாள்.

     “அண்ணா இந்த வாரம் ஊருக்கு போலாமா?” என்றவள், சட்டென சுபாஷிடம்  திரும்பி,

    “அடுத்து எங்க போற ப்ளான்? எங்க வீட்டுக்கா? இல்லை உங்க வீட்டுக்கா? சீக்கிரம் உங்கம்மா மங்கம்மா வரங்காட்டியும் சொல்லுங்க. எங்க வீட்டுக்கா இருந்தா நாங்க அடுத்த வாரம் போறோம்” என்றாள் சுஜா.

     “என்ன பாப்பா பயமா இருக்கா? பம்முற” ஈஸ்வர் கேக்க

   “ பயமா? எனக்கா? ச்சே.. ச்சே.. பயமே சுஜாவ பாத்தா பயப்படும். ஒரே அத்த இல்ல. அதான் பொழச்சி போகட்டும்னு விட்டு வைக்கலாமுன்னு கேட்டேன்.”

     “இங்க கொஞ்சம் ஓவரா ஸீன் போட்டதுமாதிரி இருந்துச்சி. அது வீட்டுல இருக்கிறபோது நாம போனா அது துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடனும். பாவமுன்னு நெனச்சி சொன்னா நான் பம்முறேன்னு நீங்க கிண்டல் பண்றீங்க” என முறுக்கியவள்

    “ஓகே. இப்ப நாம யாருக்கு போன் போடலாம்? அப்பாவுக்கா? பெரியப்பாவுக்கா? ரெண்டு பேரும் பிஸியா இருப்பாங்க. இப்போ பேச வேணாம்…. தாத்தாவுக்கு போடலாம்”ன்னு சொல்லி போன எடுக்க, ஈஸ்வர் பதறிக்கிட்டு

      “பாப்பா அண்ணனுங்க பாவமில்ல. பெரிய மனசு பண்ணி விட்டுரு தாயி. நானும் எந்தம்பியும் ஒரு ஓரமா பொழச்சிட்டு போறோம். இப்ப இவங்க எங்க போறாங்கன்னு தெரியனும், அவ்வளவு தான? அதுக்கெதுக்கு போன் போடனும்? நான் எதுக்கு வெட்டியா இருக்கேன்? கேட்டு சொல்றேன் பாப்பா” என  வாயில் போட்டுக்கொள்ள, அங்கிருந்த அனைவரும் ‘ஆவென’ பார்த்திருந்தனர்.

     சுகன் சிரித்தபடி வேடிக்கை பார்க்க, ஈஸ்வரிடம் சுபாஷ் ரகசியம் பேச, “ஓ அப்படி போகுதா கதை…” என்றவன்

     “ பாப்பா ஜாதகம் பாத்தாங்களாம். பரிகாரம் பண்ணனுமாம். அப்பாவே உனக்கு கூப்பிட்டு பேசுவாராம். அவர் சொன்னா தலையாட்டாம நாலு வார்த்தை நச்சுனு சொல்லுவிங்களாம். இல்லன்னா அத்தான் தலை தப்பாதாம். பார்த்து பக்குவமா செஞ்சிவிடு தாயி. உன்னை நம்பி தற்போதைக்கு நாலு உசுரு இருக்கு” என்றவன் தன் அத்தை வருவதை பார்த்தவன்

     “நம்ம அத்தை பாப்பா. நாமதான் பாத்துக்கனும்” என்க “என்னடா இது? சம்பந்தமில்லாம பேசறான்”னு சுற்றியிருந்தவர்கள் திகைக்க

     “டேய் ஈஸ்வரா ஏன்டா யேன் மருமகள திட்ற? தடிமாடு கணக்கா வளந்து நிக்கிறயே தவிர ஒரு எழவும் தெரியல” என சத்தமாக திட்டிக்கொண்டே வர, சுஜா அவருக்கு முதுகுகாட்டி திரும்பி நின்று அடக்க முடியாமல் வாய் பொத்தி சிரிக்க ஆரம்பித்தாள்.

     சுகனும், ஈஸ்வரனும் திருதிருவென முழிக்க, சுஜாவின் உடல்குலுங்குவதை தவறாக நினைத்து, “நான் அந்த பக்கம் ஒதுங்கிட்டு வராதுக்குள்ள புள்ளைய அழுவ வச்சிட்ட. உன்னையெல்லாம் எவன்டா போலீஸுல சேத்தான்? பொசகெட்ட பய…இரு தாத்தாகிட்ட போன போட்டு சொல்றேன்.”

  “ உனக்கு தங்கச்சி மேல கொஞ்சம்கூட பாசமே இல்ல. இப்பகூட நான் கண்கலங்குனா எங்கண்ணனுங்க தவிச்சி போயிடுவாங்க. நீங்களும் இருக்கிங்களே, துப்புகெட்டவனுங்க.”

   “ டேய்…சுபாஷு உன்னைய நம்பினா ஏமாந்துதான் போவனும் போல. அவன் திட்டிக்கிட்டு இருக்கான். நீ வேடிக்கை பாக்குற. ஸ்டேஷனுலயும் இப்படி மரம்மாறி நிக்காத…. தெரியுதா?” என திட்டிக்கிட்டே இருக்க, சிரிப்பை அடக்க முடியாத சுஜா, காயுவை இழுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.

  வாயிலிருந்து கையை எடுத்துட்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். திடீரென “ ஐய்யோ அண்ணன்?” என்றவள் காயுவை இழுத்துக்கொண்டே திரும்பி வந்தவள் கண்டது, அழுவதை போல நின்ற அண்ணன்களையும், பேச்சை நிறுத்தாமல் இன்னும் கத்திக்கிட்டிருந்த அத்தையையும், சட்டென அண்ணன்களுக்கு நடுவில் வந்தவள், இருவரையும் தோளணைத்து,

    “அத்தை போதும். என்னோட அண்ணனுங்க தான என்னைய  திட்டினாங்க, கொஞ்ச நேரத்தில அவங்களே என்னைய கொஞ்சுவாங்க. அதெதுக்கு உங்களுக்கு? எனக்கும் எங்கண்ணன்களுக்கும் ஆயிரம் இருக்கும் அத நாங்களே பாத்துக்கிறோம். ப்ளீஸ் அவங்கள திட்டாதிங்க” என முடித்து வைக்க

   “ஆத்தி நம்ம தலை தப்பிச்சுதுடா தம்பி”ன்னு மூச்சிவிட்டனர் கடையிலிருந்தவர்கள்.

    சுஜா பணம் குடுக்க போக, அத்தையம்மாள் நெற்றிக்கண்ணை திறக்க, ஈஸ்வர் சுஜா பின்னாடி ஓடினான்.

    “குட்டிம்மா, இன்னைக்கு இது போதும்டா. இதுக்குமேல அண்ணன் தாங்கமாட்டேன். ப்ளீஸ் விட்டுருடா செல்லம். சொல்லாம கூட்டிட்டு வந்தது யேன் தப்புதான்.” என ஈஸ்வர் பாவமன்னிப்பு கேக்க,

    “அண்ணா உங்க பர்ஸை நாந்தான் காலி பண்ணிட்டேனே, அதான் நானே வந்தேன். இல்லன்னா அடுத்த டாபிக் அதுதான். இந்தாங்க பணம். குடுத்துட்டு வாங்க. நான் வெளியே கூட்டிட்டு போறேன்”னு முணுமுணுன்னு சொல்லிட்டு அத்தையிடம்,

     “வாங்கத்தை வெளியில போலாம். இவங்க மூணுபேரும் குடுத்துட்டு வரட்டும். இங்க எங்க வந்திங்க?” பேச்சு கொடுத்துக்கிட்டே கூட்டிப்போனாள்.

     “அத்தான் சுஜா சொல்றது சரி. இந்த ரெண்டு ராட்சசிங்கிட்ட மாட்டிட்டு முழிக்காதிங்க. சுஜா திசைக்கு ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு பின்னங்கால் பிடரியில அடிக்க ஓடிருங்க.” சுகன் கிண்டல் செய்ய

    “ஈஸ்வர் இந்த துரை அரை மணிநேரமா மௌன விரதம் இருந்தாரா? இல்ல இப்பதான் பேச்சிவந்துச்சா? ஏன்டா எருமை நாங்க ரெண்டு பேரும் நொந்து நூலாயி நிக்கிறோம். உனக்கு சிரிப்பு வருது?” சுகனின் முதுகிலடித்து சுபாஷ் நக்கல் செய்தான்.

    “விளையாட்டு போதும். எத்தனை நாள் சுஜா முதுகுக்கு பின்னாடியே மறைஞ்சி நிக்க முடியும் யோசிங்க அத்தான். ஒவ்வொரு முறையும் அவ டாபிக்க மாத்திக்கிட்டே இருப்பாளா? ஏதாவது செஞ்சி அவள ரிலீவ் பண்ணிடுங்க ப்ளீஸ். சுகா இந்தா சுஜா பணங்குடுத்துச்சி. கணக்கு முடிச்சிட்டு சீக்கிரமா வெளிய வந்து சேரு. அவங்க திரும்ப உள்ள வந்துட்டா கிளப்ப முடியாது.” எனச் சொல்லி சுபாஷுடன் வெளியே வந்தான் ஈஸ்வர்.

     “சுகன் காமெடி படம் பாத்த பீல் போ. கலக்கீட்டிங்க சூப்பர்” என சிரித்தான் கண்ணன்.

    “யாரிவங்க? எதுக்கு வந்தாங்க? ஒன்னும் சொல்லாம போறாங்க? சுகா உன் தங்கச்சி.. செம போ. அவங்கள அப்பப்போ திசை திருப்பி, வாயடைக்க வச்சி, உங்கள மாட்டியும் விட்டு, காப்பாத்தியும் விட்டு பின்னி பெடலெடுத்துட்டாங்க போ.” ஜெயன் கமெண்ட் குடுக்க கண்ணனும், சுகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    “நம்ம சுஜாவா இதுன்னு வாயடைச்சி நின்னோம் போ” என்றனர் மகேஷும், சதீஷும்.

   “அவங்க எங்க அத்தை. சுபாஷ் எங்க அத்தை மகன், அத்தான். ஈஸ்வர் எங்கண்ணன். சுபாஷத்தான் ஐபிஎஸ். ஈஸ்வர் இங்க போலீஸ் இன்ஸ்பெக்டர்.” என சுகன் சொல்ல திகைத்தனர்.

    “சுபாஷுக்கு சுஜாவை கல்யாணம் செய்ய கேக்கறாங்க எங்கத்தை. இதுல இவங்க ரெண்டு பேருக்குமே இஷ்டமில்லை. ஆனா அத்தான் அவங்கம்மாகிட்ட வாய திறக்க மாட்டேங்கிறாங்க. சுஜா ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லி தடுத்துக்கிட்டு இருக்கு.” சுகன் சொல்ல ஐவரும் அதிர்ச்சியில் வாயை பிளந்தனர்.

   அத்தையம்மா வந்த காரணம் என்ன? சுபாஷ் சுஜாவை எதற்கு கேடயமாக பயன்படுத்துகிறான்? ஈஸ்வரும், சுகனும் ஏன் அத்தைக்கு பயப்படுகிறார்கள்?