அம்ரிதா இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது…PEARL ACADEMY வந்தவள் தன் தோழி மேகவியுடன் சேர்ந்து கல்லூரி செல்வதும் பிறகு மீதமிருக்கும் நேரத்தில் DESINGNINGக்கு தேவையான துணிகளை வாங்குவது,அதை அழகாக DESIGN செய்ய கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு இருந்தாள்…
வந்த புதுசில் இந்த ஊரு நல்லாவே இல்லை மேகவி…நம்ம ஊரு மாறி வருமா??
“சென்னை சென்னை தான்டி” என்றவளை மேகவி முறைத்தாள்..
Madamக்கு ஏன் சென்னை பிடிக்காம போகும்,அங்க இருந்து தான் அர்ஜுன் கூட travel பண்ண அதான் சென்னை நியாபகமாக இருக்கிறது போல என்று அவளை கிடைத்த கேப்பில் எல்லாம் கலாய்த்து கொண்டே இருப்பாள்…
மேகவியுடன் இவள் பகிறாத ஒரு விஷயம் கூட இல்லை…ஏன் அன்று அர்ஜுன் கட்டி பிடித்தது கூட அன்று ரூமிற்கு வந்ததுமே இவளிடம் தான் சொல்லி போல்பி கொண்டு இருந்தாள்…
இரண்டு வாரங்களுக்கு முன்பு,அர்ஜுன் தன்னை அணைத்தது கூட பெரிதாக தோன்றவில்லை…அவன் அவளை அம்மு என்று ஆயிரம் முறை அழைத்திருப்பான்…ஆனால் அன்று இருவரும் பிரியும்ம்போது அம்மு என்று அழைத்ததும், இவள் மனதிலும் அவன் மேல் சிறு சலனம் ஏற்படுத்திவிட்டது என்னமோ உண்மை தான்….
அன்று…
அப்படியே நின்று கொண்டு இருந்தவளை,அம்மு வா போகலாம் என்று அஷ்வின் கூறியதும் தான் சுய நினைவிர்க்கே வந்தாள்…
ரூமிற்கு வரும்வரை அவள் அமைதியாக வருவதை பார்த்த அஷ்வின்,
அப்பா இன்னைக்கு டெல்லில செம்ம மழை இருக்கும் போல் என்று அவன் கூறியதும் அவளும் அவனை புரியாமல் தான் பார்த்தாள்…
இல்லை அம்மு நீ இவ்வளவு அமைதியாக வருகிறாயே அதான் கேட்டேன்…
ஹே அஷ்வின் என்னை கலாய்க்கிறியா??என்று அவனுக்கு இரண்டு அடி வைத்தாள்…
பின்ன என்ன அம்மு…நீ இந்த அளவுக்கு அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்லை…எதையோ பறிகொடுத்த மாறி நீ இருந்தா நான் என்னனு சொல்ல…
அதெல்லாம் ஒன்னும் இல்லை அஷ்வின்….
அஷ்வினின் அப்பாவும்,அம்ரிதாவின் அப்பாவும் ஒரே கல்லூரி நண்பர்கள் தான்…அதே நட்பு தான் இன்று இவர்களுக்குள்ளும் சிறுவயதிலிருந்தே அஷ்வினிர்க்கும் அம்ரிதாவிர்க்கும் தொடர்கிறது….
அஷ்வினின் பத்து வயது வரை இவர்கள் சென்னையில் தான் இருந்தனர்…அதன் பிறகு வேலை நிமித்தமாக இங்கு வந்தவர்கள் ,இங்கயே இருந்து விட்டார்கள்…
அஷ்வினின் தந்தைக்கு அம்ரிதாவை சிறு வயதிலிருந்தே நிரம்ப பிடிக்கும் …துரு துரு வென்று இருப்பவளை யாருக்கு தான் பிடிக்காது…அவருக்கு பெண் பிள்ளை வேண்டும் என்று அவ்வளவு ஆவல் இருந்தது…அதனால் அவளை தன் சொந்த பெண் போல தான் பார்த்து கொள்வார்…
அஷ்வினின் தந்தைக்கும்,தாய்க்கும் அம்முவை அஷ்வினிர்க்கு திருமணம் செய்து வைக்க அவ்வளவு ஆசை…
இதை அம்ரிதாவின் தந்தையிடமும் கேட்டு இருந்தனர்…அம்ரிதாவிர்க்கும் ,அஷ்வினுக்கும் “முழு சம்மதம்” என்றாள் எங்களுக்கும் முழு சம்மதம் தான் என்றார்..
அஷ்வினிர்க்கும் “அம்ரிதா என்றாள் ரொம்ப பிடிக்கும்..”ஆனால் அவள் மீது காதல் இருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை…
ஆனால் இருவருக்குமே நல்ல நட்பு இருக்கிறது…
“அம்மு” என்று அவளை அழைத்தவன்…
சொல்லு அஷ்வின்…
உன்னோடு ஒருவன் வந்தான் இல்லையா??
அர்ஜுன கேட்கறியா ??
ஆமா அவனே தான்…உன்னை love பண்றானோ என்று சந்தேகமா இருக்கிறது…நீ என்ன நினைக்கிற..
ஏன் அஷ்வின் அப்படி சொல்ற…
உன்னை ஹக் பண்ணி WELCOME பண்ணலாம்ன்னு நெனச்சி தான் உன் பக்கத்துல வந்தேன் ஆனா அதை அவன் புரிஞ்சிகிட்டு என்னை தடுத்து,அவன் என்னை கட்டி பிடிச்சிகிட்டான்…
நிஜமாவா ??
அட ஆமா அம்மு…
உனக்கு எப்படி தெரியும்…
ஒரு பைய்யனோட மனசு ஒரு பையனுக்கு தான தெரியும் அம்மு…
ஓ ….
அவனை உனக்கு பிடிச்சிருக்கா அம்மு ??
பிடிக்கும் தான்..ஆனா காதல் எல்லாம் இல்லை..உனக்கு தான் என்னை பத்தி நல்ல தெரியுமே,north இந்தியன்ஸ் சைட் கூட அடிக்க மாட்டேன் என்று…
எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா இரு அம்மு…அவன் உன்கிட்ட எதுவும் சொல்லாமல் உன்னை ஹக் பண்ணத நானும் பார்த்தேன் தான்…
ஆமா அஷ்வின்,”அர்ஜுன்” எதுக்கு அப்படி செய்தான்னு தெரில…
அவனை பத்தி விசாரிப்போம் அப்பறம் இதை பத்தி பேசுவோம்…இப்போ நீ போயிட்டு ரெஸ்ட் எடு எதுவாக இருந்தாலும் கூப்பிடு சரியா??நல்லா தூங்கி எழுந்துட்டு கூப்பிடு அம்மா உன்னை பார்க்கனும்ன்னு சொன்னங்க சரியா …
சரி அஷ்வின் பாய்….பாய் அங்கிள்..
இவளை பார்த்ததும் மேகவீ ஓடி வந்து அணைத்துகொண்டாள்…
அவளை பார்த்ததும் தன் யோசனய்யை தூக்கி எறிந்தவள் இவளும் மேகவியை அணைத்துகொண்டாள்…
இவர்கள் இருவரும் UG யில் ஒன்றாக படித்தவர்கள்….மேகவி எந்த நிலையிலும் ,எவ்வளவு சண்டை வந்து இருந்தாலும்அம்ரிதாவை விட்டு கொடுத்ததே இல்லை….
மேகவீ பக்கா நார்த் இந்தியன் பொண்ணு…சென்னையில் தான் இருவரும் UG முடித்தார்கள்…மேகவியின் தந்தையும் தாயும் வெளிநாட்டில் இருப்பதால் இவளையும் அங்கு அழைத்தது செல்வதாக தான் இருந்தது…இவளுக்கு அங்கே செல்ல விருப்பம் இல்லை அதனால்,இவள் இங்கயே FASHION DESIGININg மேற்கொண்டு இங்கே படிக்கிறேன் என்று முடிவு செய்தவள்,அம்ரிதாவிடமும் கேட்டாள் அவளும் சரி என்று கூறிவிட,மேகவியின் தாயும் தந்தையும் அம்ரிதா கூட இருப்பதால் அவளை விட்டு சென்றனர்…வீட்டு வேலைக்கு ஆள் எல்லாம் ரெடி செய்து கொடுத்துவிட்டு தான் சென்றனர்….
இடுப்பில் கை வைத்து மேகவியை முறைத்தவள்,என்னோடு சுத்தவா இல்லை அஜயோடு சுத்தவா? என்று கேட்டவளை வெட்கத்தோடு பார்த்தாள் …
ஹே போடி அம்மு!!
ஐயோ என் தோழிக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா??
வீட்டுல எப்படிடி மேகவி சௌத் இந்தியன் மாப்பிள்ளை ஒத்துபாங்க்லாடி??என்று அம்ரிதா கேட்டதும் அவள் முகம் சோகத்தை காட்டியது…
சரிடி நடிக்காத…வீட்டுல நான் கண்டிப்பா உனக்காக பேசறேன் சரியா!!
ஹே அம்மு எனக்கு ஒரு சந்தேகம்..உனக்கு தான் நார்த் இந்தியன்ஸ் பிடிக்காதே ஆனால் எப்படி என்னோடு மட்டும் நட்பாக இருக்கிராய் என்று கல்லூரி படிக்கும்போதிலிருந்தே ஒரு சந்தேகம்…
நீ பிறந்து வளர்ந்தது எங்க சென்னை தான்…இடைல தான் இங்க வந்துருக்க…அது மட்டும் இல்லாம என்னை முதல் முறையாக பார்த்த அப்போ நீ என்னோடு பேசியது தமிழில் தான் நியாபகம் இருக்கா??இப்போ அது மட்டும் இல்லாம நீ சென்னைல தான் கல்யாணமே பண்ணிக்க போற…அப்போ நீ சென்னை தான…
இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்தவளை மேகவி ஆவேன பார்த்தாள்…
ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ ஒரு நார்த் இந்தியன தாண்டி கல்யாணம் பண்ணிக்க போற…இது என்னோட சாபம்டி…
சரி உன் சாபம் பழிக்கிறது இருக்கட்டும் எனக்கு ஏதவது சமச்சி வெச்சியா??
ரொம்ப பசிக்குது டி…
அவளை அமர வைத்தவள்,அவளுக்கு பிடித்த south இந்தியன்ஸ் food எல்லாம் எடுத்து வைத்து பரிமாறினாள்..
உனக்கு தான் சமைக்க தெரியாதே அதும் எங்க ஊரு சாப்பாடு எப்படி?
வீட்டு வேலைக்கு இருக்கவங்களுக்கு CHINESE FOOD கூட நல்லா சமைப்பாங்க…
எனக்காகவா இல்லை அஜய்க்காகவா..
இரண்டு பேருக்கும் தான்டி லூசு…
ஓகே ஓகே நீ நடத்துடி மேகவி..
சாப்பிட்டு விட்டு இருவரும் கொஞ்சம் நேரம் தோட்டதில் அமர்ந்து இருந்தனர்…ஒரு நிமிடத்தில் அத்துணை வார்த்தை பேசும் அம்ரித்த்தா அமைதியாக இருப்பதை பார்த்த மேகவிக்கு என்னவாக இருக்கும் என்று தோன்ற அவளிடமே கேட்டாள்,
என்ன ஆச்சு அம்மு??இவ்வளவு அமைதியாக இருக்கிற…
அதுவா….. என்று இழுத்தவளை பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிய ஆரமித்தது…
ஹே அம்மு!! யாருடி அவன்…
மேகவி உனக்கு நான் தும்மினா கூட தெரிஞ்சி போயடுதுடி அது எப்படின்னு தான் தெரில…
சும்மா அதையும் இதையும் பேசி மழுப்பாத சொல்லு…
நடந்த அனைத்தையும் கூறி முடித்ததும்,மேகவி ஆவேன பார்த்தாள்…
வாய கொஞ்சம் மூடு கொசு உள்ள போய்ட போகுது..
அர்ஜுன் ரொம்ப அழுகுடி…பிடிச்சிருக்கு தான் ஆனால் அதை காதல்ன்னு சொல்லிட முடியாது…அதுவும் இல்லாமல் என்னோட கொள்கைய பத்தி உனக்கு தான் தெரியுமே!!
Ohh சார் நேம் அர்ஜுனா!! நல்லா தான் இருக்கு…
ஆமாடி உனக்கு எப்படி பிடிக்காம போகும் உங்க நார்த் பையன ஆச்சே..
“அது என்னடி நார்த் சௌத்ன்னு பிரிக்கிற நம்ம இந்தியன்ஸ் அவ்வளவு தான்”
அதெல்லாம் ஒத்துக்க முடியாது என்ற அம்முவை பார்த்து சிரித்தாள்..
எதுக்கு இப்போ லூசு மாறி சிரிக்கிற..
ஒரு நாள் உனக்கு இதே காதல் வந்து நீயும் லூசு மாறி சிரிக்க தான் போறன்னு என்னோட உள் மனசு சொல்லுது அம்மு…
பார்ப்போம்டி…
இனிமேல் உன்கிட்ட நான் தைரியமா ஹிந்தி பேசுவேன்டி..கடைசியில பாத்தியா நீயும் எங்ககிட்ட மாட்டிகிட்ட…இனிமேல் நீயும் நார்த் தான் என்று கூறிவிட்டு ஓடிய மேகவியை,
“உன்னை” என்று துரத்தி கொண்டு ஓடினாள் அம்ரிதா…
நாட்கள் ஓடிகொண்டே இருந்தது….
மும்பையில் அர்ஜுன் பேஷன் ஷோவில் நடந்து வரும் அனைவரயும் பார்த்து கொண்டு இருந்தான்….அனைவரின் ஆடைகளும் அழகாக வடிவமைக்க பட்டிருந்தது…ஆனால் ஏனோ அதை எல்லாம் பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை…
ஏதோ ஒரு உந்துதல் தோன்ற நிமிர்ந்து பார்த்தான்…தென்னிந்தியா பாணியில் பாவாடையும் ப்லௌசும்,வெந்திய நிற தாவணியில் ஒரு பெண் நடந்து வந்தாள்…முடியை எப்பவும் போல் பின்னி போட்டு தலை நிறைய பூவை வைத்து இருந்தாள்,மெரூன் நிற போட்டு,உடைக்கு ஏற்றாற்போல் கழுத்தில் ஒரு மெல்லிய செயின்,பெரிய ஜிமிக்கி தோடு போட்டிருந்தாள் அதுவே அவளை பேரழிகியாய் காட்டியது..கண்களை சிமிட்டாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…
அனைவருமே அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தனர்…வெளி நாடுகளில் இருந்த வந்த ஒரு பிசினஸ் man அர்ஜுனிடம் SHE IS SOMETHING ELSE ,I CANT DESCRIBE HER BEAUTY என்று அவளை வர்ணித்து கொண்டு இருந்ததை கேட்கும்போது அவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு கோவம் வந்தது…
வந்தவள் வேறு யாரும் இல்லை அம்ரிதா தான்…நடந்து வரும்போதே அவனை பார்த்து விட்டாள் ஆனால் அன்று அவன் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் போனதால் அவனை அவள் சிறிதும் கண்டு கொள்ள வில்லை….
அவனோ அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்…அவளவு கோவமாக வந்தது அவனுக்கு…
இவ இங்க படிக்க வந்தாளா?இல்லை இந்த மாறி ஆட்டம் போட வந்தாளா??..
எல்லோரயும் பார்த்தான் அனைத்து ஆண்களும் அவளையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு கோவமாக வந்தது…
அன்று அவள் கல்லூரியில் வந்த போது நோட்டீஸ் போர்டு பார்த்தாள்…மும்பையில் பெரிய பேஷன் ஷோ நடக்கிறது….
மேகவி அதை பார்த்ததும்,அம்மு நீ இதை ட்ரை பண்ணி பாரேன்…உன்னோட திறமைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்..
ஆனா மேகவி நான் வடிவமைத்த ஆடையை போட்டு உடுத்தி நடப்பதற்கு அதற்கேட்ட்ற சரியான பொண்ணு வேண்டும்டி…
சரி அம்மு..யார்கிட்டயாவது பேசி பார்க்கலாம்…
அவர்களும் தெரிந்த அனைவரயும் பார்த்தனர்…யாருமே அதற்க்கு ஏற்ற முக வடிவத்தில் இல்லை…
என்னடி மேகவி!!யாருமே கிடைக்கல என்று சோகமாக கூறிய அவளை மேலிருந்து கீழே வரை பார்த்த மேகவி,
ஹே அம்மு!!
Model கிடைச்சுட்டாங்கடி…
எங்கடி மேகு!!
தோ நீ தான் அது…
என்னடி உளறுற..
சரியா வருமா??எனக்கு கொஞ்சம் stage பியர் இருக்குடி…