எனக்கு ரொம்ப tired ஆக இருக்கு..good night என்று கூறிவிட்டு படுத்து விட்டாள்….
அவள் சொன்னது போல் உறங்கி விட்டாள்…
அவனுக்கு தான் உறக்கம் வர மறுத்தது…எந்த பெண்ணின் மேலயும் இல்லாத நம்பிக்கை இவள் மேல் நமக்கு எப்படி வந்தது….இவள் மேல் எப்படி எனக்கு மரியாதை வந்தது என்று அவனுக்கு புரியவே இல்லை…
அவள் இருக்கும் பக்கம் திரும்பி படுத்தவன் அவள் தூங்கும் அழகை பார்த்து கொண்டு இருந்தான்…
தூங்கும்போது கூட இவ்வளவு அழகாக இருக்கிறாள்…
இது தான் காதல் என்று இந்த மடையனுக்கு புரியவில்லை…அது புரியும்போது இவள் அவனோடு இருக்க மாட்டாள்…
“IT FEELS LIKE I COULD KEEP LOOKING AT HER ALL NIGHT”..
“ஏனோ தெரியல இவ கூட இருக்க நேரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..”
உடனே அவனின் மனசாட்சி,இதை தான் காதல் என்று கூறுவார்கள் என்று அவனுக்கு கவுன்ட்டர் குடுத்தது..
“இந்த அர்ஜுன் போயிட்டு யாரையாவது love பண்ணுவனா…”
பிடிச்சிருக்கு ஆனா காதல் எல்லாம் கிடையாது…
AMMU LIKE A DOLL….அவ்வளவு தான்..
ஏதோ ஏதோ அவளை பற்றி யோசித்தவன் உறங்கி விட்டான்…காலையில் நேரம் கழித்தே எழுந்தான்…
அவள் எழுந்து முகத்தை துடைத்துக்கொண்டு,கையில் காபி,மடியில் புத்தகத்தை வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்…
எழும் அவனை பார்த்தவளின் முகம் பூவாக மலர்ந்தது….
Good morning அர்ஜுன்!!
Good morning அம்மு…
பிரெஷ் ஆகிட்டு வா காபி குடிக்கலாம்…
ம்ம்ம் என்றவன்..
பிரெஷ் ஆகி விட்டு வந்து அமர்ந்தவன் அவளிடம் காபி வாங்கி கொண்டான்…இதுவும் வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்தியா?? என்றதும் அவள் அவனை முறைத்தாள்…
போனா போகட்டுமேன்னு வாங்கி வெச்சா நீ ரொம்ப தான் பண்ணுற…
நீ குடிக்கவே வேண்டாம் குடு என்று அவனிடம் பிடுங்கி கொண்டாள்…
நானே ரெண்டையும் குடித்து விடுகிறேன்…
ஹஹஹஹா என்று சிரித்தவன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மு..
என்னோட எச்சில் பட்ட காபி தான் உனக்கு வேண்டும்ன்னா குடிச்சிகோ எனகென்ன வந்தது என்று மீண்டும் சிரித்தான்…
அர்ஜுன் நீ என்ன சொல்ற??
உண்மைய தான் சொன்னேன் …
ஆனா அர்ஜுன் ரெண்டு காபியும் ஒரே அளவுல இருக்கு நான் எப்படி நீ குடிச்சத கண்டுபிடிக்கிறது…
உடனே அவள் சிரித்து விட்டாள்…அர்ஜுன் உனக்கு காமெடி பண்ண தெரிலன்னா தெரிலயன்னு சொல்லு அதை விட்டுட்டு இப்படி ஒரு மொக்க காமெடியா பண்ணாத என்று மீண்டும் சிரித்தவளை சற்று கோபமாக பார்ப்பது போல் பார்த்து வைத்தான்…
மிக பெரிய தொழில் செய்யும் அவனுடைய சாம்ராஜ்யத்தை பார்த்து அத்தனை பேருக்கும் அவன் மேல் பயம் உண்டு…தன்னுடைய கண் பார்வையிலே அத்தனை பேரையும் அடக்கி வைப்பவன்….அவனுடைய தொழில் இந்தியாவை தாண்டி வெளிநாடு வரை பிரபலம் என்று தான் சொல்லவேண்டும்…
அர்ஜுன் GROUP of company…இவர்கள அனைத்து பிசினஸ் வேலைகளையுமே பார்ப்பவர்கள்…இவனின் தாத்தா ஆரமித்த TEXTILES கடை இன்று இந்தியாவில் மட்டும் எண்பது கிளைகள் உள்ளன…இது இல்லாமல் வெளி நாட்டிலும் இவர்களின் துணிக்கு அவ்வளவு வரவேற்ப்பு உண்டு…இது மட்டும் இல்லாமல் FINANCE company,JWELLERY ஷாப்,பல IT கம்பெனிஸ் இவர்களின் மேற்பார்வையில் தான் நடக்கிறது…
இவர்களின் குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு மிக அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்…
அப்படி பட்டவனை இவள் ஒரே வாரத்தையில் “பாவா நீ சரியான மொக்க பாவா”என்கிற தோனியில் கூறுகிறாள்..
இவளை தவிர இதை வேறு யாரவது சொல்லிருந்தால் அவர்களின் நிலைமை ஐயோ பாவம் என்று தான் சொல்ல வேண்டும்..
அர்ஜுன் ஆவளவு சீக்கிறம் கோப பட மாட்டான் ஒருவேளை கோபம் வந்து விட்டால் எதிராளியின் நிலைமை அவ்வளவு தான்…
அவனை வார்த்தையிலே வதைத்து விடும் திறமை இவனுக்கு மிக அதிகம்…இந்த கோபம் என்கிற சூறாவளியில் அம்ரித்தா ஒரு நாள் சிக்கி என்ன ஆகா போகிறாளோ??
சரி அம்மு நீயே சொல்லு எது நீ குடிச்சது என்று,
எனக்கு தெரியலையே என்று அவள் உதட்டை பிதுக்கி, சொன்ன அந்த சிறு குழந்தை தனத்தில் அவன் மொத்தமாக அவளிடம் சரிந்து விட்டான்…அவளையே தாபமாக பார்த்தான் பின்பு என்ன இது என்று தலையயை குளுக்கி தன்னை சரி செய்து கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…
அவள் இதுவா? அதுவா ?என்று மாத்தி மாத்தி பார்த்துகொண்டு இருந்தாள்…
ஒருவழியாக அவனிடம் ஒன்றை கொடுத்தாள்…அதை பார்த்தபோதே அவனுக்கு புரிந்து விட்டது இது தான் குடித்தது இல்லை..
ஏனோ அதை குடிக்க அவனுக்கு அவ்வளவு ஆர்வமாக இருந்தது…அதை குடித்தவனுக்கு முன்பு இருந்த இனிப்பை விட இன்னும் அதிகமாக இனிப்பது போல் தோன்றியது….
ஆனாலும் காபி செம்மையா தான் இருக்கு…
அவன் மனதோ டேய் அர்ஜுன் உனக்கே இது ஓவரா தெரில???
“தெரில நீ வய மூடு” என்று அவன் அதை அடக்கி விட்டான்..
அர்ஜுன் எப்படி சுப்பரா கண்டு பிடிச்சேன் பார்த்தியா?? என்று அவள் வேறு கெத்தாக கூறினாள்…
அம்மு நீ பேசாம CBCID officeல ஒரு வேலைய வாங்கி தரேன் அங்க சேர்ந்து எதையாவது கண்டுபிடியேன்…
அவளோ thank you என்றாள்…
அவனுக்கோ ஒரே நமட்டு சிரிப்பு தான் வந்தது…
அர்ஜுன் காபி எப்படி இருக்கு??
வழக்கத்தை விட சூப்பரா இருக்கு அம்மு…
Ohh அப்படியா!!
ம்ம்ம் ..
அம்மாக்கு காபி ரொம்ப பிடிக்குமா??
ரொம்ப ரொம்ப பிடிக்கும்..அதும் BRU காபின்னா அவ்வளவு பிடிக்கும்…
அர்ஜுன் you KNOW சம்திங்…
என்ன??
காபி+BOOK+travel=HEAVEN
என்று அவ்வளவு ரசனையாக அவள் கூறும்போது,அவளை மடியில் அமர்த்தி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது…
இவ்வளவு வருஷத்தில் எவ்வளவோ பெண்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் அனைவருமே போதைக்காக மட்டுமே…எந்த பெண்ணிடமும் இந்த குழந்தை தனத்தை பார்த்ததும் இல்லை ரசித்ததும் இல்லை..
SHE IS SOMETHING ELSe…
அர்ஜுன் அர்ஜுன் என்று கத்திக்கொண்டு இருந்தாள்…
சொல்லு அம்மு…
என்ன நீ கண்ணை திறந்து வைத்து கனவு காண்கிறாயா??இன்னும் டென் MINUTES ல இறங்க போகிறோம் அர்ஜுன்…
அப்போ தான் அவனுக்கு அது கேட்டது…
என்ன அம்மு சொல்ற!!
என்னாச்சு அர்ஜுன்…
நம்ம ஸ்டாப் வர போகுது…நீ உங்க வீட்டுக்கு போக போற,நான் என்னோட FRIEND வீட்டுல இருக்க போறேன் அவ்வளவு தான….
அம்ரிதாவிர்க்கு இது ஜஸ்ட் பிரிண்ட்ஷிப் ஆனால் அவனுக்கு இவளிடம் தனக்கு என்ன மாறி உறவு,இவளை ஏன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,இவள் தன்னை பிரிகிறேன் என்று சொல்லும்போது தனக்குள் ஏன் ஒரு வலி தோன்றி மறைகிறது என்று அவனுக்கு புரியவில்லை…
ஹே அர்ஜுன் உனக்கு என்ன தான் ஆச்சு….
NOTHING….
சரி BAGSலாம் எடுத்துக்கோ இறங்கலாம்…
ம்ம்ம்ம்…
இவளின் மனதிலோ இந்த அர்ஜுன்க்கு என்ன ஆச்சு??இப்படி இருக்கான்…
இருவரும்ம் டெல்லியில் இறங்கினார்கள்…
சரி அர்ஜுன் நீ கிளம்பு..
எங்க அங்கிள் வந்து பிக் பண்ணிபாங்க…
பரவால அம்மு இருக்கட்டும்…நீ போனதும் நான் போய்கிறேன்…
ஏனோ அவளை விட்டு பிரிய மனம் மறுக்கின்றது…அவளிடம் எதாவது பேச வேண்டும் போல் தோன்றியது…அவளை அனைத்து மிஸ் you சொல்லணும் போல இருந்தது…
அவள் முகத்தை பார்த்தான் அவளுக்கு அது போல் எதுவும் தோன்றாமல் நோர்மல் ஆகா தான் இருந்தாள்…
அவளின் தந்தை சொல்லிய குப்தா அங்கிள் வந்து விட்டார்…
அவர்களை பார்த்ததும் அர்ஜுனின் முகம் மாறியது…
ஏனென்றால் அவரோடு அவரின் மகன் அஷ்வினும் இருந்தான்…பார்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தான்…அர்ஜுன் அளவிற்கு இல்லை என்றாலும் அழகாக தான இருந்தான்…
அவர்களை தூர இருந்து வரும்போதே அஷ்வின் அம்ரித்தாவை ஆர்வமாக பார்பதை புரிந்து கொண்டான்…
அம்ரிதாவை நெருங்கி வரும்போது அஷ்வின் அம்முவை அணைத்து WELCOME செய்யலாம் என்ற நோக்கத்தோடு வருவதை புரிந்து கொண்டவன் ஓடி சென்று அர்ஜுன், அஷ்வினை கட்டி பிடித்தான்…
இப்படி அர்ஜுன் அவர்களை அனைத்ததை பார்த்த அம்முவிற்கு ஒன்றுமே புரியவில்லை…அவளோடே அங்கிள்,அஷ்வின் யாருக்குமே புரியவில்லை….சொல்லப்போனால் அர்ஜுன்னுக்கே புரியவில்லை…