பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,

டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அருத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.

மா நீங்களும் உட்காருங்க என்று மகன்கள் சொல்ல, நீங்க சாப்பிடுங்க நான் பாப்பா க்கு பார்க்கிறேன் என்று சொல்லி

இவர்களுக்கும் பரிமாறி, மகளுக்கு சின்ன சின்னதாய் இட்லி பிய்த்து வைக்க

அவளும் குழம்பில் தொட்டு சாப்பிட, கறியையும் அவளுக்கு தக்க சின்ன சின்னதாய் பிய்த்து வைத்தாள்.

பின் மகளின் டம்ளரில் தண்ணீர் இல்லாதது தெரிந்து அவள் எழுந்து அதனை கொண்டு வர சரியாக அந்த நேரம் அலைபேசி அழைத்தது.

அவளின் கண்களில் ஐயா காலிங் பட, இவன் எழ முற்பட, அப்பாவை உட்கார்ந்து சாப்பிட சொல்றா என்றாள் விறைப்பாய்

அவன் ஏன் அதற்கு பிறகு எழ போகிறான், அரை மணி நேரத்திற்கு மேல அமர்ந்து உண்டு எழ, வீட்டின் வாயில் மணி ஒலித்தது.

எதிர் வீட்டிலிருந்து வேலையாள், ஐயா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க என்று

என்னன்னு கேட்டு வந்துடறேன் என்று மகன்களிடம் சொல்ல

நிலா வின் குரல் ஒலித்தது, போனமா வந்தமான்னு இருக்கணும், இன்னைக்கு உங்களோட தாண்டா என்று.

வந்துடறேன் என்று சொல்லி சென்றான்

என்னடா இன்னைக்கு தொகுதிக்கு போறேன்னு சொன்ன இன்னும் கிளம்பாம இருக்க என்றார் அதட்டலாக

இல்லைங்கய்யா நாளைக்கு இருந்து போறனுங்க

ஏன்டா சின்னவரை நான் கிளப்பியிருக்கேன் இன்னைக்கு கிளம்பு

நிலா அவனிடம் சொல்லும் வேலை, அதுவும் மகன்களுக்காக, தட்ட மனதில்லை.

மதியத்துக்கு மேல கிளம்பறேனுங்க

ஏன் இப்போ என்ன அப்படி ஒரு வேலை என்றார் கோபமாக

இல்லை கண்ணு பசங்களுக்கு வண்டி கத்து தர சொல்லுச்சு, நானும் சரி ன்னு சொல்லிட்டேன், எனக்கு சின்னவரை நீங்க கிளப்பி இருக்குறது தெரியாது காலையில கத்து குடுத்துட்டு மதியம் போல கிளம்பிக்கறோம் என்றான் தயக்கமாக

கண்ணு என்ற அவனின் வாய் மொழி வார்த்தையை கேட்டதும் சற்று நிதானித்தார்.

அவர் சரி என்று சொல்ல வாய் திறக்கும் முன்னே அவரை அனுமானித்தவனாக ராஜ நாராயணன் இல்லை எனக்கு இப்போவே போகணும் என்றான் பிடிவாதமாக

முதல் முறை கிளம்புகிறான் அது தட்டிப் போவதில் அவனுக்கு விருப்பமில்லை

கேசவ நாராயணன் அவனை ஒரு பார்வை பார்க்க, காலையில போயிட்டு வந்துடறோம், மதியம் போல அவர் சொல்லிக் குடுக்கட்டும்

சரி என்ற வார்த்தை தமிழ் செல்வனின் வாய் மொழியாக வரவில்லை, அமைதியாக நின்றிருந்தான்.

செந்தாமரை இதனை பார்த்திருந்தவர், அவன் தான் தயங்குறான்ல, ஒன்னு மதியம் போகலாம் இல்லை முதல் நாள் செண்டிமெண்ட் நினைச்சா அப்பாவோட போ என்று எளிதான தீர்வு கொடுத்தார்

அதெப்படி நாம சொன்னா நம்ம பேச்சை தான் கேட்கணும் என்று வாசவி யும் சொல்ல

இப்படியெல்லாம் பேசக் கூடாது என்றார் கண்டிப்பாக

அதற்கும் அமைதியாக தான் நின்றிருந்தான் தமிழ்செல்வன்

ஏம்மா ராஜ் பீல் பண்றான் தானே அதையே மதியம் கத்துக் குடுத்தா என்ன

மெதுவாக கேசவ நாராயணனை பார்த்தவன், கண்ணு கோவிச்சிக்கிச்சுன்னா அப்புறம் என்னை பசங்களுக்கு கத்துக் குடுக்கவே விடாது, கோபம் வந்தா என்ன பண்ணும்னு சொல்ல முடியாதுங்களே என்றான் தன்மையாகவே

கேசவ நாராயணன் எந்த பதிலும் கொடுக்கவில்லை

கோபம் வந்தா என்ன பண்ணுவாங்க என்று வாசவி வார்த்தையை விட

எனக்கெப்படி வாசவி தெரியும் அவங்களுக்கு தான் தெரியும்

சும்மா பூச்சாண்டி என்று வாசவி முனுமுனுக்க

நிலாவின் கோபத்தின் அளவை அறிந்தவன், தமிழ்செல்வன் மட்டுமே.

அவளை ஒரு பார்வை பார்க்க…

எதுக்கு பிரச்சனை, எங்கடா போகலாம்னு இருந்த சொல்லு நான் போறேன் அங்க யாரு நம்ம ஆளுங்க பேசிட்டு சொல்லு என்று அவர் முடித்து விட்டார் கேசவ நாராயணன்.

அவன் வரவில்லை என்ற எரிச்சலில் ராஜ நாராயணன், அப்படி வண்டி சொல்லிக் குடுக்கணும்னா ஏதாவது வண்டில சொல்லிக் குடுங்க, எங்கப்பா உங்களுக்கு குடுத்த வண்டில சொல்லிக் குடுக்காதீங்க என்று சொல்லிவிட

டேய் என்ன பேசற நீ என்று செந்தாமரை பெரிய அதட்டலிட…

கேசவ நாராயணன் என்னங்க தம்பி இது என்று அவரும் அதட்ட

அவன் என்னவோ சரியாய் பேசியதை போல வாசவி மிதப்பாய் பார்க்க…

பேசும் போது சுற்றம் பார்த்து பேச வேண்டும் என்ற அறிவு ராஜ நாராயணனுக்கு இல்லை.

அங்கிருந்த நிலா வின் விசுவாசி அடுத்த நொடி இந்த விஷயத்தை நிலாவின் காதுகளுக்கு கொண்டு சென்று விட

சில பல நிமிடங்களுக்கு பிறகு கேசவ நாராயணன் தமிழ் செல்வனுக்காக கொடுத்த பைக் என்று சொல்ல பட்ட ஒன்று தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.