அத்தியாயாம் 2:

அம்ரிதாவிர்க்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கூறாமல் விட்டு விட்டேன்…

அவளுக்கு பெரியார் என்றாள் அவ்வளவு பிடிக்கும்,பெரியார் கொள்கையை பின்பற்றுபவள்.. அதனால் ஹிந்தி பேசும் யாரையும் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது..

ஹிந்தி பேசும் யாரயாவது பார்த்தால் கேவலமாக முகத்தை சுழிப்பாள்…

சென்னையில்  வெளியே எங்காவது சென்றாள் ஹிந்தி பேசுபவர்களை பார்க்கும்போது “இவனுங்க நம்ம சென்னைய மொத்தமாக சுருட்டி கட்டபை எடுத்துகிட்டு  போற மாறி  போயிருவனுங்க போலயே “என்று,

 ஹிந்தி BHAIYYA கிட்ட எதுமே வாங்க மாட்டாள்… வாங்குபவர்களையும் வாங்க விடாமல் செய்து விடுவாள் முக்கியமாக பானி பூரி சாப்பிடவே மாட்டாள் …

எங்க ஊர்ல இருந்துகிட்டு நீங்க வாழ்ரிங்கடா! ,வாழ்ந்துட்டு போங்க..

“வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” என்று பெருமையாக கூறி கொள்வாள்”..

தன்னுடைய தாய் மொழியின் மேல் அவ்வளவு பற்று கொண்டவள் …மலையாளம் ,தெலுகு,கன்னடம்  அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும் என்பது அவளுடைய பெரிய ஆசை என்று தான் சொல்ல வேண்டும்…

ஆனால் தெலுகு ஓரளவுக்கு இப்போது கற்று கொண்டாள்…அதை கற்று கொண்டதும் அவளுக்கு வானத்தையே வசபடுத்தியது போல் உணர்வு..

ஆதி காலத்திலேயே பிறந்த என் தாய்மொழி தமிழை அலுவலக மொழியாக வைக்காமல்,ஹிந்தியை வைத்து உள்ளார்கள் என்று புத்தகத்தில் படிக்கும்போது எல்லாம் நரம்பு புடைக்கும் அவளுக்கு கோவத்தில்…

“முட்டாள்” என்பதற்கு அனைத்து மொழிகளிலும் என்ன சொல்வார்கள் என்று அவளுக்கு நன்றாக தெரியும் …

அவனிடம் sorry சொல்லலாம் என்று தான் நினைத்திருந்தாள்,அவன் என்னை வேறு எந்த மொழியிலாவது திட்டிருந்தால் சிரித்து கொண்டே வாங்கி இருப்பாள்..ஆனால் ஹிந்தியில் திட்டிருக்கிறான்..

“அதனால் ஹிந்தி பேசுபவர்களிடம் sorry சொல்ல முடியாது போடா …”

எதுவுமே செய்யாதது போல் அவள் சீட்டில் அமர்ந்து கொண்டாள் ….

அவனோ அவளை ஆவேன பார்த்தான்…ஆனாலும் அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை எட்டி பார்த்தது என்னவோ உண்மை தான்…

SHE IS VERY INTERESTING…என அவனின் வாய் முனுமுனுத்தது…

EXXCUSE ME….என்று அவன் அவளை கூப்பிட்டதும் அவளோ ,

கல்லையும்,மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்..

ARE YOU மதராசி…….என்று அவன் கூறியதும் அவளுக்கோ ,என்ன தைரியம் இருந்தா இவன் இப்படி கேட்டு இருப்பான்…

இந்தி  காரனுங்களுக்கு இவ்வளவு லொள்ளு ஆகவே ஆகாது ,இவன இப்படி விட்டு வைத்தால் சரி வரது போல  என்று யோசித்தவள்,

நேனு தெலுகு என்றாள்…

அவனோ அதற்க்கு “அச்சா” என்றான்…

இவன் ஹிந்திய விடமாட்டன் போலயே என்று யோசித்தவள் ,புக்கை எடுத்து கொண்டு குனிந்து கொண்டாள்…

“”பத்மா கிரகதுரையின் கடற் காற்று” புத்தகம் படிக்க கையில் எடுத்து கொண்டாள் …

அவனும் ஏதோ ARTICLES  எடுத்து கொண்டு படிக்க ஆரமித்தவன் ,சிறிது நேரத்திலே உறங்கியும் விட்டான் …

புத்தகம் படித்து கொண்டு இருந்தவள்,அவனை சற்று திரும்பி பார்த்தாள்,அவன் உறங்கி கொண்டு இருந்தான்…

அப்போது தான் அவனை நன்கு கவனித்தாள் நல்ல உயரம்,அதற்கேற்ற உடல்வாகு,சுண்டிவிட்டால் ரத்தம் வரும் நிறம் இன்னும் முகத்தில் இருந்த மாஸ்க் அவன் கழட்டவில்லை அதனால் முகம் முழுதாக தெரியவில்லை..அழகாக தான் இருப்பன் போல..

அவள் அவனை பார்த்து கொண்டு இருந்தபோதே அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்…இவன் பார்ப்பது அவளுக்கு தெரியாது ஏனேன்றால் அவன் கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தான் …

அவன் பார்க்காத பேரழகிகளே கிடையாது…ஆனாலும் அவளர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இவளிடம் இருப்பதால் அவன் அவளையே தான் வந்ததிலிருந்து பார்த்து கொண்டு இருந்தான் ,தூங்குவது போல் அவளை தான் ரசித்து கொண்டு இருந்தான் …அவளை தான் எதற்காக ரசுக்க வேண்டும் என்று யோசிக்க மறந்தான்…

பெண்களுக்கே உரிய உயரம் அதற்கேற்ற உடல் வாகு,மாநிறம் தான் ஆனாலும் அது பெரிய குறையாகவே தெரியவில்லை அதிலும் அவள் முகத்தில் அந்த கூர் நாசியின் மீது இருந்த மூக்குத்தி அவனை வெகுவாக இம்சித்தது …அந்த கண்ணை பார்க்கும்போது அவ்வளவு போதையை அவனுக்கு தந்தது…

“என்ன கண்ணுடா சாமி”

மொத்ததில் அவனின் கண்ணிற்கு அவள், தான் கடந்து வந்த பெண்களை விட பேரழகியாக தான் தெரிந்தாள்…

அவள் தன்னை இடித்து விட்டு,அவன் ஹிந்தி பேசும்போது அவள் முகத்தில் வந்த அத்தனை reactions பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

அவனுக்கு அதற்க்கான காரணமும் நன்கு புரிந்தது…இந்த சின்ன புரிதல் கூட இல்லையென்றால் இவன் எப்படி இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு பெரிய business man ஆக வலம் வர முடியும்…

என்ன madam நல்லா பாத்துடிங்களா இல்லை என்றவன் முகத்தில் இருந்த அந்த மாஸ்க்கை கழட்டினான்…

அவன் அப்படி சொன்னதும்,அவன் தன்னை “கண்டுகொண்டானோ” என்று  பார்வையை திருப்பி கொண்டாள் ….

இப்படி மாட்டிகிட்டயே அம்ரித்தா!! என்று தலையிலே அவள் அடித்து கொண்டது வரை அவன் பார்த்து கொண்டு தான் இருந்தான் ..

திடீர் என்று நியாபகம் வந்தவளாக,come again என்றாள்..

“எனக்கு தமிழ் நல்லாவே தெரியும் “என்றவனை நம்பாத பார்வையை அவன் மீது வீசினாள் …

நான் பக்கா business man…எங்க பிசினஸ் பாதி சென்னைல தான் நடக்குது அதனால தமிழ் கத்துகிட்டேன் …இல்லைனா உங்களை எல்லாம் நாங்க எப்படி சமாளிக்கிறது என்றதும், அவளுக்கு ஒரு புறம் கோவம் வந்தாலும்,ஒரு புறம் பெருமையாக இருந்தது..

நீங்களாம் எதுக்கு அங்க இருந்து இங்க வந்து பிசினஸ் பண்ணி எதுக்கு எங்களை சமாளிக்கணும் என்று கெத்தாக கேட்டவள் உடனே, “அது தான் எங்க தமிழ் நாடு”,”வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு”..

Madam நீங்க மட்டும் என்னவாம் எதுக்கு இங்க இருந்து,நோர்த் வந்து படிக்கிறிங்க…என்று அவன் கேட்டதும்,

அவள் எங்கயோ பார்த்துகொண்டு திரும்பி கொண்டாள் …

“ஆனா பாருங்க!!! அங்க வந்தாலும் நான் உங்க மொழிய மட்டும் கத்துக்கவே மாட்டேன்” என்று இல்லாத காலரை தூக்கி கொண்டு கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

கண்டிப்பா கத்துக்கிற மாறி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவிங்கலாம்…

வரும்போது சொல்லுங்க பாத்துக்கலாம்…ஆனா கத்துக்க மாட்டேன்…

ஒருவேளை உங்களுக்கு வர போற கணவர் நார்த் இந்தியாவாக இருந்தால் என்ன செய்விங்க..

கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..

அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது நான் போய் இப்படி ஒரு கேள்விய அவளிடம் கேட்டனா? ஆனா ஏன் ??

ஹலோ சார்…

சொல்லுங்க madam…

உங்க நேம் என்ன??

அர்ஜுன் குப்தா…

முன்னாடி இருக்க நேம் புரியுது அது என்ன பின்னாடி குப்தா, “குப்பைய தான்னு ஒரு நேம்” என்று கலகலவென்று சிரித்தாள்…

அவள் சிரிக்கும் அழகை பார்த்து ரசித்தவன்,மீண்டும் அவளின் கண்களை தான் பார்த்தான்…அவள் தன்னை கலாய்த்தது கூட அவ்வளவாக அவனுக்கு புரியவில்லை..ஓரளவுக்கு தமிழ் தெரியும் ஆனால் அம்ரிதா அளவுக்கு தமிழ் தெரியாது

“நமக்கு கூலிங் கிளாஸ் தேவை இல்லை போல இவளுக்கு தான் அதை குடுத்து போட சொல்லணும்…”அந்த மீன் போன்று இருக்கும் கண்ணை பார்க்க பார்க்க அவ்வளவு போதையாக இருக்கிறது…

ஹலோ சார்??என்ன உங்க HEROINe கூட romance ஆஹ..?

அப்படி எல்லாம் இல்லங்க..

என்ன போய் யாரு பார்க்க போறாங்க போங்க…

என்ன சார் இப்படி சொல்றிங்க…you லுக் SO HANDSOME…

அப்போ madam என்ன சைட் அடிச்சிருகிங்க அப்படித்தான!!

தோ பார்ர்ரா….இந்த அம்ரிதா சைட் அடித்தால் கூட அது தமிழ் ,தெலுகு ஆளுங்களா தான் இருப்பங்களே தவிர ஒரு நார்த் இந்தியன் பையனாக இருக்க வாய்ப்பே இல்லை…

அதையும் பார்க்கலாம்..

சோ உங்க நேம் அம்ரிதா….

ஆமா ஆமா…

அப்போ “அம்முன்னு” கூப்பிடலாம் இல்லையா??

அம்முன்னு அம்மா ,அப்பா ,பிரண்ட்ஸ் தான் கூப்டுவாங்க… உங்கள அவ்வளவா எனக்கு தெரியாது அதனால அம்ரிதான்னு கூப்பிடுங்க…

அப்போ என்னை பத்தி சொல்லவா?

நோர்த் இந்தியன் பையன பத்தி தெரிஞ்சிக்க மாட்டேன் என்றதும் ,அவன் முகத்தில் சிறு கோபம் எட்டி பார்த்தது …ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை ..இந்த சிறு பெண்ணிடம் ஏன் என் மனது இப்படி அவள் புறமே சாய்கிறது…

அவளிடம் எதுவும் பேசாமல் அவன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டு போனை நொண்டி கொண்டு இருந்தான்…

பல பெண்கள் இவனின் கடை கண் பார்வைக்காக ஏங்குவார்கள் ஆனால் இந்த சிறு பெண் தன்னை இப்படி அலட்சியம் செய்வதா!! என்று யோசித்தவனுக்கு மனம் சிறிது வலித்தது…

அவள் தோலை குளிக்கிவிட்டு,மறுபடியும் புத்தகத்தை கையில் எடுத்து அதில் ஆழ்ந்து விட்டாள்…

எதுவும் நடவாதது போல் புத்தகத்தை படித்து கொண்டு இருந்தவளை பார்த்தவனுக்கு அவ்வளவு கோவம் வந்தது…

பின்பு அவனே நம் கோபம் தேவை அற்றது என்று புரிந்து கொண்டு அமைதியாகி விட்டான்..

இவன் உறங்கும்போது,சாப்பாடு வாசம் மூக்கை துளைத்தது…கண் திறந்து பார்த்தான் அவள் தான் பையில் இருந்த சாப்பாடு எல்லாம் எடுத்து திறந்து வைத்து கொண்டிருந்தாள்…

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவனை பார்த்தாள்,கூப்பிட்டால் சாப்பிட வருவானா??

அர்ஜுன் !!!!என்று அழைத்தாள்

எத்தனையோ பேர் தன்னை அர்ஜுன் என்று அழைத்து இருக்கிறார்கள் இவளை போல இவ்வளவு அழகா தன்னை அழைத்ததே இல்லையே??

மறுபடியும் அர்ஜுன்!! என்று அழைத்தாள்…

அவள் தன்னை பேர் சொல்லி அழைக்க அழைக்க அவனுக்கு மனதில் ஜில்லென்ற சாரல் அடித்தது…

அர்ஜுன் உன்னை எத்தனை முறை தான் அழைப்பது…

சொல்லு அம்மு என்றவன் …சொல்லலாமா ?

என்னமோ ஒன்னு கூப்பிட்டுகோ…எனக்கு இப்போ பசிக்குது சாப்பிடலாமா??

நீ மட்டும் என்னை நார்த் இந்தியன்னு சொல்லுவ நான் மட்டும் உங்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிடனுமா?? என்று முறுக்கி கொண்டான்…

இங்க பாரு அர்ஜுன் ஒழுங்கா வீட்டு சாப்பாடு சாப்பிடும் வழிய பாரு இல்லை இங்க நல்லா இல்லாத சாப்பாடு தான் தருவாங்க…ஒழுங்கா சாப்பிடு என்று அவள் அதட்டியதும் அவன் தட்டை வாங்கி கொண்டான்…

ஏனோ தெரியவில்லை இவளின் இந்த பாச வார்த்தைகள்  அவனின் அடிமனது வரை சென்றது..

லெமன் சாதம் கொஞ்சம், தக்காளி சாதம் ,கொஞ்சம் புதின சாதம் ,கொஞ்சம் தயிர் சதம் இருந்தது…இதை எல்லாம் அவன் சாப்பிட்டதே இல்லை.. வேண்டாம் என்று எப்படி சொல்வது என்று யோசித்தவன் கொஞ்சம் சாப்பிட்டு பார்ப்போமே என்று யோசித்தவன் ஒரு வாய் வைத்ததும் அதன் சுவையில் உருகி விட்டான்…

அம்மு !இது உண்மையாவே செம்மையா இருக்கு! எந்த கடைல வாங்கின என்றதும்  அவள் அவனை முறைத்தாள்…

அர்ஜுன் !!!

இது வீட்டு சாப்பாடு அம்மா செஞ்சாங்க…எங்க அம்மா கை பக்குவம் அவ்வளவு சூப்பராக இருக்கும்…எனக்கு வெளிய சாப்பிட்டா ஒத்துக்காது அதான் அம்மா செஞ்சி குடுத்தாங்க…

Ohh அப்படியா!!ITS REALLY SUPERB!!

KHAANA BAHUT ACHCHA HAI(சாப்பாடு ரொம்ப நல்ல இருக்கு) என்று ஹிந்தியில் கூரியவனை மறுபடியும் முறைத்தாள்…அவனிடம் இருந்து தட்டை பிடுங்க பார்த்தாள்….

ஓகே ஓகே கூல் அம்மு !!