ஹே அம்ரிதா!!ஹே அம்ரிதா!!எழுந்திரி டி எவ்வளவு நேரம் தான் கத்துறது என்று மேலும் செண்பகம் கத்தி கொண்டு இருந்தார்..
“உன்னை ஒரே பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்தோம் பாரு எங்களை சொல்லன்னும்டி…”
அவளை எழுப்பி விட்டுட்டு,கீழே அவர் சென்று விட்டார்…
அப்போ தான் நம் கதாநாயகி முகத்தில் இருந்த பெட்ஷீட் எடுத்து விட்டு,ஜன்னலை திறந்து வெளியே பார்த்தாள்…இந்த மார்கழி மாத காலை ஆறு மணி கூட இரவு போல் இருப்பதை பார்த்தவள்,
இந்த அம்மா எதுக்கு இப்படி நடுராத்திரி நேரத்துல தன்னை ஏலம் போட்டு கொண்டிருக்காங்க என்று கடுப்பானவள் மறுபடியும் படுத்து விட்டாள்..
“ஹே அம்மு!ஒழுங்கா எழுந்திரி!இல்லைன்னா மூஞ்சியில தண்ணிய ஊத்திருவேன்” என்று அவர் கத்தி கொண்டு இருப்பது அவள் காதில் விழவில்லை,துயிலும் கலையவில்லை,அவளின் பெட்ஷீட் எடுத்து அவளின் முகத்தை பார்த்தார்…
“தூங்கும்போது கூட என் மகள் எவ்வளவு அழகாக சிரித்து கொண்டே தூங்குகிறாள்” என்று அவளை ரசித்தவர்,அவளுக்கு கையால் ஒரு திருஷ்டியயை எடுத்தவர், பாவம் ஊத்த வேண்டாம் என்று பாதி தூரம் சென்றவர்,இவளை இப்படியே விட்டால் சரி வராது என்று யோசித்தவர் முகத்தில் குளிர் நீரை ஊற்றி விட்டு ஓடியே விட்டார்…
ஏற்கனவே கனவில் தான் MALDIVESல் மழையில் தன்னுடைய நாயகனோடு, நனைவது போல கனவு கண்டு கொண்டிருந்தவளின் மேல் நீரை ஊற்றியதும்,தான் உண்மையிலே அங்கே தான் இருக்கிறோம் போல என்று யோசித்தவள்,லேசாக கண்ணை திறந்து பார்த்தாள், அப்போ நம் கதாநாயகன் எங்கே? அவன் அருகில் இல்லையே? ஐயோ இது MALDIVES இல்லையே? என்று யோசித்தவள்,
அப்போ, கண்டிப்பாக தன்னுடைய தாயின் வேலை தான் இது…
அம்மா!!!என்று கத்திகொண்டே கீழே வந்தவளை பார்த்தருக்கு,ஒரே சிரிப்பு..
அம்மா சிரிக்காதிங்க!!,கடுப்பாகுது…
“அப்பா இங்க பாருங்க” என்று அவள் நனைந்து இருந்த தோற்றத்தை காட்டியாதும் அவருக்குமே சிரிப்பு தான் வந்தது..
என்ன அம்மு,உன்னோட நிலைமை இப்படி ஆகிரிச்சி..
நீங்களுமா என்று முகத்தை தூக்கி கொண்டு SOFHA ல் சென்று அமர்ந்து கொண்டாள்…அவளின் அருகில் வந்த அவளின் தந்தை,துண்டை எடுத்து அவளின் தலையை துடைத்து விட்டார்…
நீங்க ஒன்னும் எங்கிட்ட பேச வேண்டாம் போங்க..
அம்மா கூட சேர்ந்து கொண்டு நீங்களும் சிரிச்சிங்கள்ள…
அது சும்மா சிரிச்சேன்டா என்று அவளை சமாதனம் செய்தார்…
நீ தான் நார்த் இந்தியா இன்னைக்கு போகணும்ன்னு சொன்ன,அதான் அம்மா எழுப்பி எழுப்பி பார்த்துட்டு இப்படி ஒரு வேலைய பார்க்கிற மாறி ஆகிரிச்சி…
அப்பா இரவு நேரம் கழித்து தான் உறங்கினேன் அதான் இப்படி லேட் ஆகிர்ச்சி…
அவ்வளவு நேரம் என்னோட செல்ல பொண்ணு என்ன பண்ணினாங்க தூங்காம??
அப்பா ஆஆ…அவள் இழுத்ததுமே…அவருக்கு புரிந்து விட்டது…சிறு வயதிலிருந்தே அவளுக்கு புத்தகம் என்றாள் அவளுக்கு உயிர் அவளின் தந்தைக்கு நன்கு தெரியும்…
“அவள் ஒரு புத்தக பிரியர் இல்லை இல்லை வெறியர் என்று தான் கூற வேண்டும்”…புத்தகம் தான் அவளின் மொத்த உலகமே,புத்தகம் இல்லை என்றாள் தான் இல்லை என்று தான் கூற வேண்டும்…அவள் இரவு படித்த புத்தகத்தில் வரும் கதாநாயகன் போல் நாம் எப்போ தான் நம்முடைய கதாநாயகனை பார்ப்போமோ? என்று இரவெல்லாம் ஏங்கிவள் வெகு நேரம் கழித்து தான் தூங்கினாள்….
நம்முடைய கதாநாயகியின் வயது 23..நல்ல மாநிறமாக தான் இருப்பாள்…உயரமும் நடுத்தர உயரம் தான்..நீண்ட கூந்தலை உடையவள்…..மீன் போன்ற கண்களை உடையவள்..அவளின் தோழிகளே அவளிடம் கேட்டு இருக்கிறார்கள் எப்படி உன்னோட கண்ணு மீன் போன்று இவ்வளவு அழகா இருக்கிறது என்று …அந்த கண்ணனுக்கு கீழ் மையிடாமல் அவளால் இருக்கவே முடியாது….
“காஜல் இல்லை என்றாள் என்னால் இருக்கவே முடியாது என்று கூறுபவள்” அந்த மைகூட அவளுக்கு அந்த முகத்தில் அதிக தேஜஸை தான் கொடுக்கும்…
“அவளுக்கு அவளிடமே பிடித்த விஷயம் அந்த மூக்குத்தி தான்…அவளிடம் அவளுக்கே பிடிக்காத விஷயம் அவளுடைய கோவம் தான்…”
அவளின் நண்பர்களே நீ கோவப்பட்டா பயமா இருக்குடி எப்போ தான் நெற்றி கண் திறப்பன்னு தெரியலடி என்று கூருவார்கள்…
வாய்யை திறந்தாள் மூடவே மாட்டாள் அவ்வளவு வாய் ,துரு துரு என்று இருப்பாள்…அவளை ஆசையாக பார்க்கும் ஆண்கள் கூட இவ்வளவு வாய் பேசுகிறாள் என்று தெறித்து ஓடுவார்கள் …அதனால் பெண்கள் நட்பு வட்டாரம் இவளுக்கு அதிகம் என்று தான் கூற வேண்டும்…
கல்லூரியில் படித்த காலம் முதல் இப்போது வரை அனைவரிடமும் பேசுபவள் ஆனால் சிலரை மட்டுமே நட்பு வட்டாரத்தில் வைப்பாள்…அதில் ,மேகவீ,லதா இவளின் நட்பு தூண்கள் என்று தான் கூற வேண்டும்..
இவள் துருதுருவென்று இருப்பதால் எப்போ எந்த பிரச்சனை கூட்டி கொண்டு வருவாள் என்று அவளின் பெற்றோர்களால் கணிக்கவே முடியாது…
மொத்தத்தில் அம்ரித்தா ஒரு ராட்ச்சசி என்று தான் கூற வேண்டும்..சிலர் இவளை அழகான ராட்சசி என்றும் கூறுவார்கள்..
அவளின் தோழிகளே பல முறை அவளை கேட்டு விட்டார்கள்,”இப்படி எவனை பார்த்தாலும் சைட் அடிப்பதற்கு எங்களை போல் திருமனம செய்து கொல்லேண்டி” என்றால்,
காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று கட் and ரைட் ஆக கூறிவிடுவாள் …
அப்போ யாரயாவது காதலிக்கலாமே??
அதற்க்கு அம்மு,காதலை தேடி நாம் செல்ல கூடாது.. அதுவாக தான் நம்மை தேடி வர வேண்டும் என்று தத்துவம் கூருபவளை வெட்டவ குத்தவா என்று பார்ப்பார்கள்…
அம்மு நீ வேலைக்கு போயே ஆகணுமா??
கண்டிப்பா அப்பா…
நீ வேலைக்கு போயிட்டு தான் நம்மை சாப்பிடனும் என்பது இல்லையே டா…
அப்பா இங்க பாருங்க நீங்களும், அம்மாவும் பேங்க் மேனேஜர்…அந்த FIELD உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால தான் வேலையில் இருக்குறிங்க..
அது போல எனக்கும் நெறைய கனவுகள் உண்டு அதை நோக்கி நான் கண்டிப்பா போய் தான் ஆகணும்,உங்களோட பயம் எனக்கு புரியாம இல்லை ஆனாலும் என்னை பத்தியும் நீங்க யோசிக்கணும் இல்லையா??
“எனக்குன்னு ஒரு IDENTITY வேண்டும் அப்பா…இதுக்காக நீ எதுக்கு டா NORTH INDIA போகணும்ன்னு நெனைக்கிற…”
அப்பா எனக்கு பேஷன் DESIGNING எவ்வளவு பிடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் ..அங்க இருக்க நம்ம குப்தா அங்கிள் கிட்ட எல்லாமே விசாரிச்சி ,ரூம் எல்லாம் பார்த்து குடுத்துடிங்க…
என்னோட தோழி மேகவீ அங்க தான் படிச்சிட்டு இருக்கா..
நீ பேசாம பெங்களூர் போனா கூட எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா என்று வருத்தமாக கூறினார்..
அப்பா,நீங்க இன்னும் என்னை குழந்தையா பார்க்கதிங்க அப்பா…
கொஞ்சம் யோசித்தவர் அவள் இங்கே இருந்தாள் அக்கம் பக்கம் தேவை இல்லாமல் சண்டை தான் பிடித்து கொண்டு இருப்பாள்.. அங்கு சென்றாலவது பொறுப்போடு இருப்பாள் என்று மனதை தேற்றி கொண்டவர் சரிடா நீ கிளம்பு என்று முழு மனதாக கூறினார்கள்..
“என்னோட அப்பான்னா அப்பா தான்” என்று அவருக்கு பல்லு தேய்க்காமல் கூட ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு தான் சென்றாள் …
அம்மா உனக்கும் வேண்டுமா??
அவரோ ஒரு கையை இடுப்பில் வைத்து, இன்னொரு கையில் கரண்டி வைத்து கொண்டு அவளை மிரட்டிய தோரணையில் அவருக்கு பழிப்பு காட்டிவிட்டு அழகாக ஓடும் மகளை பார்த்தவருக்கு,என்னோட பொண்ணு எப்போதுமே இப்படி சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று அப்போதே கடவுளிடம் ஒரு APPPLICATION போட்டு வைத்தார்…
ஒரு நாள் இந்த சிரிப்பு அவளுக்கு இல்லாமலே போக போகிறது…வேண்டியது எல்லாமே கிடைத்துவிட்டால் கடவுள் எதற்காக இருக்கிறார்…சிவனின் திருவிளைடல் இனி ஆரம்பமாக போகிறது என்று அந்த தாய்க்கு தான் தெரிய போகிறதா இல்லை அம்ரிதாவுக்கு தான் தெரிய போகிறதா??
சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் அழகாக BLUE ஜீன்ஸ் வித் வைட் SHORT டாப்ஸ் அணிந்து நீண்ட கூந்தலை பின்னி இருந்தாள்,நெற்றியில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஒரு போட்டு ,கண்ணில் எப்போதும் போல் மை போட்டிருந்தால் ,முகத்திற்கு வேறு எதுவுமே போடாமலே இவ்வளவு அழகாக இருந்த தன் மகளை பார்த்தவருக்கு, தேவதை போல் இருக்கிறாள் என்று அவளை வாஞ்சையுடன் பார்த்தார்..
அவள் இல்லாததை நினைக்கும்போது அவருக்குமே வருத்தமாக தான் இருந்தது …ஆனாலும் அவளின் எதிர்காலத்திற்காக அனுப்பி வைக்க மனதை தேற்றி கொண்டார்…
அம்மு எல்லாமே எடுத்து கொண்டாயா??எதாவது மறந்துட்டியா ??
உன்னோட புக்ஸ் எல்லாமே எடுத்து கொண்டாயா என்றதற்கு ,
ஹஹ்ஹாஹ….என்று சிரித்தவள் ,அது இல்லாம நான் பக்கத்து ஊருக்கே போக மாட்டேன் இதுல எப்படி அப்பா 28 மணி நேர நேர TRAVEL க்கு எடுக்காம போவனா சொல்லுங்க…இந்த BAGல அதிகமா இருக்கிறது இந்த புக்ஸ் தான்..
சரி அம்மு கிளம்பலாம்… என்று காரை எடுத்து கொண்டு,அவளை ரயிலில் அனுப்பி வைக்க மூவரும் ரயில் நிலையத்துக்கு சென்று,உள்ளே சென்று அவளுக்கு அறிவுரை எல்லாம் வழங்கி கொண்டு இருந்தனர்…ஏற்கனவே அவளுக்காக AC கோச் புக் செய்து வைத்து இருந்தனர்…
இவளின் பெற்றோர்கள் இருவருக்குமே வேதனையாக தான் இருந்தது…தன்னுடைய ஒரே செல்ல பெண்ணை இப்படி இவ்வளவு தூரம் சென்று படிக்க வைக்க வேண்டுமா? என்று ,இருந்தாலும் அவளின் விருப்பத்திற்க்கு மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை …தெரிந்தவர்கள் அங்கு இருக்கிறார்கள் தான் இருந்தாலும் ,தன் மகளின் மேல் இருந்த தைரியத்தில் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்..
ரயில் கிளம்ப ஆயத்தமானதும்,இருவரும் இவளை வெளியே வந்து ஜன்னலின் வழியே பார்த்து,பத்ரமா போ,பிடிக்கலன்னா கூட வந்துரு சரியா!!என்றதும் ,
சரி என்ற பதிலோடு அமர்ந்து விட்டாள்…இவ்வளவு நேரம் இல்லாத ஒரு வலி இப்போது அவளுக்கு வந்தது…நல்ல மன தைரியம் கொண்டவள் தான் ஆனாலும் பெற்றவர்களை பிரியும்போது வேதனையாக தான் இருந்தது கண்ணும் கலங்கியது …
இதை எல்லாம் அவளுக்கு எதிரே இருந்தவன் பார்த்து கொண்டு தான் இருந்தான்…
ஏதோ ஒரு உந்துதல் தோன்ற,எதிரே இருப்பவனை பார்த்தாள் அவன் முகத்தில் மாஸ்க் போட்டு இருந்தததாள் அவன் முகம் சரியாக தெரியவில்லை…இப்படி அடுத்தவன் முன்பு அழுவதா என்று யோசித்தவள் ,ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு வந்து அமரும்போது அவன் காலை தெரியாமல் மிதித்து விட்டாள் …
இதை தான் விதி என்பார்களோ என்னவோ??
இவள் sorry என்று கேட்பதற்கு முன்பே அவன்,
ARRAY லடுக்கி!!பேவ கூப் என்று கத்தினான்(முட்டாள் பெண்ணே )……