கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்
காலை புலரும் பொழுது வண்ணமயமாக அமைந்தால் அந்த நாளின் இனிமையை முழுவதுமாக அனுபவிக்கலாம்…
சென்னையின் மிக பரபரப்பான நகரம் போட் கிளப் …இங்கு விவிஐபிகளுக்கு மட்டுமே வீடுகள் உண்டு …அவ்வளவு எளிதாக அங்கு வீடு கட்டவோ வாங்கவோ முடியாது …அங்கிருந்த குட்டி மாளிகை போன்ற மிக பெரிய வீட்டில் கேட்ட சுப்பரபாதத்தின் இனிமையில் வீரேந்தர் கரைந்து கொண்டிருந்தான்…
இது அவனின் காலை தினசரி எழும்போது காதில் சுப்ரபாதம் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும்…மிக பாரம்பரியமான பஞ்சாபிய குடும்பத்தை சேர்ந்தவன் நம் நாயகன்…ஆனால் சிறு வயது முதலே தமிழ்நாட்டின் கலாச்சாரங்களை மிகவும் விரும்புவான்..
காரணம் அவனின் பாட்டி அம்ரிதா கபூர்… அவருக்கு தமிழ் மீதும் தமிழ் மக்களின் மீதும் மிகுந்த ஆர்வம் … அந்த ஆர்வம் தான் அவரை தன்னுடன் படித்த செண்பகராமன் மீது காதல் கொள்ள வைத்தது …பஞ்சாப் பல்கலைக்கழகமான காளிஸ் கல்லூரியில் கட்டிடகலை படிக்க சென்ற இருவரும் காதலை பயின்றனர்…
அந்த காதல் இன்றுவரை குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த வீரேந்தருக்கு தாத்தா பாட்டி மட்டுமே உலகம்…
அவர்களை எண்ணி சிறு புன்னகையுடனே தன் காலை ஜாகிங்கை ஆரம்பித்தான்…போட் கிளப்பில் தொடங்கி MBC என அழைக்கப்படும் மெட்ராஸ் போட் கிளப் வரை ஜாகிங் செல்பவன் அங்கு சிறிது நேர உடற்பயிற்சி மற்றும் யோகவினை முடித்து விட்டு மீண்டும் வீடு வரை ஜாகிங்கில் தான் செல்வான்…
அம்ரிதா குரூப் ஆப் கம்பெனி இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம்…பஞ்சாபை தலைமையிடமாக கொண்டாலும், தற்போது அதிக புராஜெக்ட் இருப்பதால் தற்காலிக தலைமையிடமாக சென்னை செயல்பட்டு வருகிறது..அம்ரிதா குழுமத்தின் நிறுவனர்கள் அம்ரிதா மற்றும் செண்பகராமன் தற்போது வரை அதன் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர்….இவர்களை பொருத்த வரை ஏஜ் இஷ் ஜஸ்ட் எ நெம்பர்ஷ் யா என்று சொல்லும் அளவு தோற்றத்தில் மட்டுமல்ல செயல்களிலும் அப்படி தான் இருப்பார்கள்…
வீட்டிற்கு வந்தவுடன் குளித்து கிளம்பி டைனிங் ஹாலுக்கு வர அங்கு அவன் பாட்டியும் தாத்தாவும் காலை உணவுக்கு தயாராக இருந்தனர்… தங்களுக்கான உலகில் மாறி மாறி பரிமாறிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்களை கண்டு புன்னகைத்து கொண்டே “க்கும்” என இரும இவனை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை…
மீண்டும் இரும இந்த முறை நிமிர்ந்து பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்…”என்ன ஓல்டிஸ் எர்லி மார்னிங்லையே உங்க லவ்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களாக”,ஆமா ஆமா அதான் கரடி வந்திருச்சே இனிமே எங்க கன்டினியு பண்றது” என அவனின் தாத்தா சிரித்த படியே அவனை வார அவர்களை பொய்யாக முறைத்துக் கொண்டிருந்தான்…
“சரி சரி அந்த கோயம்பத்தூர் பிளான் எப்போ ஸ்டார்ட் பண்ண போற வீரேந்”,”ம் ம் ஆல்மோஸ்ட் எல்லாமே ரெடி தாத்தா, நேத்து நடந்த மீட்டிங்ல பைனல் பண்ணியாச்சு…இன்னும் அங்க ஆபிஸ் அண்ட் பேக்கல்டி கொஞ்சம் செட் பண்ண வேண்டி இருக்கு அத முடிச்சுட்டா வொர்க் ஆரம்பிக்க வேண்டியது தான்” என சொல்லியபடி தன் வழக்கமான பிரேக்பஸ்ட் பிரட் அண்ட் ஸ்டப்டு வெஜிஸ்யை உண்டு கொண்டிருந்தான்….
“ம் ம் பிளான் ஸ்டார்ட் பண்ணி புரசீட் பண்ணு நான் இங்க இருக்க வொர்க் எல்லாம் முடிச்சிட்டு வரேன்…தென் நீ கனடா போறத பிளான் பண்ணிக்கலாம்”…,”ம் ஓகே தாத்தா சிக்ஸ் மந்த்குள்ள எல்லாமே சர்ட் அவுட் பண்ணி லைன் அப் பண்ணிக்கலாம்”என கூறிக் கொண்டிருந்தான்…
“பாட்டி அந்த சத்தியமங்கலம் ரெசார்ட் பிளான் இன்னும் மாடல் ரெடி ஆகல சோ உங்க டீம்கிட்ட சொல்லி கொஞ்சம் ரஷ்அப் பண்ணுங்க”..,”யா ஐ டாக் வித் த டீம், பட் கிளைண்ட் வெர்னகுலர் ஆர்க்கிடெச்சர்ல கேக்கறாங்க, சோ அந்த ஷ்ரவ்ண்டிங் ஏரியா டிரெடிஷ்னல் டெக்னிக் அண்ட் கல்ச்சுரல் எலெமெண்ட் பத்திலாம் ஸ்டெடி பண்ண கொஞ்சம் டைம் ஆகுது சோ இன்னும் ஒன் வீக்ல் கிளைண்ட் பிளான் ரெடி பண்ணிரலாம்”எனக் கூறியவர் கணவருக்கான காலை மாத்திரைகளை எடுக்க செல்ல, தாத்தாவோ “அந்த சத்தியமங்கலம் பிளான் கண்டிப்பா நாம செய்யனுமா அப்பு” என்று கேட்க, வீரேந்தர் ஆச்சர்ய பார்வையுடனே நிமிர்ந்து தாத்தாவை பார்த்தான்…
ஏனெனில் செண்பகராமன் இதுவரை எந்த ஒரு பிளானையும் தவிர்த்ததும் இல்லை, மறுபரிசீலனை செய்ததும் இல்லை…அவர் மிக சிறந்த மதியூகி மட்டுமல்ல,கட்டிடகலையின் மிக சிறந்த காதலன்…
அதனால் தான் அம்ரிதா குழுமத்தின் கட்டிடங்கள் பெயர்கபெற்றவையாக இருந்தன…எப்படி பட்ட பிளானாக இருந்தாலும் செண்பகராமனால் முடிக்கப்பட்டு விடும்…அப்படிபட்டவர் இந்த பிளான் வேணுமா எனக் கேட்க வீரேந்தர் கொஞ்சம் குழம்பி தான் போனான்…
அதே குழப்பத்துடன் தாத்தாவை பார்க்க “ இல்ல அப்பு ஆல்ரெடி நிறைய வொர்க் இருக்கு அண்ட் இந்த பிளான் ரிசர்வ் பாரஸ்ட் ஏரியாக்கு பக்கமா இருக்கு , சோ ரிஸ்க் வேணுமானு தோணுச்சி” எனக் கூறியவர் எழுந்து சென்று விட வீரேந்தர் தாத்தாவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்…
அவனுக்கு நிச்சயமாக தெரிந்தது தாத்தா சரியான மனநிலையில் இல்லை ஏதோ குழப்பத்தில் உள்ளார் என…ஏனெனில் உணர்ச்சிகரமான அல்லது நெகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமே தன்னை அப்பு என அவர் அழைப்பார் எனவே ஏதோ மறைக்கிறார் என கண்டு கொண்டான்… இதை நிச்சயம் கவனிக்க வேண்டும் என நினைத்தவன் இருவரிடமும் சொல்லி கொண்டு ஆபிஸுக்கு கிளம்பி விட்டான்….
இங்கு இவனின் காலை இப்படி தொடங்க நிலாவுக்கோ எழுந்தது முதலே போராட்டம் தான்…காலை லேட்டாக எழுந்த டென்சலில் கிளம்பி வண்டிய ஸ்டார்ட் பண்ண வண்டி பஞ்சர் ”காலைலயே கால வாரிட்டயே தலிவா உங்கூட ஓரே பேஜாரு தான் போ” என செந்தமிழில் திட்டியபடி ஷேர் ஆட்டோவில் விழி பிதிங்கியபடி ஆபிஸ் சென்றால் அங்கு இவளுக்கு முன்பே இவள் ஓனர் ஆட்டோம்ப் பாம் உடன் காத்துக் கொண்டிருந்தார்…
நிலாவின் ஓனர் மணிகண்டனுக்கு கனடாவில் வேலை செய்ய வேண்டும் என நீண்ட நாள் ஆசை…பல வருடங்களாக அதற்கு முயற்சி செய்து இப்பொழுது ஒரு வழியாக கனடா செல்ல போகிறார்….
இது ஓர் அளவுக்கு நிலா எதிர்பார்த்திருந்த விஷயம் தான்…ஏனெனில் சில மாதங்களாகவே அவர் பாஸ்போர்ட் விசா என அலைந்து கொண்டிருந்ததை அவளும் தானே பார்த்துக் கொண்டிருந்தாள்…
“ நிலா பைனலி விசா புராசஷ் முடிஞ்சிருச்சி இன்னும் ஒன் மந்த்ல கனடா போகனும்…சோ மெயின் புராஜக்ட் மட்டும் ஓகோ சொல்லிருக்கேன்…மத்தது எல்லாம் நம்ம பாலமுருகன் சார் கம்பெனிக்கு மாத்திவிட்டுட்டேன்… இப்போ எனக்கு இருக்க ஓரே கவலை நீ மட்டும் தான் உனக்கு ஜாப் என்ன பண்ண போறேனு தெரியல” என இரு கைகளையும் தலையயை தாங்கியவாறு அவர் அமர்ந்து விட…
“சார் ஹாப்பியான டைம்ல இப்படி கவலபடாதீங்க உங்க பேஷ் இப்போ பார்க்க நல்லாவே இல்ல சோ சிரிங்க இல்ல அக்காக்கு கால் பண்ணி, சார் கனாடாக்கு போறதால அவர் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி குடுக்குறாராம் அக்க்க்காகாகானு போட்டு குடுத்துருவேன் என மிரட்ட, ”அம்மா தாயே நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சராத ஏற்கனவே அவ விசா கன்பார்ம் ஆகாமா லேட் ஆகுதுனு கடுப்புல இருக்கா நீ வேற அதுல எண்ணய ஊத்திராதமா உனக்கு புண்ணியமா போகும் என கை எடுத்து கும்பிட இருவரும் சிரித்து விட்டனர்…
“ஜோக்ஸ் அபார்ட் ஜாப் என்ன பண்ண போற நிலா ஐ நீட் தி ஆன்சர் அப்போ தான் நான் கவல இல்லாம இருக்க முடியும்” எனக் கூற,அவரை கனிவுடன் பார்த்தவள் “சசிகிட்ட ஆல்ரெடி சொல்லி வச்சுருக்கேன் சார் சோ நோ பிராப்ளம், நீங்க ஹாப்பியா உங்க ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட்ட என்ஜாய் பண்ணுங்க…நானும் ஏதாவது ஹெல்ப் பண்ணவா சார்…”இல்லமா இந்த பிளான்ஷ் மட்டும் முடிச்சுரு நான் வந்து கரெக்ஷன் பார்க்கறேன்…அண்ட் பாலமுருகன் சார்கிட்ட குடுத்த பிளான்ல ஏதாவது டவுட் இருந்த கொஞ்சம் கிளியர் பண்ணி குடு,நான் கிளம்பறேன் என சொன்னவர் கிளம்பி விட நிலா தனது வேலைகளில் மூழ்கி விட்டாள்…
இதோ மணிகண்டன் கனடா சென்று ஒரு மாதம் ஆகிவிட மிச்சம் மீதி இருந்த பிளான்களையும் முடித்துவிட்டு கம்பெனியின் பொறுப்புகளை மணிகண்டனின் மனைவி சுஜியிடம் ஒப்படைத்து விட்டாள்…
இந்த ஒரு மாதமாக பல கம்பெனிகளுக்கு நிலா முயற்சித்து விட்டாள் ஆனால் வேலை தான் கிடைக்கவில்லை…இவளிடம் திறமை இருந்தாலும் பெரிய கம்பெனிகளில் வேலை செய்த முன் அனுபவம் இல்லாததால் நிறைய இடங்களில் நிராகரிக்கப்பட்டாள்…
இன்றும் பல இடங்களில் திறமைகளை வரவேற்க பலரும் ஆர்வம் காட்டுவது இல்லை… அவர்களை பொறுத்தவரை முழுமையாக வேலைகள் தெரிந்தவர்களால் பணமும் நேரமும் மீதம் என்பதே…அதுவும் கட்டிடகலை வேலைகளுக்கு அதிகம் முன் அனுபவம் உள்ள ஆட்கள் தான் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்…
ஈரோட்டில் ஓரளவு அவள் தேடியும் எந்த வேலையும் கிடைக்காததால் இன்று கோயம்பத்தூரில் சில காலியிடங்கள் இருப்பதாக சசியின் புண்ணியத்தில் தெரிய அங்கு கிளம்பி கொண்டிருக்கிறாள்…
”பாப்பா அவ்வளவு தூரம்லாம் வேலைக்கு போகணுமா,அதுலாம் வேணாம் சாமி, நீ வீட்ல இரு நான் எல்லா பிரச்சினையையும் பார்த்துக்கறேன் நீ ஏன் கஷ்டபடற” என அவளின் தந்தை இதோட 100 ஆவாது முறையாக புலம்ப, இவளும் 100ஆவது முறையாக சொன்னதையே சொல்லி சாமாதானம் செய்து கொண்டிருந்தாள்…”அப்பா ஜஸ்ட் இன்டர்வியூ தான் போறேன் அதுவும் இது கொஞ்சம் பெரிய கம்பெனி சோ எனக்கு கண்டிப்பா வேலை கிடைக்காது கவல படாதீங்க…இப்போ பெரிய கம்பெனிலலாம் எப்படி இன்டர்வியூ பண்றாங்கனு பாக்க தான்பா போறேன் நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்க”என சாமாதனபடுத்தி விட்டு பஸ் ஏற அவரும் அரை மனதுடன் வீட்டிற்கு சென்றார்….
அவர் கூறியதை கேட்டிருந்தால் வாழ்வின் பாதையை மாற்றி அமைக்கும்,பல வலிகளை மற்றும் இன்னல்களை தர கூடிய இந்த இன்டர்வியூ நடக்காமலேயே இருந்து இருக்கும்…என்ன செய்ய விதி வலியது என இது போல் நடக்கும் போது தான் தெரிகிறது…