காலையில் எழுந்த அஜய் சாமியை வணங்கிவிட்டு பட்டை லாம் போட்டு கொண்டு,நேராக சென்ற இடம் collector office தான்…அவள் வருவதற்கு நேரம் ஆகுபோல என்று யோசித்தவன் உடனே பிரகாஷ்க்கு அழைத்து தன்னுடைய சந்தேகத்தை கேட்க ஆயத்தமானான்.
சொல்லு அஜய்..எங்க இருக்க
அண்ணி officeக்கு வந்துருக்கேன்..
அந்த பக்கம் அவன் அஹஹஹா என்றான்..சிரிக்கத டா கடுப்பாகுது..
நல்லது ஆகட்டும்..
அண்ணி அடிக்கலாம் மாட்டங்கள்ள..
என்னோட தங்கச்சிக்கிட்ட அடி வாங்கிருக்கியா??
“அடுத்தவன் என்னை பார்த்து மூஞ்சுல இது என்ன வீங்கிருக்குன்னு கேட்கிற அளவுக்கு வாங்கிருக்கேன் இப்போ அது எதுக்குடா கேட்கிற..”
அதற்க்கும் சிரித்தவன் இவ அந்த அளவுக்குலாம் போக மாட்டா ஆனால் கண்டிப்பா கடிக்க கூட வாய்ப்பு இருக்கு என்றதும் ,
அதற்கும் சிரிக்கும் நண்பனை என்ன தான் செய்வது என்று ,நீ இப்படி சிரிக்கிறதுக்கு அந்த கொரங்கு கிட்ட கடியே வாங்கிக்கிறேன் என்றவன் அவள் வருவதை பார்த்ததும் போனை வைத்து விட்டான்…
அவள் உள்ளே சென்று அமர்ந்ததும்,இவனை உள்ளே அழைத்தாள்..
சொல்லுங்க சார்!! என்று அவள் கேட்ட தோரணை அப்படியே பிரகாஷை பார்த்தது போல் இருந்தது …
அது வந்து அண்ணி…
அவளோ என்ன !!!
Sorry madam இனி மேல் பில்டிங் இப்படி அடுக்கி கட்டிகிட்டே போக மாட்டோம் …எங்க வொர்க் வேற இடத்துக்கு மாத்திகிறோம் என்று கூறியவனுக்கு,
நீங்களே திருந்துறேன்னு வந்து சொல்லும்போது நான் எதுக்கு வேண்டாம்ன்னு சொல்ல போறேன்…
நீங்க கிளம்புங்க சார்..
அப்போ அந்த பில்டிங் ஒரே இரவில் சரிச்சிற மாட்டிங்க தான ..
அவன் சொன்ன விதத்தில் அவளுக்குமே சிரிப்பு தான் வந்தது..
அது சும்மா கோவத்துல சொன்னது..
ஓகே mam என்றவன் வெளியே செல்லும்போது,சார் நீங்க பிரிக் லாம் எங்க வாங்கிட்டு இருக்கிங்க..
PG CONSTRUCTION company mam
Ohh என்றவள் …thank you சார் ..
உடனே பிரகாஷ்க்கு அழைத்து அனைத்தையும் கூறினான் …எதுக்கு பிரகாஷ் பிரிக் பத்தி கேட்டாங்க ..
அண்ணி வீடு எதாவது கட்ட போறாங்களோ ??
டேய் அது அவ கொடுத்த ஐடியால உருவான பிரிக்ஸ் தான் அதான் உன்கிட்ட கேட்டு இருக்கா…..நேத்து உன்னோட office ல பாத்திருப்பா போல …
டேய் அஜய் எனக்கு ஒரு FAV நீ பண்ணனும்…உங்க அண்ணி ஊர்ல நம்ம BRANCH ஒன்னு இருக்கு…இப்போ அங்க ஷாப்பிங் மால் நம்ம ஓபன் பண்ண போறோம்ல அதுக்கு போயிட்டு அவளை INVITE பண்ணிட்டு வா..அவளை அப்படியாவது பார்க்கிறேன் டா ரொம்ப நாள் ஆச்சு …
எதுக்குடா இவ்வளவு கேவலமாக நடிக்கிற…கண்டிப்பா INVITE பண்றேன் இப்படி கெஞ்சாத என்று போன் வைத்தவன்..
என்னை இவனுங்க ஆஞ்சநேயர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டானுங்க…
சரியாக சாய்ந்தரம் நேரம் திரும்பவும் அலவலகத்திற்கு தன்னுடைய மனைவியை அழைத்து கொண்டு வந்தவனை,என்னவென்று பார்க்கும்போது ,சம்யுக்தாவின் வயிற்ரை பார்த்தவள் ,இருக்கையில் இருந்து எழுந்து வந்தாள்…
சொல்லுங்க சார்!! என்றவள்,சம்யுகதாவை இங்கே உட்காருங்க! என்று அமர வைத்தாள் இந்த குணம் அவர்கள் இருவரையுமே கவர்ந்தது …
Mam நாளைக்கு ஷாப்பிங் மால் OPENING இருக்கு நீங்க கண்டிப்பா வரணும் என்று அழைத்தவனுக்கு அவள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை …
உடனே ஒரு போன் செய்து ஒரு TEA,ஒரு மாதுளை ஜூஸ் வாங்கிட்டு வாங்க என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள் …அதை இருவருக்கும் குடுத்ததும் அவர்களின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் …
உங்க பேர் என்ன என்று சம்யுவிடம் கேட்டாள்…
சம்யுக்தா mam..
Mam எல்லாம் வேண்டாம் அஞ்சலின்னு கூப்பிடுங்க..
இப்போ எத்தனை மாசம் என்றதற்கு அவள் ஆறு மாதம் என்று அவள் கூறியதும் அவளுக்கு ஒரு பெரு மூச்சு எழுந்ததை இருவரும் கவனித்தனர்..
சிறிதுநேரம் பேசியவர்கள் ,பத்ரமா போங்க என்று அவளிடம் கூறிவிட்டு..சார் அவங்க safe ஆக கூட்டி போங்க என்று அவளும் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்…
காரில் ஏறியதும் அவன் அவளை அவ்வளவு பாதுகாப்பாக அழைத்து செல்வதை பார்த்தவளுக்கு எப்பவும் போல் கணவனின் நியாபகம் தான் வந்தது….
புது புடவையில் இறங்கி வந்த அஞ்சலியை பார்த்த அவளின் தாய் இன்னைக்கும் வொர்க் இருக்கா அஞ்சு ..!!
சரி இரு கொஞ்ச நேரத்துல சமைத்து விடுவேன் என்றதும் வேண்டாம் அம்மா ஒரு மணி நேரம் தான் உடனே வந்துருவேன் நீங்க ரெஸ்ட் எடுங்க நான் கிளமப்றேன் …
சரி அஞ்சு பாத்து போ ..
சரிம்மா….
அவள் சரியாக உள்ளே வந்ததும்,அவன் மேலே சென்று விட்டான்…அவள் இறங்கி வந்ததும் அவளை தான் ரிப்பன் கட் பண்ண சொன்னதும் மறுத்து விட்டால் …இல்லை நான் அவ்வளவு பெரியா ஆளும் இல்லை,அவ்வளவு வயசும் ஆகல நீங்களே கட் பண்ணுங்க என்றதும் முடிவாக அஞ்சலி,அஜய்,சம்யு அனைவரும் கட் பண்ணி திறந்தார்கள்.. அப்போதே கூட்டம் அலை மோதியது…
உள்ளே அவளை அழைத்து சென்று இருவரும் சுற்றி காட்டினார்கள் …பிறகு அவன் பிரகாஷ் கிட்ட சென்று விட்டான் ,சம்யுக்தா அவளோடு இருந்தாள்..
நீ சாப்டியா சம்யு,CHECKUP லாம் சாரிய போறியா??
பேபி நல்ல இருக்காங்க அஞ்சலி..டோன்ட் WORRY என்றதும் அவளுக்கு சிரிப்பு வந்தது..
குழந்தைன்ன அஞ்சலிக்கு ரொம்ப பிடிக்குமோ ??
ரொம்ப ரொம்ப என்று அவள் கையை விரித்து காட்டிய அழகில் சம்யுக்தாவே அவளிடம் விழுந்து விட்டாள் இதில் பிரகாஷின் நிலைமை ஐயோ பாவம் போல் இருந்தது…
எப்போதுமே அவள் அழகி தான் இன்று பச்சை நிற சரிகை வைத்த புடவை,தலை நிறைய மல்லிகை பூ,எப்போதும் போல் மூக்குத்தி,முன்ன விட கொஞ்சம் உடல் தேறி இருந்தாள்…
அப்போது நியாபகம் வந்தவளாக அஞ்சலி சம்யுக்கு எடுத்து வந்த பூவை எடுத்து அவளுக்கு வைத்து விட்டதும் சம்யு கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது..
என்ன அச்சு சம்யு !!வலிக்குதா உன்னோட husband கூப்பிடவா!!
இல்லை அஞ்சலி எனக்கு யாரும் இல்லை..நாங்க ரெண்டு பேரும் REGISTER கல்யாணம் பண்ணிகிட்டோம் ..நான் ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன் ஹைதிராபாத்தில் அப்போ அங்க IT ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன் அவரையும் அங்கதான் எனக்கு தெரியும்..அப்பறம் love பண்ண ஆரமித்தோம்,எனக்கு யாரும் இல்லைங்கறது அவங்க வீட்டுல பெரிய பிரச்சனையாக தெரிந்தது …ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணி ஆஸ்திரேலியா போனோம்,அப்பறம் அவங்க பிசினஸ் பண்ணலாம்ன்னு சொன்னதால இங்க வந்து ONE YEAR ஆகுது …
இப்போது அஞ்சலிக்கு நன்கு புரிந்தது அவள் ஏன் அழுகிறாள் என்று,
இங்க பாரு சம்யு உனக்கு யாரும் இல்லைன்னு நீ நெனைக்க வேண்டாம் …நான் இருக்கேன் உனக்கு என்றதும் அவளின் கையை பிடித்த சம்யு thank you என்றாள்…
குழந்தைய மட்டும் பெத்து குடு நான் பாத்துகிறேன் என்றதும் சம்யு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு ..
தன்னுடை சொந்த பொண்டாட்டிகே தெரியாமல் சைட் அடித்து கொண்டு இருக்கும் the GREAT பிசினஸ் MAGNET பிரகாஷ்…
டேய் என்ன தான்டா உன்னோட பிரச்சனை!!
அண்ணிய கூப்பிடுறேன் free ஆக பேசுங்களேன் என்ற அஜய்க்கு ஒரு அடியை முதுகில் வைத்தான்..
இவ்வளவு வருஷம் எங்க இருந்த, இப்போ வந்து என்னோட உயிர வாங்குற கொரங்கு …
கொரங்குன்னு சொல்லாதடா பிரகாஷ்,ஆஞ்சநேயர்ன்னு அழகா சொல்லு சரியா…சீதா தேவியையும்,ராமரையும் இணைக்கும் பாலம் நான் என்று பெருமையாக காலரை தூக்கி விட்டு கொண்டான்…
அது உண்மை தான்டா என்று பிரகாஷும் கண் கலங்க கூறினான் …அவன் கண்கலங்குவதை அவனால் பார்க்க முடியாததால் ,பிரகாஷ் அங்க நம்ம லேடீஸ் பாரு எப்படி ஈ ஈன்னு சிரிச்சிட்டு இருக்காங்க, நம்ம ரெண்டு பெரும் இப்படி அழறது நல்லிருக்கா சொல்லு..
டேய் நீ சொல்றதும் சரி தாண்டா…அப்படி என்ன டா பேசுவாங்க என்றான் ப்ரகாஷ்..
உங்க WIFE உங்கள கேவலமா திட்டும்,அதே என்னோட WIFE அதை விட கேவலமா திட்டிகிட்டு சிரிப்பாங்க இது நமக்கு தேவயா சொல்லுங்க …
அவன் சொன்ன விதத்தில் ப்ரகாஷ்க்கு அப்படி ஒரு சிரிப்பு …
திடீர் என்று உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பில் அஞ்சலி திரும்பி அவர்களை பார்க்கும்போது,பிரகாஷ் ஒளிந்து கொண்டான்…
பிரகாஷ் எப்படி இப்படி! அப்படி ஒரு காதலா உங்க ரெண்டு பேருக்கும் ,அண்ணி சரியான நேரத்தில் திரும்பி பாத்துட்டாங்க…
அது சொல்ல கூடாது,எங்ககிட்ட இருக்க ஒரு WAVELENGTH அது..
அப்படியா!!!
அப்போது தன் மனைவியிடம் இதை ட்ரை பண்ணி பார்க்க வேண்டும் என்று தோன்றியதும்,
சம்யுக்தாவை பார்த்து கொண்டே இருந்தான் அது அவளுக்கு தெரிந்தது தான், ஆனாலும் திருமபவில்லை ….
இதை எல்லாம் பார்த்த பிரகாஷ் டேய் என்னடா பண்ற சொல்லிட்டு பண்ணுடா …
உங்க அருமை தங்கச்சிகிட்ட எனக்கு WAVELENGTH இருக்கா என்று செக் பண்ணி பார்க்கிறேன்…
பாத்திங்களா!! அவ திரும்பியே பாக்கள,இப்போ பாருங்க எப்படி திரும்புவான்ன்னு..
ஹே சம்யு!! என்று அவன் அழைத்தும் அவள் திரும்பவில்லை என்றதும் பிரகாஷ்க்கு ஒரே சிரிப்பு …
மத்தவங்க பொண்டாட்டி கூட சமாளிச்சிறலாம் இவளை சமாளிக்க என்னால முடியாது…
Ohh அஜய்க்கு அவ்வளவு திறமை இருக்கா ??
ஹஹ்ஹ்ஹா …
சரி அஜய்,நீ அவங்கள கூட்டி போயிட்டு சாப்பாடு குடு எனக்கு CLIENT கால் இருக்கு..
ஓகே பிரகாஷ் நீ போ..
ரெண்டு பெரும் பேசி முடிச்சிட்டா வாங்க சாப்பிட போலாம்..
அஞ்சலி வேண்டாம் என்று கூறியது சம்யு முகம் மாறியதும் சரி வரேன் முகத்தை அப்படி வைக்காத என்றதும் தான் சம்யு சிரித்தாள்..
சரியாக சொன்னிங்க madam,இவ மூஞ்சிய பார்க்க முடியாம தான் நான் night ல வீட்டுக்கே வரது இல்லை..
சம்யுவை திரும்பி பார்த்தால் அஞ்சலி அவ்வளவு அழகாக இருந்தாள்…குண்டும் இல்லை,ஒல்லியாகவும் இல்லை சரியான உடல்வாகு,பால் நிறத்தில் இருந்தாள்,மொத்ததில் அவள் அழகி தான் அதை மறுக்கவே முடியாது..
சம்யு இவ்வளவு அழகாக இருக்கிறாள் இவளை இப்படி சொல்றிங்க …
அவன் அசடு வழிந்தான்…
இருவரும் சாப்பிட்டு விட்டு,ஷாப்பிங் மால்கு சென்று எதையாவது வாங்கலாம் என்று யோசித்தவள்,ரொம்ப ஆடம்பரமாக இருந்த பிங்க் நிற சரிகை வைத்த பட்டு புடவை எடுத்தவள்,வேஷ்ட்டி சட்டை எடுத்தாள்,குழந்தைகாக ஒரு குட்டி FROG எடுத்து கொடுத்தாள்…
இருவருமே அதை வாங்கி கொண்டனர்…அவர்கள் இருவரும் அவளுக்கு purple colour நிற புடவை எடுத்து கொடுத்தும், அடுத்த மாதம் சம்யுக்கு வளைகாப்பு இருக்கும் நீங்க வரணும் madam என்றதும்,
Madam ன்னு கூப்பிட வேண்டாம் அஞ்சலின்னு கூப்பிடுங்க என்றவள் …கண்டிப்பா அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பும் வரை பார்த்து கொண்டு தான் இருந்தான் …
இப்படி இவளை தூரமாக இருந்து பார்பதர்காகவா இவளை கல்யணம் செய்தேன் என்று வேதனையாக இருந்தது…