ஒருவழியாக அவள் deputy collector ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது…திருவண்ணாமலையிலே போஸ்டிங் வாங்கிட்டா…
தாய் தந்தைக்காக தன்னை மாற்றி கொண்டாளே தவிர,அவள் மனக்காயம் யாரும் அறியாத ஒன்று தான்..
இரவு தூங்கும்போது தாலியை தொட்டு பார்த்தளுக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது…இப்போ அவள் தந்தையிடம் கூட பணம் வாங்குவதில்லை…தன்னிடம் இருக்கும் பணத்தில் தான் தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு இருக்கிறாள்…இதை தான் அன்று தன் கணவனும் தனக்கு இப்படி இரு என்று கூறினான்…
ஒரே ஒரு முறை தனக்கு உடை வாங்க கடைக்கு சென்றபோது அவனோடு அன்று கடைக்கு சென்றது நியாபகம் வந்தது …அன்று நான் வாங்கி தரேன் என்று கூறியதற்கு,உன்னோட காசுல எப்போ வாங்கி தரையோ அன்னைக்கு நான் வாங்கிக்கிறேன் என்று கூறினது நியாபகத்திற்கு வந்ததும் அவனுக்கும் ஒரு ஷர்ட் purple colour லில் எடுத்து இருந்தாள்…எதற்கு எடுத்தால் என்று அவளுக்கே தெரியவில்லை ..
இந்த இரண்டு வருடத்தில் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு அதிகமாக இருந்துருக்கு ஆனாலும் தன் பெற்றோர்களை மறுபடியும் ஏமாற்ற வேண்டாம் என்று அந்த நினைப்பை தூக்கி எரிந்து விடுவாள்…முன்பு போல் இவள் அழுவது எல்லாம் இல்லை அனைத்தையும் கடந்து செல்ல கற்று கொண்டாள்..
இரவின் தனிமையில் மட்டும் கணவனின் அணைப்பு வேண்டும் என்ற ஏக்கம் இத்தனை வருடத்தில் துளியும் குறையவில்லை …குழந்தை களைந்தது கூட அவனுடைய தவறில்லையே ஒருவேளை அவனிடம் இதை சொல்லி இருந்தால் எங்களுக்கு இந்த பிரிவு நேராமல் இருந்துருக்கும் அல்லவா…தாலியை தொட்டு பார்த்தவளுக்கு இது மட்டுமே எனக்கானது அவன் என்னுடையவன் இல்லையே ..அந்த பெண்ணையே திருமணம் கூட செய்து இருப்பானோ என்னவோ..இப்போது எல்லாம் இந்த மனம் ஏன் கணவனுக்கே பரிந்து பேசுகிறது என்று தெரியவில்லை…ஏனென்றால் அந்த மனதில் இருப்பவன் அவன் அல்லவா!!பின்பு ஏதோ ஏதோ யோசித்தவள் உறங்கிவிட்டாள் …
காலையிலே எழுந்தவளுக்கு வேதனையாக தான் இருந்தது கீழே சென்றால் அம்மாவிடம் என்ன சொல்வது,
நேத்து அவளிடம் ஒரு பத்து போட்டோவை குடுத்து இதில் யாரை உனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லு அஞ்சு பேசிடலாம்…
யோசித்து கொண்டே கீழே வந்தவள்,அம்மா பசிக்குது என்றவளுக்கு,
அம்மா நீங்க கிளம்புங்க நான் பார்த்துகிறேன்!! என்றவளுக்கு,ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார்..
அவர் கிளம்பியது தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது…இன்னைக்கு தப்பிச்சோம் சாமி என்று இருந்தது ..அலுவலகத்திற்கு உள்ளே நுழையும்போது ஒரு இன்முகமாகலாம் செல்ல மாட்டாள் அந்த பதவிக்கே உரிய வேக நடையுடன் நேர்கொண்ட பார்வையோடு செல்வாள்,வணக்கம் சொல்பவர்களுக்கு சிறு தலை அசைப்பு அவ்வளவு தான் இதுவரை யாரிடமும் ஒரு சிறு வார்த்தை கூட பேசியதில்லை….
உள்ளே சென்று அமர்ந்ததும் அவளின் மேசையின் சில கோப்புகள் இருந்தது…அதில் அளவுக்கு மீறி கட்டிடங்களை கட்டி கொண்டே செல்கிறதால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் தான் பயந்து இதை கேட்க்க வேண்டும் என்று ஒரு பெட்டிஷன் போட்டு இருந்தனர்…
உடனே அலுவலகத்தை விடட்டு வெளியே சென்றவள்,அந்த பில்டிங் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்…
அங்கே சென்று பார்த்தவளின் கண்ணில் முதலில் பட்டது அந்த fly ash brick தான்…இது நம்முடைய ஐடியா ஆச்சே…அங்கே இருக்கும் owner அழைத்து வார்னிங் செய்து விட்டு தான் சென்றாள் …
Collector சொன்ன நான் கேட்கனுமா என்ன ?என்று அவன் துள்ளினான்..
கேட்டு தான் ஆகணும் இல்லைன்னா !!இந்த பில்டிங் ஒரு இரவில் மொத்தமாக இல்லாமல் போகும் என்று கெத்தாக கூறிவிட்டு சென்று விட்டாள் ….
இதை எல்லாம் ஒருவன் மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தான்…இந்த பில்டிங் கட்டிக்கொண்டு இருப்பவன் பிரகாஷ்க்கு நண்பன்…
அவன் வேகமாக மேலே சென்று நடந்த அனைத்தையும் கூறியவன்,
collectorன்னா பெரிய இவங்களா இவங்க !!!ஒரு சின்ன பொண்ணு என்னை வந்து அசிங்கபடுத்திட்டு போகுதுடா பிரகாஷ் என்றதும் அவனுக்கு ஒரே சிரிப்பு..
இவன் ஆஸ்திரேலியா சென்ற போதிலிருந்து இவனுக்கு ஒரு நண்பனாக இருக்கிறான் அஜய் …அங்கு இருக்கும் போது பிசினஸ் மீட்டிங் வைக்கும்போது இருவரும் நண்பர்கள் ஆனார்கள் …அதனால் இவன் மேல் பிரகாஷ்க்கு தனி பாசம் அதுவும் அவனின் மனைவி சம்யுக்தா,இவனை “அண்ணா “அண்ணா” பாசத்தை பொழிவாள்…
உறவே இல்லாத தனக்கு இவர்கள் இருவரும் உறவாகி இருந்தனர்…அஜய்யும் சம்யுக்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்களை வீட்டில் ஏற்று கொள்ளவில்லை…ஏனென்றால் அவள் ஆசிரமத்தில் வளர்ந்து இருந்தாள்,அது மட்டும் இல்லை அவள் வேற ஸ்டேட் வேண்டாம் என்று விட்டனர்.. அதனால் இவர்கள் ஆஸ்திரேலியா வந்து பிசினஸ் செய்து கொண்டு இருந்தனர்…அவள் ஒரு கம்பனில் பனி புரிந்து கொண்டு இருந்தாள்..
பிரகாஷும் அப்போது தான் அங்கு சென்றான்,அவர்களுக்கு இங்கு வந்து பிசினஸ் ஸ்டார்ட் பண்ண பெரிய உதவி செய்தவனை, இருவருமே மறுத்தனர் ..
சம்யுக்தா,இது அண்ணா நான் உனக்கு செய்யுறது,இதை மறுக்க கூடாது…உங்களால் எப்போது முடியுமோ அப்போ குடுங்க அது போதும் என்று அப்போதே முடித்து விட்டான்…அதுவும் நீயும் நானும் ஒரே ஸ்டேட் நம் தாய் மொழிக்காக என்று கூறுவான்..
ஒரு தமிழனுக்கு தமிழன் உதவுவான் அதுபோல் ஒரு தெலுங்கு காரர்களுக்கு தெலுங்கு ஆள் தான உதுவுவார்கள் என்று அவன் கூறிய புதிய தத்துவத்தில் இருவருமே சிரித்தனர் …அதும் மட்டுமில்லை அவளுக்கும் தன்னை போல் யாரும் இல்லை என்பதால் அவள் மேல் தனி பாசம்…
இந்த construction company பிரகாஷ் ரெடி பண்ணி கொடுத்தது தான் ….யாரிடமும் மனம் திறக்காத தன்னுடைய personal வாழ்க்கையை அவர்களிடம் மட்டும் கூறி இருந்தான் ஆனால் அஞ்சலியையை இவர்களுக்கு தெரியாது..
ஒரு உண்மை என்னவென்றால் அஞ்சலி collector ஆகி இருந்தது பிரகாஷ்க்கு தெரியாது …இப்போ வந்து அவள் மிரட்டி விட்டு சென்ற பொது தான் அவனுக்குமே மேடம் collector ஆகிட்டாங்களா!! என்று தெரியும் …..
கீழே அஜய்யையை அனுபி விட்டு ஒரு முக்கியமான கால் பேசிக்கொண்டே கீழே பார்க்கும்போது தான் அவனுக்கே தெரிந்தது…
என்னோட அம்முலு வா இது!!!அதே குழந்தை முகம் தான் ஆனால்,அன்று பார்த்த போது இருந்த சிறு கவலை கூட அவள் முகத்தில் இல்லை,அவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு…அவ்வளவு அழகா இருந்தாள் ,அந்த பதைவிக்கே உரிய மிடுக்கோடு இருந்தாள்…அவள் கையைய ஆட்டி பேசும்போது அப்படியே தன்னையே அவளிடம் பார்ப்பது போல் அவனுக்கு தோன்றியது…
அவளிடம் அவனுக்கு எப்பவுமே அந்த மூக்குத்தி பிடிக்கும்,பேசும்போது அவள் அதிகமாக கையை அதிகமா ஆட்டி ஆட்டி தான் பேசுவாள்…அப்போது எல்லாம் அவன் அவளின் வெண்டைக்காய் போன்று இருக்கும் கை விரலின் மேல் இதழ் பதித்து கொண்டே இருப்பான் …இப்போதும் அவனுள் அதே தாபம் தான் வந்தது…
பிரகாஷ் என்று அவனை அஜய் உலுக்கி கொண்டு இருந்தான்…என்னடா ஏதோ உன்னோட ஆளு வந்துட்டு போன மாறி வாயெல்லாம் பல்லாக்கி காட்டிகிட்டு இருக்க…அந்த சின்ன பொண்ணு நம்மளை அப்படி மிரட்டிட்டு போகுது நீ என்னமோ OSKAR அவரது வாங்கின மாறி ஈன்னு கிட்டு இருக்க…
அந்த பொண்ண என்ன பண்ணலாம்ன்னு யோசி என்றதற்கு,மேலிடம் என்ன சொல்றாகளோ அத நம்ம கேட்க்க தான் வேண்டும் அஜய்…
“ஐயோ சம்யு இங்க வா இவனுக்கு பேயோட்டனும் போல எந்த மோகினி பேய் பிடிச்சுதுன்னு தெரில்ல…”
எங்கண்ணா வா நீங்க எதுக்கு இப்படி கலாய்க்கிரிங்க என்று காபி எடுத்து கொண்டு வந்தவள் இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் அதை எடுத்து பருக ஆரமித்திருந்தாள்…
உடனே அண்ணன் கட்சி கொடிய தூக்கிகிட்டு வந்துருவியே நீ!!
அவளின் வயிற்ரை பார்த்ததும் அவளின் மேல் எப்போதும் போல் அவளின் மேல் காதல் ஆறாக ஊற்ற துவங்கியது..
அதற்க்கும் அவள் எதுக்கு இப்போ இவ்வளோ கிலோமீட்டர்க்கு ஜொள்ளு விடுற..
அண்ணய்யா மீரு காலு பைக்கி எட்டண்டி லேகேபோதே குர்துன்கிகொண்டி (அண்ணா உங்க காலை தூக்கிகோங்க இல்லன்னா நெனஞ்சிருவிங்க) என்றதும் அவளை அடிக்க அவன் துரத்தினான்…
பிறகு ஹே சம்யு ஓடாதன்னு எத்தனை வாட்டி தான் சொல்றது…
நீ என்னை துரத்தாதன்னு எத்தனை முறை சொல்றது என்று சண்டை பிடித்து கொண்டே வந்தவர்களை பார்த்தவனுக்கு மனைவியின் நியாபகமே வந்தது..
அதும் சம்யுக்தா PREGNANT ஆக இருப்பதால் அஜய் அவ்வளவு பாசமாக அவளை பார்த்து கொள்கிறான்…நான் சரியாக இருந்திருந்தாள் எல்லாமே சரியாக இருந்திருக்கும் போல என்று தான் தோன்றியது …
டேய் பிரகாஷ் அண்ணியும் இப்படி தான் கூட கூட பேசிகிட்டு இருப்பாங்களா என்றதற்கு,
அவன் சிரித்துக்கொண்டே இப்போ கீழ ஒருத்தவங்க வந்தங்களே அவங்க கிட்ட கேட்க்க வேண்டியது தான என்று அவன் சிரித்தான் …
கூடவே சிரித்த அஜய் ஹே பிரகாஷ் என்ன சொல்ற!! என்றதற்கு ,அவனின் போனில் இருவரும் இருக்கும் புகைபடத்தை காட்டினான் …
அட நம்ம collector madam தான் நம்ம அண்ணியா !!
ஹஹஹாஹ் என்று அண்ணனும், தங்கையும் அஜய் கொடுத்த REACTION ல் சிரித்து விட்டனர்…
இனி நீயாச்சு உன்னோட அண்ணியாச்சு நீங்களே பேசி தீர்த்துகோங்க..
அஜய் என்ன தான் பிரகாஷிடம் நண்பனாக பழகினாலும் அவனை அண்ணன் என்ற இடத்தில் வைத்து தான் பார்த்தான்..
அப்போ அண்ணி சொன்ன மாறி ஒரே இரவில் பில்டிங் இடிச்சிருவாங்களா!!
அது உன்னோட சாமர்த்தியம் அஜய்..
சிரிப்பை கை விட்ட அஜய்…எப்படி பிரகாஷ் உன்னால இப்படி இருக்க முடியுது ..அவங்கள இவ்வளவு பக்கத்துல பார்த்தும் ஒரு வார்த்தை கூட பேசாம ரெண்டு வருஷமா அவங்களுக்காக காத்திருக்க..
அஜய் இப்படி கேட்டதும் அவன் முகத்தில் தெரிந்த சோகத்தை பார்த்த இருவருக்குமே அவ்வளவு வேதனையாக இருந்தது …
அவளோட காதலுக்காக என்னோட ஆயுள் முழுக்கவும் காத்திருப்பேன் டா …இந்த ரெண்டு வருஷம் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை அஜய்..
இதை கூறும்போது அவனின் கண்கள் கலங்கியது…தாத்தாவின் இறப்பிர்க்கு பிறகு இவர்களை இங்கு அழைத்து வந்து அனைத்து உதவிகளையும் செய்தவனுக்கு,தனக்கும் நெருக்கமான சொந்தம் இருக்கிறது என்று மனம் நிம்மதியாக இருந்த்தது…
அஜய் சம்யுக்தாவின் பாசம் இவனை அந்த அளவுக்கு மாற்றியது…எல்லா சண்டேக்கும் இவர்களை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விடுவான்…இவர்களை பார்க்கும்போது பாட்டிக்கும் மனம் ஆறுதலாக இருக்கும்..
பாட்டியும் எப்போ தான் அஞ்சலிய கூட்டி வந்து நீயும் இப்படி சந்தோசமாக இருப்பதை பார்க்கணும் கண்ணா!! என்பவருக்கு,சீக்கிரம் கூட்டி வருவேன் என்ற பதிலையே கொடுப்பான்..
அவன் முகம் காட்டிய சோகத்தில்,உடனே சம்யுக்த சூழ்நிலையை இலகுவாக்க,
ஆனால் இந்த அஜய் இருக்கானே!!நான் எப்போ இவனை விட்டு போவேன் அடுத்து எவ கிடைப்பான்னு ரோடு ரோடா சுத்திக்கிட்டு இருப்பான் என்றதும்,
பிரகாஷ்க்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது என்றால்,அஜய்க்கும் அப்படி ஒரு சிரிப்பு..
அவன் சிரிப்பதை பார்த்த சம்யு,மாப்பிள்ளைக்கு புது பொண்ணு கேட்குதா?? என்று அவனை அடிக்க ரெடி ஆகிட்டு இருந்தாள் …
இருவரையும் பார்த்தவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு…கடைசியாக அவன் அஞ்சலி செவரு ஏரி குதிப்பதை பார்த்து இப்படி சிரித்தான் அதன் பிறகு இப்போது தான் இந்த அளவுக்கு சிரிக்கிறான்…