அத்தியாயம் 35:

இன்று அஞ்சலி அஞ்சலியின் தந்தை பரபரப்பாக  இருந்தார்…அப்போது தான் அஞ்சலி எழுந்து குளித்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கீழே வந்தாள் …

Good morning அப்பா..

Happy morning அஞ்சலி..

என்ன அப்பா ரொம்ப பதட்டம இருக்கீங்க போல, என்ன ஆச்சு!! என்றதும்  உனக்கு இன்னைக்கு ரிசல்ட் வருதுடா..

சரி அப்பா வரட்டும் அதுக்கு நீங்க ஏன் இந்த அளவுக்கு பதட்டமா இருக்கீங்க..

STAY COOL அப்பா…நல்லா தான் பண்ணிருக்கேன் கண்டிப்பா நல்ல ரிசல்ட் தான் வரும்..

சரிடா அஞ்சு…

அப்பா நான் கோவில்க்கு கிளம்பறேன்…சரி மா போயிட்டு வா…

அவளுக்கு ரிசல்ட் பற்றி எல்லாம் கவலையே இல்லை …இந்த ஆறு மாதமும் கடினமாக உழைத்தாள்…

உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு அதனால் கவலை பட தேவை இல்லை….தன் கணவனை போல் இவளும் உழைப்பை நம்புபவள் தான்…

அவனை பிரிந்து ஒருவருடம் ஆகிவிட்டது..காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டது என்று பெரு மூச்சி விட்டாள் ஆனால் அவளின் மனக்காயம் அப்படியே தான் இருக்கிறது….

அவன் தன்னை காதலிப்பதாக கோவிலில் கூறியது பிறகு,அவர்களின் கல்யாண நாள் நியாபகம் வந்தததை கூட அவள் புறக்கணித்து விட்டாள்..ஆனால் அவன் தன்னைவிட்டு சென்றதை அவளால் மறக்கவே முடியவில்லை..

என்னை ஏன் ஏமத்தினாங்க என்ற கேள்வி தான் அவளுக்குள் இருக்கும் ஒரே கேள்வி…சில விஷயங்களை கடந்து வந்துட்டோம்ன்னு நெனச்சாலும் அது உண்மை இல்லை போல என்று தான் அந்த நிமிடம் அவளுக்கு தோன்றியது..

காரை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றாள்..எப்போதும் போல் கடவுளை கும்பிட்டு விட்டு …கோவிலை சுற்றி வந்தாள்..

வந்து எப்போதும் போல் கண்களை மூடி கொண்டு அவங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கணும் என்று வேண்டியவள் கண் திறந்து சிவனின் முகத்தை பார்த்த பின்பு மனம் சற்று நிம்மதியாக இருந்தது…

அவளின் தந்தை அவளை அழைத்து அஞ்சு நீ சாதிச்சிட்ட டா!!!நீ பாஸ் ஆகிட்ட டா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அஞ்சு …சீக்கிரம் வீட்டுக்கு வா என்று கூறிய அவரின் குரலில் அப்படி ஒரு ஆனந்தம்..

என்னால இதுலயாவது அவங்க சந்தோசமா இருக்கங்களே என்று தான் தோன்றியது…இல்லையா பின்ன அவளை அப்படி ஒரு வேதனையில் இருந்து வெளியே கொண்டு வர அவளின் தந்தை பட்ட பாடு அவருக்கு தான் தெரியும் ..

சரி அப்பா கிளம்பி வரேன்…

கடவுளுக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு..வீட்டிற்கு சென்றதும் அவள் வீட்டில் அவளை கொண்டடி விட்டார்கள்..

அப்பா போதும் போதும் !!!இவளோ ஸ்வீட் சாப்பிட்ட நான் அம்மா மாறி குண்டா ஆகிருவேன்..

அவளின் தாய் உடனே புடவையயை  இடுப்பில்சொருகி சண்டைக்கு தயாராக இருந்தவரை அவரின் கணவர் தான் தடுத்தார்..

என்ன எதுக்கு தடுக்கிரிங்க அவளை first வாய மூட சொல்லுங்க …நான் குண்டா இருந்த இவளுக்கென்ன ,இவளா எனக்கு சமைத்து  கொட்டுறா ?

அஞ்சலி அதற்கெல்லாம் அசருவாளா என்ன!!

எங்க அப்பா நிலமை ரொம்ப பாவம் ஆகிறுமே…இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க நடந்து வர மாட்டிங்க உருண்டு தான் வருவிங்க என்று அவள் கலகல வென்று சிரித்ததும் அவர்கள் இருவருக்கும் தன் மகளை திரும்பவும் இப்படி பார்பதற்கு அவ்வளவு சந்தோமாக இருந்தது…

“ஏன்னோட மாமியார் இல்லைன்னு நெனச்சேன் ஆனா இப்போ தான் தெரியுது சோறு போட்டு நானே  வளத்திருக்கேன் என்று அவர சொன்னதும் அப்பாவும் மகளும் சிரித்தனர்…”

ரெண்டு பெரும் இப்படி சிரிச்சிட்டே இருந்தா சாப்பாடு கைக்கு வந்துருமா??போயிட்டு ரெண்டு பெரும் சமைத்து எடுத்துட்டு வாங்க…

ரொம்ப நல்ல விஷயம் என்னோட பொண்டாட்டி இன்னைக்கு சொல்லிருக்கா … அம்மா சாப்பாட்டுல இருந்து நம்ம தப்பிச்சிறலாம் …நம்ம ரெண்டு பெரும் சமைக்கலாம் அஞ்சு..

உடனே அவளின் தாய் அவர்கள் இருவரையும் அடிக்க ஓடினார்…

பாத்து மா தக்காளி மாறி நசிங்கிராதிங்க!!..அவர் கையைய இடுப்பில் வைத்து அவர்களை முறைத்ததும் அவர்கள் இருவரும் சமையல் அறையில் புகுந்தனர்…

அஞ்சலி என்னை சமைக்கலாம் என்றதும்,அம்மாக்கு பிடித்த பிஷ் குழம்பு பிஷ் FRY செஞ்சிறாலம் அப்பா…நீங்க தக்காளி, வெங்காயம் கட் பண்ணி குடுத்துட்டு நீங்க அம்மாவை போயிட்டு சமாதானம் பண்ணுங்க அப்பா, என்றதும் அவள் சொல்லிய வேலையயை முடித்துவிட்டு தன் மனைவியயை நோக்கி சென்றார்..

நான் கோவமா இருக்கேன் நீங்க எங்கிட்ட பேச வேண்டாம்..உங்க பொண்ணு கூட சேர்ந்து என்னை குண்டா இருக்கேன்ன்னு சொன்னிங்கள்ள இப்ப மட்டும் எதுக்கு வந்திங்கலாம்…

நான் ஒன்னும்  உன்னை குண்டா இருக்கேன்னு சொல்லையே டி…

அவர் சொல்வது சரி தான்..

அப்போ நான் குண்டா இருக்கேன்னா!! என்றதும் அவருக்கு ஒரே சிரிப்பு…நீ எப்படி இருந்தாலும் இந்த body தாங்கும் அதனால நீ பீல் பண்ண வேண்டாம்…..இந்த வயதிலும் அவருக்கு ஒரு வெட்க்க சிரிப்பு வந்தது

ஏன் பொண்ணு  ஒரு வருஷத்துக்கு அப்பறம் இன்னைக்கு தான் சிரிச்ச முகமாக இருக்கிறாள் அதை எதுக்கு கெடுக்கணும்…

நம்ம அஞ்சு கொஞ்சம் மெலிஞ்சி இருக்கா, அவளை குண்டாகிட்ட ரெண்டு பெரும் இப்போ equal ஆகா இருப்பிங்க.. என்றதும் தான் அவரும் சிரித்தார்…

இந்த ஒருவருட காலமாக தன் மகள் இருந்த வேதனையில் மனைவியைய சிறிதும் கண்டு கொள்ளவில்லை …காலம் முழவதும் தன்னை நம்பி வந்த இவளிடம் ஒரு வார்த்தை நன்றாக பேசி ஒரு வருடமே ஆகியது…

சமையல் அறையில் இருந்த அஞ்சலிக்கு எல்லாமே கேட்டு கொண்டு தான் இருந்தாள்…அவளுக்கு உடனே கணவனின் நியாபகம் வந்து விட்டது ..அவனும் தன்னை சமதானம் செய்ய காலில் விழ கூட தயங்க மாட்டான்…

அஞ்சலிக்கு சிறு வயதில்ருந்தே தாய் தந்தையயை பார்த்து தான் திருமண வாழ்க்கை அவ்வளவு பிடித்து இருந்தது…இவர்களை போல் தானும் வாழ வேண்டும் என்று அவளும் ஆசைப்பட்டு தான் அவனை திருமணம் செய்து கொண்டாள்…

தன்னோடைய கண் பார்வையிலே, அனைத்தையும் செய்யும் கணவன் தன்னிடம் எப்படி பொய்த்து போக முடியும் என்று முதல் முறையாக தோன்றியது…யாரோ சொன்னதை நான் நம்பி இருக்க கூடாதோ??

அஞ்சலி என்னடி பண்ற பசிக்குதுடி !!என்று அவளின் தாயின் குரலை கேட்டவள்,உடனே அனைத்தையும் எடுத்து சென்று மேசை மேல் வைத்து,இருவருக்கும் பரிமாறினாள்…

அவளின் தாய் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்..

அஞ்சு நீயா இது !!

ஏன் மா உங்களுக்கு இன்னொரு பெண் உண்டா ??

உன்கிட்ட வாய குடுக்க முடியுமா சொல்லு ….

நீ சமைப்பேன்னு தெரியும் ஆனா பரிமாறதா பார்த்தா சந்தேகமா இருக்குடி எப்போ உனக்கு இப்படி ஒரு பொறுப்பு வந்துச்சு…

“எல்லாமே உங்கள பார்த்து தான் அம்மா கத்துகிட்டேன்” என்றவளை கோவமாக பார்த்தார்…

உடனே அவர் தந்தை அதுக்கு வாய்ப்பில்லையே அஞ்சு !!

ஓகே ஓகே கூல்!!!எல்லாரும் அமைதியாக சாப்பிடுங்க…

உட்கார்ந்தவள் தன் தாயின் தட்டை  தன்னிடம் இழுத்து கொண்டாள் …

அதானே பார்த்தேன்…என் பொண்ணாவது திருந்திரதாவது…

ஹஹஹா…

இங்கு இவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்…அங்கு அவனோ அழுகையில் கரைந்தான்..

ஆறு மாதம் ஆஸ்திரேலியா சென்று இருந்தவன்…வந்த வேலை சீக்கிரம் முடிந்ததும் நாளை கிளம்பலாம்  என்று படுக்க போனவனுக்கு வீட்டிருந்து பாட்டி அழைத்து கொண்டே இருந்தார்..

என்ன அச்சு பாட்டி!!

அவர் அழுது கொண்டே தாத்தா சீரியசாக இருக்கிறார்…

உடனே அவன் கிளம்பியவனுக்கு ஒரே வேதனையாக இருந்தது…என்னை மட்டும் கடவுள் ஏன் தான் இப்படி சோதிக்கிராறோ??

அவன் கிளம்பி வருவதற்குள்,மருத்துமனையில் சேர்க்க பட்டிருந்தார்…தீவிர சிகிச்சை பிரிவில் தான் சேர்க்க பட்டிருந்தார் …அங்கே சென்று அவரை பார்க்கும் வரை அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை இருந்தது…

முதலில் பாட்டியையை தான் பார்த்தான் அவர் முகம் பார்க்க அவனால் முடியவில்லை …பாட்டி ஒன்னும் ஆகாது கவலைபடத்திங்க.. என்று அவருக்கு ஆறுதல் அளித்து விட்டு,உள்ளே சென்று அவரை பார்க்க சென்றான்…இவன் வருவதர்க்காகவே உயிரை இழுத்து பிடித்து கொண்டிருந்தார்..

பிரகாஷ் கண்ணா வந்துட்டியா??என்னால நிறைய பேச முடியாது கண்ணு..நீ அஞ்சலியோடு சந்தோசமா இருக்கணும் என்கிறது தான் என்னோடு கடைசி ஆசை நிறைவேற்றுவியா ??வீடு நிறைய குழந்தை இருக்கணும் அப்போ உன்னோடு கண்டிப்பா நாங்க இருப்போம்…

“நான் இல்லாமல் என் மனைவி எப்படி இருப்பாளோ என்றவர் அவளை ஒரு முறை பார்க்க வேண்டும்” என்று கூறியவர் அவளை அழைத்து வா கண்ணா சீக்கிரம் என்றதும், உடனே அவன் பாட்டியை அழைத்து வந்தான்..

கண்ணு,என்று அவர் அவரின் மனைவியையை அழைத்ததும்…அவரின் மனைவி அவரின் கையை பிடித்து கொண்டு கதறி விட்டார்…

என்னங்க என்னை விட்டு போயிராதிங்க,என்னையும் உங்களோடு கூட்டிகிட்டே போய்டுங்க என்று அவர் கூறியதும் பிரகாஷ்க்கு கண்ணில் நிற்பேனா என்றது அங்கு இருந்த மருத்துவருக்கும் கண்ணில் நீர் கோர்த்தது…

நீயும் என்னோடு வந்து விட்டாள் நம்ம பேரனையும் பேத்தியையும் யாருடி பாத்துப்பாங்க…

நான் போறேன் கண்ணு!!என்னை மன்னிச்சிரு கண்ணு !!வாழ் நாள் வரை உன்னோடு இருப்பேன்னு சொல்லிருந்தேன் ஆனால், “இப்போ உன்னை விட்டு போறேன் கண்ணம்மா” என்னை மன்னிச்சிரு என்று அவரின் மனைவியின் கையயை பிடித்துகொண்டே உயிரை விட்டிருந்தார்!!!!

என்னங்க!!!!அவரும் மயங்கி சரிந்தார்…

தாத்தா!!! என்றவனுக்கு அதன் பிறகு பேச்சே வரவில்லை…

அவரை emergency வார்டில் அனுப்பி வைத்து விட்டு,மனம் நிலை கொள்ள வில்லை…

அப்போது அந்த மருத்துவர் பிரகாஷ் உங்க மனனவி எங்கே என்றதும்,அவங்க வந்துட்டு இருக்காங்க என்ற பதிலோடு நிறுத்தி கொண்டான்…

அதன் பிறகு பாட்டி முழித்ததும் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம், கொஞ்சம் தெரிந்தவர்களை அழைத்து முடித்துவிட்டு பாட்டியயை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு இரவு வந்ததும்,பாட்டியயை எப்படி சமாதனம் செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை…பிரம்மை பிடித்தது போல் இருந்தார்…

பாட்டி கொஞ்சம் சாப்பிடுங்க எனக்காவது நீங்க இருக்கணும் என்றதும், அவர் பெயருக்கு சாப்பிட்டு விட்டு ரூமிற்கு சென்று விட்டார்..

இப்படி நான் அனாதையாக ஆகிவிட்டேனே என்றவனின் மனதில் ஆயிரம் கேள்வி…அதற்கான பதில் தன் மனைவியிடம் மட்டுமே கிடைக்கும் என்றனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தோன்றியது…மனைவியின் ஆறுதல்  இப்போதும் தேவை என்று தோன்றியதும் போனை எடுத்தான் …அழைக்கலாம் என்று நினைத்தான் ஆனால் அழைக்க வில்லை …உடனே மாடிக்கு சென்றவன் கிளாஸ்ஸில் ஊற்றி குடிக்க ஆரமித்தவன் நிறுத்தவே இல்லை …அந்த ரூமில் இருந்த கல்யாண புகைபடத்தை பார்த்தவனுக்கு அழுகை வெடித்தது…

நான் எதுக்கு தான் பிறந்தேனோ??இப்படி யாரும் இல்லாத அனாதை வாழக்கை வாழவா??

அம்முலு நீ இல்லாம என்னால இருக்க முடியலடி !!ஏண்டி விட்டுட்டு போன என்று அழுகையில் கரைந்தான் …