அத்தியாயம் 34:

சரியாக அவள் தான் இருக்கும் இடத்தை திரும்பி பார்க்கும்போது அவன் ஒளிந்து கொண்டான்…அவனுக்கு இது அதிசயமாக இருந்தது..தான் மனதார அவளை நினைத்து அம்முலு என்று அவளை அழைத்தது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு தோன்றி தன்னை தேடியவளை நினைத்தவனுக்கு இப்போதும் அவள் மேல் அவ்வளவு காதல் தோன்றியது…

சற்று எட்டி பார்த்தான்,அவள் கோவிலை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தான் சென்றாள்…

அவள் சென்றதை உறுதி செய்தவன்,இவனும் காரை எடுத்து கொண்டு புது அலவலகத்தை சிறப்பாக திறந்து வைத்து விட்டு அப்போதே சென்னைக்கு கிளம்பி விட்டான்..

மனம் என்று இல்லாத அளவுக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது…

காரில் செல்லும்போது எல்லாம் மனைவியின் நியாபகம் தான் வந்தது …ஒரு முறை அவள் அவனிடம் சொல்லியிருந்தாள்,சின்ன பிள்ளையில்  எனக்கு COLLECTOR ஆகணும்ன்னு என்று கூறி இருந்தாள், ஒரு வேலை அதற்க்கு தான் படிக்கிறாளோ என்று கூகுள் செய்து பார்த்து அது தான் என்று உறுதி செய்து கொண்டான் …

அப்போ இப்போ தான் madam PRELIMS எழுத போறாங்க போல,தேதியயை பார்த்தான் அது இந்த வாரம் என்று காட்டியது …அதற்க்கு அடுத்து MAINS இருக்கு , அடுத்து interview லாம் இருக்கு என்றும், இதை முடிக்க கண்டிப்பாக ஒரு வருடம் ஆகிவிடும் என்று கணக்கு செய்தவன்,ஒரு முடிவு எடுத்து விட்டான் இந்த ஒரு வருடம் கண்டிப்பாக இங்கு வரவே கூடாது..

என்னை மறுபடியும் ஒருவேளை பார்த்து விட்டால் மிகவும் மனம் வருந்துவாள்…கண்டிப்பா அம்லு ஒரு நாள் என்னோடு உன்னை கூட்டிக்கொண்டு செல்வேன்…என்மேல் உனக்கு எப்போது நம்பிக்கை வருகிறதோ அன்று கண்டிப்பாக நான் உன்னை என்னோடு அழைத்து செல்வேன்…

அம்லு ….என்றவன் போனை எடுத்து பார்த்தான்,அந்த போனின் WALLPAPER ள் இருவரும் சிரித்த முகமாக இருக்கும் ஒரு போட்டோவை தான் வைத்து இருந்தான்…அதை பார்த்தவனுனுக்கு கண்கள் கலங்கியது …

“கனவே உன்னை வந்து சேர

நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்

மரணம் நெருங்கிடும் போதும்

உன் நினைவில் வாழ்ந்திடுவேனே”

 அதோ இதோ என்று அவளின் PRELIMS ரிசல்ட்  வந்தது …அவள் கடினமாக இரவு பகலும் அதில் மூழ்கி PRELIMS CLEAR செய்து விட்டாள்…அவள் தந்தைக்கு இது தெரிந்த ஒன்று தான் ..அவளுக்கு பெரிதாக எதிர்ப்பார்ப்புலாம் ஒன்றும் இல்லை சொன்ன வேலையயை செய்து விட்டாள் அவ்வளவு தான் …

அஞ்சு தங்கம் வாழ்த்துக்கள் டா !!என்றவர் அவளை உச்சி முகர்ந்தார்…அவளின் தாய் அவளுக்கு பிடித்த பால் பாயசம் செய்து எடுத்து வந்து ஊட்டிவிட்டார்…

அஞ்சு அடுத்து MAINS கிளாஸ் JOIN பண்ணு டா சீக்கிரம்..

சரி அப்பா..

அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் இல்லாததயும் பார்த்து கொண்டு தான் இருந்தார்…

அஞ்சு வெளியே எங்கயாவது போலாமா??உனக்கு ஓகேன்ன சொல்லு மா…

சரி பா எங்க போலாம் என்று அவள் ஆர்வமாக கேட்டதும் ,அவளின் தாயும் கிளம்பி சென்றனர்…

அவளுக்கு புத்தகம் என்றாள் அவ்வளவு பிரியம் அதனால் அவர் அவள் புத்தக கண்காட்ச்சிக்கு தான் அழைத்து சென்றார்…

அங்கு சென்றவளின் முகம் அவ்வளவு மகிழ்ச்சியயை காட்டியது…

அவளுக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி கொண்டு இருந்தாள் …

வனிஷா,ப்ரியா ப்ரகாஷ், மல்லிகா மணிவண்ணன்,பத்மா கிரகதுரை,ஸ்ரீகலா,ரம்யா ராஜன்,தமிழ் மதுரா…வழக்கமாக இவர்களின் நாவல்களில் சில நாவல்கள்  இவளுக்கு பைத்தியம் அதில் சில நாவல்ஸ் ,

வனிஷா(இள மனசை தூண்டி விட்டு போறவளே)

பிரியா பிரகாஷ்(உன்னை வெல்வேன் அன்பாலே )

மல்லிகா மணிவண்ணன் (சங்கீத ஜாதி முல்லை )

பத்மா கிரகதுரை (கடற் காற்று )

ஸ்ரீகலா(என்னை மறந்ததேன் என்னுயிரே )

ரம்யா ராஜன்(பனி விழும் சூரியன் )

தமிழ் மதுரா(சித்ரங்கதா)…

இந்த அனைத்து புத்தகங்கலின் மேலும்  அவளுக்கு அவ்வளவு பைத்தியம் என்று தான் சொல்ல வேண்டும்…

அனைத்தயும் எடுத்து கொண்டு வந்தவளின் முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்த தந்தைக்கு,தன் மகளை நினைத்து அவ்வளவு பெருமையாக இருந்தது…தங்களிடம் அவ்வளவு வசதி இருந்தும் அவள் மிகவும் எளிமையாக இருக்கத்தான் ஆசைபடுவாள்..

 சிறு வயதிலிருந்தே அவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று  அவளின் பெற்றோர்கள் எளிமையாக தான்  வளர்த்தார்கள்…இந்த பண்பே அனைவரையும் அவளிடம் இழுத்து விடும்…

அப்பா போலாமா??

போலாம்டா வெளிய சாப்பிட்டு விட்டு போலாமா என்றதும் சரி என்றவளின் முகம் பிரகாசமாக தான் இருந்தது …

பழைய அஞ்சுவை பார்த்தது போல் இருந்தது அவருக்கு…சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவர்கள்,

Good night என்றதும் அப்பா!! உங்க கூட தூங்க வரட்டுமா? என்றதும்…

எங்க romance கெடுக்கலாம்ன்னு பார்க்கிறியா !!என்ற தாயிடம் வழக்கம் போல் சண்டைக்கைக்கு எகிறிய மகளையும், அம்மாவையும் பார்த்தவருக்கு ஒரே சிரிப்பாக இருந்தது…

அடுத்த நான்கு மாதங்கள் அவள் வெறித்தனமாக இரவும் ,பகலும் அப்படி படித்தாள்…அவளின் தாயும், தந்தையும் பிசினஸ் விஷயமாக காலையில் செல்பவர்கள் இரவு தான் வீடு திரும்புவார்கள்..அதுவரை தேவையற்ற எண்ணங்களை தூர வைத்து விட்டு படித்து கொண்டே இருப்பாள் …அவனின் நினைவுகளில் இரவு மட்டுமே மூழ்கி கிடப்பாள்…

அவனை நினைக்காமல் அவள் ஒரு நாள் கூட ஓடியது இல்லை …அவங்க சாப்பிட்டு இருப்பாங்களா? இல்லை பிசினஸ் என்று ஓடிகொண்டே இருப்பாங்களா ??என்னை பத்தி யோசிப்பாங்களா??

அவங்க தான் நான் வேண்டாம்ன்னு முடிவு பண்ணி நமக்கு முன்னவே கிளம்பினாங்க அவங்க எதுக்கு என்னை நினைக்க போறாங்க ??அவங்க காதலியோடு அவங்க நிம்மதியாக இறுகிற அப்போ என்ன எதுக்கு நினைக்க போறாங்க…

மீண்டும் ஏதோ ஒரு சுழலில் சிக்கிகொண்டது போல் இருந்தது அவளுக்கு ..

ஏன் பாவா என்னை காதல்ன்னு ஒரு வார்த்தை சொல்லி ஏமாத்தினிங்க??என்னோடு வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் பொய்யா ??

அவள் தான் வேண்டும் என்றாள் நீங்கள் அவளோடு இருந்துருக்கலாமே எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிங்க என்று அவளுள் பல கேள்விகள்..

அவள் அவனை விட்டு வந்ததற்கு முதல் காரணமே மோனிக்கா தான் என்றாள் அது மிகை இல்லை….

அன்று இரவு அவனின் பட்டி தூங்க வைத்து விட்டு சென்றதும் ,அவளுக்கு அதே நம்பரில் இருந்து அழைப்புவந்தது,

அழததினால் அவளால் கண்களை திறக்க கூட முடியவில்லை…

ஹலோ என்றவளின் குரலில் இருந்த சோகத்தை மோனிக்கா ரசித்தாள்..என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு நீ மட்டும் நன்றாக தூங்குறியா அஞ்சலி..!!

சும்மா உன்கிட்ட விளையாடினேன் அஞ்சலி…உனக்கு நன்றி சொல்ல தான் போன் பண்ணேன் என்று அவள் கூறியதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..

என்ன சொல்ற…

என்னோட பிரகாஷ் எங்கிட்டயே வந்துட்டாரு…

நான் எப்படி நம்புறது என்றதும் அந்த பக்கம் யாரோ அவனது குரலில் பேசினார்கள் …

அவளோடு வாழ்ந்து வாழ்க்கை எனக்கு பிடிக்கல மோனி, உன்ன மாறி என்ன யாராலையும் பாத்துக்கவே முடியாது…அதான் அவளை விட்டுட்டு உன்னோடு வந்துட்டேன் என்று அவன் கூறியதை கேட்டதும் இந்த பக்கம் இருந்த அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை…

அவளது கணவனின் குரலே தான்…அவளிடம் சண்டை இடும்போது கூட அவன் தன்னை வேண்டாம் என்று கூறியது அவளின் நியாபகதிர்க்கு வந்தது…

Ohh இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுது என்று யோசித்தவள், நான் போனை வைக்கிறேன் என்று கூறினாள்..

ஒரு நிமிடம் என்றவள்,இனி நீ பிரகாஷ் பக்கமே வந்து விடாதே என்று கூறிவிட்டு மோனிகா வைத்து விட்டாள்…

இது எல்லாமே இவளின் அப்பா சொல்லி தான் மோனிகா செய்தாள்  ஆனாலும் கொஞ்சம் அதிகமாகவே வேலையயை காட்டி விட்டாள்…யாரோ ஒருவனை வைத்து தான் இப்படி எல்லாம் பேச வைத்தார்கள் …இதை எல்லாம் அவள் புரிந்து கொள்ள கூடிய நிலைமையிலே இல்லை அந்த அளவுக்கு அவளின் மனம் யார் எதை சொன்னாலும் கேட்கும் நிலைமையில் இருந்தது…

கொஞ்சம் இவள் யோசிச்சி இருந்தால் கூட இந்த பிரிவு அவசியம் இல்லத ஒன்று தான்…

மோனிகா போன் செய்யாத வரை அவனை விட்டு பிரிய வேண்டும் என்று அவள் நினைக்கவே இல்லை…

அவன் அன்று அலவலகத்தில் அப்படி கத்தியதர்க்கும் காரணம் உண்டு…அனுமதி கேட்காமல்  இவள் உள்ளே சென்றதால் அவன் கத்தவில்லை …

அன்று தான் அவனுக்கு FOREIGN CLIENT ஒருத்தவங்க வந்தாங்க,வந்த அந்த மனிதனுக்கு ஒரு 45 வயது இருக்கும்…அவன் வந்ததில் இருந்து அஞ்சலியயை பார்த்து கொண்டே இருந்தான் …

பிரகாஷ் அதை கவனித்துவிட்டான்…

EXCUSE ME SIR,WHATS UR NEED ,WHY YOU ARE STARIING THAT SIDE,ANYTHING NEED YOU SIR ..

YES,I NEED SHE…என்று அவன் சொல்லும்போது அவனுக்கு அப்படி கோவம் வந்து அவனை ஓங்கி ஒரு அரை விட்டவன் கத்தி கொண்டு இருந்தான்…

HOW DARE YOU !!SHE IS MY WIFE…சரியாக அந்த நேரம் பார்த்து அஞ்சலி உள்ளே வந்ததும் அவன் அப்படி கத்தி விட்டான்….

இதை இருவரும் பேசி இருந்தாள் இன்று பிரிந்திருக்க வேண்டிய அவசியமா இல்லை ..

எல்லாவற்றையும் யோசித்தவளுக்கு மண்டை வலிப்பது போல் தோன்றியது..கீழே சென்று தன்னுடைய பெற்றோர்களிடம் சிறிது நேரம் பேசியவளுக்கு கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது…

அங்கு அவன் பிசினஸ் மீட்டிங் ஒன்று இருந்தது…அதற்காக  ஆஸ்திரேலியா சென்று கொண்டு இருந்தான் ..அவன் திரும்ப வருவதற்கு ஆறு மாதம் ஆகும் …

FLIGHT ல் செல்லும்போதும் கூட மனைவியின் செல்ல முகமே வந்தது …அன்று கோவிலில் பார்த்தது தான் அதன் பின்பு அவளை பார்க்க அவன் விரும்ப வில்லை..என் காதல் உண்மை என்றாள் கண்டிப்பாக அவள் என்னை வந்து சேர்வாள்..

இப்போது அவள் எனதருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை…

அவளின் நினைவுகளை சுகமாக்கி கொண்டவனால் அவள் ஏன் என்னை விட்டு போகணும்ன்னு நெனச்சா…என்ன பத்தி அவள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா!! அவளை பற்றியே யோசித்து கொண்டு வந்தவன் ஆஸ்திரேலியா வந்து விட்டான்…

பணி நிமித்தமாக தான் வந்து இருந்தான் …கொஞ்ச நாள் தனியாக இருக்க வேண்டும் பெரியவங்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் இவன் இவ்வளவு தூரம் வந்து விட்டான் …தன்னால் தான் அவர்கள் அதிக வேதனையில் இருக்கிறர்கள் என்று இங்கு வந்து விட்டான்…..

அவனுக்கு மட்டும் கடவுள் ஏன் அடுத்தடுத்து சோதனை வைக்கிறார் என்று தெரியவில்லை ..