ஜீப்பில் அமர்ந்திருந்த மாறன் ஸ்டயரிங்கில் தளாம் போட்டபடி விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருக்க, மாறனின் பார்வையில் நெலிந்த விக்ரமன் “ ச்சீ அப்படி பார்க்காதீங்க போங்கள்…” என்று சினுங்கியபடி மாறன் தோளில் குத்தினான்.
அதில் கடுப்பான மாறன் “ சை எருமை ஒழுங்கா பேசு..” என்று முகத்தை சுளிக்கவும்
“என்ன பேசடா, நீ தான் சொல்லணும் என்னன்னு, அத விட்டு என்ன வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தா நான் என்ன சொல்ல “
“ நான் எதுக்கு உன்ன இப்படி பாக்குறன்னு உனக்கு தெரியாதுல்ல..” என்று மாறன் முறைக்கவும், அவனை சமாதானம் செய்யும் விதமாக “ அது மாறா…அவுங்க இந்த ஸ்கூல் டீச்சர் டா “ என்று கேவலமாக சமாளிக்க பார்த்தான்.
“ஓ…ட்ச்சர்ரா டா, நான் கூட அவுங்க தண்ணி கேன் போட வந்தவங்களோ ன்னு நினைச்சேன்டா “ என்று சிரிக்காமல் பேசும் மாறனை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டபடி விக்ரமன்
“ அந்த பொண்ணு பேரு வேதா ஸ்ரீ , இங்க தான் ஒரு வருஷமா டீச்சரா வேலை பாக்குறா “ என்று நிறுத்தி மாறனை பார்க்க, அவனே கையை கட்டியபடி
“ ம்ம்ம் மேல சொல்லு “ என்று சொல்ல, விக்ரமன் எச்சிலை கூட்டி விழுங்கிய படி “ பக்கத்து ஊரு தான் , நல்ல பொண்ணுடா , எனக்கு வேதாவ ரொம்ப பிடிக்கும் “ என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவளை போட்டு மொத்தியிருந்தான் மாறன், அதில்
“டேய்…வலிக்குதுடா….” என்று மாறனை விக்ரமன் தள்ளி விடவும் ,
“நல்ல வலிக்கட்டும் எருமை, நீ பண்ணி வச்ச வேளைக்கு” மீண்டும் அடித்தவன் “ உனக்கு தான் ஒரு பொண்ண பிடிச்சிருக்குலட, அப்பறம் எதுக்குடா என்னை மாட்டிவிட்ட உங்க அம்மா கிட்ட “ என்று விக்ரமனை திட்டினான்.
விக்ரமனோ மாறன் சொல்வது புரியாமல் “ என்ன மாட்டிவிட்டேன்…”என்று கேட்டு முடிக்கவும் , பல்லை கடித்த மாறன்
“ டேய் எருமை, இந்த வேதா பொண்ண, பிடிச்சிருக்குன்னு உங்க அம்மா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானடா, அத விட்டுட்டு அண்ணா நொண்ணான்னு ஏன் என்னயும் சேத்து குழப்பிட்டு இருக்க “
என்று மாறன் பாட்டுக்கு புலம்பி கொண்டே போகவும், விக்ரமன் தலை குனிந்தபடி “ வேதா நம்ம ஆளுங்க இல்ல “ என்று சொன்னதும் மாறன் வாய் பூட்டிக்கொண்டு விக்ரமனை அதிர்ந்து பார்த்தான்.
மாறனின் அதிர்ந்த முகத்தை பார்த்து சலிப்பாக தலை அசைத்தபடி “எங்க அம்மா அப்பாக்கு நான் ஒரே பையன் என் அசைக்காக அவுங்க ஒத்துக்கிட்டாலும்..” என்று விக்ரமன் தலையை பிடிக்க , மாறன் “ நம்ம ஊர் ஒத்துக்காது “ என்று முடித்து வைத்தான்.
“அதுவும் இல்லாம மொழி அவனையும் என்னால விட முடியாது , அத விட வேதாக்கு என்ன பிடிச்சிருக்கான்னு கூட எனக்கு தெரியலடா, அன அவல தாண்டி வேற யாரையும் யோசிக்க முடியல“ என்று சோகமாக பேசிய விக்ரமனின் தோளில் தட்டிக்கொடுத்த மாறன்
“விடுடா பாத்துக்கலாம், எல்லாம் சரியாகும், சரியாகனும் ” என்று விக்ரமனை தோளோடு அனைக்கவும்
“ம்ம்ம்” என்று முனங்கிய விக்ரமனை அப்படிப் பார்க்க ஏதோபோல் இருக்க மாறன் “ ஆமா பக்கத்து ஊரு பொண்ணு கூட எப்படி லவ் அந்த பொண்ண எப்படி தெரியும் “ என்று விக்ரமனை திசைதிருப்ப பேச்சை மாற்ற அதே போல் விக்ரமன் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை பூக்க சொல்ல தொடங்கினான்.
அந்நேரம் பார்த்து மாறனின் பெரியப்பா அவ்வழியே பைக்கில் சென்றவர் எதார்த்தமாக இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு சென்றார்.
இரண்டு வருஷம் முன் காலை சூரியன் பல்லை காட்டிக்கொண்டு இருக்க ஐந்து பேர் கொண்ட அந்த பெண்கள் பட்டாளம் கையில் துணியோடு அந்த தோப்பின் நுழைவு பகுதியில் நின்று கொண்டிருந்தனர் .
அப்போது கையில் உடையுடன் வேதா, கீர்த்தனாவுடன் வேகமாக ஓடி வந்தவள் மூச்சு வாங்க “ சாரிடி காலைல எழத் நேரம் ஆயிடுச்சு “ என்று வேதா கூற ,
கீர்த்தனா “ உன் சாரிய அப்பறமா கேளுடி மதியத்துக்குள்ள குளித்துவிட்டு வரணும்டி, இல்ல தோப்புக்கார தாத்தா அடுத்த வாட்டி விட மாட்டாருடி “ என்று சொல்லியபடி அனைவரையும் அழைத்து கொண்டு சென்றாள்.
பின் அனைவரும் ஒன்றாக அங்கிருந்த தொட்டியில் ஏறி குதித்து விளையாடி குளித்து விட்டு அனைவரும் வீட்டுக்கு செல்ல நடக்க தொடங்கினர் .
அப்போது அந்த சப்போட்டா மரங்கள் சூழ இருந்த அந்த தொப்பின் நடுவில் ஒரு மாமரம் இருந்தது. அதில் மாங்காய்கள் பெரிது பெரிதாக தொங்கி கொண்டிருக்க அதை பார்த்த வேதா,
“எவ்வளவு மாங்கா…” என்று நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியபடி அவள் சொன்ன விதத்தில் அங்கிருந்த அனைவரது கண்ணும் அந்த மரத்தையே வட்டமிட்ட படி இருக்க,
“ ஏய் இங்க பாருங்கடி , நம்ம மதியத்துக்குள்ள குளிக்க மட்டும் தான் சரி சொல்லிருக்காருடி, அத விட்டு வேற எதுவும் கிறுக்குத்தனமா யோசிக்காதீங்க “ என்று கீர்த்தனா கத்திக்கொண்டு இருக்க,
அங்கிருந்த ஒருவர் காதிலும் அது விழவே இல்லை. பின் அனைவரும் சேர்ந்து பிளான் போட்டு வேதாவை மரத்தின் மீது ஏற வைத்து விட்டனர், அவளும் மேலிருந்து மாங்காய்களை பறித்து போட்டுக்கொண்டு இருக்க
“ஏய் வேணாம்டி அந்த தாத்தா வந்தா ஒரு வழி ஆக்கிருவாரு “ என்று கீர்த்தன அவள் பாட்டுக்கு புலம்பியபடி இருந்தாள்.
கீர்த்தன சொன்னது போலவே மதியம் போல அந்த தோப்பை பாதுகாப்பவர் வந்துவிட்டார். ஆனால் அவர் உள்ளே வரவில்லை, வெளியே நின்றபடி “ தம்பி வாங்க வாங்க ஐயா சொன்னாரு தம்பி, நீங்க வருவீங்கன்னு, தோப்பை நீங்களா தம்பி வாங்கப் போறீங்க “
“ முதல்ல உள்ளே போய் ஒரு தடவை எல்லாம் பாத்துட்டு வந்துடுறேன் தாத்தா, அதுக்கு அப்பறம் சொல்றன் “ என்று விக்ரமன் உள்ளே செல்ல போக , “ தம்பி நானும் வரேன் ஒரு நிமிஷம் நில்லுங்க “ என்று அந்த தாத்தா சொல்ல, விக்ரமன்
“பரவாயில்லை தாத்தா நானே போய் பார்த்துட்டு வரேன் நீங்க இங்கயே உட்காருங்க “ என்று அவரை அமர வைத்து விட்டு, விக்ரமன் உள்ளே சென்றான்.
விக்ரமன் வருவதை பார்த்த கீர்த்தனா பயந்து “ ஏ யாரோ வராங்க ஓடுங்கடி “ என்று கத்தியபடி அங்கிருந்த மரத்தின் பின் ஓடி சென்று ஒளிந்து கொள்ள , அவள் ஒளிந்ததை பார்த்து பயந்த அனைவரும் அவளை போலவே கீழே நின்றிருந்த ஒவ்வொரு மரமாக சென்று அதன் பின் ஒளிந்து கொண்டனர்.
வேதாவோ கீழே இறங்க முடியாமல் மரத்திலயே மரத்தை கட்டிக்கொண்டு முகம் தெரியாதபடி நின்றுவிட்டாள். விக்ரமன் தூரத்தில் இருந்து இந்த மாமரத்தை பார்த்துவிட்டு அதன் அருகே சென்றான்.
அருகே செல்ல செல்ல கொழுசு சத்தம் கேட்பது போல இருக்க சுற்றி பார்த்தபடி “ என்ன கொழுசு சத்தம் கேட்குது “ என்று நினைத்தபடி கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது பன்னிரண்டு என்று காட்டவும் விக்ரமன்,
“பேசாம அந்த தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் போலையே “ என்று எண்ணியவன் பின் “ பட்ட பகல்ல ஏன் விக்கி இப்படி பயப்படுற பீ ஸ்டிராங் “ என்று அவனுக்கு அவனே தைரியம் சொன்னபடி அந்த மரத்தை நோக்கி நடந்தான்.
அப்போது மீண்டும் கொழுசு சத்தம் கேட்க விக்ரமன் சுற்றி பார்த்தபடி மரத்தை அண்ணாந்து பார்க்க சரியாக அந்நேரம் பார்த்து காற்று வீச மரத்தின் மீது கருப்பு கலரில் உடை அணிந்து முகம் முழுக்க முடி படர்ந்து இருக்க, ஒர் உருவம் மரத்தை கட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்த விக்ரமன்
“ஐயையோ…பேயி….” என்று கத்தியபடி திரும்பி ஓட போனவன் கால் தடுக்கி கீழே விழுந்து கிடக்க, அவன் போட்ட சத்தத்தில் மறைந்திருந்த பெண்கள் அனைவரும் பயந்து “போயா….” என்று கத்திக்கொண்டு வேகமாக தோப்பை விட்டு ஓடி செல்ல ,அதை வேறு பார்த்த விக்ரமன் “ ஐய்யோ மோகினி பிசாசு..” என்று நெஞ்சை பிடித்து கொண்டு கத்த.
இவற்றை எல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வேதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, வேதா மரத்தில் இருந்து தொப் என்று கீழே குதித்க்கவும் அதையும் பார்த்து “ அம்மா….பேயி….அய்யோ யாரவது காப்பாத்துங்க…” என்று கத்தியபடி பின்னோக்கி கைகளால் தவழ்ந்து சென்றவனை, கீழே குதித்த வேதா அவிழ்ந்திருந்த அவள் முடியை சுற்றி கொண்டையாக போட்டுக்கொண்டே விக்ரமனை பார்த்து வாய் அசைத்து
“பயந்தாங்கொளி “ என்று சொல்லி விட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டாள்.
இதை கேட்ட மாறன் முடியாமல் வாய்விட்டு சிரித்தபடி “ அட பாவி விக்கி பட்ட பகல்ல பெண்ணுகளை பாத்து பயந்திருக்க, என்னாட விக்கி..” என்று வாய் வலிக்க அவன் சிரிக்க,
விக்ரமன் “ டேய்…மாறா சிரிக்காதடா “ என்று சிணுங்கவும், மாறன் கடினப்பட்டு சிரிப்பை நிறுத்தி “ அப்பறம் எப்படி வீட்டுக்கு வந்த “
“வேற எப்படி, தாத்தா ஹெல்போட தான் “
அதை கேட்டு மீண்டும் மாறன் சிரிக்க, அதில் அவனை முறைத்த விக்ரமன் “ என் இடத்துல நீ இருந்திருந்தாலும் அப்படி தான் பயந்திருப்ப, அவ்வளோ அமைதியான தோட்டம் சுத்தி ஆளே இல்ல அப்போனு பாத்து கொலுசு சத்தம் திடீர்னு கருப்பு கலர்ல ஒரு உருவம் மரத்துல இருக்கு, என் இடத்துல யார இருந்தலும் அப்படி தான் பயந்திருப்பாங்கடா “ என்று முறுக்கி கொண்டவனை சமாதானம் செய்யும் விதமாக மாறன்
“சரி விடுடா, விடுடா..” என்று அவன் தோளை தட்டினான்.
அதன் பின் அங்கிருந்த இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.
மாறன் சுற்றி இருக்கும் விவசாயிகளை அழைத்து அடுத்து எந்த பயிர் போடலாம் என்ன மாதிரி அதை பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தான்.
விக்ரமனோ இவர்கள் ஆபீஸ் சென்று இவர்கள் விளைவிக்கும் பொருட்களை எப்படி நேரடியாக மக்களிடம் விற்பனை செய்வது என்று அந்த வேலையை பார்க்க தொடங்கினான்.
இங்கு யாழினி மொழியுடன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவள் மொழிக்கு வேறு உடை மாட்டி விட்டபடி “ மொழிம்மா….” என்று பாசமாக அழைக்க, மொழி
“என்ன அன்னையே…” என்று அவனும் பதிலுக்கு பாசமாக அழைக்க அதில் முறைத்த யாழினி,
“ காலையில உங்க அப்பா கூட என்னலாம் பேசுனடா…” என்று கேட்கவும், மொழி கன்னம் தட்டி யோசித்தவன் யாழினியை குறு குறுவென பார்த்தபடி
“ அம்மா.. தாகமா இருக்கு ம்மா ஜில்லுனு ஐஸ் வாங்கி தரியா “ என்று சமயம் பார்த்து லஞ்சம் கேட்கும் அவள் மகனை மேலும் முறைத்தவள் “உனக்கு மட்டும் தான்டா தாகத்துல தண்ணீருக்கு பதில்லா ஐஸ்கிரீம் கேக்குற”
“ எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டா தான் தாகம் போகுது, அதெல்லாம் உங்களுக்கு தெரியாது ம்மா, இப்போ நீங்க வாங்கி தருவீங்களா மாட்டீங்களா “
“ ம்ம்ம் தரேன்டா “ என்று வேற வழியின்றி ஒத்துக்கொள்ள, மொழி “ குட் மம்மி “ என்று யாழினி கன்னத்தில் முத்தம் தந்தான்.
உடனே யாழினி சிரித்தபடி “ ரொம்ப ஐஸ் வைக்காதடா அதான் வாங்கி தரன்னு சொல்லிட்டேன்ல, இப்பவாது உங்க அப்பா பேசுனத சொல்லுடா “
என்றதும் மொழி கட்டிலில் சம்மணம் போட்டு அமர்ந்தவன் “ அப்பா இந்த சம்மர் ஹாலிடே என் கூட தான் இருப்பாங்களாம் அப்போ பீச், தேட்டர், தீம் பார்க் கூட்டி போறேன்னு சொன்னாங்க “
“அப்பறம்..”
“ம்ம்ம், அப்பறம் ஸ்கூலுக்கு போறேன்னு சொன்னாங்க “
“வேற எதுவும் சொல்லலையாடா “ என்று கன்னத்தில் கை வைத்தபடி யாழினி கேட்க, மொழி “ஆ… எனக்கு புதுசா டீச்சர் அம்மாவ கூட்டிட்டு வர்றேன்னு சொன்னாங்க அவ்வளவு தான் ம்மா “ என்று மொழி கட்டிலில் இருந்து குதித்து ஓடி விட, அதில் அதிர்ந்த யாழினி
“டேய் மொழி இரண்டு அப்பால எந்த அப்பாடா அப்படி சொன்னது “ என்று அவன் பின்னாலேயே துரத்தி சென்றாள்.