பின் இருவரும் நல்ல உணவகத்தில் உண்டுவிட்டு.. அன்னைக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.. மாலை மூன்றுக்கு மேல் இருக்கும் வீடு வரும் போது.

அன்னை உண்ணும் போது.. மகள் கதை பேசிக் கொண்டே இருந்தாள்.. எங்கே சென்றோம்.. என்ன ஏது என விவரம் சொன்னாள்.

வர்ஷினி சிறுது நேரம் உறங்கலாம் என தன் அறைக்கு வந்தாள். உடைகளை மாற்றிக் கொண்டு.. தான் வாங்கிக் கொண்டு வந்த உடைகளை எடுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து குட்டி தூக்கம்.

ஒருமணி நேரத்தில் எழுந்துக் கொண்டாள்.. புது ஊர்.. புது வீடு.. என மனது எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.. போனினை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

சர்வேஷ்ஷிடமிருந்து ஒரு செய்தி “என்னை ஏன் அவாய்ட் பண்ற..” என  வந்திருந்தது.

வர்ஷினிக்கு, முகமே மாறி போனது.. எரிச்சலாக இருந்தது.. அதே நேரம் கண்கள் கசியவும் செய்தது. எதற்கு இப்படி மீண்டும் என்னை தொந்திரவு செய்கிறான்.. என தோன்றியது. துண்டு துண்டான நினைவுகள் அவளை சூழ்ந்தது. அஹ.. எனக்கு நிம்மதியே இருக்காதா.. என எண்ணிக் கொண்டே “ஏன் அவாய்ட் பண்ண கூடாது. எதுக்கு இப்போ இங்க வந்தீங்க.. நீங்க நல்லா இருக்குகேன்னு காட்டத்தானே. சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. ப்ளீஸ் போயிடுங்க.” என மனசாட்சியே இல்லாமல்.. திட்டி செய்தியை அனுப்பினாள்.

உண்டுக் கொண்டே அதை பார்த்துக் கொண்டிருந்தான் சர்வேஷ்.. கண்கள் பளிச்சிடவே செய்தது. ஆனால், வலித்தது மனது.. ‘நான் எங்கடி நல்லா இருக்கேன்..’ என்ற புலம்பலும் அவனுள் எழுந்தது.

தானும் ஒரு செய்தி அனுப்பினான் “இன்னமும் பழசை மறக்கலையா நீ..” என்றான்.

வர்ஷினியிடமிருந்து பதிலில்லை.

வர்ஷினி, இப்போது ராக்கிக்கு போனில் அழைத்தாள்.. ராக்கி “ஹேய்.. என்ன இந்தநேரத்தில்..  வொர்க் இல்லையா” என்றான்.

வர்ஷினி “இன்னமும் டூ டேஸ் இருக்கு.. ஜாயின் செய்ய” என பேசிக் கொண்டிருந்தாள்.

ராக்கி “அப்போ வீட்டுக்கு வா.. இல்லை வெளியே மீட் பண்ணலாமா.. என் பேமிலியை இன்ட்ரோ கொடுக்கிறேன்.. என் வைப்கிட்ட உன்னை பற்றி சொல்லியிருக்கேன்..” என்றான்.

வர்ஷினிக்கு என்ன இது.. என தோன்ற “நான் என்ன ஸ்பெஷல்.. இப்படி வருந்தி வருந்தி கூப்பிடுறீங்க” என்றாள்.

ராக்கி “அஹ.. எங்களோட ஒரே கேர்ள்பிரென்ட் நீங்கதான் மேடம்.. அத்தோட பழைய கதைகளை பேசணும் போலிருக்கு வர்ஷி. இன்னமும் இருபதுநாள்தான்.. திரும்பவும் ஒரு மிஷின்  லைப்.. அதான்.. நீ பிஸின்னா.. ஒகே.. அப்புறம் மீட் பண்ணலாம்” என்றான்.

வர்ஷினிக்கு என்னமோ போலாக “அப்படி இல்ல ராக்கி ப்ரோ.. வரேன்.. ஆனால் ஒருவிஷயம், அதுக்குதான் உங்களை கூப்பிட்டேன்.. அப்படியே டாபிக் எங்கோ போகிடுச்சி” என்றாள்.. தயங்கிய குரலில்.

“ம்.. என்னாச்சு” என்றான் தானும் தயங்கிய நிலையில்.

“இல்ல சர்வா.. முன்போலில்லைதானே.. எப்படி சொல்றது.. சர்வா என்னை பார்க்கனும்ன்னு சொல்றாரு.. எனக்கு எனக்கு ஒருமாதிரி இருக்கு.. அவர் ரொம்ப மாறிட்டார்.. எனக்கு” என்றாள்.. சொல்ல முடியாமல்.

ராக்கி “என்னாச்சு.. பாரேன், அவன் என்ன அவ்வளவு மோசமானவனா.. சொல்லபோனால் பாவப்பட்டவன். அஹ.. எப்படி சொல்றது.. அவனுக்கு யாருமில்ல வர்ஷினி.. நம்ம பிரெண்ட்ஸ்தான். நாங்க இருவரும் ஒரே அப்பார்மென்ட்தான்.. எந்த விஷேஷம்.. நல்லநாள்.. என்றாலும் நாங்கள்தான் அவனின் ஒரே சொந்தம். சும்மா, பழைய ஞாபகத்தில் கூப்பிட்டிருப்பான்.. வேற நீ தப்பாக நினைக்காத” என்றான்.

“அப்போ அவர் வைப்” என்றாள் கேள்வியாக பெண்.

ராக்கி “அஹ.. கல்யாணம் ஆனால்தானே வைப்” என்றான்.

“உமர் சொன்னானே.. இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. முதலில் இவருக்குதான் ஆனது என” என்றாள் ஆவேசமாக.

ராக்கி “அதென்னமோ அப்படிதான். ஆனால், நடக்கலை.. நீ நேரில் வா.. இப்போ நான் கோவில் கிளம்பிட்டு இருக்கேன்.. நாளைக்கு வா.. சீக்கிரம் வந்திடு.. டிபன்னுக்கு வந்திடு.. லொகேஷன் அனுப்பி வைக்கிறேன்..” என சொல்லி அழைப்பினை துண்டித்தான்.

முதல் நொடி அதிருகிறது பெண் மனம்.. படபடவென அதிருகிறது..  அஹ.. கல்யாணம் ஆகவில்லையா.. என. வேணும்.. நல்லா வேணும்.. என வஞ்சமும் கொண்டது இரண்டொரு நொடிகள் சென்று. எதோ ஒரு நிம்மதி.. ம்.. மூச்சு காற்றுக்கும்.. அதை ஏற்றுக் கொள்ளும் இதயத்திற்கும் மட்டும் தட்டுப்படும் ஒரு நிம்மதி.. வார்த்தையால் சொல்ல முடியவில்லை அவளால்.. ஏன் கற்பனையால் கூட.. யூகிக்க முடியவில்லை.. அந்த உணர்வை.. கண்கள் எங்கோ நிலைக்க.. சில்லென்ற மூச்சுகாற்று சூடான இதயத்தில் நுழைவதை உணர்ந்தாள் பெண்.

எந்த காரணங்களையும் தேடவில்லை அவள்.. அந்த இரவில் நிம்மதியாகவே இருந்தாள்.. காலை நேரத்தினை எதிர்பார்த்துக் கொண்டு.

காலையில் வர்ஷினி ஆவலோடு கிளம்பினால் ராக்கேஷ் வீட்டிற்கு. அன்னை தந்தை இருவரும்.. அத்தை வீட்டுக்கு வா என அழைத்தனர்.. “நெக்ஸ்ட் டைம் வரேன் ப்பா.. இவங்க கொஞ்சநாளில் கிளம்பிடுவாங்க.. ப்ளீஸ்” என்றாள்.

நேரமாகவே கிளம்பிவிட்டாள். தந்தை காரெடுத்து கிளம்புவதால்.. தான் டாக்ஸியில் சென்றாள்.

ராக்கி வீட்டில் இன்முகமாக வரவேற்றனர்.. அவனின் அன்னை தந்தை மனைவி பிள்ளை.. என எல்லோரும். 

வர்ஷினி இனிப்பு காரம்.. குழந்தைக்கு என.. விளையாட்டு பொருள் வாங்கி வந்திருந்தாள்..  எல்லாம் எடுத்து கொடுத்தாள்.

ராக்கி “ஏன் வர்ஷி.. போர்மாளிட்டீஸ்” என்றான்.

வர்ஷினி புன்னகைத்துக் கொண்டே அமர்ந்தாள்.. அறிமுகம் செய்து வைத்தான் எல்லோருக்கும் வர்ஷினியை. 

தன் மனைவி மஞ்சரி.. மகன் துருவ்.. தன் பெற்றோர் என எல்லோரையும் வர்ஷினிக்கு அறிமுகப்படுத்தினான். பெரியவர்களோடு சற்று நேரம் பேசத் தொடங்கி.. அப்படியே சிறுவயது கலாட்டாக்கள் என மாறியது பேச்சின் போக்கு.

பெரியவர்கள் பதினோரு மணியாக பேரனை கதை சொல்லி உறங்க வைக்க என தங்களின் அறைக்கு பேரனை கூட்டி சென்றனர். துருவ் மூன்று வயது.. இங்கே இடம் பெரிதாக இருக்கவும் கால்கள் ஓரிடத்தில் நிற்பதில்லை.. ஓட்டம்தான். இது என்ன ஏது.. என தலைகுப்புற கவிழ்த்து ஆராய்ந்து.. பாதி சாமான்களை காலி செய்துக் கொண்டிருக்கிறான் வீட்டில். மீதி சாமான்களை.. ஒழித்து வைத்தனர் பெரியவர்கள்.

வர்ஷினி கதை கேட்க்க தயாரானாள்.

ஆனால், ராக்கி தன் மனைவிடம் சொன்னான் “வர்ஷினி ஆஸ்ட்ரேலியா சிட்டிசென் தெரியுமா” என.

மஞ்சரி “அஹ.. அப்படியா” என்றாள் நம்பாமல்.

வர்ஷினி “ம்.. முன்பு.. இப்போ கேசன் ஆகிருச்சி. நான் இந்தியாவில்தான் பிறந்தேன். அப்பா.. என்னை.. குழந்தையில்லாத.. என் பெரியப்பா.. என் இன்னொரு அப்பாக்கு தத்துக் கொடுத்துட்டாங்க.” என்றாள் கண்ணில் நீரோடு.

ராக்கி “ஹேய்.. சாரி அழாத. நான் விளையாட்டாக சொன்னேன். எனக்கு இதெல்லாம் தெரியாது. எதோ தெரியும் நீ பாரீன் பெண்ணுன்னு, அதான் பழைய கிண்டலில் சொல்லிட்டேன்” என்றான்.

மஞ்சரி “வர்ஷினி கூல்..” என சொல்லி அவளின் கைகளை பற்றிக் கொண்டாள்.

வர்ஷினி “அஹ.. எனக்கு எதுவுமே தெரியாது. என் அம்மா.. அகிலாம்மா.. அவங்கதான் எல்லாம் பார்த்துப்பாங்க. இங்க வந்து.. எனக்கு உண்மையாகவே இவங்கதான் என் அப்பா அம்மான்னு தெரியும் போது.. என்னால் எதையும் ஏற்கவே முடியவில்லை. ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்.. நடுவில்.. இவங்க வேற..” என சொல்லி கண்களை துடைத்துக் கொண்டு ராக்கியை முறைத்து பார்த்தாள்..  புன்னகையோடு.

மஞ்சரி “அஹ.. சூடா காபி தரேன்” என எழுந்து உள்ளே சென்றாள்.

ராக்கி “அஹ.. எங்களுக்கு  தெரியாது வர்ஷி. இங்கேயே செட்டில் ஆக வந்த பாமிலி.. வெல் கோர்த் பாமிலி அப்படின்னு நினைப்போம்.. நீ வேற.. கலரா.. யாரையும் எதற்கும் நிமிர்ந்து கூட பார்க்காமல் போவ வருவ.. அதான் அப்படி ஒரு எண்ணம். உன் அண்ணனும் உன் கூட பேசமாட்டான்.. அக்காவும் பேசி பார்த்ததில்ல.. அப்படியே நினைச்சிட்டோம். ஆனால், நாங்க நன்றாக பேசி பழகும் போது கூட நீ சொல்லவேயில்ல இதையெல்லாம்” என்றான் குறைபடும் குரலில்.

வர்ஷினி இப்போது நன்றாகவே புன்னகைத்தாள்.. “எதுக்கு.. நானே பழசை மறக்க நினைச்சேன் அப்போது.. அதான் சொல்லலை. ஆனாலும் மறக்க முடியலை.. இப்போவெல்லாம் பழகிட்டேன்” என்றாள்.

மஞ்சரி காபியோடு வந்தாள். மூவரும் அதில் கவனமாகினர்.