என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவன் பாட்டி அவனை நகர விடாமல் கேட்டார்… எதும் இல்லை என்று கூறிவிட்டு கோவமாக சென்றான்..
அவனின் ரூமிற்கு சென்று அஞ்சுவை பார்த்தவருக்கு கையில் உயிரே இல்லை,உடனே அவனுக்கு அழைத்தார் அவன் எடுக்கவே இல்லை…உடனே டாக்டர்க்கு அழைத்தார்,
அஞ்சு!! அஞ்சு! என்று அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் தான் எழுந்தாள்…அப்போது சரியாக டாக்டர் வந்து அவளை பார்த்ததும் விஷயம் புரிந்து விட்டது..
“அவளின் குழந்தை களைந்து விட்டது என்று இருவரிடமும் கூறியதும் அஞ்சு ஓடி சென்று ரெஸ்ட் ரூமில் புகுந்தவள் ஷவேரின் கீழ் அமர்ந்தவள் தன் குழந்தை களைந்து செல்வதை பார்த்தவளுக்கு, அவனின் மேல் அவ்வளவு வெறி வந்தது…
என்னோட குழந்தை இப்படி ரத்தமாக செல்கிறதே!! என்று அவள் அதை பார்த்து கதறிய கதறல் வெளியே இருந்த பாட்டிக்கும் கேட்டது…இதை கேள்விபட்டதுமே அவருக்கும் அவ்வளவு கஷ்டமாக இருந்ததும் அவரும் மௌனமாக கண்ணீர் வடித்தார்…
குளித்துவிட்டு வெளியே வந்தவள் அவனோட பாட்டியை அணைத்து கொண்டு கதறினாள்..
“என்னோட குழந்தைய கூட என்னால காப்பாத்திக்க முடியல்லை பாட்டி” என்று கதரியவளுக்கு அவராலும் ஆறுதல் அளிக்க முடியவில்லை…
“அஞ்சு விடு மா பாத்துக்கலாம் என்றவருக்கு அவள் விரக்தியாக ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தாள்..”
அவளை அதட்டி சாப்பாடு கொடுத்து அவளை மடியில் படுக்க வைத்து தலையை கோதியதும் தூங்கி விட்டாள்…
கீழே சென்று அவரின் கணவரிடம் அனைத்தையும் சொல்லி கதறி விட்டார் அவரை அவரின் கணவர் தான் ஆறுதல் அளித்தார் …நம்ம வீட்டு வாரிச நம்மலாலே ஒழுங்கா பாத்துக்க முடியில்லையே என்று இருவருமே கலங்கி விட்டனர்..
அவனை அழைத்து பார்த்தனர் போனை சுவிட்ச் ஆப் செய்து தூக்கி போட்டு விட்டு காரில் பறந்து கொண்டு இருந்தான்….இந்த நிமிடமே என் உயிர் தான் போனால் என்ன என்று காரில் வேகமாக சென்று கொண்டு இருந்தவன் அவனால் அவளின் நினைவுகளில் இருந்து வெளியே வர முடிய வில்லை…அவளின் கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரித்த முகமே அவனுக்கு நியாபகத்துக்கு வந்தது….
இரவு இரண்டு மணிக்கு எழுந்தவள் தன்னுடைய உடைமைகளை மட்டும் எடுத்து கொண்டு அவன் வாங்கி கொடுத்த ஆடைகள்,அவன் கொடுத்த அனைத்து ஆடம்பர பொருள் எல்லாத்தையும் பெட்டில் எடுத்து வைத்தவள்,கழுத்தை தொட்டு பார்த்தவள் கழட்டலாம் என்று தாளியில் கை வைத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…
தன்னுடைய உடையை மட்டும் எடுத்து கொண்டவள்,அவளின் CUBOARD லில் அவனது ஷர்ட் ஒன்று இருந்தது அதை எடுத்து பார்த்தவளுக்கு கண்ணீர் வழிந்தது…பிறகு தன் குழந்தை நியாபகம் வந்ததும் அதை தூக்கி தூர போட்டாள்….
அனைத்தையும் எடுத்தவள்,அவளின் தந்தைக்கு அழைத்து இந்த இடத்தில் இருக்கிறேன் கார் அனுப்புங்க என்று போன் செய்ததும்,பத்து நிமிடத்தில் வந்து விடும் அஞ்சு நீ பத்ரமா வந்துரு!! என்று அவர் கூறியதை அவள் கவனிக்க வில்லை…
ஏற்கனவே அந்த வீட்டை சுற்றி அவர் ஆள் போட்டிருந்தார்…அதனால் பத்து நிமிடத்தில் கார் வந்துவிட்டது…கடைசியாக அந்த ரூமை நோக்கினாள் ,அவர்களின் திருமண புகைப்படத்தை பார்த்தவள்,அந்த புகைப்படத்தின் அருகில் சென்று அந்த புகை படத்தில் தன்னை அவ்வளவு காதலாக பார்க்கும் கணவனை பார்த்தவளுக்கு மறுபடியம் கண்ணீர் வழிந்தது…
பாவா!!!நீங்க ஏன் நல்லவங்களாவும் இல்லாமல், எனக்கு மட்டும் உண்மையாக இல்லாம போனிங்க,உங்க காதல் உண்மையோ இல்லையோ ஆனால் என்னோடைய காதல் உண்மை தான் என்று அந்த புகைப்படத்திருக்கு ஒரு முத்ததை கொடுத்தவள்,நான் போறேன் பாவா!! இனி நீங்க அந்த பொண்ணோட சந்தோசமாக இருங்க என்று எந்த சத்தமும் செய்யாமல் கிளம்பி விட்டாள் …
இவள் காரில் ஏறியதும்,அனைத்தையும் எடுத்த வைத்த டிரைவர் ,
சின்னம்மா எப்படி இருக்கீங்க என்றதும் நல்லா இருக்கேன் அண்ணா, என்று கூறியவள் காரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு,
“உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு போராட்டம்…
ஆறாத உன் நினைப்பு என்னை
கொள்ளட்டும்..
நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா …
உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா”…
அஞ்சலி மா எழுந்திரிங்க வீடு வந்துரிச்சி என்றதும்,நீங்க போங்கன்னா நான் பார்த்துகிறேன்…
இறங்குவதற்கு முன்பு தாலியை மறைத்தவள்,இறங்கியதும் தன் தந்தையம் தாயயும்ம் பார்த்ததும் ஓடி சென்று அணைத்து கொண்டாள்…
எங்களுக்கு ஒரே பொண்ணுடி நீயும் இத்தனை மாசம் எங்களை விட்டுட்டு ஜாலியா HOSTEL இருந்துட்டு இப்போ தான் காலேஜ் முடிஞ்சுதுன்னு வர உன் மேல் கோவமாக இருக்கேன் அஞ்சு என்ற தாயை பார்தவளுக்கும் வேதனையாக இருந்தது …தன்னுடய துயரத்தை மறந்தவள் அவர்களோடு சேர்ந்து சிரித்து கொண்டு இருந்தாள்..
அஞ்சு ரொம்ப இலச்சிட்ட தங்கம் என்ற தந்தைக்கு,நீங்க இனி தினமும் சமையல் செய்து கொடுங்க,நான் சாப்பிட்டு நல்லா குண்டாகுறேன்…
அம்மா !அப்பா !என்னை வீட்டு வாசலிலே பேசி வெச்சி அனுபிருவிங்களா!! உள்ள கூப்பிட மாட்டிங்களா என்றதும் தான் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு வந்தது..
இந்த அரண்மனையோட ராணிடா நீ!! எங்ககிட்ட கேட்டு தாள் உள்ள வருவியா,என்றதும் அவளுக்கு அவனிடம் தினமும் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே சென்றதை நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது..
அவர் தந்தைக்கு எல்லாமும் தெரிந்ததால் அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று நன்றாக தெரிந்து இருந்தது….சீக்கிரம் என் மகளை இந்த சோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தவர்,
“அஞ்சு நீ நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வா பேசலாம்” என்றென்ற தந்தைக்கு,
“ சரி” என்ற பதிலோடு நிறுத்தி விட்டாள்..
ரூமிற்கு சென்று எதுவும் செய்ய தோன்றவில்லை…கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தால் ஆனால் தூங்கவே இல்லை அவனை நினைத்துதும் தூக்கமும் தூர சென்றது…
என்னங்க!! அஞ்சு ஏன் இப்படி இருக்க என்ன அச்சு!!!
அவளோட பிரண்ட்ஸ் எல்லாரையும் விட்டுட்டு வந்துருக்கா அதனால தான் அப்படி இருக்கா என்றதும் அவர் அரை மனதாக ஏற்று கொண்டார்…
ஒரு நல்ல தந்தையாக அவளை பற்றி யோசிக்க ஆரமித்திரிருந்தார்…என்ன செய்து அவளை வெளியே கொண்டு வருவது என்று யோசித்தவர் ஒரு முடிவு செய்து விட்டார்…
அவள் வெளியே செல்லாமல் நம்ம கூடவே வெச்சிக்கணும்…அப்போ அவளை GOVERNMENT எக்ஸாம் படிக்க கோச்சிங் கிளாஸ் JOIN பண்ணி விட வேண்டியது தான்…
அவனை நினைத்து கொண்டு இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை…
தூங்கி எழுந்தவள் நேரத்தை பார்த்தாள் மணி பன்னிரண்டு என்று காட்டியது…எழுந்து சென்று குளித்து விட்டு வந்தவளுக்கு,பேபி ABORTION ஆனதால் அவளால் எதுமே செய்ய முடியவில்லை…அசதியாக இருந்ததும் அம்மாவிற்கு அழைத்தாள்…
என்ன அஞ்சு புதுசா எடுத்துட்டு வரிங்களான்னு கேட்கிற …எடுத்துட்டு வாங்கன்னு சொன்ன எடுத்துட்டு வர போறேன்…
அவளுக்கு பிடித்த சாப்பாடு,சாம்பார்,தயிர் ஜூஸ் எல்லாம் எடுத்து வந்தவர்,அவளுக்கு ஊட்டிவிட்டார்…அவளுக்கு கண்கள் கலங்கியதும் ,
என்ன ஆச்சு அஞ்சு,காரமாக இருக்குதா என்றதும்!!
இல்லை மா வயிறுவலி என்று அவள் கூறியதும் அதை புரிந்தவராக முன்னையே சொல்ல வேண்டியது தான, என்று கீழே சென்றவர் அவளுக்கு தேவையான ஜூஸ்,மெடிசின் எல்லாமே எடுத்து வந்து கொடுத்து அவள் சாப்பிட்டு முடித்ததும்,அவளை தன் மடியில் படுக்க வைத்து தலையயை கோதி விட்டார்…அன்னையின் அணைப்பில் அனைத்தையும் மறந்து சிறு நேரம் மறுபடியும் தூங்கி விட்டாள்…ஒரு வாரம் அவளை சிறிது கூட யோசிக்க விடமல அவளை பூ போல் தாங்கினார்கள்..
அவளை தனியாக விடாமல்,தங்களின் கண் பார்வையிலே அவளை வைத்து கொண்டனர்…நொடிக்கு நூறு வார்த்தை பேசும் தன் மகள் வேறு யார்கிட்டயோ பேசுவது போல் பேசுவது நினைத்த தாய்க்கு வேதனையாக இருந்தது, சிறிது சந்தேகமாகவும் இருந்தது…அந்த ஒரு வாரத்திலே சற்று தேறி விட்டாள் ,அவள் முகமும் சற்று தெளிவாக இருப்பது போல் தோன்றியது அவளின் பெற்றோர்களுக்கு…
இவர்களோடு இருக்கும்போது ஆனந்தமாக இருப்பவள்,ரூமிற்கு சென்றாள் கணவனின் நினைவுகளே வந்து செல்லும்,அவனின் அணைப்பு வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வருவதால் அவளின் பெற்றோர்களோடு அதிகமாக நேரத்தை செலவிட்டாள்…
அந்த நேரம் அவளின் தந்தை கீழே வந்தவர்,தன் மகளை அழைத்து அடுத்து என்ன பண்ண போற என்றதும்,
தெரியைல்லை பா !!என்று சோகமாக பதில் அளித்த மகளை பார்த்தவருக்கு வேதனையாக தான் இருந்தது..
அஞ்சு நீ GOVERNMENT எக்ஸாம் GROUP 1 ட்ரை பண்ணி DEPUTY COLLECTOR ஆக என்ன பண்ணணுமோ அதை பண்ணு …கோச்சிங் கிளாஸ் க்கு வேண்டியதை நானே ARANGE பண்றேன் சரியா என்றதும் அவளுக்கு இது சரி என்று தான் தோன்றியது..
மகளின் புத்தி கூர்மை நன்கு அறிந்து இருந்ததால் தான் இந்த முடிவுக்கு இவர் வந்தார்…ஒரு முறையிலே அவள் கண்டிப்பாக CLEAR செய்து விடுவாள் அதனால் தான் இதை செய்ய சொன்னார் …இந்த தேர்விற்கு அதிகமாக கவனம் செலுத்தினால், அவள் தேவை இல்லாமல் எதை பற்றியும் யோசிக்க மாட்டாள்…முக்கியமாக அந்த பொறுக்கிய மறந்து விடுவாள்..
ஒரு நல்ல தந்தையாக அவர் எடுத்த முடிவு மிகவும் சரி …எல்லாருக்கும் இப்படி ஒரு தந்தை அமைவது இல்லை…
அஞ்சலி இங்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது…பெற்றவர்கள் முன் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும் அவளால் அவனின் நினைவுகளில் இருந்து மட்டும் வெளியே வர முடியவில்லை…என்ன முயன்றும் அவனின் நினைவுகளே அவளை அழ வைத்தது…இரவுகளில் தூக்கத்தை துளைத்தாள்…அவனின் அணைப்பு வேண்டும் என்றே தோன்றியது…
அவளின் தந்தையோ அவனை மறக்க அவளுக்காக அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்.. ஆனால் அவளோ அவனின் நினைவுகளால் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்று அவனை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள்..
அந்த பக்கம் பிரகாஷ் நன்றாக பாரில் சுய நினைவு இல்லாத அளவுக்கு குடித்து கொண்டே இருந்தான்…
நடக்க கூட முடியாமல் தள்ளாடி கொண்டு காரை எடுத்து கொண்டு வீடு செல்லலாமா என்று யோசித்தவன் அது முடியாது அங்கே சென்றால்,அவளின் நினைவுகள் தன்னை அழித்துவிடும் என்று யோசித்தவன் கடற்கரை நோக்கி சென்றான்…
இந்த கடற்கரைக்கு அவன் வந்ததிற்கும் ஒரு காரணம் உண்டு…அவளுக்கு மிகவும் பிடித்த கடற்கரை…அன்று அவளோடு வந்த அப்போ அவளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை பார்த்தான்..ஆனால் இன்று அவள் இல்லாமல் இந்த கடற்கரையை பார்பதற்கு அவனுக்கு கண்கள் கலங்கியது..
என்னை ஏண்டி விட்டுட்டு போன நான் தப்பு பண்ணேன் தான் ..அதுக்குன்ன என்னை விட்டுட்டு போயிடுவியா அதும் எங்கிட்ட ஒரு வாரைத்தை கூட சொல்லாமல் போய்ட்ட..இதுக்கு நீ என்னை மொத்தமாக கொன்னுட்டு போயிருக்கலாம் டி …நீ இல்லாம என்னால எப்படி வாழ முடியும்..
“சீக்கிரம் எங்கிட்ட வா அம்முலு” என்று அவன் கடற்கரயயை பார்த்து கத்தினான்..மறுமனமோ என்னிடமே சொல்லாமல் போனவளை பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும் ஒருவாரம் ஆகிவிட்டது அவள் என்னை பிரிந்து சென்று,
ஒரு வாரத்திருக்கு முன்பு,
இவள் மேல் இருட்த கோவத்தில் இரண்டு நாள் இவன் வீட்டுக்கு வரவே இல்லை ..போனை எல்லாம் சுவிட்ச் ஆப் செய்து போட்டிருந்தான்…அவள் மேல் கோவம் குறைந்ததும் போனை ON செய்தவன்,அவளுக்கு தான் முதலில் அழைத்தான் ஆனால் நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்தது…
ஹோட்டல்லில் இருந்து வந்தவன் காரை எடுத்துகொண்டு வீட்டை நோக்கி சென்றான்….அங்கே செல்வதற்குள் அவன் மனம் அவனிடமே இல்லை என்ன முயன்றும் அவனால் அழுகயயை அடக்க முடியவில்லை ..
உள்ளே அவசரமாக வந்த பேரனை பார்த்த இருவருக்கும் அவ்வளவு வேதனையாக இருந்தது…முகம் எல்லாம் சோர்ந்து போய்,சவரம் செய்யாமல் தாடி எல்லாம் இருந்தது,ஆடை எல்லாம் கசங்கி போய் இருந்தது…
சிறு அழுக்கு பட்டால் கூட தூக்கி போட்டுவிட்டு வேறு உடை அணிபவன் இன்று இந்த கோலத்தில் இருக்கிறானே!!என்று மனம் வேதனையாக இருந்ததும் …
அதும் பேத்தி சொல்லாமல் கூட எங்கோ சென்று விட்டதை அறிந்தாள் என்ன ஆகுவனோ என்று,மாடிக்கு செல்லும் பேரனையே பார்த்து கொண்டு இருந்தார்…
அவன் ரூமிற்கு உள்ளே சென்று பார்த்த போது அவன் நினைத்தது போல் அவள் அங்கு இல்லை…அவன் அவளுக்காக வாங்கி கொடுத்த ஒரு பொருள் கூட விடாமல் அனைத்தயும் பெட்டில் கிடந்தது,அவனுக்கு மனதில் பயம் வந்தது…எத்தனையோ BUSINESS செய்யும் ஆளுகளை எல்லாம் ஒற்றை பார்வையிலே அடக்கி விடுவான் ஆனால் இன்றோ??
அஞ்சு என்றவனுக்கு வாயில் வார்த்தையே வரவில்லை…
கொஞ்சம் தைரியம் வர பெற்றவனாக எல்லா இடத்திலும் தேடியவன்,அவள் இல்லாததை அவனால் தாங்கி கொள்ள முடியாமல்,
Anjuu!!என்று வேகமாக கத்தினான்,
இவன் கத்தியதும் மேலே வந்த பெரியவர்களுக்கும் அவனின் அழுத தோற்றத்தை பார்த்தவர்களுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை …
எனக்கும் தெரியல கண்ணு..சாப்பிட வெச்சி தூங்க வைத்து விட்டு தான் சென்றேன் ஆனால் எப்போ கிளம்பி போனாள் என்று தெரியவில்லை …எங்கிட்டயும் அவள் எதுமே சொல்லவில்லை…போன் கூட செய்து பார்த்தேன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது என்று அவரும் அழுகையில் கரைந்தார் …
அவ என்னை விட்டு போய்ட்டா பாட்டி…எல்லாமே என்னால தான் என்று அவனும் தலையில் அடித்து கொண்டு அழுதான்…அழும் அவனை எப்படி சமாளிக்கிறது என்று அவர்களுக்கும் தெரியவில்லை…
அழாத கண்ணு…எவ்வளோ டெக்னாலஜி இருக்கு அவளை கண்டுபிடிக்கலாம் என்றதும் ,
அவன் “வேண்டாம்” என்று விட்டான்..
என்ன பிரகாஷ் சொல்ற! என்ற இருவருக்குமே அதிசயமாக இருந்தது..
அவ என்னை பிடிக்காம போய்ட்டா இனி எனக்கும் அவ வேண்டாம் பாட்டி…அவளாவது நிம்மதியா இருக்கட்டும் விடுங்க பாட்டி …
அப்போ நீ!!!
எனக்கு எந்த குடுப்பனையும் இல்லையே!!யாருமே என்னோடு கடைசி வரை வர மாட்டங்கன்னு நல்ல தெரிஞ்சி போச்சே…
அவ உன் மேல இருந்த கோவத்துல போகலடா என்றதும்,அவனோ
என்ன பாட்டி சொல்றிங்க…
அவளுக்கு குழந்தை ABORTION ஆகிரிச்சி கண்ணு..நீ சென்றதும் அவள் பெட்டில் வயிற்ரை பிடித்துகொண்டு கத்தியதில் இருந்து அனைத்தையும் அவர்கள் கூறியதும் தான் அவனுக்கு அது புரியவே வந்தது.
என்ன பாட்டி சொல்றிங்க !!!!அவ PREGNANT ஆக இருந்தாளா??