அத்தியாயம் 28:

அதிகாலையிலே எழுந்த பிரகாஷ் மனைவியின் பூ முகத்தில் தான் விழித்தான்…அவன் இரவு முழுவதும் செய்த தொல்லையினால் களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு இன்னும் அவள் மேல் எழுந்த தாபத்தை குறைக்க முடியவில்லை ஆனால் அவளின் பூந்தேகம் தாங்காது என்று அவளை தூங்க வைத்து  விட்டான்….

அவள் இன்னும் அவனின்  அணைப்பில் தான் இருந்தாள்…அவளின் முகத்தில் விழுந்த முடிகற்றைகளை ஒதுக்கி  விட்டு, அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டான்…பின்பு அவனின்  வழக்கமான உடற்பயிற்சி செய்ய கிளம்பி விட்டான் அதை முடித்து விட்டு வரும்போதும் மனைவி உறங்கியதை பார்த்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் அலுவலகத்திற்கு ரெடி ஆக கிளம்பி விட்டான்….

அவன் அவளிடம் சொல்லி விட்டு செல்லலாம்ன்னு அவளின் அருகில் வந்து,

அம்முலு!! நான் கிளம்பறேன் என்றவனுக்கு, தூக்கத்துலையே சரி என்றவளை பார்த்தவனுக்கு மறுபடியும் தாபமாக தான் இருந்தது…இதற்க்கு மேல் இங்கு இருந்தாள் வேலைக்கு ஆகாது என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு தன் கடமையை நோக்கி சென்று விட்டான்…

உடல் அசதியில் அவளால் எழவே முடியவில்லை..ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்தவளுக்கு கணவனின் அணைப்பு வேண்டும் என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது …இரவு முழுவதும் அவனின் மென்மையில் மதி மயங்கி தான் இருந்தாள் ..

குளித்துவிட்டு வந்து சாமி கும்பிட்டு பூசை அறையில் விளக்கேற்றி விட்டு வந்த பேத்தியின் முகத்தில் தெரிந்த  வெட்க்க சாயல் சொல்லாமல் சொல்லியது அவளது சந்தோசத்தை…

பாட்டி என்று தன்னை கட்டிகொண்ட பேத்தியயை வாஞ்சையுடன் அனைத்து கொண்டார்..

அவளுக்கு பூ வைத்து விட்டு,சாப்பிட தோசை ஊற்றி கொடுத்தார் ..

பாட்டி மதியம்  அலுவலகத்திற்கு கிளம்பிறேன் என்றவளை, அவர் ஏன் என்று கேட்க்க வில்லை சின்ன சிறுசுங்க என்று அதை கேட்கவில்லை…

அவளோ அன்று நான் அலுவலகத்தில் வரேன் என்று கூறிய பிறகு தானே என்னை திருமணம் செய்ய ஒத்துகொண்டார் அதனால் அந்த வேலையை வாக்கு மாறாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் …

ஆனால், அவனுக்கு அவள் மேல் இருந்த அக்கரையில் தான் அவன் கூறினான் என்பதை மறந்து விட்டாள்…

அவளுக்கு அந்நேரம்  வாழ்க்கை ஏதோ பண்ட மாற்று முறை என்பது போல் தான் நினைத்து கொண்டாள்…

பிரகாஷ் இப்போது சமையலுக்கு ஒரு ஆளை வேலைக்கு போட்டு இருந்தான் …இருந்தாலும் மதியத்திற்கு தேவயான  சமையலை அவளே முடித்து எடுத்து கொண்டு அலவலகத்திற்கு காரில் செல்லும்போது அவள் தந்தை அழைத்து இருந்தார்…

சொல்லுங்க அப்பா..அஞ்சு எப்படிடா இருக்க எப்போ ஊருக்கு வர  போற என்று கேட்டவருக்கு வரேன்பா சீக்கிரம்…ஒரு COURSE முடிக்கணும்பா அதை முடித்ததும் வந்து விடுகிறேன் என்று கூறியவள், அவரின் குரலில் இருந்த மாற்றத்தை அவள் கண்டுபிடிக்க தவறினாள் ….

அலுவலகத்திற்கு சென்ற அவளை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர் …அஞ்சலி madam உங்களுக்கும், அவருக்கும் அப்படி ஒரு பொருத்தம் இந்த SINCERITY ல என்று கூறியதும் அதை சிரித்துக்கொண்டே ஆமோதித்தவள்…

வழக்கத்தை விட அவள் ரொம்ப அழகாக தான் இருந்தாள் புது பெண் என்பதாலோ, இல்லை அவனின் நினைப்பில் இருந்ததலோ பார்பவர்களுக்கே பொறாமை வரும் அளவுக்கு அழகாக இருந்தாள்…

இவள் வந்த நேரம் சரியாக இரண்டு மணி அவனின் மேனேஜர் கிட்ட சென்று, உள்ளே போகலாமா என்று கேட்டவளை பார்த்தவனுக்கும் இது கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது…

இருங்க mam கேட்கிறேன்..

ஓகே சார் என்றவள்..

அவர்  கேட்கும் வரை சும்மாக இருந்தாள் சரி வரது என்று யோசித்தவள் நேரத்தை கணித்து பிரிக் manufactured பண்ற இடத்தை நோக்கி சென்றாள்.

அங்கு அவளை பார்த்தவர்கள் மரியாதை நிமித்தமாக வணக்கம் கூறிவிட்டு வேலையயை  நன்றாக தான் பார்த்து கொண்டனர் …அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியரின் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அந்த குழந்தையாய தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்தவளுக்கு தனக்கும் இப்படி குழந்தை வேண்டும் என்ற எண்ணம்  மனதில் வந்தது..

அந்த குழந்தை மேல் இருந்து வந்த பால் வாசம்,அது பொக்க வாயை காட்டி,பெரிய கண்களை உருட்டி விளையாடியதை பார்த்தவளுக்கும் குழந்தை மேல் ஏக்கம் அதிகமாக வந்தது..

சரியாக அந்நேரம் பிரகாஷ் உள்ளே வந்தான்..ஒரு பேபியே ஒரு பேபியா கொஞ்சுது பார்றா என்றவன் அவளின் முகத்தில் இருந்த ஏக்கத்தை கவனிக்க மறந்தான்..

அஞ்சு வேலை லாம் சரியாக போகுதா பார்த்தியா என்றதும்,

தலையயை  ஆட்டினாள்..

சரி அஞ்சு கிளம்பு சாப்பிட போலாம் என்றவன் அவளை அழைத்து சென்று  சாப்பிட வைத்தான்…சாப்பிடும்போது அவளையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு,

 “என்ன” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்..

“அஞ்சு இங்க வாயேன்” என்று பார்வையால் அழைத்தவன்,அவளை மடியில் அமர வைத்து அவளுக்கும் ஊட்டிவிட்டுட்டு தானும் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளை மடியிலே அமர்த்தி கொண்டான்..

அஞ்சு என்றவனுக்கு,

ம் சொல்லுங்க …

வீட்டுக்கு போலாமா? என்றவனை அதிசயமாக பார்த்தாள்…

சும்மாவே உன்மேல் நான் பைத்தியமா சுத்துறேன் இதுல நீ வேற இப்படி பார்த்தால் நான் என்ன தாண்டி செய்றது என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்…

அது என்னடி அஞ்சு உன் மேல் மட்டும் ஒரு பிரத்யேக நறுமணம் வந்து ஆள கொல்லுதுடி..

அவன் பேச பேச அவள் சிறு வெட்கத்தோடு இருந்தாள்…

வீட்டுக்கு போலாமா என்று அவன் சும்மா தான் கேட்டேன் anjuu…

அவன் சும்மா தான் என்று கூறியதற்கு,அவள் ohh என்ற பதிலோடு நிறுத்தி கொண்டாள்..

அவனை பொறுத்தவரை, அவள் அவனை புரிந்து கொண்டு தான் தன்னுடன் இருக்கிறாள் என்று அவன் நினைத்து கொண்டு இருந்தான் ஆனால் அவன் கவனிக்காத ஒன்று இருக்கிறது..

அவளுக்கும் அவனோடு தனியாக இருக்கும்  வேண்டும் எல்லா பெண்களை போல் தானும் குழந்தை குடும்பம் என்ற வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று தான் இந்த சிறு பெண்ணிற்கு ஆசை…

ஆனால், இவனோ பிசினஸ் தான் என்னோடைய உயிர் மூச்சு என்று இருக்கும் தன்  கணவன் மேல் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் வர ஆரமித்திருந்தது…

இன்றே தன்னோடு இல்லாதவன்,பிரசவ வலியில்  மட்டும் தன்னோடு இருக்க போறனா என்ன? என்று மனம் சற்று வருத்தத்தை  தத்தெடுத்தது…

இவளாக சென்று அவனிடம் என்னோடு கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என்று கேட்டு இருக்கணும் இல்லை அவனாவது இவளை நன்றாக கவனித்து இருக்கணும்…இது எதுவுமே இல்லாததால் அவளின் இந்த கோபம் கொஞ்ச நாளில் விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் இருக்கும் கொஞ்ச நூலிழை தான்  என்று புரியும்போது இருவருக்குமே இந்த கல்யாண  வாழ்க்கை அவசியமா என்று தான் தோன்றுமோ?…

வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்லும்போது கண்ணை மூடி கொண்டு ஏதோ ஏதோ யோசித்தவளை ஒரு கை அனைத்து இருந்தது…

இந்த சின்ன மூளை அப்படி என்ன தாண்டி யோசிக்குது என்று கூறும்போதே கணவனின் அணைப்பில் தான் எப்போதும் வந்தோம் என்று தெரியவில்லை,அவனின் கைகள் செய்த மாயஜலத்தில் அவனிடமே உருகி குழைந்தாள்…

கல்யாணம் ஆகி பத்து நாளும் அவளை யோசிக்க கூட விடாமல் காலையில் அலுவலகத்திலும்,இரவில் அவனின் அணைப்பிலும் தன்னுடைய கட்டுக்குள்ளே வைத்திருந்தான்…

காலையில் தனக்கு முன் எழுந்தவள்,குளித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி தயாராகி இருந்தவளை அவன் ஆச்சர்யமாக பார்த்தான்..

என்ன அஞ்சு அதிசயம்!! எனக்கு முன்னாடி வந்து கீழ வெயிட் பண்ற அப்போ night நான் உன்னை அதிகமாக DISTURB பண்ணல போல அப்படித்தான என்றவனுக்கு,

ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள்…

எப்போதுமே தன்னோடு வாய்க்கு வாய் பேசுபவள் இப்போது கொஞ்ச நாளாக பேச்சை குறைத்து  கொண்டவளை அவன் கவனிக்க தவறியது அவனின் விதி…

அவனின் பாட்டி அப்போது தான் வந்தார் என்ன ஆச்சு அஞ்சு முகம்லாம் சோர்ந்த  மாறி இருக்கு என்றதற்கும் அவள் சிரிப்பையே பதிலாக கொடுத்ததும்  வேறு மாறி எடுத்து கொண்டு சிரித்துக்கொண்டே சென்று விட்டார்..

அலுவலகத்திற்கு செல்லும் வரை அவள் ஏதும் பேச வில்லை..

அவனோ, மேனேஜர் க்கு போன் செய்து இன்னைக்கு முக்கியமான FOREIGN CLIENT வராங்க அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் சரியாக செய்து விடு எந்த ஒரு குறையும் அவர்கள் கூறி விட கூடாது அந்த அளவுக்கு பாத்துகோங்க சரியா என்று பேசி கொண்டே அலுவலகத்திற்கு நுழைந்ததும் அவள் DESIGNING வொர்க்ல கரெக்டின்ஸ்லாம் சரி பார்த்து கொள்ள கிளம்பி விட்டாள், அவன் மீட்டிங் எல்லாம் பார்க்க சென்று விட்டான்…

வழக்கத்தை விட இன்று PERIODS PAIN அதிகமாக இருப்பது போல் தோன்றியது அவள் முகத்தில் அப்படி ஒரு களைப்பு தெரிந்தது…இந்த வேலையை முடித்தவள் வழக்கம் போல் பிரிக் factory க்கு போயிட்டு வேலை எல்லாம் சரியாக தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு,இதற்க்கு மேல் முடியாது என்று முடிவு செய்தவள்,அவனிடம் சொல்லிவிட்டு வீடு சென்று விடலாம் என்று எண்ணி வழக்கம் போல் மேனேஜர் கிட்ட கேட்டு விட்டு அவனிடம் சென்று நின்றாள்..

நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்றவளை அவன் வித்யாசமாக பார்த்தான்…வேலை எல்லாம் அப்படியே இருக்கு அஞ்சு எங்க கிளம்பறேன்னு சொல்ற,என்றவனுக்கு எந்த பதிலயும் அளிக்காமல் அவள் வெளியே சென்று விட்டாள்…

அவள் இப்படி ஏதும் சொல்லாமல் போவதை பார்த்தவனுக்கு என்னவோ போல் இருந்தது …தான் அப்படி என்ன தவறாக கேட்டு விட்டோம் என்று இவள் இப்படி செல்கிறாள் என்று தான் தோன்றியது…

அவன் அலுவலத்தின் மேலிருந்து அவள் காறை  கிளப்பி கொண்டு செல்லும்வரை பார்த்து கொண்டுதான் இருந்தான்..அதன் பிறகு அவன் வேலை அவனை  இழுத்து கொண்டது..

காரில் செல்லும்போது அவளுக்கு அழுகை வெடித்தது…அவள் கண்களை துடைக்க துடைக்க அழுகை நிற்பேனா என்றது…இன்றோடு அவன் வீட்டுக்கு அவள் வந்து முழுதாக ஒரு மாதம் ஆகியது..

இந்த மாறி நேரத்தில் அவளின் தாய் அப்படி கவனித்து கொள்வார்..இவ்வளவு நாள் காதலனின் நினைவிலே இருந்தவளுக்கு அவர்களின் நியாபகம் துளியும் வரவில்லை ஆனால் தனக்கு மிகவும் மன வேதனையாக இருந்ததும் தாய் தந்தையின் நினைவு வந்து அவளை இன்னும் வலியில் ஆழ்த்தியது..

தான் எடுத்த முடிவு மிகவும் தவறு தான் போல என்று அழுகையிலே கரைந்தாள்…பிறகு  தன் அழுகையை துடைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ..

என்ன ஆச்சு அஞ்சு! இந்த நேரத்தில் வந்துருக்க என்றதுக்கு வயிறு ரொம்ப வலிக்குது பாட்டி அதான் வந்துட்டேன் என்றவளுக்கு என்ன முயன்றும் அழகை வந்து விட்டது…

இதுக்கு ஏன்டா அழுகுற என்று அவளுக்கு ஒரு கசாயம் வைத்து கொடுத்தார்…அதன் பிறகு அவளை சாப்பிட வைத்தவர் அவள் மடியிலே சிறு நேரம் படுத்து கொண்டாள்…அப்போதும் அவளின் தாய் நியாபகம் வந்தது…

தனக்கு முடியவில்லை என்றாள் அனைத்து வேலைகளையும்  தூக்கி போட்டுவிட்டு அவளின் தாயும் தந்தையும் அவளை அப்படி தாங்குவார்கள் ..அவர்களின் ஒரே செல்ல பெண் என்பதால்,அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள்…

ஆனால் தன் கணவன் அப்படி ஏன் இல்லை என்ற கேள்வி அவளுக்கு உடலின் வலியை விட மனதில் வலி அதிகமாக தோன்ற ,ரூமிற்கு சென்று குளித்துவிட்டு படுத்து கொண்டாள்..அழுது கொண்டே இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை…