அதோ இதோ என்று இவர்களின் கல்யாண நாளும் வந்து விட்டது…
பெரிதாக யாரையும் கூப்பிடவில்லை…இவனின் தாத்தா பாட்டி மற்றும் கம்பனில வேலை செய்த அலுவலர்கள் மட்டும் வருகை தந்தனர்..மிக எளிமையாகவும் மிக அழகாகவும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு இவர்களின் திருமணத்தை நடத்தினர்… இந்த கடற்கரை திருமணத்தில் சிறப்பு என்னவென்றால் காலடியிடில் மணல்,அலைகளின் ஓசை,காற்று மற்றும் கடற்கரையின் பின்னணி , ரோஜா பூக்களால் அளங்கரிக்கப்பட்ட மலர் மாலைகள் என்று இந்த திருமணம் அவ்வளவு அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது…
பொதுவாக கடற்கரை திருமணம் எனபது இயற்கை அழகையும் ,எளிமையையும் ,கொண்டாட்டத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு அற்புதமான திருமண எற்பாடு ஆகும்…
தெலுகு முறை கல்யாணத்தில் கல்யாண நாள் அன்று “மங்கள ஸ்நாணம்” என்ற குளியலை மணபெண்ணிக்கும்,மணமகனுக்கும் நல்ல நேரம் பார்த்து குளியலுக்கு அழைத்து சென்று அதை முடித்துவிட்டு முதல் ஜோடி ஆடைகளை அணிந்து பின்னர் மற்ற சடங்குகளை மேற்கொள்வார்கள்….
இதை முடித்துவிட்டு மணமகன் கணபதி பூஜை மேற்கொள்வார் அதை அடுத்து மணப்பெண் கெளரி பூஜை மேற்கொள்வார்கள் இது எதற்காக என்றால் கடவுளின் ஆசிர்வதங்களை பெறுவதற்காகவும்,நன்மை தீமை எல்லாம் வென்று இந்த மன வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதற்காக தான் இந்த பூஜை மேற்கொள்கிறார்கள்…
மணமகன் அவர் அறையில் இருந்து ரெடி ஆகி வந்ததும் அனைவருமே அவனை தான் வைத்த கான் வாங்காமல் பார்த்தனர்…வழக்கத்தை விட அவன் அவ்வளவு அழகாக இருந்தான் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம் இருந்தது…
அடுத்து அஞ்சலி அவர்களின் முறைப்படி வெள்ளை நிற புடவை அதன் சரிகை ரோஸ் நிறத்தில் இருந்தது அதற்க்கு ஏற்றார் போல் ரோஸ் நிற blouse அணிந்திருந்தாள்…நீண்ட முடியை அழகாக பின்னி அவளின் முடியையை மலர்களால் அலங்கரித்து,அவர்களின் முறைப்படி பொட்டு வைத்து,மிதமான நகைகளோடு அவள் சிரித்த் முகத்தோடு மேடைக்கு வந்ததும் பிரகாஷ் க்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது….அவன் கண்ணில் நீர் கோர்த்தது அதை மறைக்க அவன் பெரும்பாடு பட்டான் அதை அனைவருமே பார்த்தனர்…நம்ம சிடுமூஞ்சி சார்க்கு அழ கூட தெரியுமா!!! என்று தான் அந்நேரம் அனைவருக்கும் தோன்றியது …அந்த ஜோடி பொருத்ததை வார்த்தைகளால் விவரிக்கவே முடியவில்லை யாராலும் அவ்வளவு அழகாக இருந்தனர்…
இவர்கள் இருவரும் வந்ததும் தேங்காயில் தாலியை வைத்து ஆசிர்வாதம் வாங்க மஞ்சள் தடவிய அரிசியை அனைவரிடம் கொடுத்து,அய்யர் அவனிடம் முழுவதும் கருப்பு மணிகளால் கோர்க்கப்பட்டு, இரண்டு பொட்டு போல் வட்டமாக இருந்த தங்க மாங்கல்யத்தை அவளின் கழுத்தில் பூட்டினான்… அதன் பிறகு அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து,அவளின் காலில் மெட்டியை போட்டு அஞ்சலியையை தன்னவளாக்கி கொண்டான் …அவளுக்கு கண்ணில் நீர் வழிந்தது அதை பார்த்தவன்,
“இனி நீ அழவே மாட்ட அஞ்சு உன்ன அவ்வளவு நன்றாக பார்த்து கொள்வேன் என் ஆயள் வரை என்று அவளிடம் வாக்களித்தான்”
திருமணம் முடிந்து அனைவரும் வாழ்த்துக்கள் கூறி எல்லாருடனும் புகைப்படத்தை எடுத்து கொண்டனர்..
இவர்கள் இருவரையும் கேமரா அவ்வளவு அழகாக புகைப்படம் எடுத்து கொண்டது..
அனைவருமே இவர்களை MADE FOR EACH OTHER என்று வாழ்த்தி விட்டு தான் சென்றனர்..அவனின் அலுவலகத்தில் வேலை செய்யும் பாதி அலுவலர்கள் அஞ்சுவிற்காக தான் வந்தனர் என்றாள் மிகை இல்லை ஏனென்றால் இவள் அவர்களை நேரில் சென்று அழைப்பு கொடுத்தாள்…
அனைத்தையும் முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்…பெரியவர்களை வேறு ஒரு காரில் அனுப்பி வைத்து விட்டு இவர்கள் இருவரும் ஒரு காரில் வந்தனர்…இவள் தான் டிரைவ் செய்து கொண்டு வந்தாள் அவனுக்கு ஒரே உறக்கம் தள்ளியது…வீட்டிற்கு வந்ததும் இருவரையும் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்து அவனின் பாட்டியே பல சடங்குகளை செய்து முடிக்கும்போது மணி எட்டை தாண்டியது..அவன் அனைத்தையும் முடித்துக்கொண்டு போய் உறங்கி விட்டான்…
அஞ்சுவை பாட்டி ஒன்பது மணிக்கு உள்ளே அனுப்பும்போது சீக்கிரம் ஒரு கொள்ளு பேரனையோ, பேத்தியோ பெத்து கொடுத்துரு என்றதும் அவளுக்கு ஒரு வெட்கமாக வந்தது…
அவள் உள்ளே செல்லும்போது அவன் எழுந்து முகத்தை கழுவி விட்டு போனை பார்த்து கொண்டு இருந்தான்…அவள் உள்ளே வரும்போதே அவன் அவளை கவனித்து விட்டான் ஆனாலும் அவளை கண்டுக்காமல், போனையே பார்த்து கொண்டு இருந்தான்…
அவன் அப்படி போன் நோண்டுவதை பார்த்தவளுக்கு அப்படி ஒரு கோவம் வந்து அவனின் அருகில் வேகமாக சென்று, அந்த போனை எடுத்து தூர போட்டு விட்டு அவனின் மடியில் அமர்ந்து கொண்டாள்…
அதான பார்த்தேன் அஞ்சு குட்டிக்கு வெட்கம்ன்னா என்னனு கிளாஸ் தான் எடுக்கணும் எடுத்தாலும் நீ FAIL தான் என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நான் எதுக்கு வெட்க்க படனும் நீங்க வெட்க்க படுங்க என்று புது அகராதி எழுதியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது…”
மேலிடம் சொன்னா கேட்க்க வேண்டியது தான் என்றவனை பார்த்து அழகாக சிரித்தாள்..
அது எல்லாம் இருக்கட்டும் அஞ்சு,என்னோட கால்ல நீ விழவே இல்லை,வா வந்து விழு என்றவனை கன்னத்திலே வழக்கத்தை விட அதிகமாக கடித்தாள் ..
“அம்மா” என்று கத்தியவனை ரொம்ப சாதாரணமாக அமைதியா இருங்க என்று அதட்டினாள்…
சும்மாவே அதட்டுவ இதுல இனி என்னோட பொண்டாட்டி வேற சொல்லவா வேணும்..
அதெல்லாம் இருக்கட்டும் பாவா என்றவள் காலை பிடித்து கொண்டு சிணுங்கினாள்…
என்ன ஆச்சு !! என்றவன் அவள் காலை தன் மடியின் மேல் எடுத்து வைத்து பார்க்கும்போது தான் புரிந்தது இன்று ரொம்ப நேரம் நின்று கொண்டு இருந்ததால் கால் எல்லாம் வீங்கி ரத்தம் கட்டி இருந்தது…அவளுக்கு oinment எடுத்து போட்டு விட்டவன் எதுமே சொல்ல மாட்டியாடி? என்றவனை சிரிப்போடு பார்த்துகொண்டு இருந்தாள்..
அவளுக்கு இதமாக பிடித்து விட்டான்..
திடீர் என்று பாவா!!ஒரு change க்கு நீங்க என்னோட காலில் விழுங்க என்றதும் அவன் சிறிதும் தயங்கமல், அவளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வங்கியவனை பார்த்தவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது..
அதற்க்கு அவன்,இந்த காலில் கடைசி வரை கிடக்க நான் புண்ணியம் பண்ணிருக்கணும் என்று அவளின் விரலில் அணித்திருந்த மெட்டியின் மேல் முத்தம் வைத்தான்..
நான் நெனச்ச அளவுக்கு ஒன்னும் நீங்க மக்கு லாம் இல்லை போல என்று நமட்டு சிரிப்பு சிரித்தவளை பார்த்தவனின் பார்வை காதல் பார்வையாக மாறியது ….காதல் பார்வை இப்போது மொத்தமாக கணவன் பார்வை மாறியது…
அம்முலு!! என்றவனுக்கு அதற்க்கு மேல் வார்த்தையே வரவில்லை…
“இந்த பக்தனுக்கு கொஞ்சம் மோட்சம் கொடு அஞ்சு இதுக்கு மேலயும் என்னால விரதம் காக்க முடியாதுடி…”என்னோட உடம்புல இருக்க ஒவ்வொரு அணுவும் நீ வேணும்ன்னு தான் ஏங்குது அஞ்சு…
அப்போது தான் அவளை கூர்ந்து கவனித்தான் வெள்ளை நிற பட்டுடுத்தி,தலை நிற மல்லிகை பூ வைத்திருந்தாள்,கழுத்தில் அவன் கட்டிருந்த தாலி,ஒரு மெல்லிய செயின் எப்பவும் போல் அணிந்திருந்தாள்,வகுட்டில் குங்குமம் வைத்திருந்தால் அது அவளுக்கு இன்னும் அழகாக அவளை காட்டியது…முன்பே அழகி தான் இன்று வித்யாசமாக புது பெண் போல் அவ்வளவு அழகாக இருந்தவளை தாண்டி பார்வையை விலகி கொள்ள முடியவில்லை..அவளின் கை மருதாணியை விட அவளின் முகம் ரொம்ப சிவந்து விட்டது…
அஞ்சு என்று ஆசையாக அவளை அழைத்ததும் தான் அவள் பார்வையை உயர்த்தினாள்..அவளின் கையில் அவன் வைத்துவிட்ட மருதாணியில் கோலம் போட்டு கொண்டு இருந்தவனை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது…அவளின் கையில் சிறு நடுக்கத்தை உணர்தவனுக்கு புரிந்து போனது அவள் பயபடுகிறாள் என்று,அதை போக்குவதற்காக அவளிடம் கொஞ்ச நேரம் பேசலாமே என்று முடிவு எடுத்தவன்,
ஏன் பொண்டாட்டி என்ன விட மக்கா இருப்பாளோ என்றதும் அவள் சண்டைக்கு ரெடி ஆகி விட்டாள்…
“இப்போ மட்டும் எப்படிடி உனக்கு சண்டை போடா வருது இவ்வளவு நேரம் ஏதோ கழுத்து வலி மாறி குனிந்து கொண்டு இருந்த என்றவனுக்கு மறுபடியும் வெட்கத்தையே பதிலாக கொடுத்தாள்..”
அஞ்சு அஞ்சு ….
ம் ம் ம் …அவ்வளவு தான் அவள் பதில்..
அம்முலு! என்று அவன் அழைத்ததும் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு..அந்த அழைப்பில் அவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளிற்கே கேட்டது …
அம்முலு என்று அவன் மறுபடி அழைத்ததும்,எதுக்குடி இப்படி வெட்க்க பட்டு என்னை பயமுறுத்துற என்றவனை,இவளுக்கு அவனை என்ன செய்தால் தகும் என்று யோசனைய இருந்தது…
நீ என்னை என்ன வேணாலும் செஞ்சுக்கலாம் அஞ்சு… அதற்க்கான உரிமை உன்னோட கழுத்தில் இருக்கிறது என்று அவளின் தாலியை எடுத்து வெளியில் எடுத்து காட்டினான்…அதற்க்கும் அவளுக்கு வெட்கம் தான் வந்தது…
அஞ்சு என்று அவன் மறுபடி அழைத்ததும்,அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்….
இப்போ புரியுதா பாவா நான் ஏன் உங்கள மக்கு பாவான்னு கூப்டுறேன் என்று…
நீ மக்குன்னு என்னை சொல்லும்போது தான் எனக்கு ஒரே கிக்காக இருக்கு அம்முலு என்றவன்…
அவளின் விழியின் மேல் இதழ் முத்தததை தொடங்கியவன்,அவளின் இதழில் இளைப்பாறினான்..
பூ போன்ற அவளை மென்மையாகவே தீண்டினான்…அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மனதிலும் உடலிலும் தன்னவளாக்கி கொண்டு இருந்தான்…
காதலிலும் சரி கூடலிலும் சரி நான் மென்மையனவன் தான் என்று அவளுக்கு புரிய வைத்து கொண்டு இருந்தான்….அவனின் மென்மையான தீண்டலில் கரைந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை தூக்கி எரிந்து விட்டு அவனோடு ஒன்றினாள்..மனதால் மட்டும் காதலியாக இருந்தவளை,ஈருடல் ஊர் உயிர் என்னும் அளவுக்கு அவனோடு ஒன்றி விட்டாள்…
“ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில்
இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைக்கொர் விலை வைக்கவா
உன் உம்மென்ற சொல்லுக்கும்
இம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
அடிவானம் சிவந்தாலும்
கொடிபூக்கள் பிறந்தாலும்
உன்னை போல் இருக்காது அழகே
அழகே அழே வியக்கும் அழகே”
கூடலை முடித்தவன் அவளை தன் நெஞ்சின் மேல் சாய்த்துக்கொண்டு உறங்கும் முன்,களைப்பில் தூங்கும் அவளை பார்த்தவனுக்கு அவள் “என்னவள்” என்ற கர்வம் அதிகமாகவே இருந்தது…அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு இவனும் உறங்கி விட்டான்….