எல்லோரும் அலர்ட்டாகினர். இந்தர் “டேய் அவனுக்கு அக்கா மட்டுமேதானே டா.. தங்கச்சி எப்படி டா புதுசா வரும்” என்றான்.
உமர் உண்பதற்கு சாப்பாத்தி எடுத்து அவளுக்கு கொடுத்துவிட்டு.. அவளை பார்த்து “ஈட் புல்..” என்றான், மிரட்டலாக.
வர்ஷினி “தேங்க்ஸ்..” என்றாள்.
நண்பர்கள் சிரித்தனர் உமரை பார்த்து.
உமர் “டூமோரோ ஐ வில் ஹல்ப்” என்றான்.
அவளும் புரிந்துக் கொண்டு தலையசைத்தாள்.
அதற்கும் சிரித்தனர் தோழர்கள் கிண்டலாக.
நண்பர்களோடு தங்களின் இடம் வந்தவன்.. “அவள் அவங்க பெரியப்பா வீட்டிலிருந்து வந்திருக்கா டா” என்றான். யாருக்கும் பெரிதாக விவரம் தெரியாது.. உமர் தனக்கு தெரிந்ததை சொன்னான் “அவங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க.. ஆஸ்ட்ரேலியாவில் இருந்தாங்களாம்.. இரேண்டு பேருமே இறந்துட்டாங்களாம்.. அதான் இங்கே வந்திருக்கா” என்றான்.
சர்வேஷ் “அதான் க்லாரடிக்கிராளா” என்றான், அவள் வெளிநாட்டில் இருந்தவள் என்பதால்.
இப்போது சட்டென தலையை உலுக்கிக் கொண்டான் சர்வேஷ்.
ராக்கேஷ் “எனக்கு தெரிந்தவர இருக்காரு தர்ஷன் ண்ணா.. நான் சொல்லி வைக்கிறேன்” என்றான்.
தர்ஷன் “அதையேதான் நானும் சொன்னேன்.. என்னோட பிரெண்ட் இருக்காங்க கேட்ட்க்குறேன்னு சொன்னேன்.. வேண்டாம்ன்னு சொல்லிட்டா.. நீ பேசி பாரு.. ஏதாவது இன்டர்வியூ கால் வரும் போது.. போகமாட்டேன்னு சொல்லிடுவா.. கேட்டுக்கோ அவகிட்ட” என்றான்.
“வர்ஷினியா..” என்றான், அதிர்ச்சியாக ராக்கேஷ்.
தர்ஷன் ‘ஆம்’ என தலையசைத்தான்.. ஏதும் பேசாமல் மகனோடு எதோ பேசத் தொடங்கிவிட்டான்.
ராக்கேஷ் “எப்போ வருவா” என்றார்.
சிவகுமார் பதில் சொன்னார் “ஏழு மணியாகும் ப்பா. வேலை வேலைன்னு எப்போதும் அதையேதான் எண்ணம் அவளுக்கு.. பாரின் போனும்ன்னு நினைக்கிறா.. ஒரு கல்யாணம் காட்சி பார்க்கனும்ன்னு நாங்க நினைக்கிறோம்.. கல்யாணமும்ன்னு சொன்னாலே முகமே வாடி போகுது.. இன்னமும் ஒத்துக்கலை.. என்ன நினைக்கிறாள் என தெரியலை.. அதான் நம்ம ஊருக்கு போய்தான் கொஞ்சம் ஸ்திரமாக பார்க்கனும்.. மனச மாற்றனும்..” என்றார் வருத்தமான குரலில்.
ராக்கேஷ் “எல்லாம் நடக்கும் அங்கிள்.. முதலில் சென்னைக்கு பேக் பண்ணுவோம்..” என்றான்.
ஆமோதிப்பாக சற்று நிமிடங்கள் அமைதி, எல்லோரிடமும்.
சிவகுமார் “நீங்க எங்கப்பா இருக்கீங்க” என்றார், இருவரையும் பார்த்து பொதுவாக. அப்படியே பேச்சுகள் தொடர்ந்தது.. வேலை.. வெளிநாடு.. லீவ்.. ராக்கேஷின் திருமணம்.. என.
விஜயா “சாப்பிடலாம் வாங்க எல்லோரும்” என்றழைக்க.. எல்லோரும் உண்பதற்கு சென்றனர்.
உண்டு முடித்து கிளம்பிவிட்டனர் நண்பர்கள் இருவரும்.. அன்னை தந்தை இருவரும் வர்ஷினியை பார்த்துவிட்டு போங்கள் என சொல்லியும் கேட்கவில்லை.. ‘போனில் பேசிக் கொள்ளுகிறோம்’ என சொல்லிக் கிளம்பிவிட்டனர்.
இரண்டுமாதம் சென்று..
இன்றுதான் சென்னை கிளம்புகிறாள்.. வர்ஷினி. பெற்றோர் இருவரும் பொருட்களோடு ஒருமாதம் முன்பே கிளம்பிவிட்டனர் சென்னைக்கு. தர்ஷன் வந்து எல்லாம் பொருட்ளை ஏற்றி அனுப்புபிவிட்டு.. தானும் சென்னை சென்று விட்டு ஊர் சென்றான்.
இவள் மட்டும் தாமதமாக பொறுமையாக தனக்கென ஒரு வேலையை தேடிக் கொண்டு கிளம்பினாள்.
வழியனுப்ப உமரின் பெற்றோர் ஷர்மி என வந்திருந்தனர் ஏர்போர்ட்டுக்கு. உமர் மனையாளோடு வெளிநாடு சென்றுவிட்டான். வர்ஷினி ஷர்மி இருவரும் இப்போது அழுகையோ அழுகை.. இந்த பனிரெண்டு வருடங்கள் முழுவதும் இவர்களோடுதான்.. அதிலும் ஷர்மி அவளின் எல்லா நேரத்திலும் கூடவே இருந்தவள்.. ஷர்மிக்கும் அதேதான் படிப்பு வேலை அவளின் திருமணத்தில் உடன் நின்றது என.. இருவரும் அழுது தங்களின் பிரிவினை கொண்டாடி தீர்த்தனர்.
வர்ஷினி சென்னை வந்து சேர்ந்தாள்.
சிவகுமார் அழைத்து மகளிடம் “உன் நண்பர்கள் வந்திருக்கிறார்கள்.. வீடு வந்துவிடு” என்றார்.
வர்ஷினி யாரென விவரம் கேட்க்க.. ‘ராக்கேஷ் சர்வேஷ்’ என்றார்.
வர்ஷினிக்கு ‘ஐயோ’ எனதான் இருந்தது.. அதனால் முன்பக்க லாபியில் அவர்களை பார்த்தும் ‘இதென்ன கொடுமை’ என்ற பாவனைதான் அவளிடம். இறுக்கமான ஒரு புன்னகையோடு அவர்களின் கையசைப்பினை ஏற்று வந்தாள்.
ராக்கேஷ் “வெல்கம் டு சிங்கார சென்னை” என்றான்.
வர்ஷினி “நீங்க இன்னும் இங்கதான் இருக்கீங்களா” என்றாள் புன்னகை மாறாமல்.
சர்வேஷ் சத்தமாக சிரித்தான்..
ராக்கேஷ் “என்ன செய்ய.. இன்னமும் ஒருமாசம் இங்கதான் இருப்போம்.. நீ எங்களை பார்த்துதான் ஆகணும்.. இப்போ போலாமா” என்றான்.
வர்ஷினி “எப்படி இருக்கீங்க” என்றாள் பொதுவாக இருவரையும் பார்த்து.
சர்வேஷ் “நீ சொல்லு எப்படி இருக்கோம்..” என்றான்.
வர்ஷினி திணறும் புன்னகையை கொடுத்தாள்.
சர்வேஷ் “இன்னமும்மா என்னை பார்த்தா பயங்கரமா இருக்கு.. நான் ஊருக்கு போறதுக்குள்ள.. நீ என்கிட்டே சிரிச்சி சிரிச்சு பேசணும் சொல்லிட்டேன்.. அதை நான் பார்த்துட்டுதான் போவேன்” என முடிக்ககூட இல்ல..
ராக்கேஷ் “ஆமாம் ம்மா.. இல்லைன்னா, அவன் ஊருக்கு போகமாட்டான்.. சோத்துக்கு உன் வீட்டுக்கே வந்திடுவான் பார்த்துக்கோ” என்றான், விளையாட்டாக.
சர்வேஷ் முறைத்தான் நண்பனை.
சர்வேஷ் லக்கேஜ் எடுக்க.. வர்ஷி “இல்ல பரவாயில்ல” என தன் ட்ராலியை தன் பின்னால் நகர்த்திக் கொண்டாள். சர்வேஷ் முகம் சட்டென இறுக்கிக் கொண்டது.
ராக்கேஷ் “அட வர்ஷி.. நாங்க உன் பிரெண்ட்ஸ்தான்.. இங்க கொடு..” என பேசிக் கொண்டே.. சட்டென அவளின் கையிலிருந்த உடமைகளை வாங்கி.. பாந்தமாக காரின் பின்னால் வைத்து மூடினான்.
சர்வேஷ் காரேடுத்தான்.. முன்னால் ராக்கேஷ் அமார்ந்துக்கொள்ள.. பின்னால்.. வர்ஷினி அமர்ந்துக் கொண்டாள். சர்வேஷ்க்கு, எதோ அவளை உறுத்துகிறது என்ற எண்ணமே தோன்றுகிறது.. அவளிடம் என்னால் பேச முடியவில்லையே என அழுத்துகிறது மனது. ராக்கேஷ் பேசிக் கொண்டே வர.. என்னால் பேச முடியவில்லையே.. பெட்டியை அவன் போல என்னால் பிடுங்க முடியவில்லை என ஓடிக் கொண்டே இருக்கிறது.
ராக்கேஷ் இருவரையும் பேசவைத்து.. இயல்பான ஒரு உரையாடலோடு வீடு வந்தனர் மூவரும்.
மாலை நேரம்தான் வந்தனர்.. விஜயா சிற்றுண்டி காபி என கொடுத்தார். கொஞ்சம் சர்வேஷ் இறுக்கம் குறைந்திருந்தது பேசத் தொடங்கினான்.
சர்வேஷ் “அங்கிள், வர்ஷினியின் ஆபீஸ் எந்த இடம்..” என்றான்.
வர்ஷினி இடம் சொன்னாள்.
சர்வேஷ் “ஓ.. துறைபாக்கம்.. ஒரு நாலுநாள் நான் இல்லை.. ராக்கி கூட வரோம்.. அப்புறம் நீயே போய்கோ..” என்றான்.
வர்ஷி “அப்பா வருவாங்க.. நான் டூவ்வீலர்’ல போகலாம்ன்னு நினைக்கிறேன்.. நான் மேனேஜ் செய்துக்குவேன்.. அதான் மேப் இருக்கே..” என்றாள்.
சர்வேஷ் மீண்டும் அடி வாங்கிய ஆதங்கத்தில் அமைதியானான்.
ராக்கேஷ் “குட்.. ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க அங்கிள்.. நாங்க வரோம்.. இன்னும் ஒரு மாசம்தான். அப்புறம் அங்கிள்.. அப்பா உங்களை வீட்டுக்கு இன்வைட் பண்ண சொன்னார்.. வர்ஷினி வந்ததும் கூப்பிடலாம்ன்னு விட்டுட்டேன்.. கண்டிப்பா வீட்டுக்கு வரணும் எல்லோரும்.. நாங்க எல்லோரும் வெயிட் பண்றோம்.. தர்ஷன் ப்ரோ வந்தால் அவரையும் கூட்டிட்டு வர சொல்லி ஆர்டர் என் வைஃப்.. என் கதையெல்லாம் கேட்க்கனும்மாம்..” என்றான்.
வர்ஷினி “நான் வந்து சொல்றேன்.. உங்கள் கதையெல்லாம்” என்றாள்.
ராக்கி “ஆஹா.. என்ன ஆனந்தம்.. எங்க ஏஞ்சல் முகத்தில்.. வா வா.. அவள் ஆவலோடு எதிபார்த்துட்டு இருக்கா. நான் பெர்பெக்ட்ன்னு சீன் போட்டிருக்கேன்.. கொஞ்சம் பார்த்து சொல்லுமா” என்றான். புன்னகையோடு.
வர்ஷினி “நீங்க செய்ததைத்தான் சொல்ல போறேன்.. அது எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியாது..” என்றாள்.
ராக்கி “எவ்வளோ அழகா பேசறா.. சர்வேஷ், இவ” என கிண்டல் செய்தான்.
சர்வேஷ், அன்னை, தந்தை.. எல்லோரும் கேலிபுன்னகை செய்தனர்.
இரு ஆண்களும் விடைபெற்று கிளம்பினர்.
வர்ஷினி வீட்டினை சுற்றி பார்த்தாள். வீட்டினை சுற்றிலும் மரங்கள்.. தென்னை கொய்யா மாமரம் மாதுளை செம்பருத்தி என இருக்க.. முன்னாள் மல்லிபூ கொடியாக இருந்தது.
வீட்டின் உள் இப்போதுதான் மார்பிள் தரை போட்டனர்.. முன்பக்கம் சுவரில் க்ரனைட் பதித்து அழகுபடுத்தியிருந்தனர். ஜென்னல்கள் எல்லாம் புதிதாக மாற்றி இருந்தனர்.. வீடு புது பொலிவோடு இருந்தது.
மூன்று அறைகள்.. திவ்யாவிற்கு என அறைகள் இருக்க.. புது கப்போர்ட் அவளை வரவேற்றது. பொறுமையாக துணிகளை எடுத்து அடுக்கினாள்.. ‘சர்வேஷ் ஏன் வந்தான் ஏர்போர்ட்டுக்கு.. அவன் வந்தது வைப்க்கு தெரியுமா.. அவன் எப்படி என்னிடம் எந்த தயக்கமும் இல்லாமல் பேசுகிறான்..’ என மனதின் ஒரு மூலை முணுமுணுக்கத் தொடங்கியது.